Category Archives: Uncategorized

நைல் நதிக்கரையோரம்-நூல் விமர்சனம்-

ஜெயகாந்தன் நடேசனின் நைல்நதிக்கரையோரம்- கைக்கு அடக்கமாக களைத்திருக்கும் போதும் கையில் பிடித்தபடி படுத்திருந்து படிக்கு வசதியான அளவில் வந்திருக்கும் புத்தகம். அதன் உள்ளே பொதிந்திருப்பது எகிப்தின் வியத்தகு வரலாறுகளின் எச்சங்களே! அவர் ஆரம்பத்தில் கூறுவது போல அது வரலாற்று நூல் அல்ல.பயணக் கட்டுரையும் அல்ல. என்று படிப்பவர்களால் ஒதுக்கிவிட முடியாது. பயணத்தின்போது அவரது அவதானங்களை மட்டுமன்றிப் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நூல் அறிமுகம் – ஏதிலி

நடேசன் 1945 ஆகஸ்ட் 6 ம் திகதி காலை 8.15 மணிக்கு ஹீரோசிமா மீது அமெரிக்கர்களால் அணுக்குண்டு போடப்படுகிறது. 1946 ஆம் ஆண்டு ஜோன் ஹேசி (John Hersey) இதைப்பற்றி எழுதுவதற்கு நியூயோக்கர் சஞ்சிகையால் யப்பானுக்கு அனுப்பப்படுகிறார். அமெரிக்கா அணுக்குண்டை ஹீரோசிமாவில் போட்ட அன்று காலையில் 8.15 மணியிலிருந்து ஒரு இலட்சம் பேருக்கு மேல் இறக்க … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வன்கூவர் நகரம்

நடேசன் எனது வீட்டில் உள்ள லாபிரடோர் சின்டியும் கனேடியக் கரடிகளும், வன்கூவர் துறைமுகத்தைச் சுற்றியுள்ள கற்பாறைகளில் குடும்பங்களாக குளிர்காய்ந்துகொண்டிருந்த சீல்களும் உறவினர்களாக இருக்கவேண்டும் என்ற கணிப்பு, கனடாவிற்கு போன பின்பே மிருக வைத்தியனாகிய எனக்குத் தெரிந்தது . வன்கூவரின் துறைமுகம் சார்ந்த பகுதிகளை ஒரு மோட்டார் வள்ளத்தில் சுற்றிப்பார்த்தபோது, அங்கே கடலுக்குள் பெரிய கப்பல்கள் தரித்து … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணாத்திக்குளம்

இராஜேஸ் பாலா டாக்டர் நடேசன் எழுதிய ‘ வண்ணாத்திக்குளம் நாவலைப்படித்ததும், நீண்ட காலமாகத் தொடரும் அனல் வெயிலிலிருந்து காப்பாற்ற குளிர்ந்த நீர்வீழ்ச்சி தலையிற் கொட்டிய புத்துணர்வு வந்தது. இங்கு குறிப்பிடப்பட்ட அனற் காற்று லண்டனில் கொதிக்கும் வெயிலை முன்படுத்தி எழுதப்பட்டதல்ல. கடந்த சில வருடங்களாக இலக்கியம் என்ற பெயரிலும், ஊடகக் கருத்துக்கள் என்ற பெயரிலும் தமிழ்ப் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணாத்திக்குளம்;அந்நியமாகுதல்

ஓடும் தளத்தை விட்டு விமானம் மேலே எழுந்தது.. . மேலே, மேலே வானத்தில் ஏறியது. அதன் பறப்பு தொடர்ந்தது. நான் வாழ்ந்த, பிறந்த மண்ணில் இருந்து பறக்க துடிக்கிறேன்… எழுவைதீவு, நயினாதீவு, யாழ்ப்பாணம், பேராதனை, மதவாச்சி, பதவியா என்ற இந்த இடங்கள் கனவில் வந்து போன இடங்களா? இந்த விமானம் என்னை எங்கு கொண்டு செல்கிறது.? … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

ரொக்கி மலை எக்ஸ்பிரஸ்-கனடா

எங்களது பஸ்பயணம் பல முக்கிய மலைசார் நகரங்களில் தரித்து இறுதியில் Banff என்ற நகரில் (அட்பேட்டா மாநிலம்) முடியும். அங்கிருந்து இரண்டு பகல் ரொக்கி மலை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து மீண்டும் வான்கூவர் சேருவது எமது திட்டம். இந்த மேற்குப் பகுதி பற்றி கனடிய பயணத்தில் எழுதுவதற்கு அதிகமில்லை. வட அமெரிக்காவில், அலாஸ்காவில் இருந்து தென் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணாத்திக்குளம்;யூலைக்கலவரம்

நானும் சித்ராவும் மதவாச்சி வைத்தியசாலைக்கு புதிதாக இடமாற்றமாகி வந்திருந்த கண்ணனை சந்தித்தோம். கண்ணன் என்னுடன் பேராதனை மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தவன். மதவாச்சியில் உள்ள வைத்தியசாலை சிறியது. ஒரு வைத்தியரை மட்டும் கொண்டுள்ளது. பெரிய நோய்கள் வந்தால் வவனியாவோ அநுராதபுரமோ தான் செல்ல வேண்டி இருக்கும். பல வருடங்களுக்குப் பின்பு சந்தித்தபடியால் ஏராளமான விஷயங்களை பேசினோம். … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல-7

கைதிகள் எல்லோரையும் தனித் தனியாக பக்கவாட்டிலும் நேராகவும் புகைப்படம் எடுத்தார்கள். பெயர் என்ன, இயக்கம், கைதி இலக்கம் என்பவற்றை அட்டையில் எழுதி கழுத்தில் தொங்கவிட்டு புகைப்படம் எடுத்தார்கள். அதே நிலையில் வீடியோ படமும் எடுத்தார்கள். ஒரு கைதியை வீடியோ படம் எடுக்கும் போது அவர் பெயர், இயக்கம், தீய பழக்கங்கள் எல்லாம் ஒலிப்பதிவு செய்து கொண்டார்கள். … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

வண்ணாத்திக்குளம்; தலைமறைவு

இரவு ஒன்பது மணிக்கு ரூபவாகினியில் செய்தி கேட்டுக் கொண்டிருந்தேன். சித்ராவுக்கு செய்திகளில் விருப்பமில்லை. அரசியல்வாதிகளின் முகங்களை சுத்திசுத்தி காட்டுவார்கள். அவர்களை சுற்றியே உலகம் சுழல்வதாக கூறி மக்களை நம்பப்பண்ணும் ஒரு வேலை என்பது அவளது வாதம். குசினிப்பக்கத்தில் பாத்திரங்களை கழுவிக்கொண்டு நின்றவள் பின் கதவால் யாரோ வருவது கண்டு ரி.வி இருந்த கூடத்தை நோக்கி வந்தாள். … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மெல்பேனில் ஒரு ” வேங்கைச்செல்வன் “

சபேசன் அண்ணை – எங்கள் எல்லோராலும் அழைக்கப்பட்ட அந்தப் பெருமனிதனின் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கிறது. தம்பி என்று எப்போதுமே இளையவர்களுடன் பழகும் அந்தப் புன்முறுவல் என்றும் எங்கள் நினைவுகளில் தொடர்ந்திருக்கும். விடுதலைப் போராட்டத்தின் மீதும் அதன் தலைமை மீதும் காட்டிய அவரது அளவற்ற பற்றுதல் அபாரமானது. அவருடன் இணைந்து நின்ற செயற்பாட்டாளர்களுடன் அதேயளவு நெருக்கமான மதிப்பை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக