பகுப்பு: Uncategorized
-
அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழக நினைவுகள்: 2
நன்றி – அபத்தம்: கனடா நான் கழகத்தின் செயலாளராக இருந்த காலத்தில் மெல்பன் நகரின் மத்திய பகுதியில் உள்ள லோட் சிமித் மிருக வைத்தியசாலையில் , மிருக வைத்தியராக வேலை செய்து கொண்டிருந்தேன். அது ஒரு டசினுக்கு மேலான மிருக வைத்தியர்களைக் கொண்ட வைத்தியசாலை. அங்கு மிருக வைத்தியரைப் பார்க்க இரு மணிநேரத்திற்கும் அதிகமாக மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் காத்திருப்பார்கள். அந்த இடத்தையே பின்னணியாக வைத்து எனது நாவலான அசோகனின் வைத்தியசாலையை எழுதினேன். அங்கு வேலை…
-
இமாலயக்கடன்:சிறுகதை
நடேசன் நான் ஒரு கொலையை மறைத்தேனா ? இல்லை , தொடர்ந்து மனைவியைத் துன்புறுத்திய ஆணைக் கருணைக் கொலை செய்ய உதவினேனா ? என்ற கேள்விக்கான விடையை ஓய்வு பெற்ற பின்னரும் காணமுடியவில்லை. பல வருடங்களுக்கு முன்பு, அதாவது எனது ஐம்பது வயதான காலத்தில் நடந்த சம்பவம் இது. அந்தச் சந்தேகம் கைகளுக்குள் பிடிக்க முடியாத பட்டாம்பூச்சியாக அங்கும் இங்கும் பறந்தது. சம்பவம் நடந்த வருடம், மாதம், நாள், நேரம் என இன்னமும் என் மனதில் ஆழமாக…
-
ஒடிசாவில் பௌத்தம்..
ஒரு பயணம் என்பது நூறு புத்தகங்களைப் படிப்பதற்குச் சமமானது என்று யாரோ சொல்லியிருந்தாக கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அதை நாம் பொருட்படுத்துவதில்லை. அதில் உள்ள உண்மைத்தன்மையை எனது பயணங்களில் பல தடவைகள் உணரும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். தவுலி (Dhauli) கலிங்கப்போர் நடந்த இடம் இந்தியாவின் கிழக்கு மாநிலமாகிய ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வர் . ஒடிசா முன்னைய கலிங்கத்தில் பெரும்பகுதியாகும். இலங்கைக்குப் பௌத்தம் கலிங்கத்திலிருந்து வந்ததும், பின்பு அதே கலிங்கத்திலிருந்து கலிங்கமேகன் படையெடுத்து வந்து பொலநறுவையில் உள்ள பௌத்த மடாலயங்களை…
-
ATLAS- வாசிப்பு அனுபவப்பகிர்வு
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டியில் பரிசு பெற்ற நூல்கள் கடிகாரப் பறவைகள் – கவிதை – திருக்கோவில் கார்த்திகேசு வல்லமை தாராயோ – சிறுகதை – மாத்தளை வடிவேலன் வேராகிப்போன மனிதர்கள் – நாவல் – ஏ.எஸ். உபைத்துல்லா உரைகள் : மருத்துவர் ( திருமதி ) வாசுகி சித்திரசேனன் எழுத்தாளர் “ யோகன் “ யோகானந்தன் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா…
-
நம் காலத்து நாவல்கள் :10. கோவேறு கழுதைகள்.
மனிதர்கள் வாழ்வதற்கு இந்தப்பிறவியிலே மட்டுமே காரணங்கள் உள்ளன. இந்த உலகத்தைவிட வேறு உலகம் நமக்கு கிடையாது. அதனால் ஆவலோடு மனநிறைவாக ( Passion) வாழ்ந்து விடவேண்டும். வாழ்விற்கான காரணங்கள், வாழும் சூழ்நிலை, வயது, மற்றும் எமது நோக்கத்திற்கு ஏற்ப வேறுபடலாம். ஆனால், வாழ்வதற்கான தூண்டல்களைப் பற்றிக்கொண்டு முழுமனதோடு வாழவேண்டும் என்ற இருத்தலியலின் தத்துவத்தை இந்த நாவல் சொல்கிறது. நாவல், ஒரு கிறிஸ்துவ வண்ணாரக் குடும்பத்தில், முனைப்பான ஆளுமைகொண்ட பெண் பாத்திரமாக ஆரோக்கியத்தை உருவாக்கி, அவள் எப்படி மருமகள்,…
-
சிறுகதை: மனக்கோலம்
பல வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில், அகதி முகாங்களில் வேலை செய்த காலத்தில் கண்ட உண்மை சம்பவத்தை வைத்து எழுதியது நடேசன் பஸ் வந்து சேர்ந்த போது உச்சி வெயில் அடித்தது. நாங்கள் இருவரும் மட்டும் தான் பிரயாணிகள். தங்களது வேலை செய்து முடித்த திருப்தியுடன் டிரைவரும் கண்டக்டரும் பஸ்ஸை விட்டிறங்கி பெயர் தெரியாத இரு மரங்களின் பின்னே சென்றார்கள். இயற்கையில் பசளை இல்லாத கடற்கரை சார்ந்த மண்ணில் இவர்களின் உரங்களை நம்பி வளரும் மரங்கள். கண்டக்டரிடமோ…
-
செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள்..
மிருக வைத்தியராக எனது அனுபவங்களை அபுனைவாக “வாழும் சுவடுகள்” “ புத்தகத்திலும் புனைவாக “ அசோகனின் வைத்தியசாலை , மற்றும் “பண்ணையில் ஒரு மிருகம் “நாவலிலும் எழுதியுள்ளேன். நாற்பது வருட மிருக வைத்திய தொழிலில் இருந்து இளைப்பாறிய பின்னர் நான் ஏதாவது எழுதத் தவறிவிட்டேனா என நினைத்துப் பார்த்தபோது நெருடிய விடயம் ஒன்றுண்டு. செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்ப்பவர்கள் மனநிலைகளை எழுதத் தவறிவிட்டேனா என்ற நினைப்பு என்னுள்ளே வந்தது. எல்லோரையும் பற்றி எழுதாத போதிலும் குறிப்பிடத்தக்கதாக என்…
-
நம் காலத்து நாவல்கள்: 9
Toni Morrison – Beloved. பெண் இலக்கியம் என்றால் என்ன? பலகாலமாக என் மனதில் அரித்துக்கொண்டிருந்த கேள்வி. இலக்கியத்தில் ஆண்கள் சொல்லும் விடயங்கள் பெண்கள் சொல்வதாக இருந்தால் அது பெண் இலக்கியமாகுமா?. அதுக்கு மேல் அர்த்தம் உள்ளதா? பெண்கள் இலக்கியமாக எழுதும் கருத்து மொழியை, ஆண்களும் சொல்ல முடியும். பல பெண்கள் சொல்லும் கவிதைகள் கதைகளும் அப்படித்தான்.