ஆசிரியர்: noelnadesan
-
நாவல்: காஃகாவின் உருமாற்றம். (Metamorphosis by Franz Kafka).
நடேசன் அக்காலத்தில் தீப்சில் வாழ்ந்த (ancient city of Thebes) புராண காலத்து மிருகம் ஸ்பிங்ஸ் (Sphinx). அதனது அனுமதியில்லாது நகரத்துள் எவரும் செல்லமுடியாது . அந்த வழியால் வரும் வழிப்போக்கர்களிடம் விடுகதை சொல்லி அதை அவிழ்க்கச் செய்யும். அவிழ்க்காதபோது அவர்களைக் கொன்றுவிடும். அந்த ஸ்பிங்ஸ், ஒரு விடுகதையை அந்த வழியால் வந்த எடிப்பஸ் (Oedipus) என்ற இளவரசனிடம் முன்வைக்கிறது. “காலையில் நான்கு கால்களிலும், நண்பகலில் இரு கால்களிலும் , மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்…
-
பஞ்சகல்யாணியின் அழகிய உலகம்.
நூல் அறிமுகம்: குழந்தைகளுக்கான எளிய நடையில் முருகபூபதி இலக்கியப்படைப்புகளில், குழந்தைகளுக்கான பிரதிகளை எழுதுவதுதான் மிகவும் சிரமமானது எனச்சொல்வார்கள். அதற்கு குழந்தைகளின் உளவியல் தெரிந்திருக்கவேண்டும். பெரும்பாலும் குழந்தை இலக்கியம் படைப்பவர்கள் பெரியவர்களாகத்தான் இருக்கிறார்கள். பாரதி முதல் அழ. வள்ளியப்பா வரையில் மாத்திரமின்றி, அதன் பிறகும் குழந்தை இலக்கியங்களை , குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் பெரியவர்கள்தான். இவர்கள் தமது வயதையொத்தவர்களுக்கு ஏதேனும் எழுதினாலும், குழந்தைகளுக்காக எழுத முன்வரும்போது, குழந்தைகளாகவே மாறிவிடவேண்டும். அவ்வாறுதான் ஒரு குழந்தை இலக்கியம்படைத்திருக்கும் பஞ்சகல்யாணி என்ற மருத்துவரை…
-
நினைவற்று வாழ்தல்
நடேசன் மெல்பனில் பரவிய கொவிட் பெருந் தொற்றின் காரணமாக நடைமுறைக்கு வந்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் தளர்ந்து சில மாதங்களின் பின்பாக எனக்கு அறிமுகமான தந்த நாராயண என்பவர் எனது மிருக வைத்திய நிலயத்திற்கு வந்தார். உள்ளே வந்தவர் என்னை அடையாளம் கண்டதாகக் தெரியவில்லை. வாயில் வார்த்தையில்லை . உதட்டில் சிரிப்பில்லை. வந்தவுடன் அங்கிருந்த வரவேற்பறையின் கதிரையில் அமர்ந்தார். ஆனால், அவர் சாவகாசமாக அமரவில்லை. கதிரையின் விளிம்பில் – ஒரு பறவை, கிளையில் இருப்பதுபோல் அமர்ந்து, கிளினிக்கின்…
-
கரும்புலி பெண்ணின் கடிதம் : கானல்தேசம்
“அன்பின் கார்த்திகா, இந்தக்கடிதம் உனக்குக் கிடைக்குமோ அல்லது கடிதம் கிடைக்கும் காலத்தில் நீ உயிரோடு இருப்பாயோ தெரியாது. எனக்கு அடுத்து தற்கொடைப் போராளியாக உன்னைப் பாவிப்பார்கள் என்பதால் உன்னையாவது தப்பவைக்கும் நோக்கத்தில் எழுதுகிறேன். அந்த முயற்சியில் இருந்து நீ தப்பாவிட்டாலும் உனது அப்பாவுக்கு இந்தக் கடிதம் கிடைத்தால் அவர் மூலம் யாரிடமாவது இது சென்று சேரும். அநியாயத்தை பற்றி ஒரு பதிவாக மாறும் என்பது எனது கடைசி ஆசை என்பதால் உனக்கு இதை எழுதி உனது வீட்டிற்கு…
-
பண்ணையில் ஒரு மிருகம்
சாந்தி சிவகுமார் பண்ணையில் ஒரு மிருகம் எனும் இந்த நாவலின் களம் சென்னையின் புறநகரான செங்கல்பட்டில் இருக்கும் ஒரு மாட்டுப்பண்ணை. 1980-களில் இருந்த சூழலை பிரதிபலிக்கும் கதை. 1984 ல் பண்ணையை மேற்பார்வை செய்யும் மாடுகளை கவனிக்கவும் ஒரு மிருக வைத்தியராக செல்கிறார் நடேசன். அந்த காலகட்டத்தில் இருந்த சமூக சூழலை, முற்றிலும் புதிதாக இல்லாத சூழல் என்றாலும் அதே சமயம் அவருக்கு அதிர்ச்சி தரக்கூடியதாகவும் அந்த சூழல் அமைகிறது. பண்ணையில் வேலை செய்யும் ஆட்களிடம் மேலாளர்கள்…
-
பண்ணையில் ஒரு மிருகம்: சிறுபரப்பில் பெரும் விவாதம்.
பேராசிரியர் ராமசாமி இலங்கையெனும் சிறு நாட்டுக்குள் நடந்த, தனி ஈழத்துக்கான போராட்டங்களையும் கொரில்லாத் தாக்குதல்களையும் நடத்திய அனைத்துத் தமிழ்ப் போராளிகளையும் தனது புனைவு எழுத்துகளிலும் புனைவல்லா எழுத்துகளிலும் தொடர்ந்து விமரிசித்து எழுதிவருபவர் நோயல் நடேசன்; ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர் எழுத்தாளர்; விலங்குகளுக்கான மருத்துவர். அவரது பெரும்பாலான நாவல்களின் கதை சொல்லும் முறை தன்மைக்கூற்று. தானே கதைசொல்லியாக இருந்து எழுதும் புனைவுகள் வழியாகத் தனது நாவல்களுக்கு வரலாற்றுத் தன்மையை உருவாக்க நினைப்பது அவரது புனைவாக்க முறைமை. அவரது பெரும்பாலான…
-
மாவை நித்தியானந்தனின் சிறுவர் நாடகங்கள்
By நடேசன். ஒரு சமூகம் யாரைக் கொண்டாடுகிறது என்பதை வைத்து அந்த சமூகத்தின் அளவை இலகுவாகத் தீர்மானிக்கலாம் எனப் பலராலும் சொல்லப்பட்ட கருத்து சரியா தவறா என்பதை ஒரு புறம் வைத்தாலும், பல சமூகங்கள் தங்கள் சமூகத்தில் வாழும் உன்னதமானவர்களைக் கண்டு கொள்வதில்லை. பெரும்பாலானவர்கள் இறந்த பின்பே ஆராதிக்கப்படுகிறார்கள். தென்னாசிய சமூகம் அதற்கு நல்ல உதாரணம் . பாரதியார் போன்றவர்கள் வாழும்போது கண்டுகொள்ளப்படவில்லை . அதுபோல் இலங்கைத் தமிழ் அரசியலில் நான் பார்த்த பல இடதுசாரித்தலைவர்களும்…
-
சுறாக்களின் எதிர்காலம்
நடேசன். ஆஸ்திரேலியா – சிட்னி நகரின் கிழக்குப் பகுதியான கூஜி ( Coogee ) கடற்கரையில் 1935 ஆம் ஆண்டு பெரிய சுறா ஒன்று உயிருடன் பிடிபட்டது. அதை சிட்னியிலுள்ள மீன்கள் வளர்க்கும் அகுவாரியம் (Aquarium) நீர்த் தொட்டியில் விட்டனர். ஒரு கிழமையின் பின்பு அந்த சுறா மீன் மனிதனின் முன் கையை வாந்தி எடுத்தது. அந்தக் கையில் பிரத்தியேகமான பச்சை (Tattoo) குத்தப்படியிருந்து. அதிர்ச்சியடைந்த அகுவாரியத்தினர் காவல்துறையை தொடர்பு கொண்டதும் விசாரணை ஆரம்பமானது . அந்தக்…
-
தாத்தாவின்வீடு: புதிய நாவல்.
என்னுரை நாடுகள், இனக்குழுக்கள் மத்தியில் நடக்கும் மோதல்கள் ஒரு கட்டத்தில் முடிவிற்கு வரும். அந்த மோதல்கள் உச்சமடைந்து பிரபலமாகி மூன்றாம் நபர்களின் தலையீட்டுக்கு உட்படும்போது சமாதான ஒப்பந்தங்கள் மூலம் அமைதியும் ஏற்படும். போரின் விளைவுகள், அழிவுகள் கண்களுக்குத் தெரியும் என்பதால் அவைகளை நிவர்த்திக்க பலரும் பாடுபடுவார்கள். முப்பது வருடங்கள் போர் நடந்த இலங்கையில் பிறந்து வளர்ந்து, பின்பு புலம் பெயர்ந்த வாழ்க்கையிலிருந்து போர் கடந்த எனது தாயக பூமியை புறக்கண்ணால் பார்த்தேன். அதனையடுத்து அங்கு நடந்த நிவாரணம்…
-
ராஜ தந்திரமும் ராஜ விசுவாசமும்
லெ. முருகபூபதி மகா பாரதத்தில் வரும் கிருஷ்ண பரமாத்மா, முக்கிய பாத்திரம். தருமம் குன்றி அதர்மம் மேலோங்கும்போது காட்சி தருபவர்தான் இந்த பரமாத்மா எனவும் சொல்வார்கள். கௌரவர்கள், அஸ்தினாபுரத்தை ஆண்டபோது, அதில் தமக்கும் பங்கு கேட்டு பேராடியவர்கள்தான் பஞ்சபாண்டவர்கள். அந்த பங்காளிச் சண்டையில் இறுதியில் துரியோதனன் தோற்றான். செஞ்சோற்றுக் கடனுக்காக இறுதிவரையில் அவனுடன் நின்ற கர்ணனும் கிருஷ்ண பரமாத்மாவின் சூழ்ச்சியினால் கொல்லப்பட்டான். கர்ணன் இருக்கும் வரையில் துரியோதனனை பாண்டவர்கள் வெல்லமாட்டார்கள் என்பது கிருஷ்ணருக்கு நன்கு தெரியும். அதனால்தான்…