-
ஒற்றைக் கொம்பன் காண்டாமிருகம்.
நடேசன். இந்தியாவின் வடகிழக்குப் பயணத்தில் அசாமில் காஞ்சிரங்கா (Kaziranka national Forest )வனத்திற்குப் போவது எனது இலக்காக இருந்தது. அதன் முக்கியம் என்ன ? ஒரு மிருக வைத்தியராக எங்கு போனாலும் வன விலங்குகளைப் பார்ப்பது எனது விருப்பம் . அதே நேரத்தில் காட்டு விலங்குகளை மிருககாட்சி சாலையில் வைத்திருப்பது மனதிற்கு ஒவ்வாதது . ஆனால், என்ன செய்யமுடியும் ? எல்லோராலும் வனத்திற்குச் செல்லமுடியாது . முக்கியமாக குழந்தைகள் சிறுவர்களுக்கு விலங்கு காட்சி சாலையே விலங்குகளைப் பார்க்க…
-
கலைஞர் கருணாநிதியும் தமிழ் சினிமாவும்
இன்று நினைவுதினம் முருகபூபதி கலைஞர் கருணாநிதி 1924 ஆம்ஆண்டு பிறந்து 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி மறைந்தார். தமிழக முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவர். தற்போது அவரது வாரிசு ஸ்டாலின் முதல்வராக பணியேற்றுள்ளார். இவரது புதல்வர் உதயநிதியும் தற்போது சட்டசபையில் அங்கம் வகிக்கின்றார். கருணாநிதியின் புதல்வி கனிமொழி இந்திய நாடாளுமன்ற உறுப்பினர். இவ்வாறு வாரிசு அரசியலுக்கும் வித்திட்ட கலைஞர் கருணாநிதியின் அரசியல் குறித்தும், அவர் முன்னர் தோளில் அணிந்த…
-
பிரித்தானியாவில் தமிழ் பெண் எழுத்தாளர்கள்
நவஜோதி ஜோகரட்னம்லண்டன்இங்கிலாந்தில் இலக்கியத்துறையில் பிரகாசித்த பெண் எழுத்தாளர்களைப் பற்றிய ஓர் ஆய்வு முயற்சி இது. இலங்கையிலேயே தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்திப் பின்னர் எழுதாவிட்டாலும் இங்கிலாந்தில் குடியேறிய இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களிலிருந்து இந்த ஆய்வு ஆரம்பமாகிறது. இவர்களில் பவானி ஆழ்வாப்பிள்ளை இலங்கையிலேயே தனது எழுத்தின் முத்திரையைப் பதித்தவர் ஆவார். அவரது எழுத்துப்; பயணத்தை தொடர்ந்து லண்டனிலே குடியேறிய பின்னர் அவர் எதுவுமே எழுதவில்லையாயினும் அவரை முதன்மையான எழுத்தாளராக இங்கு முன்னிறுத்துவது பொருந்தும் என நினைக்கிறேன். அதே போன்று…
-
Butterfly Lake from a reader
I just finished reading your book for 2nd time. My husband Janith gave me this book when we were at the University of Peradeniya where we two met before we fell in love. He is Sinhalese and I’m Tamil we met in 2007 and Married. we have two kids called Navam and Naveena. I always…
-
நூல் அறிமுகம் –நடேசனின் பண்ணையில் ஒரு மிருகம்.
– முனைவர் ஜொஸப்பின் பாபா ( புனித சேவியர் கல்லூரி பாளையங்கோட்டை ) மாயவாத சித்திரிப்பில் எழுதப்பட்டுள்ள நடேசனின் பண்ணையில் ஒரு மிருகம். – இலங்கையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் நடேசன் அவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலப்பகுதியில் சென்னக்கு அடுத்திருந்த காஞ்சிபுரம் பகுதியில் ஒரு கிராமத்தில் அமைந்திருந்த பண்ணையில் வேலை செய்தபோது பெற்ற அனுபவங்களை பின்னணியாக வைத்து எழுதப்பட்ட நாவல்தான் பண்ணையில் ஒரு மிருகம் . தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. இதன்…
-
இலங்கை நெருக்கடியில் தமிழர்களின் நிலை என்ன?
மாலன் ஆகா என்றெழுந்தது பார் ஓர் புரட்சி, அண்மையில், இலங்கையில். அதன் விளைவாக அதிபர் தலைமறைவானார். பிரதமரும் அதிபரும் பதவிகளைத் துறந்தார்கள். ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக அரசியலில் பெரும் செல்வாக்குச் செலுத்தி வந்த ராஜபக்க்ஷேக்களின் குடும்பம் இனி அதிகாரம் பெறுவது மெத்தக் கடினம் என்று நிலைமை ஒரு சனிக்கிழமை பிற்பகலில் மாறிவிட்டது. அன்று அலை அலையாக மக்கள் வீதிகளில் திரண்டார்கள். ஆவேசத்துடன் தடை உத்தரவை மீறி, தடுப்புக்களை தள்ளித் தகர்த்து அதிபர் மாளிகையை நோக்கி முன்னேறினார்கள். அதன்…
-
Illiterates Who Conduct Self-Cremation!
By L. Murugapoopathy Translated by Mahroof Noor Mohamed When asked, “What would you do if you get ten million?” “I will build a library.” Said, Mahatma Gandhi “What would you do if you were stranded on a lonely island?” “I would live happily with books,” said Jawaharlal Nehru “Don’t forget to write on my grave,…
-
பண்ணையில் ஒரு மிருகம்’; – எழுதியவர் டாக்டர் நடேசன்
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். டாக்டர் நடேசனின் ‘ பண்ணையில் ஒரு மிருகம்’ நாவல் அண்மையில் வெளியாயிருக்கிறது. அவர் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு 1985ம் ஆண்டு அகதியாகப் போயிருந்த கால கட்டத்தில் ஒரு மிருகப் பண்ணையில் உத்தியோகம் பார்த்ததைப் பற்றிய அனுபவத்தின் பின்னணியில் கதையொன்றைப் படைத்திருக்கிறார். இவர் படைத்த பல புத்தகங்கள் உலகத் தரமான அற்புத படைப்புக்கள்.புலம் பெயர்ந்த தமிழனின் எழுத்து மேம்பாட்டை பல்வேறு தளங்களில் பதிவு செய்திருக்கிறார் என்பதற்கு இவரின், ‘அசோகனின் வைத்தியசாலை,’ ‘ கானல் தேசம்’ போன்ற சில…
-
கலா. பரமேஸ்வரன் நினைவுகள்
நனவிடை தோய்தற் குறிப்புகள்: கறுப்பு ஜூலையில் – நேற்று 24 ஆம் திகதி 39 ஆவது நினைவு தினம் முருகபூபதி முப்பத்தியொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் (1983 ) இதே ஜூலை மாதம் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணம் பலாலி வீதியில் பரமேஸ்வரா சந்தியில் வந்துகொண்டிருந்த இராணுவ ட்ரக் வண்டி மீது நிலக்கண்ணிவெடித்தாக்குதல் நடந்தது. அச்சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியை தமிழர்கள் இன்றும் கறுப்பு ஜூலை என்று அனுட்டித்துக்கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசியலிலும் இங்கு…
-
ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக்
படித்தோம் சொல்கின்றோம் ஆயுதங்கள் உலகெங்கும் உற்பத்திசெய்த அகதிகளின் கதை ! முருகபூபதி இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது “ அஸ்ஸலாமு அலைக்கும் – வஅலைக்கும் அஸ்ஸலாம் “ எனச் சொல்லிக்கொள்வார்கள். பராக் ஒபாமாவும் அமெரிக்க ஜனாதிபதியானதன் பின்னர் கெய்ரோ சென்றவேளையில் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் “ அஸ்லாமு அலைக்கும் “ என்று தொடங்கித்தான் தனது உரையை ஆரம்பித்தார். இதுபற்றிய ஒரு விரிவான ஆக்கத்தை எனது சொல்லத்தவறிய கதைகள் நூலில் எழுதியிருக்கின்றேன். “…