Author Archives: noelnadesan

About noelnadesan

Commentator and analyst of current affairs.

பான்பராக்

நருக் சக்கரபோத்தியா தனது சிவப்பு பொமரேனியன் நாயுடன் எதுவித முன்னறிவித்தலும் இல்லாது எமது மிருகவைத்தியக் கிளினிக்கிற்கு வந்திறங்குவார். குழந்தையைத் தூக்கி வருவதுபோல காவியபடி வந்து தனது நாயின் பிரச்சினையை சொல்வார். பெரும்பாலும் மதிய வேளைகளில் நான் இல்லாதபோது வந்து தெள்ளு மற்றும் புழுவுக்கான மருந்துகள் பெறுவார். பலவருடங்களாக அறிமுகமானவர்.கல்கத்தாவில் பிறந்து வளர்ந்து மெல்பேனில் வசிக்கிறார்.சில காலத்துக்கு … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

உன்னையே மயல் கொண்டு- பாகம் ஏழு

ஆய்வுக்குத் தேவையான புத்தகம் ஒன்றைப் பேராசிரியர் பாமரின் அறையில் இருந்து எடுத்துவரச்சென்ற சந்திரன், போராசிரியர் சிண்டியிடம் பேசிக்கொண்டிருப்பதை கண்டு திருப்ப எத்தனித்ததும், சந்திரனை “கம் இன்” என்ற வழக்கமான பாணியில் கேட்டு சுகம் விசாரித்தார் பேராசிரியர் பாமர். “சந்திரன் இவ்வளவு காலமும் நீ பெற்ற தரவுகளை கட்டுரையாக்கிக் கொண்டுவா. அதை நான் மைக்கிரோ பாயலாஜி மகசினுக்கு … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தஸ்தாவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்

ஐரோப்பிய நாவல் வரிசையில் கரமசோவ் சகோதரர்கள் நாவலைக் காலம் காலமாக உறங்குநிலையில் இருந்த ஒரு எரிமலையின் குமுறலென அமரிக்க பேராசிரியர் வர்ணித்தார். இந்த நாவல் தொடர்ச்சியாக முதன்மையான நாவலாகப் பல்கலைக்கழகங்களில் பேசப்படுகிறது. பல நாவல்கள் சில காலத்தின் பின் கல்லறையில் தூங்குவதும், புதிய நாவல்கள் முளைத்து வருவதும் வழக்கம். இந்த நாவல் 130 வருடங்களுக்கு முன்பானது. … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மெல்பனில் கவிதா மண்டலம்

மெல்பனில்: மூத்த – இளம் தலைமுறையினர் சங்கமித்த கவிஞர் ஒன்றுகூடல் மறைந்த கவிஞர்களையும் நினைவுகூர்ந்த கவிதா மண்டலம் ரஸஞானி மெல்பனில் நேற்றைய தினம் ஞாயிறன்று நடைபெற்ற கவிதா மண்டலம் நிகழ்ச்சியில் மறைந்த ஈழத்து, தமிழக கவிஞர்களையும் நினைவு கூர்ந்து கவிதைகள் வாசிக்கப்பட்டன. அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வ, சங்கத்தின் தலைவர் கவிஞர் சங்கர … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

மத்தியு என்ற சூறாவளி

மிருகவைத்தியர்கள் மகாநாட்டிற்கு முதல்நாள் ஊர்சுற்றிப் பார்பதற்கு போட்டிருந்த திட்டம் பிசுபிசுத்துவிட்டது. கொலம்பியாவில், அரசாங்கத்திற்கும் இடதுசாரி கொரில்லாக்களுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தத்தின் காரணமாக கற்றகேனாவுக்கு வருகை தந்த முக்கிய வெளிநாட்டுப் பிரமுகர்கள் பாதுகாப்பிற்காக போட்டிருந்த பாதைத்தடைகள் எங்களையும் தடைசெய்துவிட்டது. இதுவரையில் பார்க்காத முக்கிய இடங்களுக்கு மகாநாடு முடிந்த பின்பாக செல்வதற்கு திட்டமிட்டிருந்தோம். எமது திட்டத்தை முறியடிக்கும் நோக்கத்தில் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

உன்னையே மயல் கொண்டு –பாகம் ஆறு

சந்திரனது மேசையில் அவனது ஆய்வுகளுக்கு உதவும் சஞ்சிகைகள், புத்தகங்கள், ஒலிப்பிரதிகள் என பரவலாக இறைந்து கிடந்தன. வாரம் ஒருமுறை மேசையை துப்பரவாக வைத்தாலும, வார இறுதியில் மீண்டும் அதேமாதிரி வந்துவிடும். இதனை உணர்ந்து அடுக்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்து சிண்டி “என்ன அவுஸ்திரேலியா கிளினப் டேயா” என்று கேட்டாள். கேள்வியின் கேலியை புரிந்தபடி “யேஸ் மிஸ் பேர்பெக்ட்” … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மெல்பனில் கவிஞர்கள் ஒன்றுகூடும் கவிதா மண்டலம்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கவிஞர்கள் ஒன்றுகூடும் கவிதா மண்டலம் நிகழ்ச்சி எதிர்வரும் 08-04-2018 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையில் மெல்பனில் நடைபெறவுள்ளது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் இக் கவிதா மண்டலம், நடைபெறும் இடம்: கிளேய்ட்டன் பொது நூலகம் (Clayton … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்