-
9 கரையில் மோதும் நினைவலைகள்
கல்வியங்காடு அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தை எங்கள் ஊரில் பட்டினம் என்பார்கள்எழுவைதீவிலிருந்து யாழ்ப்பாணப் பட்டினத்திற்கு ஆறு சகோதரங்களாக குடி பெயர்ந்தோம். அந்த எண்ணிக்கை அதிக காலத்திற்கு நீடிக்கவில்லை. கல்வியங்காட்டில் இருந்த சில மாதங்களில் எனது கடைசித் தம்பி திடீரென இறந்தான் . அப்போது அவனுக்கு இரண்டு வயதிற்குச் சில மாதங்கள் அதிகமாக இருக்கும். அவன் எழுவைதீவில் பிறந்த காலத்தில் நான் யாழ்ப்பாணத்திலிருந்தேன். அதனால் அவனது குழந்தைப் பருவம் எனக்கு அதிகம் பரீச்சயமற்றது. வரிசைக் கிரமமாக ஐந்து குழந்தைகளும் தாய்மையை தின்று வளர்ந்ததால் அம்மாவிடம் அவனுக்குக் கொடுப்பதற்கு அதிகம் மிச்சமிருக்கவில்லை. தகரப் பால் மாவை மட்டும் குடித்தான். ஆனால் வளரவில்லை . மற்றைய உணவுகள் அவனுக்குச் செரிமானமடையவில்லை . பின்னர் வந்த பஞ்சகாலத்தில் தொலைக்காட்சியில் பார்த்த குழந்தைபோல் காட்சியளித்தான். இக்காலத்தைப்போல் பல வியாதிகளுக்கு அக்காலத்தில் பெயரில்லை . அவன் இரண்டரை வருடங்களில் தனது வாழ்வை முடித்துக்கொண்டான். அவனது பெயர் கமலேசன். அவன் பிறந்த பின்பாக அம்மாவுக்கு உடல் நலம் குன்றி விட்டது . எழுவைதீவில் இருந்தபோது அம்மா தபால் அதிபராக வேலை பார்த்ததால் பணவிடயத்தில் சுதந்திரம் இருந்தது. குழந்கைளை பார்க்க பேரன் ,பேத்தி , உறவினர் என்று ஆள் வசதிகள் இருந்தது. பட்டணம் பெயர்ந்ததும் அம்மா நாள்முழுவதும் வீட்டில் இருந்ததால் அவரது மனநலம் குன்றியிருந்ததா..? எனப் புரியாத போதிலும் உடல் நலம் பாதித்தது. அப்படியான உடல் நலம் குன்றிய அம்மாவிற்கு உறுதுணையாக இருப்பதற்கு எனது தந்தைக்குத் தெரியவில்லை. எனது தகப்பனார், தாய் தந்தையை இழந்து தமக்கையரிடம் வளர்ந்தவர். ஒரு விதத்தில் கடுமையான உழைப்பாளி . திடகாத்திரமானவர் . தமிழாசிரியராக வேலை செய்தவாறே வியாபாரமும் செய்து வந்தார். 1958 வரையில் இலங்கையின் தென்பகுதியில் எட்டியந்தோட்டையில் கடை நடத்தியவர் . இனக்கலவரத்தின் போது வியாபாரம் அழிந்தது . பலாங்கொடை , ஆலிஎல முதலான இடங்களில் ஆசிரியராக பணியாற்றிவிட்டு ஊருக்கு வந்தார் . ஆசிரியத் தொழிலுடன் ஊரில் பனை ஓலையால் செய்யப்படும் கடகங்களை யாழ்ப்பாணத்திற்கு…
-
New South Asian advocacy organisation (ASAS)
New South Asian advocacy organisation ‘Australia South Asia Society Inc.’ (ASAS) aims to raise relevant issues with state & federal governments By SAT News Desk MELBOURNE, 2 May 2021: The Australia South Asia Society Inc. (ASAS) was launched today at a largely attended and glittering function at the Waverley RSL, Glen Waverley. The ASAS Patron…
-
குடும்பம்
கேள்வி– பிரியா ராமநாதன் ( முகநூல் மூலமான கேள்வி- பதில்) குடும்பம் என்ற அமைப்பு பலமா அல்லது தனிமனித ஆளுமையைப் பலவீனப்படுத்துகிறதா? வன்முறைகள் ஏற்படுத்தும் களமா?குடும்பம் என்பது திருமணம் என்ற சிறிய வட்டத்தில் அடங்குவதா? குடும்பம் இல்லாமல் தனியே வாழமுடியுமா பதில் குடும்பம் என்பது அரசு, மற்றும் சமூகத்திற்கு பலத்தைக் கொடுக்கிறது. ஒரு பொருளாதார கட்டமைப்பும் கூட . குடும்பத்திற்கு உழைப்பது, சேமிப்பது என்பதெல்லாம் அரசை வலுப்படுத்தும் என்பதால் இறுதிவரையும் தொடரும். 95 வீதமானவர்கள் ஆண்களும் பெண்களும் இணைந்து வாழ்வதென்பது ஒரு உயிரியல் தேவை – அதைத் தவிர்க்க முடியாது – பெண் தொடர்ந்து தனது சமூகத்தில் வகிக்கும்(Care giver) என்பது தொடரும் . குடும்பமான திருமண உறவு இல்லாத போதும் ஆணின் வன்முறை இருக்கும் – அதற்கு உடல் இரசாயனங்கள், பெற்றோர், சமூகம், தேசம் எனப் பல காரணங்கள் உள்ளன. முன்னேறிய நாடுகளான இங்கும் வன்முறை உள்ளது. ஆனால் பெண்கள் கல்வி, தொழில் , சமூகத்தில் விழிப்புணர்வு , சட்டம் இவற்றைக் குறைக்கும் . எனது தந்தை எனது அம்மா அடித்ததுள்ளார் அதனால் எனக்குத் தந்தையில் வெறுப்புள்ளது. அம்மா கடைசியாகப் பிறந்த செல்லப்பிள்ளை . எனது தந்தை தாய் தந்தையற்று தமக்கையரால் வளர்க்கப்பட்டவர் . பிரித்தானிய இராணுவத்திலிருந்தவர் . இருவரும் பேசி திருமணம் முடித்தவர்கள். பல நெருக்கடிகள் எம்மிடையே வந்தபோதிலும் மனைவி மேல் நான் கை வைத்ததில்லை- காதலித்து திருமணம்- தனிப்பட்ட விடயமென்றாலும் காதல், படிப்பு எல்லாம் எங்களையறியாது வந்துவிடும். இலங்கை இந்தியா போன்ற இடங்களில் தனியாகப் பெண் வாழ்வது கடினம் காரணம் பெண்களுக்கு அரச உதவியில்லை. இந்த நாடுகளில் பெண்கள் வேலையில்லாதபோது பண உதவி பெறுவார்கள். வேலை வாய்ப்புடன் கல்வியும் , துணிவும், உள்ள பெண்ணுக்கு இலங்கையில் எதிர்நீச்சல் வாய்ப்புள்ளது. தனித்து நின்று வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். சமூகத்தில் ஆண்பெண் சமமென்ற சிந்தனை வருவதற்கு நமது மதங்கள் மிகவும் எதிரானவை. கேள்விக்கு பதில் எழுதினேனா தெரியாது. நன்றி தமிழருவி.
-
Name of the book: Veterinary Vignettes
Author: Dr Noel S Nadesan Publisher: Sudarsan Books & Crafts, Tamil Nadu, India; Year 2020 Also published as Amazon Kindle Book (eBook) The author is a professional Vet with a literary mind! A unique combination that opens a window on myriad facts related to pets, aptly interwoven in short stories. He has worked as…
-
நடேசன் எழுதிய அந்தரங்கம் கதைத் தொகுதி
படித்தோம் சொல்கின்றோம்: நடேசன் எழுதிய அந்தரங்கம் கதைத் தொகுதி மாயாவாதமும் அவிழ்க்கவேண்டிய முடிச்சுகளும் கொண்ட கதைகள் ! முருகபூபதி மனித வாழ்வில் அந்தரங்கங்களுக்கு குறைவிருக்காது. அந்தரங்கம் அவரவர்க்கு புனிதமானது. ஜெயகாந்தனும் அந்தரங்கம் புனிதமானது என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதியவர். அவுஸ்திரேலியாவில் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக வதியும் நடேசன், இங்கு வந்தபின்னரே இலக்கியப்பிரதிகளும் அரசியல் பத்தி எழுத்துக்களும் எழுதத் தொடங்கியவர். சிறுகதை, நாவல், பயண இலக்கியம், அரசியல் பத்தி எழுத்து மற்றும் தான் சார்ந்த…
-
அஞ்சலிக்குறிப்பு :மகேஸ்வரி சொக்கநாதர்
நூறாண்டு காலம் வாழ்ந்து விடைபெற்ற திருமதி மகேஸ்வரி சொக்கநாதர் அம்மையார் ! முருகபூபதி இந்த அஞ்சலிக்குறிப்பினை குற்றவுணர்வுடனேயே பதிவுசெய்கின்றேன். கடந்த ஆண்டு ( 2020 ) ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதிதான் எமது மதிப்பிற்குரிய திருமதி மகேஸ்வரி சொக்கநாதன் அம்மையாரின் நூறாவது பிறந்த தினத்தை அவரது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், மற்றும் உறவினர்கள், குடும்ப நண்பர்கள், முன்னாள் மாணவர்கள் அனைவரும் மானசீகமாக வாழ்த்திக்கொண்டாடியதை அறிந்திருந்தேன். எலிஸபெத் மகாராணியாரும் அம்மையாரை வாழ்த்தி சான்றிதழ்…
-
முதல் மரியாதை தமிழில் ஒரு செவ்வியல் திரைப்படமா ?
நடேசன் – அவுஸ்திரேலியா —————————————————————————— இளமைக்காலத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் முதல் மரியாதை திரைப்படத்தை பார்த்தபோது, என்னைக் கவர்ந்தது என்னவென்றால், அக்காலத்தில் சிவாஜி ரசிகனாக இருந்த எனக்கு மத்திய வயதான ஒரு வருக்கு இளம் பெண்ணில் ஏற்பட்ட காதல் ஒரு புதுமையாகவிருந்தது. இது நல்ல திரைப்படமென்ற நினைவே மனதிலிருந்தது. சமீபத்தில் அதனை தமிழின் செவ்வியல் படம் எனக்குறிப்பிட்டு பலர் எழுதியதைப் படித்தபின்பு, மீண்டும் பார்ப்போம் எனச் சமீபத்தில் பார்த்தபோது இந்தப்படம் புரட்சியானதோ புதுமையானதோ அல்ல, படு பிற்போக்கு வாதத்தை…
-
அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்:
எனது பார்வை நடேசன் ஆபிரிக்கா சென்றுபோது அங்கே சில விடயங்களைப் படித்ததில் ஆபிரிக்காவில் நிலங்களில் விவசாயம் செய்து வந்த சமூகங்களில் தந்தை வழிசமூகம் பற்றியும் அறியமுடிந்தது. அங்கு தந்தை, பின்பு மகன் என குடும்பத்தலைமை தொடர்வதால் தலைமைத்துவம் உருவாகிவிடுகிறது. தந்தையின் பின்பு மகன், இல்லாதவிடத்து தம்பி அந்த சமூககூட்டத்திற்கு தலைமையேற்றுவிடுகிறான். ஆபிரிக்காவில் அத்தகைய இடங்களில் ஐரோப்பியர்கள் அதிகாரம் செலுத்தும் போது, அவர்கள் இப்படியான தலைவர்கள் மூலமாக வரி அறவிடல் மற்றும் யுத்தத்துக்கு ஆள்சேர்த்தல் முதலான பணிகளைச் செய்தார்கள்.…
-
இயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேலியாவில் (12 Apostles)
———————————————————————- அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்த காலத்தில் மூன்று வருடங்கள் வேலை – படிப்பு என மெல்பன், சிட்னி நகரங்கள் எங்கும் அலைந்து திரிந்தபோது, ஒரு நாள் எனது மனைவிக்கு வார்ணம்பூல் மருத்துவமனையிலிருந்து வேலைக்கு வரும்படி தகவல் வந்தது. வார்ணம்பூல் என்ற இடத்தை அவுஸ்திரேலியா வரைபடத்தில் அதுவரையும் கேள்விப்பட்டதே இல்லை . அக்காலத்தில் நான் வேலையின்றி, எனது மிருக வைத்திய செய்முறைப் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தேன். மனைவியை வேலைக்கு அழைத்ததும், பரபரப்பாக சிட்னியிருந்து மெல்பன் வந்து, அதன்பின்பு முந்நூறு கிலோமீட்டர்கள் …
-
‘சர்வதேச மகளிர் தினம் 2021’
By Vajna Rafeek at ATLAS IWD 2021 இந்த வருடத்து மகளிர் தினத்திற்கான பிரச்சார கருப்பொருள் Choose to challenge Women in leadership – achieving an equal future in COID-19 world! ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது! தாயாக, தாரமாக, அக்கா தங்கையாக, மகளாக, தோழியாக நம் உறவின் அனைத்து நிலைகளிலும் நிறைந்திருக்கிறார்கள் பெண்கள். பல்வேறு துறைகளில், பல சவால்களுக்கு…