-
ஆங்கிலத்தில் அசோகனின் வைத்தியசாலை
ஆங்கிலத்தில் நடேசனின் நாவல்King Asoka’s Veterinary Hospital தனது மொழிபெயர்ப்பு நூலை காண்பதற்கு முன்பே விடைபெற்ற யுகமாயினி சித்தன் !உலகில் முதலாவது விலங்கு மருத்துவமனை அமைத்த அசோக சக்கரவர்த்தி !! முருகபூபதிஅவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் விலங்கு மருத்துவர் நடேசன், கடந்த மூன்று தசாப்த காலமாக இலக்கியப் பிரதிகளும் ( சிறுகதை, நாவல், பயண இலக்கியம் ) பத்தி எழுத்துக்களும், தமது தொழில் சார்ந்த புனைவுசாராத படைப்புகளையும் எழுதிவருபவர்.இவரது சிறுகதைகளும் நாவல்களும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.ஏற்கனவே இவர்…
-
அவலத்தை தேடிச்சென்ற கெரில்லாத்தலைவர்.
சே குவேராவின் 53ம் ஆண்டு நினைவு நாள் வாழ்வின் அவலத்தை தேடிச்சென்ற கெரில்லாத்தலைவர் — அங்கம் -01போராயுதமும் எழுத்தாயுதமும் ஏந்திச்சென்றவரின் வாழ்வில் குறுக்கிட்ட காதலிகள் முருகபூபதி முன்கதைச்சுருக்கம் ஒரு நாட்டில் பிறந்து மற்றுமோர் இனத்தின் விடுதலைக்காக போராடிய மாபெரும் போராளி ஏர்ணஸ்ட் சேகுவேரா நினைவிடத்தை காண்பதற்காக 2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மெல்பன் இலக்கிய நண்பர் நடேசனுடனும் கனடா ஒளிப்படக்கலைஞர் ருத்ரனுடனும் சென்றிருந்தேன். அந்த மனப்பதிவுகளை சேகுவேராவின் 53 ஆவது நினைவு தினத்தில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.…
-
மஞ்சள் விளக்கின் அர்த்தம்
நேரம் இரவு ஒன்பது மணியையும் கடந்து விட்டிருந்தது. தனது பெயர் மரியோ என அறிமுகப்படுத்திக் கொண்ட சுமார் இருபத்தைந்துவயது மதிக்கத்தக்க யுவதியொருத்தி எமது மிருக மருத்துவமனைக்கு வந்தாள். முகத்தில் அளவுக்கு அதிகமான மேக்கப். நித்திராதேவியுடன் இவள் சங்கமிப்பது குறைவோ எனச் சொல்லும்விதமாக கண்களின்கீழ்ப்புறம் கருவளையம். தனது நாயை கொண்டு வந்திருந்தாள். அதன் இனம் பாக்ஸர். பிரச்சினையை வினவினேன். நேற்று குட்டிபோட வேண்டிய நாய், இன்னும் பிரசவத்திற்கு தயாராகவில்லை – என்று கவலையோடு சொன்னாள். எப்பொழுதுஆண் நாயுடன் சேர்ந்தது…
-
அரசியலும் இலக்கியமும்.
எழுத்தாளர் மு. பொன்னம்பலம் சந்திப்பு நடேசன் இலங்கையில் கவனத்திற்குட்பட்ட எழுத்தாளர் மு. பொன்னம்பலம் அவர்களின் சங்கிலியன் தரை நாவல் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். அவரை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07 ஆம் திகதி கொழும்பில் சந்தித்து உரையாடினேன். அவரது கருத்துக்களை ஒலிப்பதிவும் செய்தேன். தொடர்ச்சியாக பயணங்களும் இதர பணிகளும் இருந்தமையால், அன்று பதிவுசெய்ததை எழுத்துருவாக்க மறந்துவிட்டேன். இந்த கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கியிருக்க நேரிட்டதனால், அந்த ஒலிப்பதிவை மீண்டும் கேட்டுவிட்டு, அதில் அவர்…
-
விதையின் விலை பத்தாயிரம் டொலர்
தனது ஆண் நாய்க்குட்டிக்கு தடுப்பூசி மருந்து கொடுப்பதற்காக அதனைக் கொண்டு வந்தாள் ஒரு மத்திம வயதுப் பெண். அதனைச் சோதித்துப் பார்த்த பொழுது குடல் இறங்குதல்(Umbilical Hernia) எனப்படும் தொப்புள் கட்டி வளர்ந்திருப்பது தெரிந்தது.இதனை அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றேன். அந்தப் பெண் தயங்கினாள். அவளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, இது சிறிய சத்திர சிகிச்சைதான். அதிகம் செலவும் இல்லை. ஆண் நாய்.எனவே,விதைநீக்கம் (Castration) செய்யும் போது இச்சிகிச்சையும் சுலபம் என்றேன். இதற்கு அப்பெண் சம்மதித்ததையடுத்து…
-
Farewell you legend! Rest in Peace
You’ll live on forever in our collective memories By Lavanya Sridharan (Katpadi – Vellore Tamil Nadu) I’m not one to usually post about celebrities, but this one’s hit me really hard. SPB never felt like a celebrity far out of reach. He was in our homes, a part of the family, his voice echoing through…
-
சிறுகதை -சாகுந்தலம்.
நடேசன். ஒவ்வொருவரினது மனமும் இருண்ட நெடும் குகை. அவற்றின் இடுக்குகளில் பல கதைகள் வவ்வால்களாக ஒட்டிக்கொள்ளும். அதிலும் இளம் பருவத்து நிறைவேறிய மற்றும் நிறைவேறாத காதல், காமக் கதைகள் ஏராளம். பிற்காலத்தில் குடும்பம், குழந்தைகள், நண்பர்கள் என சமூகத்தில் பொறுப்புகள் வந்தால் அவைகளை வெளியில் எடுக்க முடியாது. எடுத்தால் அவை பல்லிடுக்கில் முதல் நாள் சிக்கிய மாமிசமாகத் துர்மணம் வீசும். இளம்பருவத்து நண்பர்களிடம் போதையில் சிலவற்றை பரிமாற முடியும். கேட்பவர்களில் ஒருவன் எழுத்தாள நண்பனாக இருந்தால் ஒரு…
-
காந்தியின் சபர்மதி ஆச்சிரமம்.
நடேசன் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றருகில் மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் உள்ள அவர் வழக்கமாக அமரும் அந்த வீட்டின் திண்ணையில் பல ஐரோப்பியர்கள் இருந்தார்கள். அவர்களின் குழந்தைகள் அங்குள்ள கைராட்டையில் நூல் சுற்றிப்பார்த்தார்கள். அவர்கள் எல்லோரும் விலகிய பின்னர், அந்த இடத்தில் நானும் மனைவியுடன் இருக்க விரும்பி காத்திருந்தேன். தொடர்ந்தும் ஆட்கள் வந்துகொண்டிருந்தார்கள் . சிறிது இடைவெளி வந்ததும் நானும் எனது மனைவியும் சில நிமிடங்கள் அங்கிருந்து ஏற்கனவே பார்த்த ஆசிரமத்திலுள்ள கடிதங்கள், படங்கள் ,மற்றும் பத்திரிகை செய்திகளை…
-
அழகி ஒருத்தி இளநி விற்கிறாள், திருவண்ணலையிலே. இயற்கை எழிலில் கண்ட உயிரோவியம் !
சுபாஷினி சிகதரன் திருவண்ணாமலை ரமணாச்சிரமம் முன் வாயிலிலிருந்து கோயில் செல்லும் திசை நோக்கி பிரதான வீதியால் சிறிது தூரம் நடந்தால் வீதியின் இடப்பக்கத்தில் ஓர் ஒழுங்கை வாயில் போன்ற சிறிய சந்து தென்படும். இதற்குள் பிரவேசித்து மேற்கொண்டு நடந்தால் மலையினூடு செல்லும் ஒற்றையடிப் பாதை ரமண மகரிஷி வருடக்கணக்கில் தவம் செய்த விருபாக்ஷி குகை எனப்படும் ஆற்றங்கரையோரக் காட்டுக் குகைக்கு அழைத்துச் செல்லும். ஆறு எல்லாம் வற்றிவிட்டது. வெறும் தடயம் மாத்திரமே உள்ளது. நாம் கடைசியாகத் திருவண்ணாமலை…
-
இது ஒரு வகை வசியம்
இரவு பத்துமணி மெல்போனில் குளிரும், மழையும் சயாமிய இரட்டையர்களாக வந்து போகும். மிருக வைத்தியசாலையில் எலும்பை விழுங்கிய நாயைப்பரிசோதித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு சீன தம்பதியரின் ஆசை பொமனேரியன். அதன் வாய்க்குள் இருந்த எலும்பை எடுத்துவிட்டுஅவர்களிடம், என்ன எலும்பு கொடுத்தது” என்று கேட்டேன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். நிச்சயமாக அது பூனை அல்லது நாய்க்குட்டியின் தாடை எலும்புத் துண்டு. அது அவர்களது அன்றைய மதிய உணவாக இருக்க வேண்டும். ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, இனி சமைத்த…