-
” எழுத்துச்சித்தர் “பாலகுமாரன் நினைவுகள்
அஞ்சலிக்குறிப்பு: முருகபூபதி ” என்னுடைய கன்டென்ட் கஷ்டமானது, அதனால் நடையும் அப்படித்தான் இருக்கும். ” என்று சொல்லும் பாலகுமாரன், வித்தியாசமாக எழுதுகின்ற எழுத்தாளர் வரிசையில் முதன்மையானவரும் முக்கியமானவருமாவார். ஆரம்பத்தில் கணையாழியில் எழுத ஆரம்பித்த இவர், பின்னர் சாவி, மோனா, தாய், ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பரவலான சஞ்சிகைகளில் தனது வீரியமான கதைகளை விதைக்கத்தொடங்கினார். ஜிகினா வேலைசெய்து வாசகரை ஏமாற்றி இருட்டுக்கு இட்டுச்செல்லும் சில கதாசிரியர்கள் செய்யும் வேலையைச்செய்யாது, யதார்த்தங்களை அப்படியே சாயம் பூசாமல், மனதால் மட்டுமே எழுதிக்காட்டுபவர்…
-
Memories of late K.G Amaradasa -an Ardent Tamil Literary Lover &Advocate for National Unity
Written By: L. Murugapoopathy, Australia “Some might say that if a Sinhala man marries a Tamil woman or a Tamil man marries a Sinhala woman, then national unity will be born. I don’t think so. If people of different ethnic origin get married, only the children would be born as a natural consequence” quipped Ven.…
-
உன்னையே மயல் கொண்டால்- பாகம் பத்து
ஜுலியாவின் கதை “நான் விவசாய குடும்பத்தில் பிறந்தேன். எங்கள் பண்ணையில் பால் மாடுகளும், செம்மறி ஆடுகளும் வளர்த்தோம். பெற்றோருக்கு பண்ணையில் வேலை செய்யவே நேரம் போதாது. நாங்களும் பண்ணை மிருகம் போல வளர்ந்தோம். இரண்டாம் உலகப்போரில் கலந்துவிட்டு வந்த தந்தையின் கவனம் முழுவதும் பண்ணைமீது இருந்தது. போர்க்காலத்தில் பராமரிப்பு குறைந்து பண்ணை நல்லநிலையில் இருக்கவில்லை. மாடுகள் செம்மறியாடுகள் என வாங்கி பண்ணையை பெருக்கினார். பின்னர் பண்ணையில் மாடுகள் கன்று போடுதல் பால் கறத்தல் என்று வேலைகள் உண்டு.…
-
பேராசிரியர் துரை மனோகரனது பத்தி -ஞானம்.
சாதாரணமானவர்களது அரசியல் கூற்றை நான் கடந்து போவேன். ஆனால் பேராசிரியர் துரை மனோகரனைக் கடந்துபோக முடியவில்லை . முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மீண்டும் போட்டியிட்ட நினைப்பது வயிற்றில் பால்வார்ப்பது போன்று பத்தி ஒன்று ஞானத்தில் எழுதியிருக்கிறார். அதில் பல இடங்களை ஆசிரியர் எழுத்தைத் தடித்த எழுத்தாக்கியிருக்கிறார் (Bold) பத்திரிகையில் சில விடயங்களைத் தடிப்பாக்கும்போது அது பிரசாரமாகிறது. ஞானம் ஆசிரியர் சிலரது கூற்றை ஆதரிக்கிறார் என்பது கருத்தாகிறது. அரசியலில் ஒரு பகுதியை பிரச்சாரம் செய்வதாகிறது. ஆசியர் தனது ஆசிரியதலையங்கமாக இருந்தால்…
-
சொல்லத்தவறிய கதைகள்- அங்கம் 16
மூன்று தலைமுறையாக இலங்கை அரசியலில் ஒலிக்கும் இரண்டு எழுத்துக்கள் நூற்றுக்கணக்கான மலர் மாலைகள் மண்ணில் சருகாகின! 65 பவுண் தங்கமாலைக்கு என்ன நேர்ந்தது….? முருகபூபதி 1965 ஆம் ஆண்டு. எனக்கு 14 வயதிருக்கும். அந்த ஆண்டு இலங்கையில் நடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றது. அந்த அரசில் டட்லி சேனாநாயக்கா பிரதமரானார். தமிழரசுக்கட்சியும் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சியும் அந்த அரசுக்கு ஆதரவு அளித்தன. இவ்வாறு அன்றும் ஒரு நல்லிணக்க ஆட்சி வந்தது! டட்லி, இக்கட்சித் தலைவர்களிடம்…
-
இன்காவின் புனிதப்பள்ளத்தாக்கு
ஒலயன்தம்போ நகரம் சோவியத் சாம்ராச்சியம் தானாக உள்ளக உடைவால் அழிந்தது போன்றது. அது போன்றது ஒரு இலட்சம் படையினரை வைத்திருந்த இன்கா சாம்ராட்சியம் 180 ஸ்பானிய படையினருக்கும் அவர்களது 62 குதிரைகளுக்கும் பணிந்தது இராச்சியத்தைப் பறிகொடுத்தது. பல திருப்பங்கள் கொண்ட மெகா சீரியல் போன்று சுவாரசியமான கதை.இதில் ஸ்பானியர்கள் பங்கு மிகவும் சிறிதே. எப்படி நடந்தது? புனித பள்ளத்தாக்கு எனப்படும் பகுதி கொஸ்கோ நகருக்கு ஆடுத்துள்ள பள்ளத்தாக்கு இந்தப் பகுதியாலே மச்சுப்பிச்வுக்கு வாகனத்தில் செல்லவேண்டும். இப்பகுதியில் இன்காவின்…
-
உன்னையே மயல் கொண்டால்- பாகம் ஒன்பது
காலை பத்துமணிக்கு குனிந்தபடி ஏதோ எழுதிக் கொண்டிருந்தான் சந்திரன். சிண்டி பக்கதில் வந்து நிற்பதை உணர்ந்து திரும்பாமல் “ஹலோ சிண்டி எப்படி இருக்கிறாய்?” அவளது கை இப்போது அவனது தோளில் இருந்தது. எழுதியதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். சிண்டியின் தலைமயிர் அரைவாசி பின்தோளிலும் மற்றப்பாதி நெஞ்சிலும் கிடந்தது. “என்ன சிண்டி, இதுதான் பாஸ்சனா? “ “சட்அப்!. உங்களுக்கு தெரியுமா தலைமயிரை கழுவி காய வைக்க நான் எவ்வளவு கஸ்டப்படுகிறேன் உங்களுக்கு பிரச்சனை இல்லை” என சந்திரனின்…
-
கிழக்குத் தீமோர்-புதியதேசம்
கிழக்குத் தீமோர், அவுஸ்திரேலியாவுக்கு மிக அருகில் இருக்கும் நாடு. அத்துடன் எனது நெருங்கிய நண்பர் ஒருவரது நாடு. முன்பு ஒரு முறை அந்த நாட்டின் சுதந்திரத்தின் பின்பாக போயிருந்ததால், காலத்தின் மாற்றங்களை அறிந்து கொள்ள இம்முறை ஈஸ்டர் விடுமுறையில் அங்கு சென்றேன். டெலி(Dili) என்பதே கிழக்குத் தீமோரின் தலைநகர். எந்த சோதனைகளுமற்று இறங்கியபோது 30 அமெரிக்க டொலரில் விசா கிடைத்தது. எனக்காக நண்பன் விமான நிலையத்தில் காத்திருந்தான். காலனிய காலத்து வசதியான அவனது வீட்டில் அறையொன்று எனக்காகக்…
-
சிங்களத்திரைப்படங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்திய லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்
சிங்கள படைப்பிலக்கியங்களை திரைக்கு வழங்கிய முன்னோடிக்கலைஞர் ஜெயகாந்தனுடன் அமர்ந்து “உன்னைப்போல் ஒருவன்” பார்த்த ரசிகர் முருகபூபதி ” உலகிலேயே மிகவும் ஏமாற்றமளிப்பது, (75 ஆண்டுச்சரித்திரமுள்ள) இந்தியச் சினிமாத்துறைதான். தென்னிந்தியாவில் உருவாகும் சினிமாப்படங்களில் 20 வீதம் மட்டும் வர்த்தகரீதியாகவாவது வெற்றிபெறுகின்றன. உயர்ந்ததோர் கலைமரபைக்கொண்டது தென்னிந்தியா. தென்னிந்தியாவின் சங்கீதம் உலகிலேயே முதன்மையான ஒன்று. தென்னிந்தியரின் நடனம், உலகெங்குமுள்ளவர்களால் மிகவும் போற்றி ரசிக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பண்டைக்காலச்சிற்பங்கள், ஈடிணையற்றவை. இப்படியாக ஒரு உன்னதமானதும், ஆழமானதுமான கலை மரபை வளர்த்துவந்திருப்பவர்கள், சினிமாத்துறையிலே இத்துணை பின்தங்கியிருப்பது…
-
அரசியல் தற்கொலை செய்யும் ஒரு சமூகம் (22/11/2011 by noelnadesan)
கம்போடியாவில் ரொன்லி சப் (tonle Sap); என்ற பெரிய ஏரி மீகொங் ஆற்றுடன் தொடர்பான 2500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அந்த ஏரியை சுற்றியெல்லாம் கோடைகாலத்தில் வயலில் விதைத்து நெற்சாகுபடி செய்யமுடியும். மழைக் காலத்தில் அந்த ஏரி நீர் 13000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அதாவது ஐந்து மடங்காக பெருகும் போது அந்தப் பகுதி மக்கள் ஆளுக்கு 100 கிலோ மீன்பிடிப்பதன் மூலம் தங்கள் உணவுத் தேவையை தீர்த்துக்கொள்வார்கள். கம்போடியாவின் அரைவாசிப்பேருக்கு உணவு வழங்கும்…