-
தென்னமரிகாவின் தித்திக்கா வாவி
அந்தீஸ் மலைமேல் இரயிலில் பிரயாணம் செய்த புனா நகரத்திற்குவர இரவாகி விட்டது. வாகனத்தில் வந்து ஹோட்டேலுக்குள் சென்றுவிட்டோம் குறைந்த பிராணவாயுவை சுவாசித்தபடி செய்த பிரயாணத்தால் ஏற்பட்ட களைப்பில் படுத்துவிட்டோம். காலையில் எழுந்து ஹோட்டலின் உணவுக் கூடத்திற்கு வந்தபோது திவ்வியமான கனவுக்காட்சியாக விரிந்தது. எங்களது ஹோட்டேலில் இருந்து நூறு மீட்டரில் இருந்தது தித்திக்கா வாவி. வாவி நீரின் மையப்பகுதி காலை சூரிய ஒளிபட்டுப் பொற்கடலாக மினுங்கியது.. வாவியின் புருவங்கள் புற்கள் வளர்ந்து நீர் மேலாக பச்சை நிறத்தில் இருந்தது.…
-
என்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள்
வடமராட்சி வராத்துப்பளையிலிருந்து கனடா டொரன்டோ வரையில் வியாபித்து நின்ற ஈழத்தின் மூத்த படைப்பாளி நிலவிலிருந்து பேசியவர்களை பனஞ்சோலைக்கிராமத்தில் சித்திரித்த எழுத்துப்போராளி முருகபூபதி யாழ்ப்பாணம் அரியாலையில் செம்மணி வீதியில் சில மாதங்கள் ஒரு வாடகைவீட்டில் வசிக்க நேர்ந்தது. 1983 தென்னிலங்கை வன்செயல்களினால் இடம்பெயர்ந்திருந்தோம். இலக்கிய நண்பர்கள் மல்லிகை ஜீவா சைக்கிளிலும் கே. டானியல் தனது மோட்டார் சைக்கிளிலும் வந்து பார்த்துவிட்டுச்செல்வார்கள். தென்னிலங்கையில் நிலைமை படிப்படியாக சீரடைந்ததும் அரியாலையைவிட்டு புறப்படத்தயாரானோம். ஊரிலிருந்து எடுத்துவந்த பெருந்தொகையான புத்தகங்களையும் சில கதிரைகள் மேசையையும்…
-
உன்னையே மயல் கொண்டால் – பாகம் பதின்மூன்று
ஆய்வுக்கூட மேசையில் சந்திரனுக்கு வந்த கடிதங்கள் இருந்தன. அதில் ஒரு கடிதத்தை உடைத்ததும் உள்ளே அழைப்பிதழ் ஒன்று இருந்தது. சிட்னியின் ஹிளிப் பகுதியில் ஜுலியாவின் ஓவியக் கண்காட்சி நடப்பதாக இருந்தது. தொலைபேசியை எடுத்து ஜுலியாவின் இலக்கத்தை அழுத்தினான். மனத்தில் பதிந்து விட்ட சில தொலைபேசிகளின் இலக்கங்களில் இதுவும் ஒன்று. “எனக்குத் தெரியாதே…! எப்போது ஒழுங்கு செய்தாய்? “ என பரபரப்பாக பேசினான். “சந்திரன் ஆறுதலாகக் கேள். நான் சொல்லுகிறேன். ஹிளிப்பில் உள்ள பாடசாலையில் வாரவிடுமுறை நாட்களில்…
-
‘அசோகனின் வைத்தியசாலை’ ஜெயமோகன் எழுதிய முன்னுரை.
ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கு முன்பு தமிழ்ச்சூழலில் ஒரு கூற்று மிக அதிகமாக விவாதிக்கப்பட்டது. எஸ்.பொன்னுத்துரை அதைச்சொன்னார் என்று நம்பப்பட்டது.’அடுத்த நூற்றாண்டு தமிழிலக்கியத்தை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எழுதுவார்கள்’. அந்தவரி அன்றைய புலம்பெயர்ந்த ஈழத்தவர்களை பெரிதும் கவர்ந்தது. இந்தியாவில் பலர் அது ஈழத்தவர்களை மகிழ்விக்குமென்பதனாலேயே திரும்பச் சொன்னார்கள். இன்னும் சிலர் இலக்கியமென்பது அனுபவப்பதிவு என்ற எளிய சமவாக்கியத்தின் மீதான நம்பிக்கை காரணமாக அதைச் சொன்னார்கள். அதற்கேற்ப அன்று புலம்பெயர்ந்த ஈழத்தவர்கள் நடத்திய இதழ்கள் வந்து குவிந்தன. 1990ல் சுந்தர ராமசாமியின் இல்லத்தில்…
-
எகிப்தில் சிலநாட்கள்19: எகிப்திய வைத்தியர்.
கடல் சூழ்ந்த எங்கள் எழுவைதீவுக்கு கிழமைக்கு ஒருமுறை அருகில் உள்ள அனலைதீவிலிருந்து வைத்தியர் வருவார். அவரை சந்திப்பதற்கு எப்பொழுதும் கூட்டம் நிற்கும். சடுதியாக நோய் வந்தால் வள்ளத்தின் மூலம் பக்கத்தூருக்குச் செல்வோம். சிலநாட்கள் வரை தாக்குப் பிடிக்கக் கூடிய நோய் வந்தால் தினம் இருமுறை நடைபெறும் மோட்டார் படகு சேவையை உபயோகிப்போம். எம்மோடு சேர்ந்து வாழும் நோய்களான தொய்வு, சர்க்கரை வியாதி, (நீரழிவு) போன்றவற்றிற்கு பக்கத்து ஊர் வைத்தியரின் வருகையை எதிர்பார்த்து நிற்போம். ஒவ்வொரு கிழமையும் அம்மா…
-
குஸ்கோ- இன்கா நகரம்
கொலம்பியாவின் போகொட்டா விமான நிலயத்தில் காத்திருந்தபோது சில பெண்கள், குழந்தைகளை அழகான துணியால் கட்டி தோளில் ஊஞ்சலாக வைத்திருந்ததை கண்டேன். குழந்தைகள் அழாமல் அமைதியாக சிரித்தபடியே இருந்தார்கள். அந்தீஸ் மலைப் பகுதியில் வாழும் பெண்களிடம் இன்னமும் இந்த வழக்கம் மாறாமல் உள்ளது. மலையேறும்போது இலகுவாக பாரத்தைத் தூக்க ஏற்ப்பட்டது இப்பொழுது விமானமேறும் போதும் கடைப்பிடிக்கப்படுகிறது. விமான ஊழியர்களுக்கு இவர்கள் குழந்தைகளின் பிராமை கொண்டு செல்லும் வேலையைக் கொடுக்கவில்லை. 3310 மீட்டர் உயரத்தில் உள்ள குஸ்கோ எனப்படும் நகரம்…
-
மெல்பன் ‘சுந்தர்’ சுந்தரமூர்த்தி வாழ்வும் பணிகளும்
பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்ற தீர்க்கதரிசியாக அயராமல் உழைத்துவரும் சமூகப்பணியாளர் முருகபூபதி சமூகப்பணிகளில் ஈடுபடுவதற்கு மூலதனமாக இருப்பது: பொறுமை, சகிப்புத்தன்மை, தியாக மனப்பான்மை, நெகிழ்ச்சியான இயல்புகள், அர்ப்பணிப்பு, இரக்க சிந்தனை. இந்தப்பண்புகளை கொண்டிருப்பவர்கள் நண்பர்களாக கிடைப்பதும் பெரிய கொடுப்பினை. அவ்வாறு மெல்பனில் எனக்குக் கிடைத்த நண்பர்தான் திரு. சபாரத்தினம் சுந்தரமூர்த்தி அவர்கள். இவரை நாம் சுந்தர் எனச்செல்லமாக அழைப்பது வழக்கம். இலங்கையில் காரைநகர் களபூமியில் 31-05-1948 ஆம் திகதி பிறந்திருக்கும் சுந்தர், நேற்றைய தினம் தனது 70…
-
உன்னையே மயல் கொண்டால் -பாகம் பன்னிரண்டு
“உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். உண்மையை சொல்ல வேண்டும். என்னைக் கல்யாணம் செய்வதற்கு முன்பு யாரையாவது காதலித்தீர்களா? “ சந்திரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘இரு வருடங்களில் கேட்காத கேள்வியை கேட்கிறாளே! யாராவது அவளிடம் சொல்லி விட்டார்களா? இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழும் ஏரியா தான் ஓபன். சோபாவோ பெற்றோரோ மற்றவர்களோடு பேசிப் பழகுவது குறைவு. தாங்களும் தங்கள் குடும்பமும் என வாழ்பவர்கள் இவர்கள். பாடசாலையில் ஒன்றாக படித்தவர்களை தவிர மற்றவர்களை தெரியாது. ஏன்இப்படி தனியாக இருக்கிறார்கள்…
-
உன்னையே மயல் கொண்டு-பாகம் பதினொன்று
சோபா காலையில் படுக்கையில் இருந்தபடி தனது கடந்த காலத்தை இரை மீட்டுக் கொணடிருந்தாள். எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளபோது நினைக்க கூடியது கடந்தகாலம் மட்டும்தானே. எதிர்காலம் இல்லாத முதியவர்கள் மட்டும் தான் கடந்த காலத்தை நினைப்பார்கள். பதினெட்டு வயதில் திருமணமாகி பத்தொன்பது வயதில் குழந்தையைப் பெற்று இருபதாவது வயதில் கடந்த காலத்தில் மிதப்பவளின் மனோநிலையை என்னவென்று சொல்வது? “தங்கச்சி இந்தா கோப்பி” என்று கையில் கொடுத்தார் இராசநாயகம். கையை நீட்டி மெதுவாக வாங்கியவள் தகப்பனின் முகத்தை பார்க்க வில்லை.…
-
மச்சுபிச்சு
என் வாழ்க்கையில் இவ்வளவு அழகானது மட்டுமல்ல, வரவேற்று உபசரிப்பும் கொண்ட இரயிலைக் கண்டதில்லை. வர்ணிக்க விரும்பினால் வார்த்தைகளுக்குப் பஞ்சம் ஏற்படும். காலை நேரத்தில் இன்கா தலைநகரானன குஸ்காவில்இருந்து மச்சுப்பிச்சு செல்வதற்காக நாங்கள் ஏறிய சொகுசு இரயில் மச்சுபிசுவைக் கண்டறிந்த ஹரன் பிங்கம் என்ற ஜேல் பல்கலைக்கழகப் சரித்திரப் பேராசிரியரின் பெயரில் பெரு அரசால் நடத்தப்படுகிறது. அரசாங்கத்தின் சேவைகளும்நேர்த்தியாக நடத்த முடியும் என்பதற்கு இந்த இரயில் உதாரணமாக இருந்தது. மிகவும் வசதியான நாற்காலிகள் மேசைகள்அதன் மேல் மேசை விரிப்புகள்…