தி. ஞானசேகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார். இவர் இச்சஞ்சிகையை 2000ஆம் ஆண்டு ஜுனிலிருந்து வெளிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.தற்போது ஞானம் சஞ்சிகையை இணையத்தில் கிடைக்கக்கூடியது.
“கண்ணில் தெரியுது வானம்’ தொகுப்பில் உங்களது காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளூம் ..! என்ற சிறுகதையைப் படித்தேன். தடைமுகாம் ஒன்றில் பாடசாலை மாணவி ஒருத்தி இராணுவத்தினரின் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதையும் அதன் காரணமாக அவள் புத்திபேதலித்த நிலைமையை அடைவதையும் கலாரூபமாகக் கதையில் வடித்துள்ளீர்கள். நமது நாட்டில் மட்டுமல்ல இனவிடுதலைப் போராட்டம் நடக்கும் பல்வேறு நாடுகளிலும் இப்படியான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இக்கதையின் கரு உலகப் பொதுவானது. பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படவேண்டிய கதை இது.”
பேராசிரியர் ‘நந்தி’
பின்னூட்டமொன்றை இடுக