பகுப்பு: Uncategorized
-
பண்ணையில் ஒரு மிருகம்: சிறுபரப்பில் பெரும் விவாதம்.
பேராசிரியர் ராமசாமி இலங்கையெனும் சிறு நாட்டுக்குள் நடந்த, தனி ஈழத்துக்கான போராட்டங்களையும் கொரில்லாத் தாக்குதல்களையும் நடத்திய அனைத்துத் தமிழ்ப் போராளிகளையும் தனது புனைவு எழுத்துகளிலும் புனைவல்லா எழுத்துகளிலும் தொடர்ந்து விமரிசித்து எழுதிவருபவர் நோயல் நடேசன்; ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர் எழுத்தாளர்; விலங்குகளுக்கான மருத்துவர். அவரது பெரும்பாலான நாவல்களின் கதை சொல்லும் முறை தன்மைக்கூற்று. தானே கதைசொல்லியாக இருந்து எழுதும் புனைவுகள் வழியாகத் தனது நாவல்களுக்கு வரலாற்றுத் தன்மையை உருவாக்க நினைப்பது அவரது புனைவாக்க முறைமை. அவரது பெரும்பாலான…
-
மாவை நித்தியானந்தனின் சிறுவர் நாடகங்கள்
By நடேசன். ஒரு சமூகம் யாரைக் கொண்டாடுகிறது என்பதை வைத்து அந்த சமூகத்தின் அளவை இலகுவாகத் தீர்மானிக்கலாம் எனப் பலராலும் சொல்லப்பட்ட கருத்து சரியா தவறா என்பதை ஒரு புறம் வைத்தாலும், பல சமூகங்கள் தங்கள் சமூகத்தில் வாழும் உன்னதமானவர்களைக் கண்டு கொள்வதில்லை. பெரும்பாலானவர்கள் இறந்த பின்பே ஆராதிக்கப்படுகிறார்கள். தென்னாசிய சமூகம் அதற்கு நல்ல உதாரணம் . பாரதியார் போன்றவர்கள் வாழும்போது கண்டுகொள்ளப்படவில்லை . அதுபோல் இலங்கைத் தமிழ் அரசியலில் நான் பார்த்த பல இடதுசாரித்தலைவர்களும்…
-
சுறாக்களின் எதிர்காலம்
நடேசன். ஆஸ்திரேலியா – சிட்னி நகரின் கிழக்குப் பகுதியான கூஜி ( Coogee ) கடற்கரையில் 1935 ஆம் ஆண்டு பெரிய சுறா ஒன்று உயிருடன் பிடிபட்டது. அதை சிட்னியிலுள்ள மீன்கள் வளர்க்கும் அகுவாரியம் (Aquarium) நீர்த் தொட்டியில் விட்டனர். ஒரு கிழமையின் பின்பு அந்த சுறா மீன் மனிதனின் முன் கையை வாந்தி எடுத்தது. அந்தக் கையில் பிரத்தியேகமான பச்சை (Tattoo) குத்தப்படியிருந்து. அதிர்ச்சியடைந்த அகுவாரியத்தினர் காவல்துறையை தொடர்பு கொண்டதும் விசாரணை ஆரம்பமானது . அந்தக்…
-
தாத்தாவின்வீடு: புதிய நாவல்.
என்னுரை நாடுகள், இனக்குழுக்கள் மத்தியில் நடக்கும் மோதல்கள் ஒரு கட்டத்தில் முடிவிற்கு வரும். அந்த மோதல்கள் உச்சமடைந்து பிரபலமாகி மூன்றாம் நபர்களின் தலையீட்டுக்கு உட்படும்போது சமாதான ஒப்பந்தங்கள் மூலம் அமைதியும் ஏற்படும். போரின் விளைவுகள், அழிவுகள் கண்களுக்குத் தெரியும் என்பதால் அவைகளை நிவர்த்திக்க பலரும் பாடுபடுவார்கள். முப்பது வருடங்கள் போர் நடந்த இலங்கையில் பிறந்து வளர்ந்து, பின்பு புலம் பெயர்ந்த வாழ்க்கையிலிருந்து போர் கடந்த எனது தாயக பூமியை புறக்கண்ணால் பார்த்தேன். அதனையடுத்து அங்கு நடந்த நிவாரணம்…
-
ராஜ தந்திரமும் ராஜ விசுவாசமும்
லெ. முருகபூபதி மகா பாரதத்தில் வரும் கிருஷ்ண பரமாத்மா, முக்கிய பாத்திரம். தருமம் குன்றி அதர்மம் மேலோங்கும்போது காட்சி தருபவர்தான் இந்த பரமாத்மா எனவும் சொல்வார்கள். கௌரவர்கள், அஸ்தினாபுரத்தை ஆண்டபோது, அதில் தமக்கும் பங்கு கேட்டு பேராடியவர்கள்தான் பஞ்சபாண்டவர்கள். அந்த பங்காளிச் சண்டையில் இறுதியில் துரியோதனன் தோற்றான். செஞ்சோற்றுக் கடனுக்காக இறுதிவரையில் அவனுடன் நின்ற கர்ணனும் கிருஷ்ண பரமாத்மாவின் சூழ்ச்சியினால் கொல்லப்பட்டான். கர்ணன் இருக்கும் வரையில் துரியோதனனை பாண்டவர்கள் வெல்லமாட்டார்கள் என்பது கிருஷ்ணருக்கு நன்கு தெரியும். அதனால்தான்…
-
நாவல் வாசிப்பனுபவம்:பண்ணையில் ஒரு மிருகம்
By: சிங்கை நிலா ஆசிரியர்: Dr. நோயல் நடேசன் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக மே 2022 வெளிவந்த நாவல். யதார்த்தத்தையும் மாயவாதத்தையும் இணைத்து தன்மையில் சொல்லப்பட்ட கதை என்பதால் சாதாரண கதைகளில் இருந்து வித்தியாசப்படுகிறது. ஆனால் தமிழ்ச் சமூக கட்டமைப்பு சிடுக்குகளில் இருந்து வித்தியாசப்படவில்லை. உலகின் எந்த மூலையில் தமிழர்கள் வாழ்ந்தாலும் பிறப்பால் வரும் சமூக ஏற்றத்தாழ்வு எப்போதும் வித்தியாசம் இல்லாமல் புரையோடி சீழ் பிடித்திருப்பதை காட்டும் புதினம். அதனால் கதையின் அடிப்படையில் வித்தியாசம் இல்லை. நிகழ்காலத்தின்…
-
FRIENDS OF SRI LANKA – AUSTRALIA- Appeal.
P O Box 5292 Brandon Park Victoria 3150 AUSTRALIA Email: uthayam12@gmail.com 29th November 2022 His Excellency President Democratic Socialist Republic of Sri Lanka President’s House Colombo Call for the release of all political prisoners in Sri Lanka Your Excellency, We congratulate you on becoming the President of our country in a crucial situation. All peace-loving…
-
பவளவிழா: மாவை நித்தியானந்தன்.
கலை இலக்கியத்தில் மாவை நித்தியானந்தனின் வகிபாகம் முருகபூபதி ( கலைஞரும் மெல்பன் பாரதி பள்ளியின் நிறுவனரும், சமூகச்செயற்பாட்டாளரும் தன்னார்வத் தொண்டருமான மாவை நித்தியானந்தனின் பவளவிழா 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பன் ஸ்பிரிங்வேல் மாநகர மண்டபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை மெல்பன் பாரதி பள்ளி பெற்றோர் – ஆசிரியர்கள் இணைந்து கொண்டாடினர். மாவை நித்தியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ஆவணப்படத் தொகுப்பு காட்சியும் காண்பிக்கப்பட்டது. அத்துடன் மாவை நித்தியின் சிறப்பியல்புகளை கூறும் நித்தியம்…
-
நாவல் அறிமுகம் : முத்துப்பாடி சனங்களின் கதை.
நோயல் நடேசன் போல்வார் மஹமது குன்ஹி கன்னடத்தில் எழுதி, இறையடியான் தமிழில், மொழி பெயர்க்கப்பட்டது. சாகித்திய அகாதெமி விருது பெற்றது நாவல், இந்தியா- பாக்கிஸ்தான் பிரிவினை காலத்தில் நடந்த இந்து – முஸ்லீம் கலவரத்திலிருந்து தொடங்கி, ஐம்பது வருடங்கள் வடக்குத் தெற்காகப் பயணிக்கிறது. பிரிவினை நடந்தபோது லாகூரில் இருபது வயதான முஸ்லீம் இளைஞன் சாந்த் அலி வேலை செய்யும் இடத்தில், இரண்டு பஞ்சாபி இளம் பெண்களைப் பாதுகாத்து, அவர்களை டில்லிக்கு அழைத்துவந்து விட்டு விட்டு, மீண்டும் லாகூர்…
-
அனாதை மரங்கள்
கல்கி 07.10.2022 இதழில் வெளியான இக்கதை ‘குவிகம்’ மின்னிதழ் நடாத்திய ஆய்வில் அக்டோபர் மாதத்தில் தமிழ் சஞ்சிகைகளில் வெளிவந்த 69 சிறுகதைகளுள் சிறந்த கதை என மூத்த எழுத்தாளர் திருமதி சிவசங்கரியினால் தெரிவுசெய்து பாராட்டப்பட்டது. கிறிஸ்டி நல்லரெத்தினம் அம்மாவை என்றும் நான் புரிந்து கொண்டதில்லை. எங்களுக்குள் ஏதும் பிணக்கோ பிளவோ என தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள். எங்கள் வீட்டில் அவள்தான் எல்லாம். இதைக் கேளுங்கள்…… அக்காவை பெண் பார்க்க எங்கள் வீட்டிற்கு அத்தானின் குடும்பம் வந்திருந்த சமயம்…