Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • கிழக்குத் தீமோர்-புதியதேசம்

    கிழக்குத் தீமோர், அவுஸ்திரேலியாவுக்கு மிக அருகில் இருக்கும் நாடு. அத்துடன் எனது நெருங்கிய நண்பர் ஒருவரது நாடு. முன்பு ஒரு முறை அந்த நாட்டின் சுதந்திரத்தின் பின்பாக போயிருந்ததால், காலத்தின் மாற்றங்களை அறிந்து கொள்ள இம்முறை ஈஸ்டர் விடுமுறையில் அங்கு சென்றேன். டெலி(Dili) என்பதே கிழக்குத் தீமோரின் தலைநகர். எந்த சோதனைகளுமற்று இறங்கியபோது 30 அமெரிக்க டொலரில் விசா கிடைத்தது. எனக்காக நண்பன் விமான நிலையத்தில் காத்திருந்தான். காலனிய காலத்து வசதியான அவனது வீட்டில் அறையொன்று எனக்காகக்…

    noelnadesan

    03/05/2018
    Uncategorized
  • சிங்களத்திரைப்படங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்திய லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்

    சிங்கள படைப்பிலக்கியங்களை திரைக்கு வழங்கிய முன்னோடிக்கலைஞர் ஜெயகாந்தனுடன் அமர்ந்து “உன்னைப்போல் ஒருவன்” பார்த்த ரசிகர் முருகபூபதி ” உலகிலேயே மிகவும் ஏமாற்றமளிப்பது, (75 ஆண்டுச்சரித்திரமுள்ள) இந்தியச் சினிமாத்துறைதான். தென்னிந்தியாவில் உருவாகும் சினிமாப்படங்களில் 20 வீதம் மட்டும் வர்த்தகரீதியாகவாவது வெற்றிபெறுகின்றன. உயர்ந்ததோர் கலைமரபைக்கொண்டது தென்னிந்தியா. தென்னிந்தியாவின் சங்கீதம் உலகிலேயே முதன்மையான ஒன்று. தென்னிந்தியரின் நடனம், உலகெங்குமுள்ளவர்களால் மிகவும் போற்றி ரசிக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பண்டைக்காலச்சிற்பங்கள், ஈடிணையற்றவை. இப்படியாக ஒரு உன்னதமானதும், ஆழமானதுமான கலை மரபை வளர்த்துவந்திருப்பவர்கள், சினிமாத்துறையிலே இத்துணை பின்தங்கியிருப்பது…

    noelnadesan

    30/04/2018
    Uncategorized
  • அரசியல் தற்கொலை செய்யும் ஒரு சமூகம் (22/11/2011 by noelnadesan)

    கம்போடியாவில் ரொன்லி சப் (tonle Sap); என்ற பெரிய ஏரி மீகொங் ஆற்றுடன் தொடர்பான 2500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அந்த ஏரியை சுற்றியெல்லாம் கோடைகாலத்தில் வயலில் விதைத்து நெற்சாகுபடி செய்யமுடியும். மழைக் காலத்தில் அந்த ஏரி நீர் 13000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அதாவது ஐந்து மடங்காக பெருகும் போது அந்தப் பகுதி மக்கள் ஆளுக்கு 100 கிலோ மீன்பிடிப்பதன் மூலம் தங்கள் உணவுத் தேவையை தீர்த்துக்கொள்வார்கள். கம்போடியாவின் அரைவாசிப்பேருக்கு உணவு வழங்கும்…

    noelnadesan

    29/04/2018
    Uncategorized
  • உன்னையே மயல் கொண்டு – பாகம் எட்டு

    வெளியே வந்த சந்திரனுக்கு தெரு விளக்கின் வெளிச்சம் கண்களைக் கூச வைத்தது. திருடிக் கொண்டு வெளியேறும் திருடன் போல்,  தன்னை யாராவது பார்க்க்கிறார்களா என சுற்றுமுற்றும் பார்த்தான். தெரிந்தவர்கள் யாராவது நடந்தோ,  காரிலோ போகிறவர்கள் தன்னை அவதானிக்கலாம் என்ற எண்ணம் அவனை தாக்கியது. அவசரமாக காரை நோக்கி எட்டிக்கடந்து காரில் ஏறினான். காரை ஓட்டும் போது உடல் உறவில் ஏற்பட்ட ஒரு அமைதி நிலையுடன், குற்ற உணர்வும் சேர்ந்து யாழ்பாணத்தில் ஒரு முறை உயர வளர்ந்த தக்காளி…

    noelnadesan

    29/04/2018
    Uncategorized
  • நாவல்: ஜீவ முரளியின் லெனின் சின்னத்தம்பி.

    லெனின் சின்னத்தம்பி நாவலைப் படித்தபோது அவுஸ்திரேலியாவில் ஒரு பஞ்சாபி உணவகத்தில் நான் வேலைசெய்த காலத்தை நினைவூட்டியது. இரண்டு மாதங்களாக பாத்திரம் கழுவிய என்னால் இறுதி வரையும் சப்பாத்தியை வட்டமாக போடத் தெரியவில்லை. இதனால் சமையல்காரரின் உதவியாளராக வரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வரியற்று கையில் பணம் வரும் வேலை என்பது கவர்ச்சியாக இருந்தபோதிலும் நமக்கு இது சரி வராத சங்கீதம் என அங்கிருந்து விலகினேன். எந்தத் தொழில் திறமையுமற்றவர்களையும் ஏற்று வேலையளிக்கும் ஒரே இடம் இந்த உணவகங்கள். விசேடமாக…

    noelnadesan

    27/04/2018
    Uncategorized
  • செக்சிவூமன் (Saksaywaman)

    காலை முழுவதும் இரயில் பிரயாணம் செய்து மாலையில் மச்சுப்பிச்சியை பார்த்துவிட்டுத் திரும்பும்போது இரவாகிவிட்டது அதன் பின்பு காலையில் எழுந்து சன்கேட் எனப்படும் மலைக்குச் சென்று மதியத்தின் திரும்பி மீண்டும் ஹரன் பிங்கம் இரயில் ஏறினோம். இடையில் இரயில் நிலயம் செல்வதற்கு பஸ் அதுவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த ஒழுங்கு சிறப்பாக இருந்தாலும் அதுவே இராணுவத் தன்மையை அளித்தது. பல இடங்களுக்குத் திரிந்து தொலைந்த பாக்கியம் கிடைக்கவில்லை. மச்சுபிச்சுவிலும் குறிப்பிட்ட அளவாக உல்லாசப்பிரயாணிகளை அனுமதிப்பதால் பெரும்பாலானவர்கள் குழுவாக வந்துபோகிறார்கள்.…

    noelnadesan

    24/04/2018
    Uncategorized
  • மாமனார் நட்ட மாதுளை

    பழங்களில் எனக்கு விருப்பமானது மாதுளை. இப்பொழுது மட்டுமல்ல எனது விடலைப் பருவத்தில் காதல் கடிதம் எழுதும்போதும் மாதுளையை உவமையாக்கினேன். மற்றவர்கள் செவ்விளனியையோ, மாம்பழத்தையோ, அல்லது எஸ். பொ நனவிடைதோய்தலில் எழுதியது போன்று முயல்குட்டியையோ உவமையாக்கலாம். நான் உவமையாக எழுதும்போது கூட பொய்மையோ, தேவையற்ற புகழ்ச்சியோ இருக்கக் கூடாதென நினைப்பவன். எங்கள் மெல்பன் வீட்டின் பின்புறத்தில் ஒரு மாதுளைச் செடி எனது மாமனாரால் நடப்பட்டது. அவரது மகளுக்கு அது அப்பா நட்டது என்று சொல்வதில் ஆனந்தம்.அவரது காலத்தில் வீட்டில்…

    noelnadesan

    23/04/2018
    Uncategorized
  • அண்டியன் எக்ஸ்பிரஸ்

    இரயில்ப்பயணம் எனக்குப் பிடித்தது யாழ்ப்பாணம்- கொழும்பு அதன்பின் கண்டி மலையகம் என மாணவப் பருவத்திலும் சென்னை-டெல்கி பம்பாய்- திருவனந்தபுரம் என தொடந்து பின்பு ஐரோப்பாவின் இரயில்களில் நாடுகள் ஊடாகப் பியாணம் செய்திருக்கிறேன். இப்பொழுது நான் எழுதும் இந்தப் பிரயாணம் மிகவும் வித்தியாசமானது இன்கா அரச பரம்பரையின் தலைநகரான குஸ்கோ அவர்களது தொப்பிள் எனச் சொல்வார்கள். ஆனால் இன்காக்களின் வரலாறு தொடங்கிய இடம் புனாவுக்கு அருகில் உள்ள வாவி. ((Lake Titicaca) இந்த வாவியில் இருந்தே இன்காக்களின் ஆரம்ப…

    noelnadesan

    22/04/2018
    Uncategorized
  • பான்பராக்

    நருக் சக்கரபோத்தியா தனது சிவப்பு பொமரேனியன் நாயுடன் எதுவித முன்னறிவித்தலும் இல்லாது எமது மிருகவைத்தியக் கிளினிக்கிற்கு வந்திறங்குவார். குழந்தையைத் தூக்கி வருவதுபோல காவியபடி வந்து தனது நாயின் பிரச்சினையை சொல்வார். பெரும்பாலும் மதிய வேளைகளில் நான் இல்லாதபோது வந்து தெள்ளு மற்றும் புழுவுக்கான மருந்துகள் பெறுவார். பலவருடங்களாக அறிமுகமானவர்.கல்கத்தாவில் பிறந்து வளர்ந்து மெல்பேனில் வசிக்கிறார்.சில காலத்துக்கு முன்பாக இளைப்பாறிவர். அறுபத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர் என நினைக்கிறேன். மூச்சுத்திணறும் குழந்தையை அவசரமாகத் தூக்கியபடி இந்திய அரசாங்க வைத்தியசாலையின் நீண்ட…

    noelnadesan

    17/04/2018
    Uncategorized
  • உன்னையே மயல் கொண்டு- பாகம் ஏழு

    ஆய்வுக்குத் தேவையான புத்தகம் ஒன்றைப் பேராசிரியர் பாமரின் அறையில் இருந்து எடுத்துவரச்சென்ற சந்திரன், போராசிரியர் சிண்டியிடம் பேசிக்கொண்டிருப்பதை கண்டு திருப்ப எத்தனித்ததும், சந்திரனை “கம் இன்” என்ற வழக்கமான பாணியில் கேட்டு சுகம் விசாரித்தார் பேராசிரியர் பாமர். “சந்திரன் இவ்வளவு காலமும் நீ பெற்ற தரவுகளை கட்டுரையாக்கிக் கொண்டுவா. அதை நான் மைக்கிரோ பாயலாஜி மகசினுக்கு அனுப்ப வேண்டும். அடுத்த ஆய்வுக்கு பணம் பெற இது உதவும். உனக்கு இரண்டு மாதம் தருகிறேன் என்றார்.” நன்றி கூறிவிட்டு…

    noelnadesan

    17/04/2018
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 83 84 85 86 87 … 163
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 103 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar