பகுப்பு: Uncategorized
-
தற்கொலைக்கு போராடும் பூனை
( இது ஒரு அனுபவ பகிர்வு) – நடேசன் “மூன்று நாட்களாக விஸ்கி ஒன்றும் சாப்பிடவில்லை” என எழுபது வயதான கொலின் தனது கறுப்பு வெள்ளைப் பூனையை மார்பில் அணைத்தபடி கூறினார். அவரது பிரித்தானிய உச்சரிப்பு இரசிக்கக் கூடியதாக இருந்தது. அவரது பூனைக்குப் பெயர்தான் விஸ்கி. “மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருப்பது சீரியசான விடயம். இதை விட வேறு குணக்குறைகள் உள்ளதா” எனக்கேட்டபடி பூனையை பரிசோதித்தேன். பசி, காமம், மரணம் …இந்த உலகத்தில் நித்தியமானவை. அவுஸ்திரேலியாவில் உள்ளவர்கள்…
-
தமிழ் இலக்கியம் என்பது இலங்கையில் தனித்து வளர முடியாது
“இலக்கியம் என்பது சிலர் சேர்ந்து பேசிவிட்டு போகும் விடயம் அல்ல.அது மக்களுக்கு பல நன்மைகளை வழங்குவதாக இருக்கவேண்டும். ஓர் சமூகத்தில் படித்தவர்கள் அந்த சமூகத்திற்கு ஒரு பிரச்சனை வருவதற்கு முன்பு அது பற்றி அந்த சமூகத்திற்கு கூறக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
-
சீட்டும் மீட்டர்வட்டியும் புலம் பெயர்ந்து விட்டது
சிறு வயதில் நயினாதீவில் படிக்கும் போது அப்புவின் உடன் பிறந்த சகோதரிகளான இரு மாமிகள் வீட்டில் இருந்தேன். இதில் பெரிய மாமி சாது. மரியாதை உண்டு. ஆனால் சின்னமாமி மேல் அதிகமாக பிடிக்கும். வெள்ளை நிறமும் உயரமான தோற்றமும் கொண்டவர். நிலத்தை கூட்டும் போது கூட எனது மாமி தலை குனிந்து பார்த்ததில்லை. எவரோடும் எடுத்தெறிந்து பேசும் தன்மையும் நடக்கும் போது நிமிர்ந்து பார்த்தபடி தான் நடப்பது வழக்கம். அக்காலத்தில் மாமிக்கு பக்கத்தில் செல்வது பெருமையான…
-
ஓரு சுனாமி தடுக்கப்ப்டது
நடேசன் ஓக்கம வினாசகரண்ட ஓண என அமெரிக்காவில் சொல்லி விட்டு நாடு திரும்பிய இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தமிழ்த் தேசிய அணியிடம் சிறையில் உள்ள சகல விடுதலைப் புலிகளையும வெளியில் விட்டு விட்டு யாழ்ப்பாணத்தை தொழில் நுட்ப பூங்காவாக்குவதாக வாக்களித்தார். இவரது வாக்குறுதியை நம்பிய தமிழ்த் தேசிய அணியினர் சகல தமிழ் மக்களையும சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கும் படி கேட்டனர். இவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தோ அல்லது தாங்களாகவோ பெரும்பான்மை தமிழர்கள் சரத் பொன்சேகாசரத் பொன்சேகாவுக்கு வாக்ளித்து இலங்கைத்…
-
நாடுகடந்த தமிழ் ஈழம் திருவிழா
– நடேசன் நான் அறிந்தவரை காட்டு விலங்குகள் மூன்று விதமாக இரை தேடும் ஒன்று: மந்தையாக இரை தேடிச் செல்பவை. அவற்றுக்கு பாதுகாப்பு தேவையானது. . அத்துடன் அவை இரையாகும் இனத்தை சேர்ந்தவை. மான் மரை மற்றும் காட்டெருமை போன்றவை ஒன்றைத்தொடர்ந்து மற்றொன்றாக பாரிய மந்தைகளாகச் செல்லும். இரண்டாவது: சிறு கூட்டமாக சென்று வேட்டையாடுபவை. நாய்கள் மற்றும் கழுதைப்புலிகள் இந்த ரகம். மூன்றாவது: தனி ஒரு மிருகமாகச் சென்று இரை தேடும் புலி , சிங்கம் ஆகிய…