-
வறுமையான சிந்தனைகளை நீக்குவோம்
நடேசன் எழுத்தாளர்களை மேற்கு நாடுகள் எப்படி கொண்டாடுகின்றன என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கு அந்த நாடுகளுக்கு போகத் தேவையில்லை. புத்தகங்கள் பத்திரிகைள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். சில வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் முக்கிய எழுத்தாளரான சார்ள்ஸ் டிக்கின்சன் வாழ்ந்த இடத்தையும் அவரது வீட்டையும் அவர் பாவித்த பொருட்களையும் KENTஎன்ற பகுதியில் சென்று பார்த்தேன். இதன் பின்னர் என்னோடு வந்த நண்பன், சில கிலோ மீட்டர் துரத்தில் சாஸ்ஸ் டிக்கின்சன் மது அருந்தும் மதுச்சாலை உள்ளது என்ற தகவலைச்சொன்னதும்…
-
தற்கொலைக்கு போராடும் பூனை
( இது ஒரு அனுபவ பகிர்வு) – நடேசன் “மூன்று நாட்களாக விஸ்கி ஒன்றும் சாப்பிடவில்லை” என எழுபது வயதான கொலின் தனது கறுப்பு வெள்ளைப் பூனையை மார்பில் அணைத்தபடி கூறினார். அவரது பிரித்தானிய உச்சரிப்பு இரசிக்கக் கூடியதாக இருந்தது. அவரது பூனைக்குப் பெயர்தான் விஸ்கி. “மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருப்பது சீரியசான விடயம். இதை விட வேறு குணக்குறைகள் உள்ளதா” எனக்கேட்டபடி பூனையை பரிசோதித்தேன். பசி, காமம், மரணம் …இந்த உலகத்தில் நித்தியமானவை. அவுஸ்திரேலியாவில் உள்ளவர்கள்…
-
தமிழ் இலக்கியம் என்பது இலங்கையில் தனித்து வளர முடியாது
“இலக்கியம் என்பது சிலர் சேர்ந்து பேசிவிட்டு போகும் விடயம் அல்ல.அது மக்களுக்கு பல நன்மைகளை வழங்குவதாக இருக்கவேண்டும். ஓர் சமூகத்தில் படித்தவர்கள் அந்த சமூகத்திற்கு ஒரு பிரச்சனை வருவதற்கு முன்பு அது பற்றி அந்த சமூகத்திற்கு கூறக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
-
சீட்டும் மீட்டர்வட்டியும் புலம் பெயர்ந்து விட்டது
சிறு வயதில் நயினாதீவில் படிக்கும் போது அப்புவின் உடன் பிறந்த சகோதரிகளான இரு மாமிகள் வீட்டில் இருந்தேன். இதில் பெரிய மாமி சாது. மரியாதை உண்டு. ஆனால் சின்னமாமி மேல் அதிகமாக பிடிக்கும். வெள்ளை நிறமும் உயரமான தோற்றமும் கொண்டவர். நிலத்தை கூட்டும் போது கூட எனது மாமி தலை குனிந்து பார்த்ததில்லை. எவரோடும் எடுத்தெறிந்து பேசும் தன்மையும் நடக்கும் போது நிமிர்ந்து பார்த்தபடி தான் நடப்பது வழக்கம். அக்காலத்தில் மாமிக்கு பக்கத்தில் செல்வது பெருமையான…