-
இந்திய – சீன எல்லை நகரம் – துவாங் -கடிதம்
மிக சுவாரசியமான பயணக்கட்டுரை. பயணத்தில் தரிசித்த இடங்களை விட சந்தித்த மானுடர்களை விமர்சித்தது ஒரு மாறுதலே. இவர்களே எம் மனதில் பதிந்து திசைகாட்டிகளாய் உருமாறுகின்றனர். “கறுப்புத் திரவகத்தை” விநியோகித்த பெண்ணை விபரித்ததன் மூலம் நடந்ததை வாசகன் எண்ணத்திரையில் கறையாய் பூசி கடந்து போனீர்கள். Tawang இன் மேற்கே நேபாளத்தில்தான் Everest base camp 1 உள்ளது. எனது “இமயம் தொடும் ஷர்ப்பாணிகள்” கட்டுரையில் இப்பயணத்தை தொட்டுச்சென்றுள்ளேன்.
-
இந்திய -சீன எல்லை நகரம்-துவாங்
நடேசன் தலாய் லாமா, இந்தியாவில் எல்லை நகரான தவாங் சென்றபோது, சீன அரசினர் ஆட்சேபித்தார்கள் . நாமும் போய் பார்ப்போம், என்ன நடக்கிறது என்பதை அறிவோம் என்ற எண்ணத்துடன் அங்கு போனேன். சீனா ஆட்சேபிக்காதபோதும், எனது அருணாசலப் பிரதேச பயண அனுபவம் இலகுவானதல்ல. வயிற்றில் புளியைக் கரைக்கும் தன்மையுடையது. இந்தியா- சீனா எல்லைப் பிரதேசமான அருணாசலப்பிரதேசம் ஒரு காலத்தில் தென் தீபெத் ஆக இருந்தது . பிரித்தானியர் ஆண்ட காலத்தில் தீபெத் அரசுடன் செய்த ஒப்பந்தத்தில் இந்தியாவோடு…
-
இயக்கமாக மாறிய தமிழச்சி சுமதி தங்கபாண்டியன்.
முதல் சந்திப்பு ( அங்கம் -05 ) இலக்கியவாதி இந்திய நாடாளுமன்றம் பிரவேசித்த கதை ! இயக்கமாக மாறிய தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் முருகபூபதி உலகில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை எப்போது வழங்கப்பட்டது..? என்பதை ஆராயும்போது பல சுவாரசியமான கதைகள் தெரியவரும். பெண்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமாயின் அவர்கள் வேலைக்குச்சென்று வரி செலுத்த வேண்டும், திருமணம் ஆகியிருக்க வேண்டும் முதலான நிபந்தனைகளும் ஒரு காலத்திலிருந்தன. பிற்காலத்தில் பெண்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி, நாட்டின் பிரதமராக –…
-
தளிர்- பண்ணையில் ஒரு மிருகம்
எனது புத்தகங்களைப்பற்றி நான் மதிக்கும் தமிழ்நாட்டு எழுத்தாளர்களான ஞானி , ஜெயமோகன், எஸ் ஆர் ராமகிருஷ்ணன் சிவகாமி(IAS) மாலன் பேராசிரியர் ராமசாமி எனப் பலர் எழுதியுள்ளார்கள். அதே போல் இலங்கை எழுத்தாளர்கள் தெளிவத்தை யோசப், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கருணாகரன் முருகபூபதி எனப்பலர் எழுதியுள்ளார்கள் . இதைவிடப் பலர் நண்பர்களும் எழுதியுள்ளார்கள். இவர்கள் என்னை அறிந்தவர்கள் .என்னை அறியாது புத்தகத்தை மட்டும் படித்து எழுதியவர்கள் பலர். தற்போது தேனி கால்நடைமருத்துவ பலகலைக்கழகத்தில் படிக்கும் மாணவி எனது புத்தகத்தைப்பற்றி எழுதியது வித்தியாசமானது . காரணம் எனது கருத்துகள் எங்கு செல்லவேண்டுமோ அங்கு சென்றுள்ளது மகிழ்வைக் கொடுக்கிறது. உங்களுடன்…
-
கே.எஸ். சிவகுமாரன்; வாழ்நாளில் கற்றதையும் பெற்றதையும் பதிவுசெய்த கலை, இலக்கியவாதி
-முருகபூபதி “நீங்கள் ஓய்வெடுங்கள். பின்னர் தொடர்புகொள்கின்றேன்” என்றேன். அவர் இப்படித்தான் என்னை மட்டுமல்ல இன்னும் பலரையும் “சேர்” என்று விளிப்பதுதான் வழக்கம்.நாம் அவரை சிவா என்றும் சிவகுமாரன் என்றும் அழைப்போம். தப்பித்தவறி அவரை சிவகுமார் என்று விளித்துவிட்டால், சற்று அதட்டலான குரலுடன், “ஐஸே… எனது பெயர் சிவகுமாரன். அவ்வாறு அழையும். அல்லது சிவா என்று கூப்பிடும்” என்பார்.ஆனால், என்றைக்குமே அதிர்ந்து பேசமாட்டார்.இவரது எழுத்துக்களை ஊடகங்களிலும் மல்லிகை முதலான இதழ்களிலும் 1970 காலப்பகுதியில் பார்த்திருக்கின்றேன். எனினும் முதல் முதலில்…
-
வியட்நாம் முத்துகள்
நோயல் நடேசன் வியட்நாமில் ஹா லுங் பே(Ha Long Bay) என்ற இடம், கடலில் நீரில் முத்து வளர்ப்பதற்குப் பிரசித்தமானது. எங்களை அங்கு வழிகாட்டி அழைத்துச் சென்றபோது ‘நத்தைகள்போல் சிப்பிகளும் ஆணும் பெண்ணும் அர்த்த நாரியாக (hermaphrodites) இணைந்திருப்பவை ‘ என சியாமளாவிற்குச் சொன்னபோது, ‘அவைகள் பாவம் ஒன்றின்மேல் ஒன்று எப்படி ஒற்றுமையாக இருக்கும்’ என்றார். ‘மனிதர்களில் ஆணும் பெண்ணும் ஒற்றுமையாகவா இருக்கிறார்கள்? இயற்கை இவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை: பரிதாபம் பார்ப்பதில்லை: அனுதாபத்துடன் நோக்குவதில்லை. அந்த உயிர்கள்…
-
“குன்றிலிருந்து கோட்டைக்கு…..” ஒரு கண்ணோட்டம்
கிறிஸ்டி நல்லரெத்தினம்++++++++++++++++++++++++++நூல்: குன்றிலிருந்து கோட்டைக்கு…ஆசிரியர் : எம். வாமதேவன் வகை : சுயசரிதைவெளியீடு : 2020பக்கங்கள்: 251பதிப்பகம்: குமரன் பதிப்பகம் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்காக 2020/2021ல் நடத்திய போட்டியில் கட்டுரைப் பிரிவில் பரிசுபெற்றது இந்நூல். மலையகத்தில் பிறந்து அறிவாற்றல், இலக்கியம், சமூக ஈடுபாடு, அரச நிர்வாகம் என பல்வேறு துறைகளில் பல ஏற்றங்களையும் உச்சங்களையும் தொட்ட நூலாசிரியர் எம். வாமதேவன் எழுதியுள்ள நூலின் அனுபவப் பகிர்வு இது. தம் துறையில் இமயம் தொட்ட…
-
முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி”
“ நூல் மதிப்பீடு – நடேசன் எமது அண்டை நாடான பாரத தேசத்தில் பிறந்த மூவர் நமது இலங்கையில் தங்களது சிந்தனைகள் , செயல்களால் செல்வாக்கு செலுத்தினார்கள். அவர்களில் கௌதம புத்தர் முதன்மையானவர். அவர் இலங்கைக்கு வந்தாரோ, இல்லையோ, அவரது உபதேசங்கள் இலங்கையில் தேர வாத பௌத்த சமயமாக இரண்டாயிரம் வருடங்கள் முன்னதாக ஆழமாக வேரூன்றியது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மோகனதாஸ் கரம் காந்தி இலங்கைக்கு வந்ததுடன், அவரது அரசியல் கருத்து போராட்ட…
-
ஏழு கடல்கன்னிகள்
உங்கள் நூல் விமர்சனம் அருமை. தமயந்தி வட புலத்தில் உள்ள தீவுகளில் வாழ்ந்ததனால் சொற்பிரயோகத்தில் மண்வாசனை ஒட்டிக்கொண்டிருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில் வலிந்து புகுத்தப்பட்ட எந்த வாசனையும் மணப்பதில்லை. எலியட்டில் ஆங்கிலக் கவிதையும் சோவியத்தின் போல்சுவிக்குக்கு எதிராக எழுதப்பட்டது என குறிப்பிட்டிருந்தீர்கள் என நினைவு. இது பற்றி மேலும் அறிய படித்ததில் கிடைத்தவற்றை கீழே ஒட்டித்தந்துள்ளேன். The Waste Land இன் முதல் வரியிலேயே எலியட் ஏப்ரல் மாதத்திற்கு கறை பூசி எம்மை ஒரு இருண்ட உலகுக்கு…
-
முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு.
மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டில் முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு இம்மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மகாகவி பாரதியார் மறைந்து 101 வருடங்களாகின்றன. இந்நினைவு நூற்றாண்டில் எழுத்தாளரும், ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி எழுதியிருக்கும் பாரதி தரிசனம் என்ற புதிய படைப்பு மின்னூலாக வெளியாகின்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு ஆரம்பமானது. அதனை முன்னிட்டு முருகபூபதி எழுதிவந்த பாரதி தரிசனம் தொடர் தற்போது…