பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • கானல் தேசம் காலச்சுவட்டில் இரண்டாம் பதிப்பு

    எதிர் மறையான கருத்துகள் பலமானவை .உத்வேகத்தைக் கொடுப்பவை. 2016வது ஆண்டில் வந்த புத்தகங்களில் சிறந்தது வாழும்சுவடுகள் எனக் கவிஞர் சல்மா ஆனந்தவிகடனில் சொன்னார். அதேபோல் ஜெயமோகன் ராமகிருஸ்ணன் போன்றோர் அதைத் தமிழுக்குப் புதுவரவெனச் சிலாகித்தனர். அதேபோல் 13 ஆண்டு அசோகனின் வைத்தியசாலையைப் பலர் நன்றாகச் சொன்னார்கள். இரண்டும் முதல் பதிப்பைத் தாண்டாது பதுங்கு குழிகளில் கிடக்கின்றன. 2019 ஆண்டு தைமாதம் வெளிவந்த கானல் தேசம் இரண்டாவது பதிப்பை நோக்கிப் பிரவேசிப்பதான நேற்று எனது நண்பர் சொன்னார் .…

    noelnadesan

    30/06/2019
    Uncategorized
  • மெல்பனில் வாசிப்பு அனுபவங்கள் சங்கமித்த இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல்

    விலங்கு மருத்துவராகவிருந்து இலக்கியப்படைப்பாளியான நடேசனின் நூல்கள் பற்றிய மதிப்பீடு ரஸஞானி படைப்பிலக்கியத்துறைக்கு வரும் பெரும்பாலானவர்கள் ” தாங்கள் எழுத்தாளரானதே ஒரு விபத்து ” என்றுதான் சொல்லிவருகிறார்கள். முதலில் வாசகர்களாக இருந்து, பின்னர் தாமும் எழுதிப்பார்ப்போம் என்று முனைந்தவர்கள், தமது படைப்புகளுக்கு கிட்டும் வாசகர் அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் தொடர்ந்து எழுதி பிரகாசிக்கிறார்கள். தமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர்களும் வாசகர் மதிப்பீட்டை காலத்திற்குக்காலம் கணித்துவைத்துக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகருகிறார்கள். இந்தப்பின்னணியில்தான், அவுஸ்திரேலியா மெல்பனில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக…

    noelnadesan

    25/06/2019
    Uncategorized
  • விமர்சனம் -வாழும் சுவடுகள்

    விஜி ராம் ஒரு கார்காலத்து சனிக்கிழமை மதியம் உங்கள் ஓய்வு நேரத்தில் இலக்கியம் பேசவும் கேட்கவும் சிந்திக்கவும் வந்திருக்கும் உங்களனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். இந்த வாய்ப்பினை எனக்கு நல்கிய திரு நோயல் நடேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் வணக்கங்களும். எனக்கு கொடுக்கப்பட்ட “வாழும் சுவடுகள்” எனும் இந்த புத்தகம். 2015 காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்திற்கு எழுத்தாளர் S. ராமகிருஷ்ணன் அவர்கள் பின்னுரை எழுதி இருக்கிறார். ஒரு மிருக வைத்தியராக தன் தொழில்சார்…

    noelnadesan

    18/06/2019
    Uncategorized
  • அவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019

    ஈழத்து மல்லிகை ஜீவாவின் வாழ்வும் பணிகளும் – எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புலகம் – கவிஞர் அம்பியின் கவிதை உலகம் பற்றியும் உரைகள் நிகழ்த்தப்படும் கன்பராவில் வதியும் கலை – இலக்கிய அன்பர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 23 ஆம் திகதி ( 23-06-2019) ஞாயிற்றுக்கிழமை இலக்கிய சந்திப்பு – 2019 நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கலை, இலக்கிய ஆர்வலர் திரு. சிவசபேசன் தலைமையில் கன்பரா தமிழ் மூத்த பிரஜைகள் மண்டபத்தில் ( Canberra Tamil Senior Citizens’ Meeting Hall,…

    noelnadesan

    14/06/2019
    Uncategorized
  • நடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை

    “பண்பாட்டையும், விழுமியங்களையும் நெகிழ்த்திக் கொள்ளவில்லை என்றால் அவை பெரும் சுமையாகி போகும் ” என்பதை உணர்த்தும் நாவல் விமர்சன உரை: சாந்தி சிவக்குமார் ( மெல்பனில் கடந்த 08 ஆம் திகதி நடைபெற்ற நடேசனின் நூல்கள் பற்றிய அறிமுக – விமர்சன அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை) நடேசன் அவர்களுடைய “அசோகனின் வைத்தியசாலை நாவல்”, இரண்டு சிறப்புகளை உடையது. நான் முதன்மையாக கருதுவது புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து கடந்த கால வாழ்க்கையையும் ஏக்கங்களையும் மட்டுமே பிரதிபலிக்கிற கதைகளாக இல்லாமல் நிகழ்காலத்தில்,…

    noelnadesan

    12/06/2019
    Uncategorized
  • மணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்

    முருகபூபதி எந்தவொரு சமூகமும் ஒரு சிலரால்தான் இயங்கிவிருகிறது. அவ்வாறு சமூகத்திற்காக இயங்குபவர்கள் பல தரத்தினர். பதவிகள், அந்தஸ்துகள், தகுதிகள் , மதிப்பீடுகள் எதனையும் எதிர்பார்க்காமல் சமூகத்திற்காக தன்னால் முடிந்ததை அயற்சியின்றி செய்துவருபவர்களை எம்மத்தியில் காண்து அரிது. அத்தகையவர்கள் யார் எனத்தேடினால் எமது தெரிவுக்குள் வருபவர்கள் ஒரு சிலர்தான். அந்த ஒரு சிலருள் ஒருவராகத்தான் உடன்பிறவாத சகோதர் திரு. அருணாசலம் ஶ்ரீதரனை நீண்டகாலமாகப் பார்க்கின்றேன். நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்து மூன்று (1987 -2019) தசாப்தங்களாகிவிட்டன. இக்காலப்பகுதியில் கலை, இலக்கியம்,…

    noelnadesan

    10/06/2019
    Uncategorized
  • எக்சைல்- முன்னுரை.

    இந்தியாவில் வாழ்ந்தபோது ஏற்பட்ட ( 84-87) எனது அனுபவங்களையும் எண்ணங்களையும் இங்கு நான் எழுதியதன் நோக்கம் என்னைப் பெரிதாக்கவோ இல்லை மற்றவர்கள் தவறுகளை சுட்டிக்காட்டவோ அல்ல . எனது பார்வைகள் உண்மையானவை என வாதிடவுமில்லை. நான் சொல்லுவதால் எதுவித லாபம் யாருக்குமில்லை என்பதையும் தெரிந்தவன். சில சம்பவங்களைப் பார்த்தேன். சில மனிதர்களையும் சந்தித்தேன். அவைகள் -அவர்கள் எனக்கு எப்படித் தெரிந்தன என்ற எனது பார்வையே இங்கே தரப்படுகிறது. 83 களில் ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்காத தமிழர்களை விரல்களில் எண்ணிவிடலாம்.…

    noelnadesan

    09/06/2019
    Uncategorized
  • நாவல்:கார்க்கியின் தாய் .

    கடந்த வருடம் ரஷ்யாவுக்கு போனபோது, நான் ஒரு காலத்தில் கேள்விப்பட்ட கோர்க்கி வீதியைத் தேடினேன். காணவில்லை.சோவியத் ரஷ்யா என்ற நாடே காணாமல் போய்விட்டதே என்று ஆறுதலடைந்தேன். 1990 இல் யாரையாவது சோவியத் யூனியன் விண்வெளிக்குஅனுப்பியிருந்தால் மீண்டும் காசக்தானில் ( Kazakhstan) வந்து இறங்கியபோது பாஸ்போட் தேவைப்பட்டிருக்கும். அல்லது கைதாகயிருக்கலாம் என்ற நகைச்சுவை உணர்வு வந்தது. பைபிளுக்கு அடுத்ததாக உலகம் முழுவதும் அதிகம் பதிக்கப்பட்ட நூல் மக்சிம் கார்க்கியின் மதர் என்ற நாவலை ( தொ. மு.சி. ரகுநாதனது…

    noelnadesan

    03/06/2019
    Uncategorized
  • நடேசனின் நூல்களின் அறிமுகமும் விமர்சன அரங்கும்

    அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் நடேசனின் நூல்களின் அறிமுகமும் விமர்சன அரங்கும் அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்தி எழுத்தாளருமான விலங்கு மருத்துவர் நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும் நாவல்கள், சிறுகதைகள், தொழில் சார் அனுபவ நூல்கள் மற்றும் பயண இலக்கியம் தொடர்பான அறிமுகமும் விமர்சன அரங்கும் எதிர்வரும் 08 ஆம் திகதி (08-06-2019) சனிக்கிழமை மெல்பனில் நடைபெறும். நடேசன் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரே இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கியவர். இவரது விலங்கு மருத்துவத்துறை சார்ந்த கதைகளை உள்ளடக்கிய நூல் வாழும் சுவடுகள்…

    noelnadesan

    01/06/2019
    Uncategorized
  • கரையில் மோதும் நினைவலைகள்- இருட்டில் விழுந்த அடி

    நடேசன் கடந்த வருடம் (2018 ) மே மாதத்தில் எனது தலையில் பெரிய அடி விழுந்தது. யார் அடித்தார்கள் எனத் தெரியாத கலக்கத்துடன், அடித்த இடத்தை தடவியபடி சுற்றிப் பார்த்தால் எதுவும் தெரியவில்லை. மனக்குழப்பம். நிலை தடுமாறிய உணர்வு . மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாக இருந்த எனது மனைவி சியாமளாவை, அதிகமாக அறிமுகமற்ற புற்று நோய் ஒன்று தாக்கியது . பெரும்பாலான வியாதிகள் கடிதம் எழுதி, பின்பு தொலைபேசியில் பேசிவிட்டு வந்து கதவைத் தட்டும் பண்பானவர்கள் போன்றன…

    noelnadesan

    23/05/2019
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 82 83 84 85 86 … 173
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    Noelnadesan's Blog
    Join 97 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • Noelnadesan's Blog
    View site in Reader
    Manage subscriptionsபதிவு செய்கஉள்நுளை
    Report this content
    Collapse this bar