Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • எக்ஸைல் :1984 கெடுகுடி சொற்கேளாது.

    ஜனநாயகமான கட்டமைப்பற்ற ஆயுத அமைப்புகள் தங்களுக்குள் பிரிவதும் அழிவதும், தாயின் வயிற்றில் குறைபாடான கருவொன்று அபோர்சனாக வெளியேற்றப்படுவது போன்ற இயற்கைச் செயல்பாடாகும். அது போல் இயற்கையின் வலிமையானவை நிலைப்பதும், நலிந்தவை அழிவதுமான டரர்வினியன் தத்துவமாகும் . இப்படியான டார்வினியன் பரிணாம தத்துவம் இலங்கை தமிழ் அரசியலுக்கும் பொருந்தும். சகோதரஇயக்கங்கள் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டது என்று பலராலும் கூறப்பட்டாலும், அது மிகையானது. ஆனால் அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் விடுதலைப்புலிகளால் வேட்டையாடப்பட்டார்கள் என்பதே உண்மையாகும். இரண்டிற்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்கலாம்.…

    noelnadesan

    18/09/2018
    Uncategorized
  • அவளும் ஒரு பாற்கடல்.

    எஸ்.எல். எம்.ஹனிபா (அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியச் சங்கத்தின் வாசிப்பனுபவ அரங்கில் வாசிக்கப்பட்டது) சிறுகதை வாழ்வின் ஒரு தருணத்தை காட்டுவது என்கிறார்கள். மேலே போய் உதாரணம் சொல்வதானால் காட்டில் ஒரு மின்னல் ஒளியில் நாம் காணும் தரிசனம் போன்றது . சிறுகதை, கவிதை மற்றும் நாவலுக்குப் பின்னாக வந்த இலக்கிய வடிவம். முக்கியமாக அமரிக்காவில் மாத வாரச் சஞ்சிகைகள் உருவாகியபோது அதற்கு ஏற்றதான இலக்கிய வடிவம் இந்தச் சிறுகதை . விஞ்ஞானம்போல் இலக்கியத்திற்குத் திட்டமான விதிகள் இல்லாத போதிலும்…

    noelnadesan

    10/09/2018
    Uncategorized
  • அவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன் ஒரு நாள்

    இமயமலை சிறு குழந்தைபோல் ஒவ்வொரு வருடமும் வளர்ந்து வருகிறது.இமயமலையின் வயது 50 மில்லியன் வருடங்கள் அவுஸ்திரேலியாவின் மத்தியில் 348 மீட்டர் உயரமான கல் மலையுள்ளது. அதனது வயது 500 மில்லியன் வருடங்கள்.அது வளரவில்லை. மத்திய அவுஸ்திரேலியாவில் உள்ள இந்த மலை ஐயேர் கல்மலை(Ayers Rock) ஒரு காலத்தில் என்று கூறப்பட்டது. இந்துக்களுக்கு இமயமலை எப்படி புனிதமானதோ,அப்படி அவுஸ்திரேலிய ஆதிவாசிகளுக்கு உலறு கல்மலை புனிதமானது . அனன்கு(Anangu) என்ற அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் இனக்குழுவிற்கு சொந்தமான பிரதேசத்தில் இந்த உலறு…

    noelnadesan

    08/09/2018
    Uncategorized
  • பிரேசிலில் சம்பா நடனம்

    பிரேசிலில் ரியோ டி ஜெனிரோவோடு சென்ற போது ஒலிம்பிக் நடந்து ஒரு மாதமாகியிருந்தது. லத்தீன் அமரிக்காவில் மட்டுமல்ல உலகத்திலே பெரிய நகரங்களில் ஒன்று ரியோ டி ஜெனிரோ. அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்லும் இடம். ஆனால் பல மேற்கத்திய ஊடகங்கள் நகரம் பாதுகாப்பற்றதும், வன்முறையும், போதைமருந்துகளும் மலிந்த இடமென்பதால் இவர்கள் எப்படி ஒலிம்பிக்கை நடத்துவார்களென சொல்லிக்கொண்டிருந்தபோதே வெற்றிகரமாக ஒலிம்பிக்கை நடத்தி முடித்தார்கள். ஊடகங்களின் வெருட்டலால் நாங்கள் கொப்பகானா என்ற பிரபலமான இடத்தில் தங்கினோம். மேல்தட்டு உல்லாசப் பிரயாணிகள் நிற்பதுடன்…

    noelnadesan

    31/08/2018
    Uncategorized
  • தங்கோ நடனம்

    புவனஸ் அயர்ஸ் நகரத்தின் மத்தியில் உள்ள மெற்றப்போலிட்டன் தேவாலயத்திலிந்து வீதியைக் கடந்து சென்றபோது, எதிரில் உள்ளது மே சதுக்கம் ( Plaza de Mayo) இதை அன்னையர்களின் சதுக்கம் என்பார்கள். ஆர்ஜன்ரீனா மே மாதத்தில் ஸ்பானியர்களிடம் இருந்து சுதந்திரமடைந்ததை நினைவுகொள்ளும் பொருட்டு அரசகாரியாலயங்கள் முன்பாக இந்தச் சதுக்கம் அமைக்கப்பட்டது. பிற்காலத்தில் முக்கியமாக இராணுவ ஆட்சிக்காலத்தில் ஆட்சிக்கு எதிரானவர்களாக கருதியவர்களைக் கடத்தி கொலை செய்யப்பட்டவர்களின் தாய்மார் கூடி ஆர்ப்பாட்டம் செய்யும் போராட்டமையமாக மாறியது. தாய்மார்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியதால்…

    noelnadesan

    27/08/2018
    Uncategorized
  • நாவல்: சங்கிலியன் தரை.

    நடேசன். ஆங்கில நாவல் வரலாற்றில் போர் நாவலாகச் சொல்லப்படுவது த ரெட் பாட்ஜ் ஒஃப் கரேஜ் (The Red Badge of Courage is a war novel by American author Stephen Crane ). இதை எழுதியவர் அமரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்து ஆறு வருடத்திற்கு பின்னர் பிறந்தவர். இது மிகவும் சிறிய நாவல். உள்நாட்டுப் போரில் பங்கு பற்றிய ஒரு சாதாரண வீரனின் கதையைச் சொல்கிறது. ஆரம்பத்தில் போர்முனையில் பயந்தவன் பின்பு எப்படி…

    noelnadesan

    19/08/2018
    Uncategorized
  • இகசு அருவி

    மழை வீழ்ச்சி அதிகமில்லை என்பதால் அமரிக்காவில் கலிபோணியா, நெவாடா போன்ற பசிபிக் சமுத்திரத்தை ஒட்டிய மேற்கு பகுதிகளில் பால்மாடுகள் வளர்க்க முடியாது.பல இடங்கள் பாலை நிலங்கள். ஆங்காங்கு தொலைதூரங்களில் புல் இருந்ததால் மாடுகளை சாய்த்துச் சென்றே மேய்க்கவேண்டும். நடந்து திரியும் மாடுகள் பால் அதிகம் சுரக்காது. இப்படியான இடத்தில் இறைச்சி மாடுகளே வளர்க்க முடியும். இறைச்சி மாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு உதவியாக இளைஞர்கள் குதிரைகளில் சென்று மேய்த்துவிட்டு மாலையில் மாடுகளைப் பத்திரமாக பண்ணைக்குக் கொண்டு வருவார்கள்- இவர்கள்…

    noelnadesan

    12/08/2018
    Uncategorized
  • கலைஞரும் தமிழ் சினிமாவும்

    முதல் குழந்தை முரசொலியின் பிரதியுடன் இறுதிப்பயணம் சென்றவர்! சினிமாவிலும் அரசியலிலும் சாதித்திருக்கும் முழுநேர எழுத்தாளரின் வாழ்க்கைப்பயணம் முருகபூபதி ” கருத்து முரண்பாடு வந்தபின்னரும் நண்பர் எம்.ஜீ.ஆர். என்னை கலைஞர் என்றுதான் விளித்தார். ஆனால், நான் எழுதிக்கொடுத்த வசனங்களுக்கு திரைப்படத்தில் பேசி நடித்த ஜெயலலிதா தன்னைப்பற்றி மேடைகளில் விமர்சிக்கும்போது, “ஏய் கருணாநிதி” என்றுதான் திட்டுகிறார்” இவ்வாறு தனது ஆதங்கத்தை பலவருடங்களுக்கு முன்னரே தெரிவித்திருப்பவர் அண்மையில் மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி. அவருடைய இந்த ஆதங்கத்தை ஒரு வார…

    noelnadesan

    09/08/2018
    Uncategorized
  • ஆர்ஜன்ரீனா ரிகலெக்ரா மயானம்.

    ஆர்ஜனரீனாவில் எனக்குப் பிடித்த இடம் மனிதர்களைப் புதைக்கும் மயானமென்றால் நம்ப முடியுமா? ரிகலெக்ரா மயானம் -மிகவும் வித்தியாசமானது. ஆர்ஜனரீனாவின் தலைநகரம். புவனஸ் ஏயர்ஸ் பரண ஆற்றோரத்தில் அமைந்தது. பரண ஆறு அமேசனுக்கு அடுத்த தென்அமரிக்காவின் மிகப்பெரிய ஆறு. அதனது பல கிலோ மீட்டர் அகலமான ஒரு பகுதியில் புவனஸ் ஏயர்ஸ் நகரம் இருக்கிறது. கப்பல்கள் கடலின் வழியே ஆற்றுக்குள் வந்தே புவனஸ் ஏயர்ஸ் துறைமுகத்தை அடையும். இதனால்பிரித்தானியா மற்றும் பிரான்சியக் கடற்படைகள் இந்தப் பகுதியை ஸ்பானியரிடமிருந்து கைப்பற்றப்…

    noelnadesan

    29/07/2018
    Uncategorized
  • பொலிவியாவில் சேகுவாரா

    தென்னமரிக்காவில் விடுவிக்க முடியாத விடுகதையாக இரண்டு விடயங்கள் உண்டு.1000 இலாமாக்களில் ஏற்றப்பட்ட தங்கம் கப்பமாக ஸ்பானியரிடம் கொடுக்கப்படவிருந்தது. அக்காலத்தில் வார்த்தையை மீறி இன்கா அரசரைக் கொலை செய்ததால் அந்தத் தங்கம் காட்டுக்குள் மறைக்கபட்டுளளது. அந்த தங்கத்தையே பலர் தென்னமரிக்கா முழுவதும் தேடினார்கள். அதுபோல் பொலிவியாவில் கொலைசெய்யப்பட்ட சேகுவராசின் உடல் புதைக்கப்பட்டிருந்தது என்பது 30 வருடங்களாகவும் புதிராக இருந்தது. அந்த இடத்தைப் பார்க்க விரும்பினாலும் நேரமும் காலமும் இல்லாததால் உலகத்தின் முதலாவது சரித்திர ஆசிரியரான ஹெரிடிற்றசைப்( Herodotus) )…

    noelnadesan

    15/07/2018
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 78 79 80 81 82 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar