-
← தென்னிந்திய நினைவுகள் 5 ; தமிழக அமைச்சருடன் சந்திப்பு
காலை எழுந்ததும் எனக்குள் ஒரு அவசரம், ஆவல், பரபரப்பு என பல உணர்வுகள் நோய்க்கிருமிபோல தொற்றிக்கொண்டன. இலங்கையில் அமைச்சர்கள் அதிகாரிகள் என பலருடன் பேசிப் பழகியிருந்தேன். நான் கடமையாற்றும் கால்நடைத் துறைக்குப் பொறுப்பான தொண்டமானை சந்தித்திருக்கிறேன். அநுராதபுரத்தில் பல சிங்கள அமைச்சர்களுடன் நான் பணியிலிருந்த மதவாச்சிய பிரதேசத்தை அபிவிருத்தி செய்வது விடயமாக பேசியிருக்கிறேன். இப்பொழுது சென்னையில் அகதியாக இருக்கும் காலத்தில் ஒரு அமைச்சரை பார்ப்பதற்கு அதுவும் மற்றவர்கள் தேவைக்காக சந்தித்து பேசுவது என்பது எனக்கு உற்சாகத்தை ஊட்டியது.…
-
தென்னிந்திய-நினைவுகள்4;சிக்னல் பற்பசை தலையிடி மருந்தாகியது.
அமிஞ்சிக்கரையில் அடுக்கு மாடியில் ஒரு வீட்டில் காசி விஸ்வநாதன் மாஸ்டர் மனைவியுடன் இருந்தார். மாஸ்டரும் மனைவியும் ஏற்கனவே என்னுடன் படித்த செல்வகுமாரின் பெற்றோர்கள் என்பதால் ஏற்கனவே அறிமுகமானவர்கள். அவர்கள் வீட்டில் பரந்தாமன் என்ற சிறுவயது நண்பன் எனக்கு ஞானம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ஈழமக்கள் புரடசிகரமுன்னணியின் முக்கியஸ்தராகவும் காசி விஸ்வநாதன் மாஸ்டரால் அறிமுகப்படுத்தப்பட்டார். என்னுடன் படித்தவர்கள் இப்படி அரசியல் முக்கியஸ்தர்களாக இருப்பது ஒருவிதத்தில் ஆச்சரியமளித்ததுடன், அந்த அறிமுகம் எனக்கு அதிர்ச்சியையும் தந்தது. அதுவரையும் இயக்கம் என்பது எனக்கு…
-
இலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 – 2018)
அவுஸ்திரேலியா 30 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டமும் இலங்கையில் நீடித்த போர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, 1988 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவு நிகழ்வும், வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டமும் இம்மாதம் 27 ஆம் திகதி ( 27-10-2018) சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு சனசமூக நிலையத்தில் ( Vermont South Community…
-
தென்னிந்திய நினைவுகள் 3; இலங்கை – இந்திய தமிழரை இணைக்கும் சங்கிலி
இராமேஸ்வரத்தில் தொடங்கிய எனது இரயில் வண்டிப் பயணம் எக்மோர் இரயில் நிலையத்தில் முடிந்தது. எனக்குத் தெரிந்த கொழும்பு கோட்டை இரயில் நிலையத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் பத்து மடங்கு இருக்கும். எங்கும் வாரி இறைத்த மணல்போல் மக்கள் கூட்டம். சிறியநாடான இலங்கையில் இருந்து வந்த எனக்கு, இவ்வளவு கூட்டம் என்பது மிகவும் பிரமிப்பைக் கொடுத்தது. இந்தக் கூட்டத்தில் தனிமனிதன் வாழ்வதற்கு எவ்வளவு பாடுபடவேண்டும்? இயற்கை மற்றும் உற்பத்தி வளங்களை எவ்வாறு ஒவ்வொருவரும் பிரிப்பது? அபரிமிதமான இயற்கை வளங்கள் கொண்ட…
-
அஞ்சலிக்குறிப்பு:கெக்கிராவ ஸஹானா
ஒரு தேவதைக் கனவை இலக்கியத்தில் பதிவுசெய்து, அற்பாயுளில் மறைந்த இலக்கியத்தேவதை கெக்கிராவ ஸஹானா மல்லிகை ஜீவா, ஜெயகாந்தனின் ஆசிபெற்று வளர்ந்த இலக்கிய ஆளுமை முருகபூபதி ” திருமதி ஸஹானாவின் ஒரு தேவதையின் கனவு சிறுகதைத்தொகுதி வெளிவருவது குறித்து பெரு மகிழ்ச்சியடைகிறேன். தெளிவுற அறிந்திடவும், தெளிவுபெற மொழிந்திடவும், சிந்திப்போர்க்கு அறிவுவளர, உள்ளத்தே ஆனந்தக்கனவு பல காட்டலும் கைவரப்பெற்றவர்கள் எழுதும் படைப்புகள் காலத்தால் என்றென்றும் போற்றப்படும். அவை என்றும் புதியவை. அத்தகு இலக்கியவரிசையில் தேவதையின் கனவும் இடம்பெற வாழ்த்துகின்றேன்” என்று…
-
மகாத்மா காந்தியின் பேத்தியுடன் சந்திப்பு
நோயல் நடேசன் மகாத்மா காந்தியின் பேத்தியென்றபோது காந்தியை நினைப்பது தவிர்க்க முடியாது. ஒரு ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தில் பலகாலம் முன்பாக படித்தது: எப்பொழுதும் எனக்கு நினைவில் இருப்பது: இந்தியாவின் பிரிவினை காலத்தில் இந்திய வைசிராயாக இருந்த மவுண்ட் பேட்டன், காந்தியைச் சந்தித்து “என்னிடம் அரை இலட்சம் இந்தியப்படைகள், ஐம்பதினாயிரம் பிரித்தானிய துருப்புகள் உள்ளார்கள். பஞ்சாப் பிரியும்போது ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து என்னால் பார்த்துக்கொள்ள முடியும். நீங்கள் வங்காளம் சென்று அமைதியைப்பேணமுடியுமா? என்று கேட்டபோது, காந்தி வங்காளம் செல்கிறார்.…
-
தென்னிந்திய நினைவுகள் 2; யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரி
அடுத்த நாள் மாலையில்தான் சென்னைக்கு ரயிலில் பிரயாணம் செய்ய முடியும் என்பதால் இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும். பத்து ரூபாய்க்கு ஒரு ஹோட்டல் அறை அந்த இரவு தங்குவதற்கு கிடைத்தது மிகவும் ஆச்சரியமானது. இலங்கையில் சாமானியர்கள் தங்குவதற்கு வசதியான இது போன்ற ஹோட்டல்கள் இல்லை. எங்கள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தங்கும் வசதியுள்ள ஹோட்டல்கள் இருந்ததாகத் தெரியாது. இராமேஸ்வரத்தில் அன்று எனக்குக் கிடைத்த அந்த அறை குளியல் அறையுடன் சுத்தமானதாக இருந்தது. படுப்பதற்கு சிறிய கட்டிலும் எனது தேவைக்கேற்றபடியாக…
-
தென்னிந்திய நினைவுகள்
1 )நாட்டை விட்டு வெளியேறுதல் 84 ஏப்பிரலில் எனக்கு குருட்டுப் பூனை இருட்டில் பாய்வது போன்றது இந்தப் பயணம். நாட்டை விட்டு வெளியேறும் பலர் வியாபாரம், உல்லாசப்பணம் முதலான காரணங்களால் பிரியும்போது அந்தப்பயணம் உணர்வு கலந்தது அல்ல. ஆனால் நான் இப்போது வெளியேறும்போது எனது நாடு, மக்கள், உறவினர் முதலான பந்தங்கள் அறுபடுகிறது. எட்டு மாத கர்ப்பிணியான மனைவியையும் இரண்டு வயதே நிரம்பாத மகனையும் விட்டு எதற்கு பரதேசம் போகிறோம் என்பது தெரியாமல் எனது பயணம் தொடங்குகிறது.தலைமன்னாரில்…
-
எக்சைல் 84 :மீண்டும் வெளியேறுதல்.
ஈழத்திலிருந்து இந்தியா வந்த அகதி மக்களுக்காகவும், ஈழ விடுதலை இயக்கங்களின் தேவைக்காகவும் அமைந்த எமது நிறுவனம், மேலும் போரில் அங்கங்களை இழந்தவர்களுக்கும் உதவ விரும்பினோம். காலிழந்தவர்களுக்கான சேவையை அளிப்பதற்காக ஜெய்ப்பூர் காலை உருவாக்க,அதைத் தயாரித்த மருத்துவர் சேத்தியை சந்தித்து செய்த உடன்படிக்கையில் ஜெய்ப்பூர் வைத்தியசாலையில் பல இளைஞர்களுக்கு செயற்கைக் கால்களை செய்வதற்குப் பயிற்றுவித்தோம். அவர்களில் பலரை அழைத்துக்கொண்டு ஜெய்ப்பூர் சென்றோம். ஆனால் நானும் டாக்டர் சிவநாதனும் அக்காலத்தில் பலதடவை சென்றபோது கூட ஜெய்ப்பூர் நகரத்தில் எந்த இடத்தையும்…
-
எக்சைல் 84 : தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் பிடிபட்ட ஆயுதங்கள்..
சென்னையின் வெப்பகாலம் . ஒரு மதிய நேரத்தில் டாக்டர் சிவநாதன் வேர்வை முகத்தில் சிந்தியபடி வந்து, “இவன் முகுந்தனோடு பெரிய கரைச்சல் ” என்றபோது அவரது முகம் அட்டகோணத்தில் இருந்தது. ஆரம்பத்தில் புரியவில்லை. தமிழ் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் உமா மகேசுவரனைக் குறிப்பிடுகிறார் எனப்புரிந்ததும் “ஏன் என்ன நடந்தது?’ என்று விசாரித்தேன் “புளட் – ஒஃபீசில் வேலை செய்த பிள்ளையொன்று இங்கு வந்து வேலை கேட்கிறது. அங்கே இருக்கமுடியாது என்று அழுகிறது. ” “நாமள் அதுக்கு…