-
13) கரையில் மோதும் நினைவலைகள்:
அம்மாவின் பாசம் எனது பல்கலைக்கழக புகுமுகப் பரீட்சை, 1974 சித்திரை மாதம் முடிவடைந்ததும் எல்லா பாடங்களும் தேறிவிடுவேன் என்பதுடன் நல்ல புள்ளகளும் எடுப்பேன் என்பது தெரிந்தது. மற்றைய மாணவர்கள்போல் வைத்தியராகவேண்டுமென்பது பெரிதாக ஆசையில்லை. ஆனால், அதற்கான சந்தர்ப்பம் வந்தால் அந்தத்துறையில் படிக்கப் போவேன் என்ற எண்ணம் முளைத்திருந்தது . எங்களது நெருங்கிய உறவினர்களில் வைத்தியர்களென எவருமில்லை. அத்துடன் சிறு வயதில் பால்வினை தவிர்ந்த மற்றைய சின்னமுத்து, செங்கமாரி, ஆஸ்த்மா இறுதியில் தைபோயிட் என நோய்கள் பலவற்றால் தாக்கப்பட்டிருந்தேன்.…
-
‘அசோகனின் வைத்தியசாலை’
Samsu Deen Heera ஒரு ஓய்வு நாளின் மாலைநேரத் தேநீர் போல ஒரு புதினத்தைச் சுவைக்க விரும்பினால் நடேசன் எழுதிய ‘அசோகனின் வைத்தியசாலை’ வாசிக்கலாம். ஆஸ்திரேலியாவின் ஒரு விலங்குகள் மருத்துவமனையில் பணிபுரியும் புலம்பெயர் தமிழரான சுந்தரம் பிள்ளையின் அனுபவங்களின் தொகுப்பாகவே இந்நூல் விரிகிறது. சலிப்பூட்டும் விவரனைகளோ திகட்டும் வர்னனைகளோ இல்லாத இயல்பான மொழிநடையால் 400 பக்கங்களை தடையின்றிக் கடந்துவிட முடிகிறது. மேடு பள்ளங்களற்ற சமவெளியில் பாயும் நீரோடை போல சலனமில்லாமல் பயணிக்கும் கதையோட்டம். ஆசிரியர் நடேசன் அவர்களுக்கு…
-
பௌர்ணமியில் ஒரு மரணம்
சமூக அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய பௌர்ணமியில் ஒரு மரணம் Death on a Full moon day சிங்களத் திரையுலகின் ஆளுமை பிரசன்ன விதானகே முருகபூபதி காடும், காட்டை அண்மித்த பிரதேசமும் கொண்ட அந்தச்சிங்களக் கிராமத்தில் ஒரு முதிய விவசாயியின் சிறிய குடும்பம். மனைவி இல்லை. இரண்டு மகள், ஒரு மகன். வானம்பார்த்த பூமி. குடிதண்ணீருக்கும் குளத்தை தேடிச்செல்லவேண்டும். குடும்பத்தின் ஏழ்மையை போக்குவதற்காக மகன் பண்டார இலங்கை இராணுவத்தில் சேர்ந்து உள்நாட்டுப் போர்க்களம்…
-
12: கரையில் மோதும் நினைவலைகள்
மஞ்சள் கடிதம். சிவவீரசிங்கம் மாஸ்ரரின் ரியூசன் வகுப்புத் தொடங்கியபோதும் எனது சிந்தனை ஒருமுகப்படவில்லை. இரப்பையில் அமிலம் காட்டாறாகியது. இதயம் வெளியேவர, அவசரமாக நெஞ்சாங் கூட்டைத் தட்டியது. என்னை மீறிய பரபரப்பில் அடிக்கடி பின்னால் திரும்பிப் பார்த்த படியிருந்ததேன். நல்ல வேளை கடைசி வரிசையில் நானிருந்தேன். மற்றவர்களைக் காணவில்லை. புன்னகை தவழ, இளம் பச்சை சட்டையோடு நான் எதிர்பார்த்தபடி சிட்டுக்குருவி உள்ளே வந்தபோது எனது இதயத்தில் இதுவரை மையம் கொண்ட புயல் அமைதி கொண்டது. முகத்திலிருந்த புன்னகை ‘தம்பி…
-
துவாரகை.
நடேசன். என் மனைவி சியாமளா கோமதி (Gomti river, Dwarka) ஆற்றின் தண்ணீர் வற்றிய நதிப்படுக்கையில், ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு, வெறும் கால்களால் நடப்பது தனது கால்களுக்கு இதமாக இருக்கிறது என நடந்தபோது, எதிரே வந்த ஒட்டகசாரதி தனது ஒட்டகத்தில் ஏறும்படி வற்புறுத்தினான். அவர்களிடமிருந்து விலகி, நான் எனது கமராவுடன் துவாரகேஸ்வரர் கோவிலின் வெளிப்பகுதியில், கோமதி நதிக் கரையில் உள்ள படிக்கட்டில், அமர்ந்தேன். எனக்கு முன்பாக ஒரு உயிரோவியமாக அங்கு ஒரு காட்சி திரை விலகித் தெரிந்தது.…
-
வாழும்போது வாழ்த்துவோம் – கொண்டாடுவோம்
“ நம்மவர் பேசுகிறார் “ அரங்கில்….. கிழக்கிலங்கையின் ஆத்மாவை இலக்கியத்தில் பிரதிபலித்த எஸ். எல். எம். ஹனீஃபா ! முருகபூபதி ஆளுமைகள் மறைந்தபின்னர், அவர்கள் குறித்து நாம் பேசுவதும் எழுதுவதும் எம்மை நாமே திருப்திப்படுத்திக்கொள்ளும் மரபாகவே தொடர்வது பற்றி பலரும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளனர். மறைந்தவர்களுக்கு, நாம் என்ன பேசினோம், எவ்வாறு எழுதினோம் என்பது தெரியாது ! அவர்கள் பூதவுடலாக அடக்கமாவார்கள், அல்லது தகனமாவார்கள். காணாமலும் போயிருப்பார்கள். கலை, இலக்கியம், சமூகம், கல்வி, அரசியல், ஆன்மீகம் தன்னார்வத்தொண்டு…
-
வாழநினைத்தால் வாழலாம்.
இந்து சமயத்தில் ஹரனும் ஹரியும் சேர்ந்து சபரிமலை ஐயப்பன் என்னும் தெய்வத்தை உருவாக்கினார்கள். இரண்டு ஆண் தெய்வங்களுக்கு வாரிசான ஐயப்பனுக்கு மாலை போட்டால் அம்மாதம் முழுவதும் பெண் உறவை தவிர்க்க வேண்டும். இந்த கதையின் அடிமூலத்தை நான் ஆராய விரும்பவில்லை. எனது கதையில் வரும் ஹரியும் ஒரு விசித்திரப் பிறவி. நமது கதாநாயகன் மெக்சிக்கோவில் ஓர் ஏரியில் பிறந்தான். அதுவும் 250 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக அவதரித்தவன். அந்தக் காலத்தில் மனிதர்கள் தோன்றவில்லை. ஏன் டைனேசர் கூட…
-
Cook or Not Cook
This story centres on a mud crab as the hero and a man, a trained veterinarian with presumably all his rational faculties, as the villain. In the Springvale market, south-east of Melbourne, the mud crab is the largest available for consumption. It is packed with sweet flesh and is often sold alive in Chinese and…
-
எங்கள் குடும்ப உறுப்பினர் “ பிறாண்டி “ விடைபெற்றார் !
அஞ்சலிக்குறிப்பு முருகபூபதி கடந்த 2020 ஆம் ஆண்டுமுதல் தொடர்ந்து அஞ்சலிக்குறிப்புகள் எழுதிவிட்டேன். தொடர்ந்தும் எழுத நேர்ந்துள்ளது. அதனால், “ கல்வெட்டு எழுத்தாளன் “ என்ற பெயரையும் சிலர் எனக்குச் சூட்டியிருக்கிறார்கள். இந்தியா – இலங்கை சுதந்திரம்பெறுவதற்கு முற்பட்ட காலத்தைச்சேர்ந்தவர்கள், சுதந்திரத்திற்குப்பிற்பட்ட காலத்தைச்சேர்ந்தவர்கள், ஈழப்போருக்கு முற்பட்ட – பிற்பட்ட காலத்தைச்சேர்ந்தவர்கள் – இடம்பெயர்ந்த – புலம்பெயர்ந்த காலத்தைச்சேர்ந்தவர்கள்பற்றியெல்லாம் எழுதிவிட்டு, இந்த கொரோனோ காலத்தில் விடைபெற்றவர்கள் பற்றியும் அஞ்சலிக்குறிப்பு பதிவுகள் எழுதிவிட்டேன். இத்தகைய பதிவுகள் இக்காலத்திலும் ஓயாது போலிருக்கிறது.…
-
11கரையில் மோதும் நினைவலைகள்:நிரந்தர வேலை
நடேசன் “ உங்கண்ணன்கள் மாதிரி வந்திராதே “ என அடிக்கடி இரண்டு வார்த்தைகள் மந்திரமாக உச்சரிக்கப்படும். எனது இரண்டு அண்ணன்மார் அக்காலத்தில் காதல் திருமணம் செய்ததால் தங்களது கல்வியையும் வசதியான வாழ்வையும் தொலைத்தவர்கள் என்பது அம்மாவின் கருத்து. எனது ஒன்று விட்ட அண்ணர்மார் இருவரை உதாரணமாகக் காட்டுவார். காணும் பெண்களை எல்லாம் காம உணர்வோடு பார்க்கும் விடலைப் பருவத்தில் அம்மாவின் வார்த்தைகள் கடல் நீராக நாக்கில் கரிக்கும். வீட்டில் வேலை செய்த பெண் சிறுமி ஒருத்தி…