Category Archives: Uncategorized

வண்ணாத்திக்குளம் ;பன்றி வேட்டை

காமினியும் நானும் வெள்ளி இரவு வேட்டைக்குச் செல்ல தீர்மானித்தோம். காமினி நண்பனின் காரையும் இரண்டு துப்பாக்கிகளையும் இரவலாகப் பெற்று வந்தான். செட்டிகுளத்துக்கு அருகில் உள்ள ராமன் குளம் என்னும் இடத்தில் பெரும்பாலும் முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள். அந்த கிராமத்தினை சுற்றி அடர்ந்த காடு உண்டு. இந்த காடுகளும் வில்பத்து வனவிலங்கு சரணாலயத்தின் எல்லை வரை செல்வதால் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

முள்ளுள்ள புதர்களின் மத்தியில்; அத்தியாயம் 7

முல்லைத்தீவு இராணுவமுகாம் தாக்கி அழிக்கப்பட்டதன் களிப்பு அடங்குவதற்க்கு முன்னரே கிளிநொச்சி இடம்பெயரவேண்டிய நிலை ஏற்படுமோ என்ற பீதி மக்களை ஆட்கொள்ளத்தொடங்கிவிட்டது. குண்டுச்சத்தங்களும் துப்பாக்கி வேட்டுகளும் உரத்து ஒலிக்கத் தொடங்கிவிட்டன. கிளிநொச்சி வைத்தியசாலை நோயாளர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மாலை வேளைகளில் மக்கள் வெளியில் வரத்தயங்கினர். ஒரு சில வியாபாரிகள் தங்கள் பொருட்கனை லொறிகளிலும் ரைக்டர்களிலும் ஏற்றிக்கொண்டு … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வவனியா தகனம்

சித்திரா வவனியாவுக்கு போவதாக சொன்ன வெள்ளிக்கிழமை காலையில் நான் சுறுசுறுப்பாக இயங்கினேன். அலுவலகத்தில் மெனிக்கவிடமும் சமரசிங்கவிடமும் அன்று செய்யவேண்டிய வேலைகளைக்கூறி நான் யாழ்ப்பாணம் நோக்கிய பயணத்தைத்துவங்கினேன். நடந்து வரும் வழியில் ஒருவர் தன் நாய்குட்டிக்கு புழு கண்டிருப்பதாகவும் அதற்கு மருந்து வேண்டும் என கேட்டார். ‘நல்லவேளை நான் பஸ்ஸில் ஏற முதல் கேட்டீர்கள்’! சிறு துண்டில் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் ;அத்தியாயம் 6

——- எமது வாகன தொடரணி புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள்வர இருண்டு விட்டது. வழமை போல் உட்பிரவேசிக்கும் வரிசையில் பதிவுசெய்வதற்க்காக காத்துநின்றேன். எனக்கு முன்னால் நின்ற கிறிஸ்தவ பாதிரியார் தனது முறை வர பதிவு செய்பவரிடம் அடையாள அட்டையைக்கொடுத்து விட்டு அவனின் கேள்விகட்கு பதிலளிக்க ஆரம்பித்தார். ‘ உங்கள் பிரயாணத்தின் நோக்கம்’ ‘தேவ பணி’ என்றார் அந்தப்பாதிரியார். … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணாத்திக்குளம் -மீண்டும் பதவியா

அலுவலகத்தில் அன்று வந்த கடிதங்களை படித்துக் கொண்டிருந்;தேன். ஒரு கடிதம் தனிச்சிங்களத்தில் எழுதப்பட்டதாக இருந்ததால் மெனிக்கேயிடம் கொடுத்து வாசிக்கிச்சொன்னேன். மெனிக்கே படித்து விட்டு ‘பதவியா மகாவித்தியாலயத்தில் கால் நடை விவசாயம் பற்றி இம்மாதம் பதினைந்தாம்; திகதி மாணவர்களுக்கிடையில் பேச முடியுமா என பாடசாலை அதிபர் கேட்டிருக்கிறார் ‘ என்றாள். பதவியா மகாவித்தியாலயத்தில்தான் சித்திரா வேலை செய்கிறாள் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் –அத்தியாயம் 4

By Terrence Anthonipillai ‘அடோ கொட்டியா கவத ஆவே , போம்ப மொனவத் கெனாவத'( அடோ புலி எப்ப வந்தனி குண்டு ஏதாவது கொண்டு வந்தியா) என்று கொழும்பிலுள்ள எங்கள் தலைமையகத்தில் பணிபுரியும் சிங்கள நண்பர் சிரித்தபடியே என்னைக்கேட்டுக்கொண்டு கட்டித்தழுவினார். ‘ போம்ப நவே அம்ப கெனாவ’ ( குண்டு அல்ல மாம்பழம் கொண்டு வந்தனான்) … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நீதிமன்றம்; வண்ணாத்திக்குளம் 4

மேசையில் இருந்த கடிதங்களைத் திறந்தேன். முதலாவதாக இருந்த கடிதம் என்னை நீதிமன்றத்துக்கு வரும்படி அழைக்கும் அழைப்பாணை. வைத்தியர் ஒருவரிடம் இருந்து மருத்துவ சான்றிதழ் ஒன்ற எடுத்து அனுப்ப வேண்டும் என நினைத்துக் கொண்டேன். இரண்டாவது முறையாக நீதிமன்றம் செல்லாமல் உடல் நலக்குறைவு என பொய் சான்று அனுப்புவது மனத்தை உறுத்தியது. சுமூகத்தில் சட்டமும் நீதிமன்றங்களும் மதிக்கப்பட … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக