பகுப்பு: Uncategorized
-
எகிப்தில் சில நாட்கள்: 2
“அந்த ஜக் டானியல் போத்தல் உள்ள பெட்டியை கையில் எடு” என நண்பன் கூறினான். நானும் அதேபோன்ற சிங்கிள் மோல்ட் விஸ்கி இரண்டு போத்தல் வைத்திருந்தேன். ஏனைய பெட்டிகளை அகமட் விமான நிலய பெல்டில் இருந்து தூக்கினார். குதிரையையும் வாளையும் துருக்கியர்கள் மற்றவர்களிடம் கொடுக்கமாட்டார்கள். அது போலத்தான் எங்களது விஸ்கி போத்தல்களை மற்றவர் கைகளில் கொடுக்க நாங்கள் தயாரில்லை. இரண்டு பேருமே குடிகாரர்கள் என நினைக்க வேண்டாம். அந்தப் போத்தில்கள் தனியாக கதை சொல்லும். கம்பன் வீட்டு…
-
பயணியின் பார்வையில் –07
Melbourne city in night முருகபூபதி கிராமத்திலிருந்து நகரத்துக்குப்பெயர்ந்த வனப்பேச்சி தமிழச்சி இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை கடந்த எட்டு ஆண்டுகளுக்குள் (2005 -2013) நான் மூன்றுதடவைகள் சந்தித்த தமிழச்சியின் ஆற்றலும் ஆளுமையும் தோழமையும் அவரின் வளர்ச்சியினூடே எனக்குத் தென்பட்டவை. கட்டிடக்காட்டினுள் வாழத்தலைப்பட்டபோதிலும் உள்ளார்ந்தமாக நேசித்த கரிசல்காட்டின் நினைவுகளுடன் அந்த மண்ணின் மக்களை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் அவர் தற்கால தமிழக இலக்கிய சூழலில் நிரம்பவும் பேசப்படுபவர். 2005 இல் சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கில இலக்கிய…
-
அசோகனின் வைத்தியசாலை -6
புறஸ்ரேட் விடயத்தில் அந்த மனிதர் கோபமடைந்து வெளியேறிய சிறிது நேரத்தில் பல பூனைகளை சாம், சிறு பூனைக் கூடுகளில் தொடர்ச்சியாக பரிசோதனை அறைக்குள் கொண்டு வந்து நிலத்தில் வரிசையாக வைத்துக் கொண்டிருந்தான்.கிட்டத்தட்ட அறையின் அரைவாசியிடம் அந்தக் கூடுகளால் நிரப்பப்பட்டிருந்தது ‘ஏன் இவையெல்லாம் என்னிடம் வருகின்றன’ ? என ஏதோ பெரிய வேலையை எதிர்பார்த்து மனக் கிலேசத்துடன் சுந்தரம்பிள்ளை அவனிடம் கேட்டபோது ‘இன்று ஆண் பூனைகளை நலமெடுப்பது உங்கள் வேலை. இன்று இந்த நாள் உங்களுக்கானது.’ என்றான். புத்தரின்…
-
Sri Lankan Tamils can no longer remain silent – They must now defend the nation
Shenali Waduge Now is a good time for the Sri Lankan Tamils to finally break their silence. For far too long they have either been silenced or chosen to be silent. Silence has played a pivotal role in the lives of the Tamils throughout the conflict. Now they have the opportunity to start afresh with…
-
பயணியின் பார்வையில் –06
இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை முரண்படுதலுக்கான காரணத்தைவிட ஒன்றுபடுதலுக்கான காரணம் வலிமையானது முருகபூபதி திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்திற்கு என்னைத்தேடி வந்த இருவரையும் எனக்குத்தெரியாது. ஆனால் வந்தவர்கள் இலக்கியவாதிகள்தான் என்பதை புரிந்துகொள்ள முடியாவிட்டால் நான் இலக்கியவாதி அல்ல. ஒருவர் தளம் இதழின் ஆசிரியர் பா.ரவிக்குமார் என்ற பாரவி. இவர் மறைந்த பிரபல எழுத்தாளர் அகிலனின் மகள் கற்பகவல்லியின் கணவர். நீட்சி என்ற சிறுகதைத்தொகுப்பை வெளியிட்டவர். அர்த்தம் இயங்கும் தளம் என்ற தொகுப்புநூலில் பாரவியும் தேவகோட்டை வா.மூர்தியும் எஸ்.சுவாமிநாதனும்…
-
அசோகனின் வைத்தியசாலை – 5
அந்த தீவிர சிகிச்சைப்பகுதியில் இருந்த வேலையை முடித்துக்கொண்டு வெளியேறி, பொதுவான நோய்களைக் கொண்ட நாய்கள் பகுதிக்கு சென்ற போது, உப்பலான குழந்தை முகத்துடன் ஆறரை அடி உயரமும் அதற்கேற்ற அகலமான விரிந்த தோள்களுடனும் ஒரு இளைஞன் வந்தான்.வயது இருபதுக்கு மேல் இராது. அவனுடன் ஒரு குண்டான சந்தனக்கலர் லாபிரடோர் இன நாய் தொடர்ந்து வந்தது. நடப்பதை வேண்டா வெறுப்பாக செய்வது போல் அதனது நடை இருந்தது. ‘மிகவும் அமோகமாக விளைந்திருக்கிறாய்‘ எனக் அதன் தலையை குனிந்து தடவும்போது…
-
பயணியின் பார்வையில் — 05
இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை மகாகவி பாரதிக்கு ஒரு மடல் முருகபூபதி மகாகவி பாரதி…அவர்களே…. நீங்கள் எமக்கெல்லாம் ஆதர்சமான சிந்தனையாளன் கவிஞன், படைப்பாளி. பத்திரிகையாளன். நான் உங்களை எனது பால்யகாலம் முதல் படிக்கின்றேன். இன்னும் முற்றுப்பெறவில்லை. உங்களைப்பற்றி பேசுகிறேன். எழுதுகிறேன். எனது தாய்நாட்டில் உங்களுக்காக எங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய நூற்றாண்டு விழாக்களில் பங்கேற்றேன். தென்னிலங்கை, வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் விழாவும் ஆய்வரங்கும் நடத்தினோம். உங்களை உங்கள் எழுத்துக்கள் ஊடாக மாத்திரம் தெரிந்துகொண்டதுடன்…
-
அசோகனின் வைத்தியசாலை நாவல்- 4
சுந்தரம்பிள்ளை வீடு திரும்பியதும் வீட்டில் குதூகலம் நிரம்பி வழிந்தது. இந்த வேலை கிடைத்த விடயம் குடும்பத்தில் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளித்தது. வேலை புருச லட்சணம் என சும்மாவா சொல்கிறார்கள்? முக்கியமாக வேறு நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வருபவனது மனநிலையில் வேலை, அவனது உயிருக்கு அடுத்த நிலையில் உள்ளது. அவனில் அவனது குடும்பம், பிள்ளைகள் ,அவர்களின் எதிர்காலம் என பல சுமைகளை இலகுவாக்கிறது. சுந்தரம்பிள்ளையின் சிந்தனையில் ‘என் போன்று தொழிலுக்காக பட்டப்படிப்பில் நாலு வருடம் படித்தபின் பின்…
-
Letter to Human Right Law centre,Australia
The Convenors Human Rights Law Center, Australia, Dear Organizers, The Human Rights Law Center has invited participants to a discussion about accountability for war crimes and the current human rights situation in Sri Lanka to be held on 7th and 8th March 2013 in Melbourne and Sydney, Australia. The panelists featured for this discussion are…
-
பயணியின் பார்வையில் —04
பயணியின் பார்வையில் —04 இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை முதுமை, தனிமை, இயலாமை முருகபூபதி வேலூரில் இறங்கும்போது அதிகாலை. தம்பி வீட்டுக்கு ஒரு ஓட்டோவில் வந்து இறங்கியபோது தம்பி மனைவி வாசலில் தண்ணீர் தெளித்துக்கொண்டு என்னை வரவேற்றார். “ எழுதுவதுடன் நிற்கமாட்டீர்களா? எழுதுபவர்களையும் தேடி அலையவேண்டுமா?” என்று மச்சாள் கேட்டபோது, “ அப்படி நால்லாக்கேளுங்க…” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தாள் மனைவி. எனது உடல்நலத்தில் அவர்களுக்கு மிகுந்த அக்கறை. “ எழுத்தாளர்களின் படைப்புகளை படிப்பதுடன், படித்ததை…