-
Anti-Muslim incidents in Ampara and Kandy in Sri Lanka
Care Lanka 203-205 Blackburn Road ,Syndal ,Victoria 3150 ,Australia Care Lanka, an Organisation in Australia represented by expatriate Sinhalese, Tamils and Muslims of Sri Lanka, is immensely concerned about the recent violence in Ampara and Kandy districts. We learn that the incidents were racially motivated and directed particularly against the Muslim community. We do not…
-
ஒவ்வொரு நாளும் வாழ்கிறேன்
கையை நீட்டி கடன் அட்டையைத் தந்தபோது மிஷேலின் முன் கையில் பச்சை குத்தியிருந்த வார்த்தைகள் ஆங்கிலம் போலிருந்தது. ” இது என்ன எழுதியிருகிறது? வார்த்தைகள் புரியவில்லை.” எனக் கேட்டேன். அவளது கையை நீட்டிப் பிடித்தபடி என்னைப் பார்த்தாள். அவள் மட்டுமல்ல. எனது நேர்ஸ், அவளது தாய், தந்தை, அவரது கையிலிருந்த சிறிய பிறவுன் நிற சுவாவா (Chihuahua) நாயும் பார்த்தது. “இந்தப் பச்சை குத்தியதை நான் இதுவரையும் பார்க்கவில்லையே. இதன் என்ன அர்த்தம் என்ன?” என்றேன் “நான்…
-
இனவாதப்பாம்பு
நடேசன் இலங்கையில் மீண்டும் தலைதூக்கியிருக்கும் இனவாதப் பாம்பு. சிங்களவருக்கோ தமிழருக்கோ இஸ்லாமியருக்கோ ஏன் முழு இலங்கைக்குமே நல்லதல்ல. புற்றுக்குள் ஓய்ந்திருக்கும் பாம்பு இரை தேடி வருவது போல், இந்த இனவாதப்பாம்பும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து வெளியே வரும். இந்த விவகாரத்தை சமூகநலன் கருதி தீர்க்கதரிசனத்துடன் அணுகவேண்டும். உணர்ச்சிவசப்படுதலை புறம் ஒதுக்கி அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படல்வேண்டும். அம்பாறையிலும் கண்டி திகன பிரதேசத்திலும் அண்மையில் நடந்திருக்கும் அசம்பாவிதங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நமது நமது இஸ்லாமிய சகோதரர்கள். நல்லெண்ணம் கொண்ட தமிழர்கள் மட்டுமல்ல…
-
உன்னையே மயல் கொண்டு- பாகம் நாலு
1983 ஆம் ஆண்டு மீனாவும் சோபாவும் ஒருவகுப்பில் படித்தார்கள். இருவர் வீடுகளுக்கும் அதிக தூரமில்லை. அன்று காலை பத்துமணிக்கு மீனாவின் வீட்டுக்கு சென்றுவிட்டு சோபா வரும்போது தானும் உடன்வருவதாக கூறி மீனா வந்தாள். இருவரும் தெருவில் வரும்போது ஏதோ சத்தம் கேட்டது திரும்பி பார்த்தவர்களுக்கு கத்தி, வாள் மற்றும் பொல்லுகளுடன் பலர் இருவரைத் துரத்திக்கொண்டு வருவது தெரிந்தது.துரத்தியவர்களின் வாய்களிலிருந்து ஆபாசமான, ஆத்திரமான சிங்கள வார்த்தைகள் வந்தன. வார்த்தைகளின் அர்த்தம் புரியாவிடினும் கெட்டவார்த்தைகள் என்பது புரிந்தது. முன்பாக ஓடியவர்களில்…
-
செஞ்சதுக்கம்.
செஞ்சதுக்கம் என்பது எனது இளமைக்காலத்தில் அதிகமாக காதில் வந்த விழுந்த அதேசமயம் படித்த வார்த்தையுமாகும்.இஸ்லாமியருக்கு மக்காவாகவும் கத்தோலிக்கர்களுக்கு ரோமாபுரியாகவும் புனிதமாக போற்றப்பட்டதுபோல், இடதுசாரி அரசியல்பற்றுள்ள இளைஞர்கள் மத்தியில் சோவியத் அரசு மற்றும் மாஸ்கோ மீது பற்றுதலைத்தோற்றுவித்தது. அக்காலத்தைய எண்ணம் இப்போது இல்லாதபோதும் மாஸ்கோவிற்கு சென்று அங்குள்ள செஞ்சதுக்கத்தைப் பார்ப்பது என்பது மனதில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. கமியூனிஸ்டுகளால் செஞ்சதுக்கம் என்ற பெயர் வந்ததோ எனமுன்பு நினைத்திருந்தேன். அந்தப்பகுதி முழுவதும் சிவப்புகற்கள் பதிக்கப்பட்டு சிவப்பாகவே காட்சியளித்தமையால்தான் செஞ்சதுக்கம் என்ற பெயர்…
-
மெல்பனில் கெயர்லங்கா (Care Lanka ) தகவல் அமர்வு
இலங்கையில் மூவின மக்களின் நலனுக்காக மெல்பனில் கெயர்லங்கா (Care Lanka ) தகவல் அமர்வு இலங்கையில் அனைத்து சமூகங்களினதும் நலன்களையும் அபிலாஷைகளையும் கவனிக்கும் பொருட்டும், கல்வி, வாழ்வாதாரம், சுகாதாரம், நல்லிணக்கம், சமாதான சகவாழ்வு முதலான நோக்கங்களுடனும், அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் மூவின சமூகங்களின் பிரதிநிதிகளும் இணைந்து செயற்படும் கெயர்லங்கா (Care Lanka ) அமைப்பின் தகவல் அமர்வு அண்மையில் நடந்தது. மெல்பனில் கடந்த ஆண்டு இறுதி முதல் இதற்கான ஆலோசனைக்கூட்டங்கள் நடந்தன. கடந்த சனிக்கிழமை 24 ஆம்…
-
உன்னையே மயல் கொண்டு – மூன்றாவது பாகம்
பரிசோதனை டிஸ்ஸில் வளர்ந்த பக்டீரியா கொலனிகளை மேசையில் வைத்து கீழே குனிந்தபடி எண்ணிக் கொண்டிருந்த சந்திரனின் முதுகில் பலத்த அடி விழுந்தது. எரிச்சலுடன் திரும்பியபோது குண்டலராவ் நின்றான். முகத்தில் சந்தோசம் வந்தது. “எப்படி உன் ஆராய்ச்சி போகிறது” என்றான் சந்திரன். “பரவாயில்லை ஏதோ போகிறது” என்றான் சலித்தபடி. இந்த ஆய்வுகூடத்தில் கலாநிதிப் பட்டத்திற்கு படிக்கும் மூன்றாவது மாணவன் அவன். இந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து வந்து ஸ்கொலசிப்பில் படிக்கிறான். “என்ன இலங்கை-இந்திய மகாநாடு நடக்கிறதா”? எனக் கேட்டபடி சிண்டியும்…
-
Demons in Paradise:ஆவணப் படம்.
Director:Jude Ratnam Writer: Isabelle Marina ஜுட் இரத்தினத்தால் இயக்கப்பட்ட இந்த ஆவணப்படம் உண்மையில் என் எல் எவ் ரி யில் அங்கத்தவராக இருந்து பின்பு விடுதலைப்புலிகளின் துப்பாக்கிக்குண்டுகளால், ‘காதில் பூக்காமலோ, நெற்றியில் பொட்டு வைக்கப்படாமல் ‘ தப்பிய ரஞ்சன் என்ற செல்லையா மனோரஞ்சன் – மாமாவாகத் தனது இயக்க காலத்து சம்பவங்களை இரை மீட்பதாகும் : அதாவது நனைவிடை தோய்தலாகும் ஆவணப்படத்தின் ஆரம்பத்தில் வரும் இரயில் பாதை, அதை மூடிவளர்ந்த மரம் என்பது படிமமாக தொடங்கி…
-
அன்னா கரினாவின் இரயில்ப்பாதை
அன்னா கரினா வடக்கின் வெனிஸ்’எனப்படும் பீட்டர்ஸ்பேக்கில் இருந்து எங்களது குழு மாஸ்கோ செல்லவேண்டும். அதிகாலையில் எழுந்து புறப்பட்டோம் பெருந்தொகையான மக்கள்கூட்டமும் ஏராளமான பிளட்பாரமும் உள்ள ரயில்வே நிலையத்தில் ஒருவர் பின்ஒருவராக சென்று ரயிலில் ஏறினோம். குழுவாகப் போகும்போது பாடசாலை மாணவர்கள் போன்ற உணர்வு ஏற்படும். மொழி புரியாத இடமென்பதால் அதிக கவனம். அத்துடன் தற்போது ரஸ்சியாவில், உல்லாசபிரயாணிகளிடம் பிக்பொக்கட் அடிப்பவர்கள் பெருகிவிட்டாரகளாம். இதுவரையும் மாஸ்கோ எனும்போது கிரம்லின்(Kremlin) என்ற சொற்றொடர் மனத்தில் வரும். ரஸ்சியா சென்ற பின்பே…
-
உன்னையே மயல் கொண்டு 2
சிட்னியின் மேற்குப்பகுதியில் இருக்கும் அந்த பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் உயர் கல்விக்கூடமாக இருந்தது. இங்கு விவசாயிகளுக்கு செய்முறை பயிற்சி கிடைக்கும். அந்த இடத்தில் ஆறு ஓடுவதால் பல கால்நடைப் பண்ணைகள் இருந்தன. சிட்னியின் சனத்தொகை பெருகி மேற்குப்புறமாக வீடுகள் கட்டப்பட்டதால் விவசாய பண்ணை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது. ஜனத்தொகை வளர்ச்சியுடன் இந்த கல்வி நிலையம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. மற்றைய பல்கலைக் கழகங்களைப் போல் கொங்கிறீட் மாடிக்கட்டடங்கள் கட்டப்படவில்லை. மரங்களுக்கு இடையில் தனிகட்டடங்கள்; இயற்கைசூழலின் தன்மையை இழக்காமல் அமைந்தன. நுழைவாசலின் வலப்…