-
நதியில் நகரும் பயணம் 10 மில்றன்பேர்க் (Miltenberg)
நதி பயணத்தில் மிற்றன்பேர்க் என்ற சிறிய நகரம் தரிப்பாக இருந்தது . இதுவும் பவேரியா பகுதியில் உள்ள பழைய நகரம் ஒன்றாகும் இங்கு குடியேற்றம் ரோமர்களது காலத்திற்கு முந்தியதென்றாலும் அதனது எச்சங்கள் இங்கு இல்லை. மத்திய காலத்தின் எச்சங்களே தற்பொழுது காணப்படுகிறது. நதியின் கரையில் இருப்பதால் எப்போதும் மக்கள் போக்குவரத்து வணிகம் இங்கு செழித்திருந்ததன் விளைவாக நகரம் முழுவதும் அழகிய மரக் கட்டிடங்கள் , கற்கள் பதித்த தெருக்கள் இருந்தன. அத்துடன் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு…
-
நதியில் நகரும் பயணம் 9 : ரோத்தன்பேர்க். (Rothenberg)
எமது படகு வுஸ்பேர்க் (Wurzburg) என்ற நகரத்துக்குச் செல்லும்போது அங்கு எனது சகோதரன் பல வருடங்களாக இருப்பதால் அவனைச் சந்திக்க நினைத்திருந்தேன். ஆனால், அவன் அன்றைய தினம் வேலை – அவன் வேலை இடம் வைத்தியசாலை என்பதால் விடுமுறை பகலில் எடுக்க முடியாது என்றபோது நான் வுஸ்பேர்கில் இறங்கி அந்த நகரத்தைப் பார்க்க விரும்பவில்லை. இரண்டு முறை தம்பியிடம் சென்றபோது, வுஸ்பேர்க்கில் பல இடங்களைப் பார்த்தேன் என்பதால் அங்கிருந்து புதிதான இடத்திற்கு போவோம் என நினைத்தேன். ஏற்கனவே…
-
வேலாயுதர் செல்லத்துரை மறைவு இரங்கலுரை.
புன்னகையை எப்பொழுதும் தன்னில் அணிந்தபடி இருக்கும் நண்பன் வேலாயுதர் செல்லத்துரையை நினைவுகூர நாம் இன்று ஒன்று கூடியிருக்கிறோம் அவர் எனக்கு 50 வருடங்களாகத் தெரிந்த டக்டர் சக்திலெட்சுமியின் கணவர் அத்துடன் கிசானியின் தந்தையாவார் அவர் தனது உதட்டு சிரிப்பிற்கு உள்ளே தனது விடயங்களைத் தெளிவாக வகுத்து நடந்தவர் என்பதை அறிவேன். நாம் பிறந்த பின்பு, இறப்பு என்ற சம்பவம் வாழ்வில் தவிர்க்க முடியாது ஆனால் இடைப்பட்ட காலத்தில் எப்படி நடந்தோம் என்பதே இங்கு முக்கியமானது. நண்பர் செல்லத்துரை …
-
வாழும் இலக்கியங்கள்:சிலப்பதிகாரம்.
நடேசன். நாம் படிக்கும் காலத்தில் பெண்களின் பாடசாலைகளை நோக்கி சைக்கிளில் செல்லும்போது ஓரிரு மடந்தைகள், நிலம் பார்த்தபடி அடியெடுத்துச் செல்வார்கள். தலைசீவி புது உடுப்புடன் உடலெங்கும் ரெஸ்ரெஸ்ரோன் நிறைந்த இரத்தம் காவேரிப் புதுவெள்ளமாகப் பாய்ந்தபடி செல்லும் எங்களுக்கு, அவர்கள் கண்கள் எங்களைத் தொற்றாது புறக்கணிக்கும்போது , ஆணவம் நொந்துபோய், வாய் வார்த்தையில் வந்த தூசணம் காற்றில் மிதக்கும் . அப்போது எம்மில் அறிவாளி ஒருவன் ‘அவளுக்குக் கண்ணகி என்ற நினைப்பு ‘ என்பான். ‘கண்ணகிக்குக் கொடுத்து வைத்தது…
-
நதியில் நகரும் பயணம் 8 :பாம்பேர்க்
இதுவரையும் பார்த்த நகரங்களில் எது அழகானது என்று கேட்டால் பாம்பேர்க்(Bamberg) என்பேன். இது பவேரியா மாநிலத்தில் உள்ள ஜெர்மனியின் புராதன நகர். இந்த நகரம் ஏழு குன்றுகளின் மேல் அமைந்திருக்கிறது. இரண்டு ஆறுகள், அழகான தேவாலயம் , கோட்டை , பெரிய மாளிகையும் அதனருகே தோட்டம் புகையூட்டப்பட்ட பியர், பல உணவகங்கள் எல்லாம் பொடி நடையில் சென்று பார்க்கும் தொலைவில் அமைந்துள்ளது. பல காலமாக முழு நகரமும் யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய மரத்தால் அமைக்கப்பட்ட…
-
Mr V.Selvadurai of Melbourne passed away in Melbourne.
V.Selvadurai of Melbourne, Australia formerly of Amman Road, Kantharmadam, Jaffna sadly passed away on 07.02.2025. He is the son of Kasipillai Velauther and Vallipillai Velauther, sibling of Kanmani Nadarajah & Nadarajah, of the late Kandiah Velauther & Vigneswary Kandiah and Sinnamma Ganesharajah & Ganesharajah. Uncle to Tamilchelvan & Premila and Vasuki & Kandeepan Great Uncle…
-
நதியில் நகரும் பயணம் :7 -நூரம்பேக்
எங்களது படகின் அடுத்த தரிப்பு, பவேரியா மாநிலத்தில் நூரம்பேக் நகரமாக இருந்தது. ஆனால், படகின் வழிகாட்டும் பொறுப்பாளர்கள் . “இலவசமாக நகரத்தின் மத்திய பகுதிகளை நாங்கள் சுற்றிக் காட்டுவோம். ஆனால், நீங்கள் குறிப்பிட்ட பணம் கொடுத்தால், ஹிட்லரது நாஜி கட்சியினது முக்கிய தலைவர்கள் , அதிகாரிகளுக்கு எதிராக, நேசநாடுகளால் நடத்தப்பட்ட வழக்கு நடந்த இராணுவ நீதிமன்றத்திற்கும் , ஹிட்லரது கட்சி பிரசாரத்திற்கும், கூட்டங்கள், அணிவகுப்புகளுக்கு எனக் கட்டப்பட்ட ஸ்ரேடியம், அணிவகுப்பு மைதானம் போன்ற பகுதிகளுக்கு உங்களை பஸ்சில்…
-
மரங்கொத்தி புத்தகங்கள்.
நடேசன் The Girl with the Dragon Tattoo The Girl who played with fire The Girl who kicked the hornets’ nest BY STIEG LARSSON அவுஸ்திரேலிய பத்திரிகையான த ஏஜ் (The Age ) வார இதழ் கலைப் பகுதியில் சினிமா மற்றும் புத்தகங்களின் விமர்சனங்கள் இடம்பெறும். அந்தப் பகுதியில் ஒவ்வொரு வாரமும் அதிக விற்பனையில் உள்ள புத்தகத்தின் பெயர் இடம் பெறும். கடந்த இரண்டு வருடங்களாக அவுஸ்திரேலியாவில் அதிக…