-
ஈழத்து மார்க்சிம் கோர்க்கி யார்..?
டொமினிக்ஜீவாவா..? அல்லது புதுவை இரத்தினதுரையா…? நடேசன் ——————————————————————————————– டொமினிக் ஜீவாவை, ஈழத்து மார்க்சிம் கோர்க்கி என்று ஒரு சிங்களப் பத்திரிகையில், நண்பர் மடுள்கிரியே விஜேரத்ன எழுதியிருந்தார் . உண்மையான நமது மார்க்சிம் கோர்க்கி என நாம் கொண்டாடவேண்டியவர் கவிஞர் புதுவை இரத்தினதுரையே. அந்தப் பெருமை அதற்கு உரியவரிடம் சேரவேணடும் என்பதால் இதை எழுதுகிறேன். “ரஷ்யாவின் சிறந்த கவிஞராகிய ஒருவர் போல்ஸ்விக்குகளால் கொலை செய்யப்படுவதைத் தடுக்கும்படி, லெனினிடம் கேட்டு அந்தக் கொலையைச்செய்ய தயாராகியிருந்தவர்களுக்கு அவசரத்தந்தி மூலம் தகவல்…
-
தேனி- ஜெமினியின் மறைவு தரும் பாடம் !
நடேசன். ஸ்டுட்காட்டில் (Stuttgart, Germany) நண்பர் யோகநாதன் புத்திராவின் வீட்டில் பத்துப் பேர் சில வருடங்கள் முன்பாக என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள் அவர்கள் பலரில் ஒருவர், தலையில் கருமையான தொப்பியணிந்தபடி ஓரத்தில் அமர்ந்திருந்தார். அப்போது யோகநாதன் “இவர்தான் தேனி ஜெமினி “ என அறிமுகப்படுத்தியபோது “தேனியை நடத்திக் கொண்டு ஜெர்மனியில் எப்படி உங்களால் உயிர்வாழ முடிகிறது?” எனக் கேட்டேன். ஆரம்பத்தில் அவரிடமிருந்து புன்சிரிப்பு மட்டும் வந்தது. சிறிது நேரத்தின் பின் “ எவரையும் எனது வீட்டுக்கு…
-
மல்லிகை ஜீவா ( 1927 – 2021 ) விடைபெற்றார் !
வரலாறாகிவிட்ட ஈழத்தின் இலக்கியக்குரல் ! ! முருகபூபதி இன்று 29 ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் எனது கைத்தொலைபேசி சிணுங்கியது. இந்த அகாலவேளையில் யார்…? எனப்பார்த்தேன். மறுமுனையில் இலக்கிய நண்பர் தெய்வீகன், “ உறக்கத்தை குழப்பியதற்கு மன்னிக்கவும் “ எனச்சொல்லிவிட்டு, எங்கள் மல்லிகை ஜீவா கொழும்பில் மறைந்துவிட்டார் என்ற ஆழ்ந்த துயரம்மிக்க செய்தியை சொன்னார். அத்துடன் எனது உறக்கம் முற்றாக களைந்துவிட்டது. தனது வாழ்நாள் முழுவதும் களைக்காமல் ஓடி ஓடி ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு…
-
தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்
முருகபூபதி “ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா…? “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி. எனக்கு ‘ஜமாத் ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “ இவ்வாறு தனுஜா, தன்வரலாற்று நூலில் பேசும் வரிகள் 133 ஆம் பக்கத்தில் இடம்பெறுகின்றன. ஆம் , எமக்கும் திருநங்கை ஜமாத் பற்றி எதுவுமே அதன் அரிச்சுவடியே தெரியாதுதான். தமிழ்த்திரைப்படங்களில் திருநங்கைகளை ரசிகர்களை சிரிக்கவைக்கும் பாத்திரமாக படைத்து இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் பணம் சம்பாதித்தனர்.…
-
மெல்பன் நகரம் சொல்லும் கதை
Photos and article நடேசன் பெருநகரங்கள் நமது காதலிகள் போன்றவை. காதலியின் அகத்தையும் புறத்தையும் முழுமையாகத் தெரிந்து கொண்டோம் என நினைத்து திருமணத்திற்குத் தயாராகும் பொழுது அவர்கள் புதிதாக மாறிவிடுவார்கள். உங்களது பார்வையில் லியோனிடோ டாவின்சியின் ஓவியமாகத் தெரிந்தவர்கள் பின்பு , பிக்காசோவின் அரூப ஓவியமாக தெரிவார்கள். புதிய புதிய அர்த்தம் கொள்ளவைப்பார்கள். நீங்கள் பழைய காதலியைத் தேடும்போது அவர்கள் அங்கிருக்கமாட்டார்கள். ஆச்சரியம் , ஆதங்கம், ஏமாற்றம் ஏற்பட்டால் அதற்கு அவர்கள் பொறுப்பல்ல. அது…
-
உண்மை கலந்த நாட்குறிப்புகள்.
அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள். நடேசன் ————————————————————- ஆயிரத்தொரு இரவுகள் என்ற புனைவைப் பற்றி நாம் கேட்டிருப்போம். ஃபிரேம் (Frame) வகையான கதை சொல்லல் முறையில், அதாவது திரைப்படத்திற்கான காட்சிகள் ஒன்று – இரண்டு என எழுதப்படுவதுபோல் கதைக்குள் கதை வைத்துக் (Genre )கதை சொல்லல். ஆயிரத்தொரு இரவுகள் அரபிக் கதையல்ல. இந்தியாவிலிருந்து மேற்காக நகர்ந்தது . பஞ்சதந்திரம் மற்றும் ஜாதகக்கதைகள் இப்படியான பிரேம் கதைகளாக உருவாகி பாரசீகத்துடாக அரேபிய வியாபாரிகளால் வியாபாரப் பொதிகளோடு எடுத்துச்…
-
மேரியின் நாய்.
நடேசன் 2020 கார்த்திகை மாதம்- மெல்பேன் – மல்கிறேவ் மிருக வைத்தியசாலை வசந்தகாலமாக இருக்கவேண்டும் ஆனால் இந்த வருடம் குளிர்காலமும் வசந்தமும் ஒன்றுடன் ஒன்று பிரியாது இருந்தது. அது பெரிதான பிரச்சனை இல்லை . கொரானால் மெல்பேன் நகரம் மூடப்பட்டு அல்பேட் காமுவின் பிளேக்கின் கற்பனைக்கு, 21ம் நூற்றாண்டில் நிஜமான வடிவம் கொடுக்கப்பட்ட காலம். ஆனால் மிருகவைத்தியர்கள் அவசரகால வேலையாளர்களின் பகுதியாக இருப்பதால் தொழில் செய்ய அனுமதியுள்ளது. மிருக வைத்திய நிலையத்தில் காலை பத்து மணிக்குப் பதியப்பட்டிருந்த…
-
நினைவோடையில் நண்பர் சபேசன்
நடேசன்.https://youtu.be/FDqzNiBA4Go இந்த நினைவுக் காணொலியை சபேசனுக்காக நண்பர் முருகபூபதியும் நானும் ஒழுங்கு பண்ணியது நண்பர் சபேசனுக்காக மட்டுமல்ல. பல காரணங்கள் உண்டு 1) பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களை சமூகம் இலகுவாக மறந்துவிடுகிறது. பல முறை அவர்கள் குடும்பத்திலும் நல்ல பெயர் வாங்குவதில்லை . அப்படி இயங்குபவர்கள் எப்படி குடும்பங்களைப் புறந்தள்ளுவார்கள் என்பது எனக்கும் தெரியும். ஆறு நாட்கள் வேலை செய்ததுடன் என ஏழாவது நாளும் உதயத்திற்காக வேலை செய்தேன். அதற்கு முன்பு அஸ்திரேலிய தமிழ் அகதிகள் சங்கம் அதற்கு…
-
கானல்தேசம்
Ⓜ️ G _ கிஷ்னா ♨️ rated it it was amazing ஈழத்தில் போர் முடிந்த பின்னர் வெளிவந்த இலக்கியபடைப்புகளில் அநேகமானவை விடுதலைபுலிகளின் சார்பாக, உண்மையை முற்றிலும் புறம்தள்ளி எழுதபட்டவை . அவற்றில் இருந்து நோயல் நடேசனின் #கானல்தேசம் வித்தியாசபடுகிறது. புனைவுதான் என்றாலும், வெளிநாட்டு அரசுகள் எவ்வாறு இப்போரின் பின்நிலையில் இயங்கின. அவர்களது உளவு நிறுவனங்கள் எங்கெல்லாம், எவ்வாறு ஊடுருவி இருந்தன, எமது பொடியளின் சர்வதேச வலையடைப்பு எவ்வாறு இயங்கியது. உள்நாட்டிலும் எங்களுக்கு தெரியாமல் கண்கட்டி…
-
கொரோனா காலத்தின் பின் பயணம்.
நடேசன் மெல்பனில் இருநூற்றி ஐம்பது நாட்கள், ஐந்து மில்லியன் மக்கள் வீட்டுக் காவலில் இருந்தார்கள். உணவு, உடற்பயிற்சி முதலான அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டும் வெளியே போக முடியும். அதுவும் ஐந்து கிலோமீட்டர் மட்டுமே. கடந்த இரண்டு கிழமைகள் கொரோனாவால் எதுவித தொற்றும் மெல்பனில் இல்லை என்பதால் நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டு , தடுப்புக்காவல் முடிவடைந்து, முகமூடியோடு மெல்பன் மக்கள் வெளியேசெல்ல அனுமதியளிக்கப்பட்டது. அந்த அனுமதி விக்ரோரியா மாநிலத்தின் உள்ளே மட்டும் செல்லுபடியாகும். பக்கத்து மாநிலங்களுக்குப் போக முடியாது.…