ஆசிரியர்: noelnadesan
-
தென்னையும் பனையும்
போர் நிறுத்த காலத்தில் சொந்த ஊருக்கு போகவிரும்பினேன். கொழும்புக்கு அப்பால் போக முடியவில்லை. மன ஓடையில் செய்த பயணம் இந்த சிறுகதையாக உதயத்தில் பிரசுரமானது நடேசன் சிறுகதை அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு சத்தியனின் குடும்பத்திற்கு விசா கிடைத்து விட்டதால் முழுக்குடும்பத்தினருமே மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர். சத்தியனின் மனைவி சுமதியின் கால்கள் நிலத்தில் பாவவில்லை. விசா வந்த நாளில் இருந்து இரண்டு பிள்ளைகளின் வாயிலும் அவுஸ்திரேலியா பற்றிய விடயங்களே வந்தன. மெல்பேன், சிட்னி, அடிலைட் என்ற சொற்கள் தெறித்து விழுந்தன. தொலைக்காட்சியில்…
-
“சோற்றுக்கும் சர்க்கரை வியாதிக்கும் இடையில்.
சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, “எனது கலாச்சாரக் கூறுகளில் அரிசிச் சோற்றைத் தவிர மற்ற எதையும் நிராகரிக்க முடியும்” என்று சொன்னேன். சிறுவயதில் எங்கள் குடும்பத்தில் பாண் (ரொட்டி) சாப்பிடுவது இழிவாகக் கருதப்பட்டது. அரிசி வாங்கப் பணமில்லாதவர்கள்தான் பாண் சாப்பிடுவார்கள் என்ற கருத்து எங்கள் தீவுப் பகுதி மக்களிடையே பரவியிருந்தது. அதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு தவறு என்று இன்று விவாதிக்க முடியாது. இதை இக்காலத் தமிழ் அரசியலுடன் ஒப்பிடலாம். சிலர் எமது அரசியலை “யாழ்ப்பாண மையவாதம்”…
-
காதலைத் தேடும் பெண்.
நடேசன் செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்கள் வேலைகளை முடித்து வீடு திரும்பிய பின்புதான் அவைகளில் கவனம் செலுத்துவார்கள். இதைக்கருதி ஆஸ்திரேலியாவில் எல்லா மிருக வைத்தியர்களும் இரவு ஏழரை மணி வரை தொழில் செய்வார்கள். சனிகிழமைகளிலும் கிளினிக்கை திறந்து வைத்திருப்பார்கள். இதற்கு நானும் விதி விலக்கல்ல. ஊரொடு ஒத்து ஓடவேண்டும. ஏழு நாட்கள் வேலை செய்யும் உணவு விடுதிப் பணியாளர்கள் மற்றும் இலங்கை இந்திய மளிகைக் கடைக்காரர்களை ஒப்பிட்டு ஆறுதல் கொள்ள முடியும். ஆஸ்த்திரேலிய அரசாங்கத்தின் லேபர் விதிகள் செல்லாத இடங்கள்…
-
சாந்தி தேடும் ஆவி: சிறுகதை
நடேசன் யுத்தம் முடிந்து பதினாலு மாதங்களில் சரியாகச் சொன்னால் அதாவது ஜுலை 2010 இல் சில நாட்களை யாழ்ப்பாணத்தில் கழித்துவிட்டு மீண்டும் கொழும்பு நோக்கி புறப்பட்டபோது இரவு நேரமாகிவிட்டது. நானும் நண்பன் நாதனும் அவனது காரில் புறப்பட்டு தெற்கு நோக்கி பிரயாணம் செய்தோம். நான் ஆரம்பத்தில் சாரதியாக காரை வவுனியா வரை செலுத்துவது பிறகு கொழும்பு வரை அவன் செலுத்துவது என்பது எமது ஒப்பந்தம். இரவு எட்டு மணிக்குப்பின்னர் கொழும்புத்துறையில் இருந்து குண்டும் குழியுமான A9…
-
யுத்தத்தில் காணாமற் போன மற்றொன்று–3
– யாரின் மீதும் நம்பிக்கை வைக்க முடியாத காலமொன்று எங்களின் வாழ்வில் வந்திருந்தது. அப்பொழுது நண்பர்கள் சந்தேகிக்கப்பட்டனர். அல்லது நம்புவதற்கு கடினமான ஒரு நிலையில் தெரிந்தனர். நண்பர்களிடம் நான் சந்தேகத்துக்குரியவனாக இருந்தேன். நானும் நண்பர்களைச் சந்தேகித்தேன். அயலவர்கள் ஒருவரையொருவர் சந்தேகித்தனர். அண்ணன் தம்பியைச் சந்தேகித்தான். தம்பி அண்ணனைச் சந்தேகித்தான். அக்காவைச் சந்தேகித்தாள் தங்கை. பெற்றோரைப் பிள்ளைகளும் பிள்ளைகளைப் பெற்றோரும் சந்தேகித்தார்கள். இந்த நிலை வளர்ந்து சனங்கள் இயக்கத்தைச் சந்தேகித்தனர்.…
-
யுத்தத்தில் காணாமற் போன இன்னொன்ற–2
– கருணாகரன் ஒழுங்குகள் சிதையும் நிலையை யுத்தத்தின்போது வெளிப்படையாகவே பார்க்கலாம். கண்முன்னே நிகழும் மாற்றங்கள். சடுதியான மாற்றங்கள். ஒரு கிராமம் ஒரு சில மணி நேரத்தில் அப்படியே கைவிடப்பட்டு வெறிச்சோடி விடும். ஒரு நகரம் கணப்பொழுதில் சிதைந்து போகும். கண்ணுக்கு முன்னே பிரமாண்டமாக விரிந்திருக்கும் கட்டிடங்கள் நடக்கின்ற குண்டு வீச்சில் நொடிப்பொழுதில் பொடியாகிக் கற்சிதிலமாகிவிடும். ஒரு அமைதியான நிரந்தர வாழ்க்கை மறு நொடியில் அகதி வாழ்க்கையாகி கொந்தளிக்கும் மனிதரைத் தெருவுக்குக் கொண்டு வந்து சேர்க்கும். இடம், பொருள்,…
-
யுத்தத்தில் காணாமற் போன ஒன்று —-1
கருணாகரன் நேற்று எங்களின் வீட்டுக்கு நண்பரொருவர் வந்திருந்தார். நீண்டநாட்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்தேன். நீண்ட நாட்கள் என்றால், வன்னியின்யுத்த காலத்திற் சந்தித்ததற்குப் பிறகு இப்போதே அவரைச் சந்திக்கிறேன்.ஏறக்குறைய மூன்று ஆண்டுகள். யுத்தத்தின் இடைக்காலப்பகுதியில் -உடையார்கட்டுப் பகுதிக்கு இராணுவம் வந்த பிறகு – அவருடைய தொடர்புகளில்லாமல் போய் விட்டது. ஆனாலும் வலைஞர்மடத்திலிருந்து நாங்கள் வெளியேறும் வரையில் அவரைப் பற்றி அறிந்து கொண்டிருந்தோம். பின்னர், அதுவும் இல்லாமற் போய்விட்டது. நேரடியாகப் பேசுவதற்கும் தகவல்களைச் சரியாக உரியவரிடமிருந்து அறிந்து கொள்வதற்கும் அங்கே தொலைபேசி போன்ற தொடர்பு வசதிகள் இல்லை. எல்லாமே வாய்வழித் தகவற்…
-
“The battle will have to be fought to the very last minute”
– Ambassador Tamara Kunanayakam says from Geneva In a wide ranging interview H.E. Tamara Kunanayakam, Ambassador/Permanent Representative to the United Nations in Geneva, explained the motivations of the West and mostly the United States for pushing a resolution against Sri Lanka: “What, in fact, are the US trying to tell us with their draft resolution?…
-
The injustice of an elephant crushing an ant
This was statement prepared for side event held at Geneva on 28 /2/2011 but due to lack of time, I was able say only few points. –Noel Nadesan The longest running war in Asia was in Sri Lanka. It ran for 33 years and ended only three year ago – in 2009. By any known…
-
ஸ்கொட்டிஸ் வேட்டைக்காரரின் நாய்
நடேசன் சிலகாலத்தின் முன் சுயகரமைதுனம் என்ற வார்த்தையைப் பார்த்து விட்டு அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள பல காலம் சென்றது. எழுதியவர் கையாட்டம் எனும் தமிழ் சொல்லையோ மாஸ்ரபேசன் (masturbation)என்ற ஆங்கிலச் சொல்லையோ பாவித்திருக்கலாம். மிருக வைத்தியம் படிக்கிற காலத்தில் ஆண் பன்றியிலும் காளை மாட்டிலும் விந்தை பெறுவதற்கு எங்கள் கைகளைப் பாவித்து பன்றியில் ஒரு கிளாஸ் நிரம்பவும் காளையில் செயற்கையான பெண் யோனியை பாவித்து சிறிய கண்ணாடி குழாயில் எடுத்துக்கொள்வோம். இப்படியான தொழில்பாட்டை எப்படி தமிழில்…