Category Archives: Uncategorized

வண்ணாத்திக்குளம்;தீவுப்பகுதி

சித்ராவுடன் யாழ்ப்பாணம் செல்ல தீர்மானித்தபோது நாங்கள் மோட்டார் சைக்கிளில் செல்வது நல்லது என முடிவு செய்தோம். தாயாரிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. ரயிலில் செல்வது நல்லது என மகளின் காதில் சொல்லப்பட்டது. மோட்டார் சைக்கிளில் போனால் எல்லா இடங்களுக்கும்; போகமுடியும். அத்துடன் இரண்டு நாள்கள் சென்று திரும்ப வேறு வழியில்லை என வாதிட்டபோது தாயும், மகளும் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நாம் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல- 3

வடக்கு கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் அவர்கள் பதவியேற்று யாழ நகருக்கு வந்த போது பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் அவருக்கு மாலை அணிவித்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். மேலே கூறப்பட்டவை ஒரு சில சம்பவங்களே ஆனால் வெறும் ஐயப்பாட்டிலும், கோபதாபங்களிலும் கூட பலர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இப்படியான குற்றச் சாட்டுக்களின் பேரில் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

வண்ணாத்திக்குளம்;அக்சிடென்டல் ஹீரோ

அநுராதபுரத்தில் இருந்து பஸ்ஸில் வருவதற்கு, இரவு பத்து மணியாகி விட்டது. அன்று வார விடுமுறை தினம். இதனால் குணதாசா நண்பர் ஒருவருடன் மதுபானத்தால் இரத்த நாடிகளை சூடாக்கி கொண்டிருந்தார். காமினியும் ருக்மனும் அவருக்குப் பக்கத்தில் இருந்து பேசிக்கொண்டு இருந்தனர். என்னைப் பார்த்ததும் குணதாச ‘எப்படி உங்கள் தேர்தல் கடமைகள் சுமுகமாக முடிந்ததா’ என நகைச்சவை கலந்த … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணாத்திக்குளம்;தங்கப்பல் ரகசியம்

திருமணப்பதிவு காலை பத்துமணியளவில் நடந்தது. வீட்டின் முன்பக்கத்தில் மாமரத்தின் கீழ் மேஜை வைக்கப்பட்டு மஞ்சள் துணி விரிக்கப்பட்டிருந்தது. சுற்றி பல கதிரைகள் வரிசையில் போடப்பட்டிருந்தன. சித்ரா வேலை பார்க்கும் பதவியா மகா வித்தியாலயத்தின் கதிரைகள் என நினைக்கிறேன். ருக்மனின் நண்பர்கள், சித்ராவின் பாடசாலை ஆசிரியர்கள் உட்பட ஐம்பது பேருக்கு மேல் இருக்கும். ருக்மனின் நண்பர்கள் ஜேவிபி … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நாம் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல- 2

சாவகச்சேரி சாள்ஸ் முகாமுக்கு வந்த அடுத்த நாள் என்னிடம் இருந்த உடமைகள் எல்லாம் புலிகளினால் பறிமுதல் செய்யப்பட்டன. நான் கைது செய்யப்படும் போது என்னிடம் 1 பவுண் மோதிரம் ஒன்றும் பணமாக ரூபா எண்ணாயிரத்து முன்னூறும் இருந்தது. அத்துடன் எனது தேசிய அடையாள அட்டையும் இருந்தது. இவை எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன. இம்முகாமில் இருந்த சுமார் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நாம் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல- 1

சமரன் 1990 இன் ஆரம்பம், இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்படப் போகும் அறிகுறிகள் தென்படத் தொடங்கியது. காட்டுக்குள் இருந்த கொடிய மிருகங்கள் மெல்ல மெல்ல நாட்டுக்குள் ஊடுருவத் தொடங்கிய காலம். மனித நேயம் மீண்டும் மழுங்கடிக்கப்பட்டது. அடுத்து சில நாட்களில் தமக்கு விழப்போகும் அடிமை விலங்கைப்பற்றி உணரமுடியாத வட-கிழக்கு மக்களும் யாழ்ப்பாண … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணாத்திக்குளம்;நூலக தகனம்

காலை நேரத்துடன் எழுந்து விட்டேன் என்று சொல்வதை விட நித்திரை கொள்ளவில்லை என்பதே பொருத்தமானது. அம்மா தந்த கோப்பியைக் குடித்து விட்டு கொக்குவில் ஸ்ரேசனில் ரயில் ஏறி விட்டேன். மதவாச்சி ரயில் நிலையத்தில் எனக்காக காமினி மோட்டார் சைக்கிளில் எதிர்பார்த்துக் கொண்டுஇருந்தான். இருவருமாக விடுதிக்கு சென்று விட்டு அங்கிருந்து பதவியா சென்றோம். மனதில் பல நினைவுகள் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நாம் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல

மன்றாட்டம் ஓ கடவுளேஉடலின் பிரயர்த்தனம் உயிரைக் கெஞ்சிப் பற்றிக்கொள்வது.இந்த மனமோதாங்கொணா வேதனையை விடச்சாகலாமெனத் துடிக்கிறது.பரந்த பூமியில்தர்மம் நீதி நியாயங்கள் யாவும்கண்களை மூடிக் கொண்டன.உலகம் முழுக்கப் பெயரை ஒட்டிக் கொண்டமனித உரிமை அமைப்புக்களோசெவிகளைப் பொத்திக் கொண்டனர்.மக்களென்று எஞ்சியவர்கள்வாய்களைப் பொத்திக் கொண்டனர்.யாவருமாக கேள்வியற்று வதைக்கும்பூரண சுதந்திரத்தை தாரை வார்த்து விட்டதன் பின்னால்ஆண்டவரே,மன்றாடுகிறோம்கதியற்றசித்திரவதைக் கைதிகள் நாம்எமக்கு மரணத்தைத் தாரும். இந்தப் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின்நாவல்களின் ஆய்வு – டாக்டர் த . பிரியா

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு – டாக்டர் த . பிரியா நடேசன் போரின் விளைவால் புலம் பெயர்ந்து சென்ற எழுத்தாளர்களின் வரிசையில் இலங்கைத் தமிழர்களாகப் பலர் உண்டு . அதில் ஏற்கனவே எழுத்தாளராகப் புலம் பெயர்ந்தவர்களும், புலம் பெயர்ந்த பின்பு எழுத்தாளர்களானவர்களும் அடக்கம். இவர்களில் ஒற்றைக் கை விரல்களில் எண்ணக்கூடியவர்களே புலம்பெயர்ந்த இலக்கியம் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணாத்திக்குளம்; நாச்சிமார்கோயில் எரிப்பு

பதிவுத்திருமணத்தை சனிக்கிழமை மதவாச்சியில் நடத்துவதென்று நிச்சயம் செய்தபடியால் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் சென்றேன். யாழ்தேவியில் கூட்டம் அதிகமில்லாதபடியால் மூலை ஆசனம் கிடைத்தது. கண்ணை மூடிக்கொண்டு சித்திராவை நினைத்தேன். மனதை நினைவுகள் சுகமாக வருடின. யாழ்தேவி வவனியாவில் நின்றபோது சிறிது கூட்டம் ஏறினாலும் எனது கனவுகள் கலைக்கப்படவில்லை. ஏழு மணியளவில் சிறிது பசியெடுத்ததும் எனது … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்