-
அந்த மூன்று நாட்கள்
எக்ஸைல் 1984 எழுதிய பேனையை மேசையில் வைத்துவிட்டு சுற்றியிருந்தவர்களைப் பார்த்தேன். அந்த அறையில் இருந்தவர்கள் ஈழ விடுதலைக்காக போரிட்ட இயக்கத்தின் பிரதிநிதிகள். ஏனக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் டாக்டர் சிவநாதன், டாகடர் ஜெயகுலராஜா, டாக்டர் சாந்தி இராஜசுந்தரம். எனக்கு வயிற்றைக் கலக்கியது. அமைப்பின் காரியதரிசியாக இருந்து தமிழர் மருத்துவ நிலயத்தில் நடந்த கூட்டமொன்றில் விபரங்களை குறிப்பெடுத்த என்னை நிறுத்த வைத்தது. வெளியே சென்னை வெயில் தெருச்சண்டியன் போல் ஆர்ப்பரித்தது. அவனது வார்த்தை போல் உள்ளே வந்த காற்று சூடாக…
-
நாவல்:கனவுச்சிறை: தேவகாந்தன்.
இலக்கிய காலங்கள், அந்தக்காலத்தின் சூழல், சமூகம், பொருளாதார உறவுகள் என்பவற்றின் தாக்கத்தால் வரையறை செய்படுகிறது. அது சரியாக வரையறுக்கப்பட்ட வருடங்கள், மாதங்களாக இருக்கத் தேவையில்லை. இதை உதாரணமாக விளக்குவதானால் இரண்டாவது உலகப்போர் 1939ல போலந்திற்கும் 1941ல் அமரிக்கர்களுக்கும் தொடங்குகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? மேற்கிலக்கியத்தில் ரோமான்ரிக், ரியலிசம், நவீனத்துவம் மற்றும் பின் நவீனத்துவம் என காலங்கள் தொடர்ந்து வருகிறது. அவர்களது நிகழ்வின்படி பார்த்தால் நாம் பின்னத்துவகாலத்தில் இருக்கவேண்டும். ஆனால் அந்த சூழ்நிலைகள் நம்மைச்சுற்றி இல்லை. தற்பொழுது நாம் என்ன…
-
என் பர்மிய நாட்கள் 6
தங்க பகோடா மாலையில் நாங்கள் சென்ற 326 அடி உயரத்துடன் தங்கத்தால் வேயப்பட்ட தங்க பகோடா Shwedagon Pagoda யங்கூனில் முக்கியமானது. இதுவே பர்மாவின் தேசியக் குறியீடாகும். இதற்கு சுவையான வரலாறு உள்ளது. இந்த பகோடாவை சுற்றிய பிரதேசம் புராதனமான காலத்தில் இருந்த கரையோர மீன்பிடிக் கிராமமே. 2500 வருடங்கள் முன்பாக இரண்டு பர்மிய சகோதரர்கள் வியாபார விடயமாக இந்தியா சென்றபோது புனித அரசமரத்தின கீழ் அமர்ந்திருந்த புத்தரை சந்தித்து அவருக்கு தேன் கேக்கை உணவாக கொடுத்தபோது…
-
தமிழ்த்தேசியம் படும் பாடு ???
எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே முருகபூபதி ” அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர்களை வருடாந்தம் ஒன்று கூட்டும் ஒரு அமைப்பு – அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இயங்கிவருகையில், தங்களால் அமைக்கப்பட்ட புதிய சங்கத்தின் அவசியம் என்ன ? ” என்று அவுஸ்திரேலியா SBS வானொலி ஊடகவியலாளர் திரு. ரெய்செல் அவர்கள் திரு. மாத்தளை சோமு என்ற எழுத்தாளரிடம் கேட்டபொழுது, தாம் தமிழ்த்தேசியத்தினை காப்பதற்காகவும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் குரலாக இயங்கவிருப்பதாகவும் தமது சங்கம் தமிழ்த்தேசியத்தை எழுத்தாளர்களுக்கு ஊட்டுவதற்காகவும்…
-
நினைவில் வாழும் காவலூர் ஜெகநாதன்.
முருகபூபதி காவலூர் ஜெகநாதன் எனக்கு 1977 இற்குப்பின்னர்தான் அறிமுகமானார். முதலில் அவர் தமிழ்த்தேசியவாதம் பேசியவர். இன்றும் பலர் தமது சுயநலனுக்காகவும் பதவி மோகத்திற்காகவும் இந்தவாதநோயுடன் வாழ்கின்றனர். அன்று ஜெகநாதன் முற்போக்கு எழுத்தாளர்களை அவர் ஏற்கவில்லை. அக்காலப்பகுதியில் அவர் கோவை மகேசனின் சுதந்திரன் பண்ணையின் மற்றும் ஒரு வெளியீடான சுடர் இதழில் எழுதினார். காலம் கடந்தே மல்லிகையில் எழுதத்தொடங்கினார். 1983 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் அவருடைய வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது. யாழ்ப்பாணம் திருநேல்வேலியில் அமைந்திருந்த விவசாய ஆராய்ச்சி நிலையத்தில்…
-
இரத்தக்கறை படிந்த அங்கிகள்
எக்ஸைல் 1984 நடேசன் ” IS IT TRUE TELO KILLED KAVALOOR JEGANATHAN…? ” ” YES” முகநூலில் ஒரு நண்பரிடம் சமீபத்தில் பெற்றுக்கொண்ட பதில்தான் இங்கு மேலே சொல்லப்பட்டது. சென்னையில் தமிழர் மருத்துவ நிலையம்(MUST) நடத்திய காலத்தில் நடந்த விடயங்களை முன்னர் எழுதிக்கொண்டிருந்தேன். நான் எழுதும் சில விடயங்கள் சிலரை பாதிக்கும் என்ற தயக்கத்தின் காரணத்தால்தான் அந்தப்பத்தியை இடை நிறுத்தியிருந்தேன். சமீபத்தில் எனது முகநூலில் ஒரு நண்பரால் எழுதப்பட்ட விடயம் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.…
-
என் பர்மிய நாட்கள் 5 / நடேசன்
பர்மாவின் வரலாற்றில் பல தலைநகரங்கள் இருந்தன. ஆரம்பத்தில் பகான் என்ற நகரம் மத்திய பகுதியில் இருந்தது. அங்குதான் பர்மா என்ற பரந்த நிலப்பரப்பு ஒரு தேசிய நாடாகியது. 300 வருடங்களாக பகான் அரசின் தலைநகரமாக இருந்தது. இந்தக் காலம் 10-12 நூற்றாண்டுகள்- ஆசிய நாடுகளில் உன்னத காலமாக இருந்திருக்கிறது. கம்போடியா தாய்லாந்து தமிழ்நாட்டில் சோழர்காலம் என தேசிய அரசுகள் உருவாகி ஆட்சி நடத்திய காலம். அதே வேளையில் ஐரோப்பியர்கள் தேசிய அரசுகள் அற்று நகர அரசுகளாக (City…
-
மெல்பனில் நினைவரங்கும் இலக்கியச்சந்திப்பும்
அண்மையில் இலங்கையில் அடுத்தடுத்து மறைந்தவர்களான படைப்பாளி செங்கை ஆழியான், நூலியல் பதிவு ஆவணக்காப்பாளர் புன்னியாமீன், ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கே. விஜயன் ஆகியோரின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூரும் நிகழ்ச்சியும் இலக்கியச்சந்திப்பும் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் மே மாதம் 14 ஆம் (14-05-2015 ) திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (1, Karobran Drive – Vermont South, Vic – 3133) மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய…
-
ஞானம் ஆசிரியர் ஞானசேகரன்
இன்று (15 – 04 – 2016) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 75 வயது பவளவிழாக்காணும் ஈழத்து படைப்பாளியின் பல்துறை பணிகள் புன்னாலைக்கட்டுவனிலிருந்து தமிழர் புலம்பெயர் நாடுகள் வரையில் பயணித்த யாத்ரீகன் முருகபூபதி ” கிழக்கு வானில் சூரியன் தங்கப்பாளமாக ஜொலித்தபடி உதயமாகிக்கொண்டிருந்தான். சூரியோதயத்தை நான் முன்னர் கடற்கரையோரங்களில் நின்று பார்த்துக் களித்திருக்கிறேன். ஆனால், உயரத்தில், பறந்துகொண்டிருக்கும் விமானத்திலிருந்து, புதிய கோணத்தில் வெண்பஞ்சுக் கூட்டங்களாக மிதந்துகொண்டிருக்கும் மேகங்களினூடாக அந்த அழகிய காட்சியைப்பார்த்தபோது நான் மெய்மறந்துபோனேன். ஆதவனின் ஒளிப்பிழம்புகள்…
-
என் பர்மிய நாட்கள் 4.
இரங்கூன் வீதியில் தலையை மூடியபடி இந்திய முகத்துடன் ஒரு இஸ்லாமிய பெண் எதிரில் வந்தாள். அப்பொழுது வழிகாட்டியிடம் ‘ எப்படி எல்லா மதக்கோவில்களும் இவ்வாறு ஒரே இடத்தில் இருக்கின்றன ? ‘ என்று கேட்டேன். ‘ இவை பலகாலமாக இருக்கிறது. ‘ ‘ அவ்வாறாயின் எப்படி இரக்கீன் மாநிலங்களும் புத்த மதத்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பிரச்சினை எனச் செய்திகள் வருகிறது ?’ ‘அயல்நாட்டில் இருந்து வரும் முஸ்லீம்களால் எற்படும் பிரச்சினைதான் என்றான் தற்பொழுது பிரபலமாக பேசப்படும் இந்த விடயத்தை…