பகுப்பு: Uncategorized
-
விடைகொடுப்போம்.காண்டீபன் அமிர்தலிங்கம்
திரு காண்டீபன் அவர்கள் தொடர்பில் வரதராஜ பெருமாள் அவர்களின் சிறியதோர் மீள்பார்வை.. காண்டீபனின் இறப்பு இதயத்தைக் கனமாக்குகிறது. 1973ன் ஆரம்ப மாதங்களில் அடிக்கடி சந்தித்தோம். அப்போதுதான் தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டு ஊர்களெங்கும் நாங்கள் ஓடி அரசியல் வேலைகள் செய்த காலம். யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெருவில் இருந்த தமிழரசுக் கட்சியின் தலைமைக் காரியாலமே எங்களின் பிரதான சந்திப்பிடம். யாழ்ப்பாணக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காண்டீபன் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தநதையாருடன் யாழ்ப்பாணம் வந்து விடுவார்.…
-
அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் விழா 2022
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மெய்நிகர் அரங்கு கருத்துரைகள்: திருமதி திலகவதி (ஐ.பி.எஸ். ஓய்வு நிலை ) “ தமிழ்ச் சிறுகதைகள்- இன்று “ திரு. பவா செல்லத்துரை “ வாசிப்பு – ஒரு மானுடத்திறப்பு “ ———————————————————————————- வாசிப்பு அனுபவப்பகிர்வு எஸ். கிருஷ்ணமூர்த்தியின் நோபோல் ( சிறுகதைகள் ) இலங்கையிலிருந்து கலாநிதி சு . குணேஸ்வரன் நாட்டியக்கலாநிதி கார்த்திகா கணேசரின் இந்து…
-
மணிவிழாக் காணும் சிவராசா கருணாகரன்
முதல் சந்திப்பு முருகபூபதி யாழ். தீம்புனல் வார இதழில் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக நான் எழுதிவருகின்றேனென்றால், அதற்கு வித்திட்டவர் யார்..? என்பது பற்றி சொல்லியவாறே இந்த முதல் சந்திப்பு தொடருக்குள் இம்முறை வருகின்றேன். அவரை நான் முதல் முதலில் அவரது எழுத்தின் ஊடாகவே தெரிந்துகொண்டேன். நான் வாசிக்கும் எவரதும் இலக்கியப் படைப்பு என்னை கவர்ந்துவிட்டால், அதனை எழுதியவரைப்பற்றி மேலதிக தகவல் அறிவதும், தேடிச்செல்வதும் எனது இயல்பு. அவ்வாறுதான் கிளிநொச்சியில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான…
-
பொன்னியின் செல்வன் புனைவு
நடேசன் பொன்னியின் செல்வன் மட்டுமல்ல கல்கியின் எல்லாக் கதைகளையும் சிறுவயதில் படித்திருக்கின்றேன். எங்கள் எழுவைதீவுக்கு கல்கி தபாலில் வரும். சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு முதலான தொடர்களை அம்மாவோடு போட்டியிட்டுப் படிப்பேன். அந்த பழைய தொடர்களை அம்மா புத்தகமாக தொகுத்து பைண்ட் செய்து வைத்திருந்தார். பொன்னியின் செல்வனில் முக்கியமாக நினைவுக்கு வருவது அதில் வரும் பாத்திரங்களான வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான், நந்தினி என்பன. இலக்கியத்தை ருசிப்பது ஒன்று, அதை அறிந்து கொள்வது மற்றொன்று. நட்சத்திர உணவகத்தில் உண்பவனுக்கும் அந்த…
-
வியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து
நடேசன் தமிழ்நாட்டில் பாவைக்கூத்து நிகழ்ச்சியை நான் கும்பகோணத்திலிருந்த காலத்தில் பார்த்திருக்கிறேன். அத்துடன் தமிழ் திரைப் படங்களிலும் பார்த்த நினைவுண்டு. பாவைக்கூத்து இலங்கையிலிருந்ததாக அறியவில்லை. ஆனால், இந்தியாவில் கிராமங்களிலும் தற்போது பாவைக்கூத்து அழிந்து வருகிறது. இந்தப்பாவைக் கூத்துக் கலை, குடும்பங்களின் பாரம்பரியமாக, தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வந்தது. அப்படியான கலைக்குடும்பத்து இளைஞர்கள் நகரை நோக்கி கல்விக்காகவும் மற்றைய வேலைகளுக்காகவும் இடம்பெயர்வதால் இந்தக் கலைஞர்கள் அற்று அழிந்துவிடுகிறது. கிராம விவசாயப் பொருளாதாரத்தின் பகுதியான பல கிராமியக் கலைகள் நகரமயமாக்கத்தால் நலிந்து…
-
சிட்னியில் இலக்கிய சந்திப்பு
05-11-2022 ஆவணப்படக்காட்சி – ஐந்து நூல்களின் அறிமுகம் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 05 ஆம் திகதி ( 05-11-2022 ) சனிக்கிழமை மாலை 4-00 மணிக்கு சிட்னியில் Toongabbie Community Centre (244 Targo Rd, Toongabbie NSW 2146 ) மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு, கலை, இலக்கிய ஆர்வலர்களையும் ஊடகவியலாளர்களையும் சங்கம் அன்புடன் அழைக்கின்றது. இந்நிகழ்வு சங்கத்தின் உறுப்பினர் சட்டத்தரணி கலாநிதி (…
-
மெல்பனில் இலக்கிய சந்திப்பு
கனடா ஶ்ரீரஞ்சனியின் “ ஒன்றே வேறே “ புதிய கதைத்தொகுதி வெளியீடு கனடாவில் வதியும் எழுத்தாளரும் ஆசிரியருமான ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா அவுஸ்திரேலியா வருகை தருகிறார். ஶ்ரீரஞ்சனியுடனான இலக்கிய சந்திப்பும், அவரது புதிய சிறுகதைத் தொகுதி ஒன்றே வேறே நூலின் அறிமுக அரங்கும் மெல்பனில் இம்மாதம் 30 ஆம் திகதி ( 30-10-2022 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 4-00 மணிக்கு அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவர், எழுத்தாளர் திருமதி சகுந்தலா…
-
மனிதர்கள் நல்லவர்கள்’
தெளிவத்தை ஜோசப் November 12, 2013 நாளைக்குத் தீபாவளி பண்டிகை நெரிசலில் பஸ் திணறியது. கை நிறைந்த பைகளும், பை நிறைந்த சாமான்களுமாய், ஆட்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தனர். உத்தியோகம் என்று பிரித்துவிட்ட பிறகு பெற்றவர் பிள்ளைகளுடன் கணவன் மனைவி மக்களுடனும் – உற்றார் உறவினருடனும் ஒன்றாகிக் களிக்க ஏதாவது ஒரு பண்டிகை வரவேண்டியிருக்கிறது. “இந்த பஸ்சை விட்டாச்சுன்னா அடுத்தது அஞ்சுக்குத்தான்” என்றபடி தனது முழுப்பலத்தையும் காட்டி ஒருவர் முண்டி முன்னேறுகிறார். பஸ்ஸில் – ரயிலில் –…
-
தெளிவத்தை ஜோசப்- எனது நினைவுகள்
நடேசன் இதயத்தால் பழகுபவர்களை முதல் சந்திப்பிலே என்னால் தெரிந்துகொள்ளமுடியும் . அதேபோல் அறிவால் , உதட்டால் பழகுபவர்களையும் புரிந்துகொள்வேன். உடல் மொழியே எனது தேர்வாகும். இது எனக்கு எனது மிருக வைத்தியத் தொழிலால் கிடைத்த கொடை. இதன் மூலம் பலரோடு பழகுவதை கட்டுப்படுத்திக்கொள்ளமுடியும். 2009 ஆண்டிலே எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஒன்பதாவது தமிழ் எழுத்தாளர் விழாவுக்காக சங்கம் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பை அழைத்திருந்தது. அவர் மெல்பனில் நண்பர் முருகபூபதியின் வீட்டில் தங்கியிருந்தார். அங்குதான் …
-
தமிழ் எழுத்தாளர் விழா: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகரில் இம்மாதம் 29 ஆம் திகதி அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்மாதம் 29 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் நடைபெறுகிறது. சங்கத்தின் தலைவர் எழுத்தாளர் திருமதி சகுந்தலா கணநாதன் தலைமையில் இடம்பெறவிருக்கும் இந்நிகழ்வில், இலக்கியவாதியும் தமிழக முன்னாள் ஐ. பி. எஸ். அதிகாரியுமான திருமதி திலகவதி “ தமிழ்ச் சிறுகதைகள்- இன்று “ என்ற தலைப்பிலும், …