-
மாவீரர்நாள் வியாபாரம்
நடேசன் ஓ……. மரணித்த வீரனே…… உன் சீருடைகளை எனக்குத் தா…… உன் பாதணிகளை எனக்குத் தா… உன் ஆயுதங்களை எனக்குத்தா…. என்றவர் முடிவில் பிள்ளைகளுக்கும் சேர்த்து கொத்துரொட்டி வாங்கிக் கொண்டு வீடு ஏகினார்! நன்றி: ஜோர்ச் குருசேவ் ரொபின் ஐலன்ட் சிறையை சில வருடங்கள் முன்பு சென்று பார்த்தபோது நெல்சன் மண்டேலா ரொபின் ஐலன்ட் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த காலத்தில், நல்லவேளையாக தற்கொலைக் கலாச்சாரம் தென் ஆபிரிக்காவில் இருக்கவில்லை . இருந்திருந்தால் அவரும் சயனைட்டை விழுங்கி மாவீரனாகியிருப்பார். தென்…
-
நாவல்:வுதெரிங் கைட்-Emily Bronte- 200 வருடங்கள்
இன்னமும் எமது மொழியில் தனித்துவமான ஒரு நாவலாசிரியையைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். ஆங்கிலத்தில் காலமெல்லாம் நிலைக்கக்கூடிய ஒரே ஓரு நாவலை மட்டும் தனது நோய் படுக்கையில் இருந்து எழுதிவிட்டு சென்ற இளம் பெண்ணான எமிலி புரண்டியை அவர் பிறந்த 200 வருடத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன் எமிலி புரண்டியின் 22 வயதில் எழுதப்பட்டு வுதெரிங் ஹைட் 1847 ல் புத்தகமாகியது. அதுவரையிலும் வந்த நாவல்களில் இருந்து வித்தியாசமானது மட்டுமல்ல, தற்பொழுது எடுத்துப் பேசும் பத்து…
-
தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை உலகம்
கவி காளிதாசரின் “சகுந்தலை”யை பெண்ணடிமை கோட்பாடுகளிலிருந்து விடுவிக்கும் கவிஞர் சாந்தி சிவக்குமார் – அவுஸ்திரேலியா (மெல்பனில் நடைபெற்ற தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச் சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்ட நயப்புரை) கவிதை நான் பயணப்படாத தளம். சிறுகதைகளிலும் புதினங்களிலும் இயல்பாக இலகுவாக பயணிப்பதுபோல், கவிதை கைவரவில்லை. மனம் இன்னும் அதற்குப் பக்குவப்படவில்லை என்று நினைக்கிறேன். தமிழச்சி தங்கபாண்டியனின் பல கவிதைகள் ஒரு சிறுகதைக்குரிய கருவை தாங்கியிருப்பதும், என் மனம் அதை சிறுகதையாய் மாற்ற முயற்சித்ததும், பின் அதை நான் கட்டியிழுத்து அடுத்த…
-
மீகொங் நதி
தென் சீனப்பகுதியில் உற்பத்தியாகி பர்மா, தாய்லாந்து, லாவோஸ் , கம்போடியா இறுதியாக தென்வியlட்நாமில் கடலில் சங்கமிக்கும் மீகொங் நதியில் படகுகில் பயணிப்பது உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் முக்கிய பயணமாகிவிட்டது. ஆஸ்திரேலியாவில் அருகிலும், சிறியதுமான பயணமாகச் செல்வதால் பிரபலமான நதிப்பயணமாகியுள்ளது. எனக்கு வியட்நாமியரின் கடலுணவைச் சுவைப்பதற்காக எத்தனை முறைசென்றாலும் வியட்நாம் அலுக்காது. சைகோனுக்கு அருகில் இருந்து அங்கோவாட் அமைந்த நகரமான சியாம் ரீப் வரை 60 பேர் கொண்ட படகில் எட்டு நாட்கள் பயணம் செய்த போது என்…
-
வாத்தியார் வீட்டு வெண்டி கொட்டைகள்
பல வருடங்களுக்கு முன் எழுதியது. நடேசன் நான் சிறுவனாக வளர்ந்த எங்கள் எழுவைதீவில் ஒரு முறை பாட்டனாரின் தோட்டத்தில் வெண்டிக்காய் அமோகமாக விளைந்தது. நீளமான வெண்டிக்காய்கள். ஆனால் வால்ப்பக்கத்தில் சுருண்டு இருக்கும்.. இந்த வெண்டிக்காய் கொட்டைகள் நாற்றாக பல வருடங்களுக்கு பயன் படுத்தப்பட்டது. இதை விட ஊரில் உள்ள மற்றவர்களுக்கும் எனது பாட்டன் வெண்டி விதைகளை கொடுத்து உதவினார் எனது பாட்டன் தலைமை ஆசிரியர் என்பதால் எங்கள் ஊரில் எல்லோரும் வாத்தியார் வீட்டு வெண்டி கொட்டைகள் ஏன…
-
மெல்பனில் நடந்த “நிழல்வெளி” நூல் வெளியீடும் தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச்சந்திப்பும்
தெய்வீகன் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களின் ஊடாக பேசிய அரசியல், அறம் ஆகியவை குறித்து தமிழகத்தின் படைப்பாளுமை தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் அவர்கள் எழுதிய நிழல் வெளி நூல் அறிமுக நிகழ்வும் அவருடனான சந்திப்பும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 25 ஆம் திகதி ஞாயிறன்று மெல்பனில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த படைப்பாளியும் அரங்கச்செயற்பாட்டாளருமான தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் தனது…
-
தமிழச்சி தங்கபாண்டியன் மெல்பனில் உரையாற்றுகிறார்
தமிழ் கலை இலக்கிய அறிவுச்சூழலின் நிகழ்வுகளை பதிவுசெய்துவரும் அரங்கச்செயற்பாட்டாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மெல்பனில் எதிர்வரும் 25 ஆம் திகதி உரையாற்றுகிறார். முருகபூபதி சுமதி என்னும் இயற்பெயரைக்கொண்டிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர். விருதுநகரில் ஆரம்பக்கல்வியையும் மதுரையில் கல்லூரிப்படிப்பையும் நிறைவுசெய்துகொண்ட சுமதி, இளம் வயதிலிருந்தே கலை , இலக்கிய ஆர்வலராகவும் சமூகச்செயற்பாட்டாளராகவும் வளர்ந்தவர். கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம், நடனம், ஆய்வு முதலான துறைகளில் ஈடுபாடுகொண்டிருந்தவர். தனக்கு தமிழச்சி என்ற புனைபெயரையும் சூட்டிக்கொண்டவர்.…
-
தமிழ்த்தேசியத் தலைமைக்கு
ரோம இராச்சியம் ஒரு நாளில் கட்டப்படவில்லை என்பார்கள். அதேபோல் ஜனநாயக அரசியலில் சிறிய விடயங்களும் பல காலம் விவாதிக்கப்படும். சில செய்து முடிக்கப்படும். பல செய்வதற்கு மேலும் காலமெடுக்கும். இது ஜனநாயகத்தின் முக்கிய பலம். அதே நேரத்தில் பலவீனமும் கூட . இதை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது. சர்வாதிகாரிகளால் மட்டுமே நினைத்த காரியத்தை விரைவாக முடிக்க முடியும்.அவர்களிடமிருந்து விலகிவிடவே நாம் விரும்புகிறோம். இலங்கையில் எந்தச் சிங்கள அரசியல்வாதிகள் பதவிக்கு வந்தாலும் தமிழர் விடயத்தில் சாதகமாக நடக்கமுடியாது.…
-
சிறிபதி பத்மநாதன் நினைவுகள்
அவரது காதருகே, ” அங்கிள், அந்தக் காலத்தில் யாழ்ப்பாண அரசன் சங்கிலியன் தோப்பில் இருந்ததுபோல இருக்கிறீர்கள். அதற்கு உங்கள் மருமகனுக்கு நன்றி சொல்ல வேண்டும்’’ என்றேன். அவருக்கு நான் சொன்னது கேட்டிருக்குமா என்று ஒரு சந்தேகம் . அவரது புலன்களில் காது மட்டும் மந்தமாக இருந்தது. வழமையில் அவர் திரும்பி முகத்தைப் பார்ப்பார். பின்பு அடித்தொண்டையில் என்ன? எனக் கேட்பார். மவுனமாக முகத்தைப் பார்ப்பார். அன்று நான் சொல்லியது புரிந்து விட்டது . மெதுவான சிரிப்புடன் எனது…
-
தமிழச்சி தங்கபாண்டியனுடன் இலக்கியச் சந்திப்பு
மெல்பனில் தமிழக படைப்பாளி அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழக எழுத்தாளரும் இலக்கிய ஆய்வாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் கலந்துகொள்ளும் இலக்கியச்சந்திப்பு மெல்பனில், வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில், எதிர்வரும் 25 ஆம் திகதி ( 25-11-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு எமது சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் நடைபெறும். மஞ்சனத்தி, வனப்பேச்சி, எஞ்சோட்டுப்பெண், சொல் தொடும் தூரம், நிழல் வெளி, பேச்சரவம் கேட்டிலையோ, பாம்படம், மயிலிறகு மனசு, மண்வாசம் முதலான…