நம் காலத்து நாவல்கள் :10. கோவேறு கழுதைகள்.

மனிதர்கள் வாழ்வதற்கு இந்தப்பிறவியிலே மட்டுமே காரணங்கள் உள்ளன. இந்த உலகத்தைவிட வேறு உலகம் நமக்கு கிடையாது. அதனால் ஆவலோடு மனநிறைவாக ( Passion) வாழ்ந்து விடவேண்டும். வாழ்விற்கான காரணங்கள், வாழும் சூழ்நிலை, வயது, மற்றும் எமது நோக்கத்திற்கு ஏற்ப வேறுபடலாம். ஆனால், வாழ்வதற்கான தூண்டல்களைப் பற்றிக்கொண்டு முழுமனதோடு வாழவேண்டும் என்ற இருத்தலியலின் தத்துவத்தை இந்த நாவல் சொல்கிறது.

நாவல், ஒரு கிறிஸ்துவ வண்ணாரக் குடும்பத்தில், முனைப்பான ஆளுமைகொண்ட பெண் பாத்திரமாக ஆரோக்கியத்தை உருவாக்கி, அவள் எப்படி மருமகள், பிள்ளைகள், மற்றும் கணவனுடன் மல்லுக்கட்டியபடி தனது தனித்துவத்தை நிலை நிறுத்துகிறாள் என்பதை விளக்குகிறது.

வழமையான சமூகத்தால் கணவனால் அல்லல்படும் பெண் பாத்திரங்கள்( கண்மணி குணசேகரனின் கோசலை ) போல் அல்லாது தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளின் மூலம் குடும்பத்தை கொண்டுசெல்லும் பாத்திரமாக ஆரோக்கியம் வாசிப்பவர்கள் மனதில் அகற்ற முடியாதபடி உறைந்துவிடுகிறாள்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.