பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • நாவல்:தமிழ்நதியின் பார்த்தீனியம்.

    இரண்டு விதமான எழுத்தாளர்கள் உண்டு. ஒருவகையினர் நரிகள் மாதிரி அவர்களுக்கு முழுக்காடும் பாதுகாப்பை அளிக்கும். எங்கும் நுளைந்து வருவார்கள். மற்றவர்கள் முள்ளம்பன்றிபோல். அவர்களது பாதுகாப்பு அவர்களது முட்கள் மட்டுமே. ஆனால் அது வலிமையாகவிருக்கும். இந்த உதாரணம் ஈழத்து மற்றும் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும் பொதுவானது. பெரும்பாலானவர்களது பேசுபொருள் ஈழப்போராட்டமே.போர் முடிந்தாலும் இந்த போர் நிழலாகத் தொடர்ந்து வருகிறது. போரைவைத்து சிறப்பாக பலர் இலக்கியம் படைத்திருக்கிறார்கள். நெப்போலியனது படையெடுப்பு நடந்து நூறு வருடங்கள் பின்பாகவே டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் எழுதப்பட்டது.…

    noelnadesan

    01/01/2018
    Uncategorized
  • ஆவணப்பட தயாரிப்பாளர் கனடா மூர்த்தி

    தேசங்கள் கடந்த கலை, இலக்கிய நேசர் சிவாஜியை தமிழர் பண்பாட்டியல் குறிப்பிலும் ஜெயகாந்தனை உலகப்பொதுமனிதனாகவும் காண்பித்த ஆவணப்பட தயாரிப்பாளர் கனடா மூர்த்தி முருகபூபதி முகநூல் கலாசாரம் தீவிரமாகியிருக்கும் சமகாலத்தில், முகநூல் எழுத்தாளர்களும் பெருகியிருக்கிறார்கள். இக்கலாசாரத்தின் கோலத்தினால் முகவரிகளை இழந்தவர்களும் அநேகம்.அதே சமயம் முகநூல்களில் பதிவாகும் அரட்டை அரங்கங்களை முகநூல் பாவனையற்றவர்களிடத்தில் எடுத்துச்சென்று சேர்க்கும் எழுத்தாளர்களும், அவற்றை மீள் பதிவுசெய்து பொதுவெளிக்கு சமர்ப்பிக்கின்ற இதழ்கள், பத்திரிகைகளும் அநேகம். அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், மற்றும் பிரபலமானவர்களினால் உதிர்க்கப்படும் வார்த்தைகளுக்கு…

    noelnadesan

    30/12/2017
    Uncategorized
  • புத்துயிர்ப்பு தேவாலயம்(Church o the Savior on Blood)

    பீட்டர்ஸ்பேக்கின் முக்கியமான இந்த தேவாலயம் கட்டுவதற்கு 24 வருடங்கள் சென்றன. போலஸ்சுவிக்குகள் தமது ஆரம்பகாலத்தில் மதத்தை இல்லாதொழிக்கும் நோக்கத்தில் தேவாலயங்களை புறக்கணித்தார்கள். அதன் பின்பாக ஜேர்மன் குண்டுவீச்சால் அழிந்த இந்தத் தேவாலயத்தை புதுப்பிக்க 27 வருடங்கள் எடுத்தது. இந்த புதுப்பித்தல் முடியும்போது 1991ம் ஆண்டு சோவியத் ரஸ்சியா உடைந்துபோனது. ரஸ்சியாவில் பண்ணை அடிமைகளை விடுவித்த மன்னனை (அலக்சாண்டர்11) இந்தத் தேவாலயம் இருந்த இடத்ததில் குண்டெறிந்து கொலை செய்தார்கள். குண்டெறிந்தவன் மன்னனது, பண்ணை அடிமைகளை விடுவிக்கும் செயலை எதிர்க்கும்…

    noelnadesan

    28/12/2017
    Uncategorized
  • சுவான்லேக் (SWAN LAKE).

    பத்தொன்பதாம் நுற்றாண்டில் பிறந்த உன்னத சங்கீத மேதை சக்கோகியை(Tchaikovsky)1875 மாஸ்கோவில் போல்சி நாடக குழுவினர் அழைத்து சுவான்லேக் என்ற பலே நாடகத்திற்கு இசையமைக்க சொன்னார்கள். அன்றிலிருந்து ரஸ்சியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் இந்த நாடகம் அதே இசையுடன் தொடந்து அரங்கேறுகிறது. இம்முறை அதை பார்பதற்கு பீட்டஸ்பேர்கில் நின்றபோது அதற்காக டிக்கட் எங்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டது. விடுமுறையில் இப்படியான நிகழ்சிகளுக்கு செல்லும்போது தனியே எங்களுக்காக மட்டும் நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். வசதியான நேரத்தில் வாகனங்களில் அழைத்துச் சென்று பிரத்தியேகமான…

    noelnadesan

    26/12/2017
    Uncategorized
  • நேவா நதி

    நேவா நதி, பீட்டர்ஸ்பேக் நகரத்தைச் சுற்றி ஓடுவதால் பார்ப்பதற்கு படகில் சென்றோம். வடக்கின் வெனிஸ் எனக்கருதப்படும் பீட்டர்ஸ்பேக் மிகவும் பெரிய மாளிகைகளை நதிக்கரையில் கொண்டது. அதில் மகோன்னதமாகத்தெரிவது ரஸ்சியமன்னரின் வின்ரர் பலஸ். 1786 கதவுகள் 1945 ஜன்னல்கள் 1500 அறைகள் 117 மாடிப்படிகள் கொண்ட மாளிகை. போல்சுவிக்குகள்,  வின்ரர் பலஸ்சில் இருந்த இடைக்கால அரசாங்கத்தைக் கைப்பற்றியது கம்மியூனிச நூல்களைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கும். 1917 ஒக்ரோபர் நிகழ்வின் வித்து பன்னிரண்டு வருடங்கள் முன்பாக இதே வின்ரர் மாளிகையின் முன்பாக…

    noelnadesan

    23/12/2017
    Uncategorized
  • கனவு தேசம்.

    ஹெல்சிங்கியில் இருந்து மூன்று மணி நேரத்தில் எம்முடனிருந்த ஐம்பது பேருடன் பஸ் சென்ட் பீட்டர்ஸ்பேக் அடைந்தது. ரஸ்சிய எல்லையில் எங்கள் கடவுச்சீட்டுகள் பரிசோதிக்கப்பட்டன. எமது வழிகாட்டியான வெரோனிக்கா முப்பது வருடங்களாக ரஸ்சியாவிற்கு வந்து போவதோடு ரஸ்சிய மொழியையும் தெரிந்தவர். சோவியத் யூனியன் இருந்த காலத்தில் தரைபாதையால் செல்லும்போது மூன்று இடங்களில் இறக்கி ஏற்றுவார்கள் என்றார். எங்கள் பஸ்சை மூன்று இடத்தில் மறித்தாலும ஒரு இடத்தில் மட்டும் எம்மை இறக்கிப்பாஸ்போட்டைப் பரிசோதித்தார்கள். மற்றைய இடத்தில் பஸ்சின் உள்ளே வந்து…

    noelnadesan

    19/12/2017
    Uncategorized
  • மௌனித்துவிட்ட கலகக்குரல்: கவிஞர் ஏ. இக்பால் ( 1938 – 2017 ) நினைவுகள்

    கிழக்கிலங்கையிலிருந்து தென்னிலங்கை வரையில் வியாபித்து இலக்கிய கலகம் நிகழ்த்திய படைப்பாளி முருகபூபதி நானறிந்தவரையில் இலங்கையில் பல படைப்பாளிகள் ஆசிரியர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களில் சிலர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் ஆகியன வற்றில் விரிவுரையாளர்களாகவும், இலக்கியத்துறை சார்ந்த கலாநிதிகளாகவும் பேராசிரியர்களாகவும் கல்விப்பணிப்பாளர்களாகவும், கல்வி அதிகாரிகளாகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.அதனால் இத்தகைய படைப்பாளிகளிடம் கல்வி கற்ற மாணவர்களும் பின்னாளில் படைப்பாளிகளாகவும் கலைஞர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள்.அந்தவகையில் இந்தப்பதிவில் சொல்லப்படும் ஏ. இக்பால் அவர்கள் ஆசிரிய பெருந்தகைகளால் வளர்க்கப்பட்ட படைப்பாளியாக மாத்திரம் திகழவில்லை, இவரும் தமது மாணவர்கள்…

    noelnadesan

    17/12/2017
    Uncategorized
  • பயணக் குறிப்பு -ஹெல்சிங்கி

    Uspenski Cathedral பதில் சொல்ல முடியாத கேள்விகள்: அந்தக்காலத்தில் பரசிற்ரோலஜி( Parasitology) வாய்மொழிப் பரீட்சைபோல் இருந்தது. பரீட்சைகள் மாணவப் பருவத்தில் மட்டுமல்ல வயதாகி இளைப்பாறும்  தறுவாயிலும் ஏற்படும் என்பதை சமீபத்திய ரஸ்சியப் பயணத்தில் அறிந்துகொண்டேன். பயணத்தின் ஆரம்பம் பின்லாந்து தலைநகரான ஹெல்சிங்கியில் இருந்தது. அங்கு செல்ல மூனிச்சில் விமானம் மாறியபோதுஐரோப்பிய ஒன்றியத்தின் செங்கன்(Schengen Zone/ Agreement) எனப்படும் ஒன்றிணைந்த பிரதேசத்திற்குள் வந்ததால் ஓர் விமானநிலயத்தில் பாஸ்போட்டில் குத்தப்பட்ட முத்திரை எல்லா ஐரோப்யிய ஒன்றிய நாடுகளுக்கும் போதுமானது. நாங்கள்…

    noelnadesan

    15/12/2017
    Uncategorized
  • எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இடக்கை ( நாவல்)

    படித்தோம் சொல்கின்றோம்: முருகபூபதி 17 ஆம் நூற்றாண்டில் நீதி மறுக்கப்பட்டவர்களின் வரலாற்றை சமகால வரலாற்றுடன் ஒப்பீடு செய்யத்தக்க புதினம் சமகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருடைய கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் படித்திருப்பதுடன், உலக இலக்கியப்பேருரைகளும் காணொளிக்காட்சியாக பார்த்து ரசித்து வியந்துமிருக்கின்றேன். எனக்குப்பிடித்தமான எழுத்தாளர்களை நேரில் சென்று பார்த்துப்பேசுவதும் எனது இயல்பு. அந்தவகையில் எஸ்.ரா. அவர்களை இரண்டு தடவைகள் சென்னையில் அவர் வசிக்கும் சாலிக்கிராமத்திற்கே சென்று பார்த்திருக்கின்றேன். அவரது அன்பான உபசரிப்பில் திளைத்திருக்கின்றேன். அவ்வப்போது அவரது…

    noelnadesan

    07/12/2017
    Uncategorized
  • சிட்னி கலை – இலக்கியம் 2017-மூத்த படைப்பாளிகளுக்கு பாராட்டு

    சிட்னி கலை – இலக்கியம் 2017 நிகழ்வில் மூத்த படைப்பாளிகளுக்கு பாராட்டும் கௌரவமும் சிட்னியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடந்த கலை – இலக்கியம் 2017 நிகழ்வில் தமிழகத்தின் மூத்த படைப்பாளி கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் அவர்களும் இலங்கையின் மூத்த படைப்பாளி சமூகப்பணியாளர் ‘செங்கதிரோன்’ த. கோபாலகிருஸ்ணன் அவர்களும் பாராட்டி கௌரவிக்கபட்டார்கள். அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிட்னியில் Black town இல் அமைந்துள்ள பல்தேசிய கலாசார மண்டபத்தில் சங்கத்தின் நடப்பாண்டு நிதிச்செயலாளர்…

    noelnadesan

    02/12/2017
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 98 99 100 101 102 … 173
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    Noelnadesan's Blog
    Join 97 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • Noelnadesan's Blog
    View site in Reader
    Manage subscriptionsபதிவு செய்கஉள்நுளை
    Report this content
    Collapse this bar