-
நடந்தாய் வாழி களனிகங்கை
அங்கம் – 08 முருகபூபதி களனி கங்கை தீரத்தில், இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1943 ஆம் ஆண்டு நடந்த சட்ட சபைத்தேர்தலில் ஒருவர் வெற்றிபெற்றார். குறிப்பிட்ட களனி பிரதேசத்திலிருந்து முதல் முதலாக அவர் தெரிவாகும்போது அவரது வயது 37. இலங்கையில் நீதித்துறை சார்ந்த ஒரு பெரியவருக்கும் செல்வந்த குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண்மணிக்கும் பிறந்தவர்தான் அந்த களனி தொகுதியை பின்னாளில் பிரதிநிதித்துவப்படுத்தியவர். அவர் பிறந்த இல்லம் எது…? என்பதைச் சொன்னால் எவருக்கும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கலாம். […]
-
வற்றாத ஜீவநதிகள் கொண்ட நாடு
நடந்தாய் வாழி களனிகங்கை அங்கம் – 07 முருகபூபதி இந்தியாவில் பெரும்பாலான நதிகளுக்கு பெண்களின் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளன. அங்கு மத்திய – மாநில அரசுகளிடம் நதிநீர் இணைப்புத்திட்டங்களும் உருவாகி, விவாதங்களும் போராட்டங்களும் தொடருகின்றன. பெண்களின் பெயர்களை நதிகளுக்கு சூட்டினால் எப்படித்தான் ” இணைப்பு வரும்…? “ என்று ஒரு முகநூல் குறிப்பு வேடிக்கையாக சொல்லியிருந்தது. இலங்கை, இந்தியாவை விட பலமடங்கு சிறிய நாடு. இன்னும் சொல்லப்போனால், சிறிய தீவு. இந்தத்தீவுக்குள் பல நதிகள் இருந்தபோதிலும் அவை […]
-
நடந்தாய் வாழி களனிகங்கை
முருகபூபதி அங்கம் – 06 முகத்தில் துவாரம் வந்தால் அவலட்சணமாயிருக்கும்! ஓடும் கங்கையில் துவாரம் வந்தால் எழிலாயிருக்கும். அந்த இயற்கை எழிலைத்தான் இலங்கையில் கொழும்பு முகத்துவாரத்திலும் மட்டக்களப்பு முகத்துவாரத்திலும் நாம் காண்கின்றோம். நதி எங்கே போகிறது? கடலைத் தேடி ! நாளெங்கே போகிறது? இரவைத் தேடி!நிலவெங்கே போகிறது? மலரைத் தேடி!நினைவெங்கே போகிறது? உறவைத் தேடி! என்று கவியரசர் இயற்றினார். காதலி கேள்வி கேட்க, காதலன் பதில் சொல்லும் பாடல். இதில் நதியா, கடலா? காதலன்! அல்லது கடலா […]
-
நடந்தாய் வாழி களனிகங்கை
( நதியாக நகரும் வரலாற்றுப்பதிவு ) அங்கம் 05: முருகபூபதி. உலகம் தோன்றியது முதல் சாமியார்களும் தோன்றிவிட்டனர். இவர்கள்தான் சமயங்களையும் தோற்றுவித்தவர்கள். முற்றும் துறந்த துறவிகளையே சாமியார்கள் என அழைக்கின்றோம். யேசுவும் புத்தரும் அவர்களின் பின்னர் தோன்றிய அவர்களின் மார்க்கத்தை பரப்பியவர்களும் சாமியார்களானார்கள். புத்தசமயத்தில் அவர்களை பிக்குகள் எனவும், கத்தோலிக்க சமயத்தில் சாமியார், அருட் தந்தை, அருட் சகோதரர் எனவும் அழைக்கிறார்கள். இந்துசமயத்தில் தோன்றிய பல சாமியார்களும் முற்றும் துறந்த முனிவர்கள் போன்று ஆசா […]
-
ලක්මවුනි ආයුබෝවන්
ලේඛක නොයෙල් නඩෙිසන්ගේ විපුවාසය ග්රන්ථය පිළිබද සටහනක් සිංහල පරිවර්තනය – විමල් සාමිනාදන් සටහන – ස්වර්ණකාන්ති රාඡපක්ෂ ශ්රී ලංකාවෙි පැවති බිහිසුණු බෙදුමිවාදී අරගලයේ තවත් පැතිකඩක් එළිදරවු කරමින් ලියැවුණු ලේඛක නොයෙල් නඩෙිසන්ගේිවිපුවාසය’ කියැවූ මට ඒ සදහා සටහනක් තබන්නට සිත් වියග ඊනියා ඡාති හිතෛෂී දෙමළ ඡාතිකයන් කණ්ඩායමි උනුනුන් අතර ද ඇන කොටා ගන්නා වාතාවරණයක කදුළු සලමින් ලක්මවගෙන් […]
-
“இலங்கைக்கு வந்த முதலாவது சமாதானத் தூதுவர் யார்…?”
அங்கம் – 04 நடந்தாய் வாழி களனிகங்கை: முருகபூபதி “இலங்கைக்கு வந்த முதலாவது சமாதானத் தூதுவர் யார்…?” என்ற கேள்வியுடன் இந்த அங்கத்தை தொடங்குவோம். எமது தாயகத்தின் வரலாற்றை ஆராயும்போது, பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகின்றன. 25 ஆயிரத்து 330 சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த சின்னஞ்சிறிய தீவில், தமிழ் – சிங்கள – முஸ்லிம் இன நல்லுறவுக்கு காலத்திற்குகாலம் சோதனைகள் வந்திருப்பது இன்று நேற்று அல்ல என்பதை வரலாற்றின் ஏடுகளிலிருந்து பார்க்கின்றோம். முரண்பாடுகள் இராமன் – […]
-
“இவர் நல்லவரா..? கெட்டவரா..?”
நடந்தாய் வாழி களனிகங்கை அங்கம் – 03 ” ஆத்தோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி, தோட்டம் இட்டு செடிவளர்த்து, ஜோராக குடியிருப்போம்” என்ற திரைப்படப் பாடல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? 1964 இல் வெளிவந்த வாழ்க்கை வாழ்வதற்கே என்றதிரைப்படத்தில் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் வாயசைக்கும் இந்தப்பாடலை கவியரசு கண்ணதாசன் இயற்றியிருந்தார். இக்காலத்தில் இத்தகைய பாடல்கள் வெளியாவது அபூர்வம். இயற்கையையும் அதனோடு இணைந்த வாழ்க்கையையும் அழகியலோடு சித்திரித்தன அக்காலத் திரைப்படப்பாடல்கள். இன்று பெண்ணின் உடலை ஆணும், […]
-
பிரதமர் பண்டாரநாயக்காவை கொலை.
அங்கம் 02 நடந்தாய் வாழி களனிகங்கை மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடித்த சந்திரோதயம் படத்தில் “புத்தன், யேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக? தோழா, ஏழை நமக்காக! கங்கை, யமுனை, காவிரி , வைகை ஓடுவதெதற்காக? நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக! “ என்ற பாடல் வருகிறது. இந்தப்பாடலை கவிஞர் வாலி இயற்றியிருப்பார். டி.எம். சௌந்தரராஜன் பின்னணிக்குரல் கொடுத்திருப்பார். இலங்கைக்கு முதலில் புத்தரும் பின்னர் காந்தியும் வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். இலங்கையில் கண்டியில் பிறந்தவர். இலங்கையில் ஓடும் […]
-
நடந்தாய் வாழி களனிகங்கை
முருகபூபதி அங்கம் 01 “நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா..?” என்ற வரிகளும் இடம்பெற்ற திரைப்பாடல் தேசியவிருது பெற்றது. இதனை சைவம் படத்திற்காக எழுதிய கவிஞர் ந. முத்துக்குமாரும் இன்று எம்மத்தியில் இல்லை. நதிகளுக்கு வழித்துணை தேவையே இல்லை. அவை தன்பாட்டில் உற்பத்தியாகி காடு, மலை, நகரம், சோலை, சமவெளி கடந்து கடல் தாயிடத்தில் சங்கமிக்கும். வர்ணபகவானுடன் அவற்றுக்கு காதல் பெருகினால் நாட்டிலும் வெள்ளம் பெருகும் நதிகள் தோன்றும் இடத்தை நதிமூலம் என்பர். ஆனால், எம்மால் அதனைப் […]
-
தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம்
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்தத் திட்டம் இயங்கிவருகிறது. கடந்த ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடந்த தெரிவில், பரிசுபெற்ற எழுத்தாளர்கள் […]