-
வியட்நாமின், சம்பா இந்து அரசு
நடேசன். பல வருடங்கள் முன்பாக கம்போடியாவிலுள்ள அங்கோவாட் போயிருந்தபோது, கமர் (Khmer) இராஜதானிக்கும் வியட்நாம் பகுதியிலுள்ள சம்பா என்ற இந்து அரசுக்கும் தொடர்ச்சியான போர் நடந்தது என அங்கு குறிப்பு எழுதியிருந்ததைப் பார்த்தேன். அக்கால சம்பா அரசு தற்போது வியட்னாமின் மத்திய பகுதியே என்று சொல்லப்பட்டது. அக்காலத்தில் இந்துக்களாக இருந்த அந்த சம்பா மக்கள் இஸ்லாமியராக இப்பொழுது மாறிவிட்டார்கள் என்றார் எனது வழிகாட்டி . அதன்பின் சில தடவை வியட்நாம் சென்றபோது எதோ காரணத்தால் அந்தப்பகுதி எங்கள் […]
-
பண்ணையில் ஒரு மிருகம் நாவல்-Murugesu Natkunathayalan
உங்களின் பண்ணையில் ஒரு மிருகம் நாவல்Murugesu Natkunathayalan இப்போது படித்து முடித்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். சில விடயங்களை நாசூக்காகச் சொல்லும் விந்தையைக் கற்றுக்கொண்டேன். சலிப்பில்லா நகர்வு. நிஜ மிருகங்கள்பற்றிய அறிவூட்டல் அற்புதம். படிக்கும்போது லண்டனைவிட்டு அந்தப் பண்ணைக்குப் போய்விட்டேன். பண்ணைத் தொழிலாளர்களுடன் நீங்கள் மட்டுமல்ல நானும் தோழமை கொண்டுவிட்டேன். ராமசாமிக்கு நான் மிக நெருக்கமாகிவிட்டேன். கற்பகம் மனதில் வாழத் தொடங்கிவிட்டாள். நெருடியவை: இராமசாமி சிலவேளை ராமசாமி என வந்துள்ளது. கதை முடிவுக்கு வந்தமை ஒரு […]
-
பண்ணையில் ஒரு மிருகம்: வாசிப்பு அனுபவப்பகிர்வு
எழுத்தாளர் நடேசன் எழுதியிருக்கும் புதிய நாவல் பண்ணையில் ஒரு மிருகம் நூலின் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி இம்மாதம் 27 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் ( Zoom Meeting ) நடைபெறவுள்ளது. Join Zoom Meeting https://us02web.zoom.us/j/88498364186?pwd=RCt2RDJVdHg5TXhVa1pRREV3aHBCZz09 Meeting ID: 884 9836 4186 Passcode: 150046 ஆஸ்திரேலியா – கன்பரா தமிழ் அரங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்ச்சியில், பண்ணையில் ஒரு மிருகம் நாவல் குறித்து ஆஸ்திரேலியாவிலிருந்து சாந்தி சிவக்குமார், இலங்கையிலிருந்து அனுஷா சிவலிங்கம், பிரித்தானியாவிலிருந்து […]
-
வியட்நாம் துரைசாமி
நோயல் நடேசன் நாங்கள் வியட்நாம் சென்றபோது எங்களுக்கு வழிகாட்டியாக வந்த பெண் மிகவும் கரிசனையாக எங்களைப் பார்த்துக்கொண்டாள். என் மனைவிக்குத் துணிகள் தைக்குமிடமெல்லாம் அவளே கூட்டிச் சென்றாள். என்னால் அந்த நேரத்தில் ஓய்வெடுக்க முடிந்தது. அவள் மற்றைய மஞ்சள் நிற வியட்நாமியப் பெண்களைவிட கறுப்பான நிறத்திலிருந்தாள். எங்களது நிறத்தில் எனலாம். அதாவது பொது நிறமென இலங்கையிலும் மாநிறமெனத் தமிழ்நாட்டிலும் சொல்லும் நிறம் கொண்டவள். அது எங்களது மனதில் கேள்வியை உருவாக்கி, முகத்தைச் சுற்றி பட்டாம்பூச்சியாகப் பறந்தபடி இருந்தது. […]
-
பண்ணையில் ஒரு மிருகம்-நாவல்
தமிழகத்தை சாராதவரின் நாவலில் தமிழகச் சூழல் ! கதை சொல்லி நடேசனின் மற்றும் ஒரு நாவல் முருகபூபதி அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்தி எழுத்தாளருமான விலங்கு மருத்துவர் நடேசன், இதுவரையில் சிறுகதை, நாவல், பயண இலக்கியம், மற்றும் தனது தொழில்சார் அனுபவக் கதைகள் என பல நூல்களை வரவாக்கியிருப்பவர். நடேசன் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரே இலக்கியப் பிரதிகள் எழுதத் தொடங்கியவர். அதாவது 1990 ஆம் ஆண்டுக்குப்பின்னரே இந்தத்துறையில் தீவிரமாக இயங்கினார். கடந்துவிட்ட மூன்று தசாப்த […]
-
சினிமா: நன்றிகெட்ட மனிதர்களை விட நாய்கள் மேலடா… !
அவதானி நாய் நன்றியுள்ள மிருகம். நாய் வீட்டைக் காக்கும் . என்றவாறெல்லாம் எமது சிறிய வயதில் பாடசாலைகளில் சொல்லித் தந்திருக்கிறார்கள். நாய் பற்றி திருவாசகம் முதல் திரைப்படங்கள் வரையில் ஏராளமான பாடல்கள் பிறந்திருக்கின்றன. நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு என்று தாம் இயற்றிய திருவாசகத்தில் மாணிக்கவாசகரும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மூத்த கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப்புலவரும் வீமா வீமா ஓடி வா என்ற தலைப்பினைக்கொண்ட குழந்தைகளுக்கான பாடலை வரவாக்கியவர். கவியரசு கண்ணதாசனும் படிக்காத மேதை திரைப்படத்திற்காக எழுதிய […]
-
இன்று ஓகஸ்ட் 10 – பேராசிரியர் நுஃமானுக்கு பிறந்த தினம்
இலக்கிய உலகம் கொண்டாடும் இந்த ஆளுமையின் கவிதை காலிமுகத்திடலிலும் ஒலித்தது ! முருகபூபதி நூறு நாட்களையும் கடந்து தொடர்ந்த காலிமுகத்திடல் போராட்டம் பல காட்சிகளை கண்டது. அதனை உள்நாட்டினர் மட்டுமல்ல சர்வதேச சமூகமே தினம் தினம் பார்த்தது. குறிப்பிட்ட காலிமுகத்திடல் பேராட்டத்தில் யாழ்ப்பாணத்தில் 1981 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அன்றைய ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கினால், அரச கூலிப்படைகளே பொது நூலகத்தை எரித்து சாம்பராக்கியது. 41 ஆண்டுகள் கடந்த பின்னரும் புத்தகப்பிரியர்கள் அனைவரது மனதிலும் அந்த நெருப்பு கனன்றுகொண்டுதானிருக்கிறது. […]
-
பண்ணையில் ஒரு மிருகம் – நோயல் நடேசன்:
சரவணன் மாணிக்கவாசகம் யாழ்பாணத்திற்கு மேலே அமைந்திருக்கும் எழுவைத்தீவில் பிறந்தவர். கால்நடை மருத்துவர். பலகாலமாக ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இந்தியாவிலும் சிலகாலம் வசித்திருக்கிறார். இங்கே ஒரு பண்ணையில் சிலகாலம் வேலைசெய்த அனுபவத்தை வைத்து எழுதப்பட்டதே இந்த நாவல். இந்தியர் எல்லோருக்கும் சிறுவயதில் இருந்து கேட்ட புராணக்கதைகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மேலைநாட்டினருக்கு ஆச்சரியமூட்டுபவை. கீதாஞ்சலியின் Tomb of Sand இந்தியத்தனத்தினாலேயே விருதை வென்றது. இந்தியா போல Rich heritage கொண்ட நாடுகள் குறைவு. ஈழத்தமிழர்கள் சினிமா, இலக்கியம், கலை மூலம் நம்முடன் […]
-
ஒற்றைக் கொம்பன் காண்டாமிருகம்.
நடேசன். இந்தியாவின் வடகிழக்குப் பயணத்தில் அசாமில் காஞ்சிரங்கா (Kaziranka national Forest )வனத்திற்குப் போவது எனது இலக்காக இருந்தது. அதன் முக்கியம் என்ன ? ஒரு மிருக வைத்தியராக எங்கு போனாலும் வன விலங்குகளைப் பார்ப்பது எனது விருப்பம் . அதே நேரத்தில் காட்டு விலங்குகளை மிருககாட்சி சாலையில் வைத்திருப்பது மனதிற்கு ஒவ்வாதது . ஆனால், என்ன செய்யமுடியும் ? எல்லோராலும் வனத்திற்குச் செல்லமுடியாது . முக்கியமாக குழந்தைகள் சிறுவர்களுக்கு விலங்கு காட்சி சாலையே விலங்குகளைப் பார்க்க […]