பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சூரியனுக்கு அருகில் நயினாதீவு

    நடேசன் வட இலங்கையின் தீவுகளில் ஒன்றான நயினாதீவிற்கு புத்தபெருமான் வந்துபோனார் என இலங்கையில் பவுத்த மதத்தினர் நம்புகிறார்கள். அதேபோல் மணிமேகலை தனது அட்சயபாத்திரத்துடன் தென் திசையில் முப்பது காதம் வந்தடைந்த மணிபல்லம் நயினாதீவு எனத்தமிழர்கள் நம்புகிறோம். அக்காலத்தில் இவர்கள் வந்துபோனதற்கான வரலாற்றை நயினாதீவு மக்களாகிய நாம் கொண்டாடுகிறோம். இது இவ்விதமிருக்க, தற்காலத்தின் ஈழத்து முதன்மை நாவலாசிரியரான நண்பர் தேவகாந்தன் தனது கனவுச்சிறை என்ற ஆயிரம் பக்கங்கள் கொண்ட நவீனகாவியத்தில் நயினாதீவின் 1980-90 காலங்களில் அங்கு வாழ்ந்த மக்களையும்…

    noelnadesan

    14/08/2017
    Uncategorized
  • குருதியில் தோய்ந்த வரலாறு

    நடேசன் ஆண்கள் அழுவதைக்கண்டால் என்னால் சகிக்க முடியாது. எனது வாழ்கையில் சில தடவைகள் மட்டும் மற்றவர்களுக்குத்தெரியாமல் அழுதிருக்கிறேன். ஆனால், இந்த இடத்தில் என்னை மீறிய சோகமாக வெளிப்பட்டது. இலங்கைப் பயணத்தில் மட்டக்களப்பில் நின்றபோது அவுஸ்திரேலியாவிலிருக்கும் நண்பர் செய்யத்துடன் பேசினேன். அவர் என்னை காத்தான்குடிக்கும் போகும்படி சொன்னார்.எனது பயணம் கல்முனை நோக்கியிருந்தமையால் அதில் மாற்றம் செய்ய தயக்கமாகவிருந்தது. ஆனாலும் அவரது வற்புறுத்தல் என்னை அங்கு செல்லவைத்தது. அவர் எனக்காக ஒருவரை ஒழுங்கு பண்ணியிருந்தார். மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடிக்கு ஓட்டோவில்…

    noelnadesan

    12/08/2017
    Uncategorized
  • மெல்பனில் 1987 இல் முதலாவது சந்திப்பு

    கங்காரு நாட்டுக்காகிதம் முருகபூபதி அவுஸ்திரேலியாவுக்கு 1987 பெப்ரவரியில் வந்து, மெல்பனில் West Brunswick என்னுமிடத்தில் ஒரு படுக்கை அறைக்குடியிருப்பை வாடகைக்கு எடுத்து புகலிட வாழ்வை நான் ஆரம்பித்து, இரண்டு நாட்களில் நண்பர் இராஜரட்ணம் சிவநாதன், ( இவரை எனக்கு இலங்கையிலேயே தெரியும்) தொலைபேசியில் ( அப்பொழுது கைத்தொலைபேசி இல்லாத காலம்) ” பூபதி, தருமகுலராஜா என்ற ஒரு நண்பர் வருகிறார். அவர் உங்களை Don caster என்ற இடத்துக்கு அழைத்துச்செல்வார். அங்கே மகேஸ்வரன் என்ற ஒரு பொறியிலாளரின்…

    noelnadesan

    10/08/2017
    Uncategorized
  • பெர்லின் நினைவுகள்.

    பொ கருணகரகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் மற்றைய புலம்பெயர்ந்த அனுபவங்கள்போல் சிதைந்து நாவல், சிறுகதை என உருமாறாது, கற்பனை கலக்காமல் அபுனைவாக தமிழ் இலக்கியப்பரப்பிற்கு வரவாகியுள்ளது.இதனால் இது நமது புலப்பெயர்ந்தோரது இலக்கியத்தில் முக்கியமான ஒரு இடத்தை பிடித்துள்ளது. வாசிப்பதற்கான அவகாசத்தைத்தேடிப் பல காலங்களாக அடைகாத்து வைத்திருந்தேன்.கடைசியில் அது கை கூடியது. நிட்சயமாக ஒரு டாக்சி ஓட்டினராக அவர் முகம் கொடுத்த அனுபவங்கள் பலதரப்பட்டவை. டாக்சி ஓட்டினராகப் பலரோடு பல தருணங்களில் ஏற்படும் சம்பவங்கள் மற்றவர்களுக்கு எக்காலத்திலும் ஏற்படாது. அதிலும்…

    noelnadesan

    31/07/2017
    Uncategorized
  • நகரமயமாக்கலும் சூழல் மாசுபடலும் .

    சுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள் நடேசன் பெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள் உருவாகின்றன. அவற்றிற்கு நகர நிர்வாகங்கள் முகம் கொடுக்க தயாரற்ற நிலையில் அந்த நகரங்கள் சிதைந்து விடுகின்றன. பிற்காலத்தில் அப்படியான இடங்களில் இருந்து மக்கள் வெளியேறுவார்கள். 16 ஆம் நூற்றாண்டில் உலகத்தில் மூன்று பெரும் நகரங்களில் மூன்று இலட்சம் மக்கள் வாழ்ந்தமை பற்றி அறிந்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. அவை பீக்கிங், கெய்ரோ மற்றையது மெக்சிகோவில் அஸ்ரெக்…

    noelnadesan

    30/07/2017
    Uncategorized
  • பார்த்தசாரதியாக எஸ் எல் எம் ஹனீபா

    நடேசன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இயங்கிய வட-கிழக்கு மாகாணசபை 1987-90 களில் தீண்டத்தகாத மசுக்குட்டிப்புழுவாக பலரால் அருவருப்புடன் பார்க்கப்பட்டது. ஆனால், இப்பொழுது அந்த மாகாணசபை இரண்டாகப் பிரிந்து வண்ணத்துப்பூச்சிபோல் அழகாகத்தோற்றமளிக்கிறது. அத்துடன் தற்பொழுது அதனை தேவைக்கு மேலாகப் பால்கறக்கும் காமதேனுவாகவும் பார்க்கிறார்கள். மடியில் முட்டிமுட்டி,  கடைவாயில் பால்வழிந்த ஞானசம்பந்தராக தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் குடிக்கிறார்கள். தீண்டத்தகாத மாகாணசபையின் இப்படியான உருமாற்றம் கடந்த முப்பது வருடங்களில் நடந்திருக்கிறது. தமிழர்கள் இஸ்லாமியர்கள் மற்றும் சிங்களவர்களை இணைத்து உருவாக்கிய மாகாணசபைக்கு வரதராஜப்பெருமாளை…

    noelnadesan

    25/07/2017
    Uncategorized
  • மெல்லுணர்வு – நோயல் நடேசன்

    By அனோஜன் பாலகிருஷ்ணன் அன்பைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஆறுதல் அளிக்கவும் எப்போதும் மென்மையான அணுகுமுறையே தேவையாக இருக்கிறது. இறுக்கமான சூழலில் பீடிக்கப்பட்டு இருக்கும்போது மட்டும் என்றல்ல மற்றவரோடு இயல்பில் அணுகும்போது மெல்லுணர்வுகளை வெளிக்காட்டுதல் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். செயல் வடிவத்தில் அன்பை வெளிபடுத்த மென்மையான செயல்வடிவங்கள் தேவையாக இருகின்றன. தனிந்த குரலில் கொடுக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூட ஒருவகையான மெல்லுணர்வின் வெளிப்பாடே. ‘நோயல் நடேசன்’ எழுதிய சிறுகதைகளில் எனக்கு முதன்மையான சிறுகதையாகத் தென்படுவது ‘மெல்லுணர்வு’ என்கிற…

    noelnadesan

    25/07/2017
    Uncategorized
  • வழிகாட்டியாக டொமினிக் ஜீவா

    நடேசன் – அவுஸ்திரேலியா   2016 ஜூலையில் இலங்கை சென்றபோது மல்லிகை ஆசிரியரும் எழுத்தாளருமான டொமினிக்ஜீவாவை சந்திக்கத் தயாரானபோது ஞானம் ஆசிரியர் ஞானசேகரனும் என்னுடன் சேர்ந்து கொண்டார். கொழும்பில் மாலை மூன்று மணியளவில் எமது பயணம் ஓட்டோவில் தொடங்கியது. கோடை வெய்யில் அனலாக முகத்தில் அடித்தது. போக்குவரத்து ஓசை காதைப்பிளந்தது. தெருப்புழுதி, வாகனப்புகையுடன் கலந்து நுரையீரலை நிரப்பியது. ஒரு மணி நேரப்பிரயாணத்தில் உடல்வியர்த்து, உடைகள் தேகத்தில் ஒட்டியது. முகத்துவாரம் பகுதியில் உள்ள அவரது வீட்டை அடைந்தபோது, இந்துசமுத்திரத்திலிருந்து…

    noelnadesan

    27/06/2017
    Uncategorized
  • சதைகள் : அனோஜனின் சிறுகதைகள்.

    சதைகள் – சிறுகதைகள் காவியங்கள் எல்லாம் காமம் காதலும் பற்றியவை. இவை மூளையின் ஒரே பகுதியான ரெம்போரல்(Temporal lobe) பகுதியில் இருந்து உதயமாகின்றன. இராமாயணம் சீதை மேல்கொண்ட காமத்தின் விளைவு. மகாபாரத்தில் நேரடியான காமம் போருக்குக் காரணமற்ற போதிலும் தேவைக்கதிமாக அங்குள்ளது. ஐந்து ஆண்களின் மனைவியான சித்தரிப்பு இதையே நமக்குணர்த்துகிறது. இவற்றை நாம் ஏற்றுக்கொள்ளாது அவற்றை மதபீடத்தில் வைத்துவிடுகிறோம். ஹோமரின் இலியட் உலகத்திலே அழகி ஹெலன் 12 வயத்துச்சிறுமியாக கடத்தப்படுகிறாள். இரண்டாவதாக மணமான பின்பு ரொய் இளவரசன்…

    noelnadesan

    26/06/2017
    Uncategorized
  • கமலி பன்னீர்செல்வம் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து…..

    பிள்ளை தீட்டு “பிள்ளைத்தீட்டு” கதையில் ஜமீல் என்பவன் தனக்கு இலங்கை ராணுவத்தில் வேலை கிடைத்த சந்தோஷ செய்தியை மனைவி ஆயிஷாவிடம் பகிர்கிறான். அவள் இங்கு நாம் சுகமாக இருக்க எதுக்கு சண்டை பிடிக்கனும் என்கிறாள். இயக்கத்தவர்கள் ஒரு நாளில் எல்லாவற்றையும் பிடுங்கி வெளியே துரத்தியதை மறந்துவிட்டாயா நான் சேரபோகிறேன் என்கிறான். அப்படின்னா என்ன கொண்டுபோய் நாகலிங்கண்னே வீட்டில் விட்டுட்டு போங்க நானும் பிள்ளையும் நீங்க வரும்வரை அங்கே இருக்கோம் என்கிறாள். நாகலிங்கண்னே பெயர் கேட்டவுடன் ஜமீல் சோர்வுடன்…

    noelnadesan

    19/06/2017
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 96 97 98 99 100 … 168
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 102 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar