பகுப்பு: Uncategorized
-
எகிப்தில் சில நாட்கள்20 : வைத்தியரின் சமாதி.
( இறுதி அத்தியாயம்) அவுஸ்திரேலியாவில் மிருகவைத்தியராக வேலை செய்யும் போது சகவைத்தியரான ஹாசன் (லெபனானை சேர்ந்தவர்) அரேபிய மொழியில் எழுதப்பட்ட புராதன அறுவை சிகிச்சை புத்தகமொன்றை காட்டினார். அதில் 4000 வருடங்களுக்கு முன்பு உபயோகிக்கப்பட்ட சத்திரசிகிச்சை உபகரணங்களின் படங்கள் இருந்தன. அவற்றில் பல தற்போதும் உபயோகிக்கப்படும் உபகரணங்களைப் போன்று இருந்தது, இவற்றில் முக்கியமாக கண் சத்திரசிகிச்சைக்கு பாவித்தவை அச்சொட்டாக தற்கால உபகரணங்களைப் போன்று இருந்தன. வைத்திய முறைகள் எல்லா சமூகங்களின் வரலாற்றில் ஏதோவிதமாக வளர்நது இருக்கிறது. வைத்தியர்கள்…
-
மிருகங்களின் மம்மிகள்.
மம்மியாக்கப்பட்ட பூனைகள் நடேசன் எங்கு சென்றாலும் தவறாமல் மியூசியங்களைத்; தேடிச்செல்லும் எனக்கு – ரொரண்ரோ மியூசியத்தில்தான் முதல்தடவையாக மம்மிகளைப் பார்க்க முடிந்தது. பல வருடங்களுக்கு முன்பு கனடா சென்றபோது ரொரண்ரோ மியூசியத்தில் மனித மம்மிகளோடு வளர்ப்பு மிருகங்களான நாய் பூனைகளையும் மம்மிகளாக அங்கு நான் கண்டேன். பூனைகளை எகிப்தியர் தெய்வமாக வணங்கினார்கள் எனவும் படித்திருந்தேன். மம்மியாக்கப்பட்ட முதலைகள் மிருகமருத்துவரான எனக்கு மேலும் இதைபற்றி அறிய ஆவல் ஏற்பட்டது. எகிப்திற்கு சென்றபோது இவற்றை அறிந்து கொள்வதற்கான பொருத்தமான சந்தர்ப்பம்…
-
மிருக இயல்புகளும், மனித எதிர்வினைகளாயும் ‘அசோகனின் வைத்தியசாலை’ நாவல்
சுப்ரபாரதிமணியன் அசோகனின் வைத்தியசாலை முன்பே ” வண்ணாத்தி குளம் ” நாவல், “ வாழும் சுவடுகள் ” போன்ற நூல்களின் மூலம் அறிமுகமானவர். ” வண்ணாத்தி குளம் ” நாவலில் இலங்கையச் சார்ந்த ஒரு கிராமத்தை முன் வைத்து அவர்கள் எவ்வித இனதுவேசமும் இல்லாமல் வாழ்ந்து வருவதையும், அதிலிருந்து ஒரு பெண் விடுதலை இயக்கத்திற்கானவளாக வெளிக்கிளம்புவதையும் காட்டியது. காதல் பிரச்சினைகள், அரசியல் காரணங்களை முன் வைத்து கிராமநிகழ்வுகளூடே இலங்கை மக்களின் வாழ்வியலை சித்தரித்த்து. 1980-1983 என்ற காலகட்டத்தைக்…
-
கோடையில் ஒரு விபத்து.
நடேசன் அவுஸ்திரேலியா கோடைகாலத்தில் சூரியன் தாமதமாக மேற்கில் அஸ்தமிப்பதால், எங்களது நாட்கள் நீண்டவை. ஐரோப்பா வடஅமெரிக்காபோல் கோடையில் இஙகு நீண்ட விடுமுறை கிடைப்பதில்லை. கோடை வெப்பம் நாற்பது டிகிரிக்கும் மேல் அதிகரித்து மனிதர்கள் விலங்குகள் மற்றும் தாவரங்களையும் வறுத்து எடுத்துவிடும் தன்மையுள்ளது. மெல்பேனில் சூரியன் இரவு எட்டு மணிக்கு மேல்தான் மிகவும் மெதுவாக அசைந்தபடி அஸ்தமிப்பதால் எங்களைப் போன்ற சொந்த தொழில் செய்பவர்களது வேலை நேரமும் பகலோடு சேர்ந்து நீண்டு விடுகிறது.இதனால் உடல் மனம் இரண்டும் களைத்து…
-
எகிப்தில் சிலநாட்கள் 18: மம்மியின் சாபம்-துட்டன்காமன்
வாய் திறத்தல்- அய் வலது பக்கத்தில் -இடது இறந்த துட்டன்காமன் நடேசன் எகிப்திய அரசர் மற்றும் முக்கியமானவர்களது சமாதிகள் யாவும் மம்மியோடு வைக்கப்படும் விலையுயர்ந்த பொருட்களுக்காக கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதால் மம்மிகளையும் சமாதிகளையும் வைத்து எகிப்திய சரித்திரத்தை மீளாய்வு செய்த எகிப்திய ஆராய்ச்சியாளர்களுக்கு 1922 நவம்பர் 4 ஆம் திகதி மிகப் பெரிய திருப்பமாக கிடைத்தது துட்டன்காமனின் மூடப்பட்ட சமாதி. இதை கண்டுபிடித்தவர் ஹவாட் காட்டர் என்ற பிரித்தானியர். இவரது கண்டு பிடிப்பு பற்றிய தகவல் டைம் இதழின் முகப்பட்டையில்…
-
தமிழ் விக்கிபீடியா பயிலரங்கு
கலை – இலக்கியத்தேடலை ஊக்குவித்த மெல்பன் அனுபவப்பகிர்வு முருகபூபதி அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் பணிகளில் நடப்பாண்டுக்கான இரண்டாவது அனுபவப்பகிர்வு – தமிழ் விக்கிபீடியாவில் பங்களித்தல் தொடர்பான பயிலரங்கு கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் – பிரஸ்டன் இன்றர் கல்சரல் நிலையத்தில் சங்கத்தின் தலைவர் டொக்டர் நடேசன் தலைமையில் நடைபெற்றது. ஒருவர் தமது வாழ்வில் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியான தருணங்களிலிருந்துதான் வாழ்வின் பயன்பாட்டை பெற்றுக்கொள்வாரேயன்றி தேடிப்பெற்ற டொலர் நாணயங்களினால் அல்ல என்று அமெரிக்க தத்துவ…
-
வாத்தியார் வீட்டு வெண்டி கொட்டைகள்
பல வருடத்திற்கு முன் எழுதியது. இப்பொழுது விக்கினேஸவரனும் ஒரு வெண்டிக் கொட்டைதான்( July 2009) நடேசன் நான் சிறுவனாக வளர்ந்த ஏங்கள் எழுவைதீவில் ஒரு முறை பாட்டனாரின் தோட்டத்தில் வெண்டிக்காய் அமோகமாக விளைந்தது. நீளமான வெண்டிக்காய்கள். ஆனால் வால்ப்பக்கத்தில் சுருண்டு இருக்கும்.. இந்த வெண்டிக்காய் கொட்டைகள் நாற்றாக பல வருடங்களுக்கு பயன் படுத்தப்பட்டது. இதை விட ஊரில் உள்ள மற்றவர்களுக்கும் எனது பாட்டன் வெண்டி விதைகளை கொடுத்து உதவினார்; எனது பாட்டன் தலைமை ஆசிரியர் என்பதால் எங்கள்…
-
எகிப்தில் சில நாட்கள் 17: எகிப்திய மம்மிகள்
நடேசன் கெய்ரோவிற்கு திரும்பி எங்கள் மரியற் ஹோட்டலுக்குச் சென்றபோது இரவாகியது. அன்றய தினம் ஹோட்டல் உணவகத்தில் அரேபிய சங்கீதம் ஒலித்தது. இரவு உணவுக்குப் பின்னர் மரியற்றில் உள்ள கசினோவிற்கு சென்று சிறிதளவு பணத்தை வைத்து அங்குள்ள மெசினில் விளையாடியபோது நூறு டொலருக்கு மேல் கிடைத்தது. ஆனால் அந்தப் பணத்தை எப்படி எடுப்பது என்று தெரியவில்லை. அப்பொழுது ஐம்பது வயதான அரேபிய சூடானியர் ஒருவர் வந்து உதவி செய்தார். அவருடன் பேசியபோது எகிப்திற்கு லொரி ஓட்டிவந்ததாக கூறினார். உரையாடலின்போது…
-
விலங்குப் பண்ணை
விலங்குப் பண்ணை ( ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்:கந்தையா குமாரசாமி பாகம் 1 இரவுப் பாதுகாப்புக்காகக் கோழிக்கூடுகளை மனோ பண்ணை அதிபர் ஜோன்ஸ் பூட்டியிருந்தார். எனினும்அக்கூட்டின் சிறிய நுழைவாயில்களையும் அடைத்துவிட்டுவந்தாரா என்பது அளவுக்கு மீறிய மதுபோதை காரணமாக அவருக்கு ஞாபகமில்லை. அவர் கையிலிருக்கும் அரிக்கன் விளக்குக்கூடு மெல்லிய ஒளிக்கீற்றுடன் இரு பக்கமும் ஆடிக்கொண்டிருந்தது. அவர் தடுமாறியவண்ணம் பின் கதவுப்பக்கம் தனது காலணிகளை உதறிவிட்டுச் சமையலறைப் பாத்திரங்கள் கழுவும் இடத்துக்குச் சென்றார். அங்கிருந்த மரக்கூஜாவிலிருந்து ஒரு கிளாஸ் பியர் அருந்தினார்.பின்பு…
-
காவலூர் ஜெகநாதன்
திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி 1980 ஆம் ஆண்டு காலப்பகுதி. வீரகேசரி அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஒப்புநோக்காளர் – அறைக்குள் Proof திருத்திக் கொண்டிருக்கின்றேன். இங்கே யார் முருகபூபதி ? கேள்வி எழுந்த பக்கம் நோக்கித் திகைக்கிறேன். வாசல் கண்ணாடிக்கதவை தள்ளித் திறந்து கொண்டு ஒரு இளைஞர் நிற்கிறார். எனக்கும் அவரை முன்பின் தெரியாது. நான்தான் முருகபூபதி. நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்? – என்று எழுகின்றேன். சக ஊழியர்களின் முகத்திலும் திகைப்பு வழிகின்றது. திடீரென ஒருவர்…