பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • இலங்கையும் தமிழகமும் சந்திக்கும் புள்ளிகள்

    ப. சிவகாமி. ( நொயல் நடேசன் அவர்களின்   ‘ பண்ணையில் ஒரு மிருகம் ‘  என்ற   புதினத்திற்கு எழுதப்பட்ட   முன்னுரை ) கே.  டானியல்,  செ.  கணேசலிங்கன்,  இளங்கீரன், நீர்வை பொன்னையன் , காவலூர் இராசதுரை, டொமினிக் ஜீவா ,               செ.  யோகநாதன்,  எஸ். பொ , தெணியான், பெனடிக்ற்பாலன், என். கே. ரகுநாதன் போன்றோரின் சாதிப்பாகுபாட்டிற்கு எதிரான இலக்கிய வரிசையில் சிறந்த இடத்தைகொண்டிருப்பவர்,  இலங்கையைத் தாயகமாகக்கொண்டு தமிழ்நாட்டில்        சிலகாலம் வாழ்ந்து , பலவருடங்களாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து…

    noelnadesan

    16/05/2022
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை

    -Dr Mathan kumar புலம்பெயர்ந்த ஒரு கால்நடை மருத்துவன் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள், நோயாளிகள் (விலங்குகள் மற்றும் மனித மனநோயாளிகள்)  அதனால் ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்கள் எல்லாம் கொண்டு பார்த்து பார்த்து ஒவ்வொரு செங்கலாக கட்டப்பட்ட ஒரு அற்புத கட்டிடம் தான் இந்த அசோகனின் வைத்தியசாலை.  இந்நாவலை ஒரு கால்நடை மருத்துவராகவும், ஒரு சாதாரண வாசகனாகவும் இருவேறு தளங்கள் நின்று அனுபவித்தேன். இந்நாவலின் மையக்கரு இதுதான் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டாலும் அதன் ஆழம் என்பது நெடிது.…

    noelnadesan

    16/05/2022
    Uncategorized
  • கொழும்பு மாநகரத்தின் தலைவர்கள்

    அங்கம் –  17 களனி கங்கைக்கும் காலிமுகத்தை தழுவும் இந்து சமுத்திரத்தாய்க்கும் மத்தியில் இலங்கையின் தலைநகரமாக மிளிரும் கொழும்பில் மூவின மக்களும் செறிந்துவாழ்கின்றமையால் இங்கு 1865 ஆம் ஆண்டு முதல் தெரிவாகும் நகரபிதாக்களை நினைத்துப்பார்க்கும்போது, சுதந்திரத்திற்கு முன்னர் இங்கு பிரித்தானிய பிரஜைகள் தலைவர்களாகவும் அதன் பின்னர் இலங்கைப்பிரஜைகளான மூவினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் மேயர்களாகவும் தெரிவாகியிருக்கும் தகவலை அறிந்துகொள்ள முடிகிறது. 2015 ஆம் ஆண்டு, கொழும்பு மாநகர சபையின் 150 ஆவது பிறந்த தின கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாகவும் நடந்திருக்கிறது.…

    noelnadesan

    15/05/2022
    Uncategorized
  • பண்ணையில் ஒரு மிருகம்- என்னுரை.

    தமிழகத்தில் உள்ள பண்ணையில் எனக்குவேலை கிடைத்ததால் அங்குள்ள மக்களுடன் பழகி நான் பெற்ற அனுபவங்கள் எனக்கு நிறைவானவை .    இதற்குக் காரணமாக இருந்து மறைந்த தலைவர் வி. பொன்னம்பலம்அவர்களுக்கு இந்தநூல் சமர்ப்பணம். என்னுரை:- மதவாச்சியில்   1980ம் ஆண்டில் எனக்கு மிகச் சாதாரணமான சிங்கள மக்கள் மத்தியில் வேலை செய்யக் கிடைத்த அனுபவங்கள் வண்ணாத்திக்குளத்தில் மட்டுமல்ல பிற்காலத்தில் எழுதிய கானல்தேசத்திற்கும் உதவியது. தமிழகத்தில் எண்பத்தி நாலாம் ஆண்டு இறுதிப்பகுதியில் பண்ணையொன்றில் கிடைத்தவேலை இந்த நாவலுக்குக் கருப்பொருளாகியுள்ளது. வாழ்ந்த இடங்கள்…

    noelnadesan

    14/05/2022
    Uncategorized
  • தென்னிலங்கையில் தோன்றிய அரசியல் கட்சிகள்

    அங்கம் 16 தென்னிலங்கையில் தோன்றிய அரசியல் கட்சிகள் பற்றி புதிதாக எதுவும் சொல்லவேண்டியதில்லை. அவற்றுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. இலங்கை சுதந்திரம் பெற்றதும் தொடங்கிய ஐக்கிய தேசியக்கட்சியின் நிறம் பச்சை. அதன் தேர்தல் சின்னம் யானை. அதிலிருந்து எஸ்.டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கா பிரிந்துவந்து தொடக்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறம் நீலம். அதன் தேர்தல் சின்னம் கை. இவை இரண்டினதும் தலைமைக்காரியாலயங்கள் கொழும்பில் மருதானை டார்லி ரோட்டிலும் (ஶ்ரீல.சு.கட்சி) கொள்ளுப்பிட்டியில் காலி வீதியிலும் (ஐ.தே.க. ஶ்ரீகோத்தா) அமைந்துள்ளன.…

    noelnadesan

    11/05/2022
    Uncategorized
  • ஸ்ரேடியத்தின் ரகசியம்.

    அங்கம்  –  15 நாம்  முன்னைய அங்கம் ஒன்றில் குறிப்பிட்ட அஸ்பெஸ்டஸ் கூரைத்தகடு உற்பத்தி செய்யும் மஸ்கன்ஸ் நிறுவனத்திற்கு முன்னால் செல்லும் பண்டாரநாயக்கா மாவத்தை பற்றி அறிந்திருக்கிறீர்களா? களனி கங்கை தீரத்தில் தலைநகரில் அமைந்துள்ள ஏனைய வீதிகளைப்போன்றதுதான் இந்த மாவத்தையும். ஆனால், இந்த வீதியிலும் பல சுவாரஸ்யமான கதைகள் உள்ளடங்கியிருக்கின்றன. ஏன் இந்த வீதிக்கு இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் பெயர்வந்தது…?அவர் அத்தனகல்லை தொகுதியில் ஹொரகொல்லையில் பிறந்தமையால் அந்தப் பிரதேசத்தை ஹொரகொல்லை வளவ்வை…

    noelnadesan

    09/05/2022
    Uncategorized
  • பண்ணையில் ஒரு மிருகம்.

    செந்தூரன் தமிழகச் சூழலில் சாதியத்தின் சமூக இயக்கத்தையும் அது கொண்டாடும் சடங்குகள், பழக்கவழக்கங்கள், தீண்டாமை ஆகியவற்றையும் வட்டமிடுகிறது இந்நாவல். எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர நேர்ந்த பின்னணியில் சாதிய அடுக்கில் நிகழும் ஆணவக் கொலைகளின் ஒரு கீற்றை மட்டும் எடுத்துக்கொண்டு அதைத் தன் போக்கில் உரசிப் பார்க்கிறார் கதைசொல்லி. புதிர்கள் மெல்ல மெல்ல அவிழும் புலனாய்வொன்றைப் போல இந்நாவல் விரிகிறது. தமிழகப் பண்பாட்டுச் சூழல் பற்றித் தமிழ்நாட்டைச் சாராதாரின் நினைவுகளும் கண்ணோட்டங்களும் நவீன இலக்கியங்களில் அவ்வப்போது பதிவு…

    noelnadesan

    09/05/2022
    Uncategorized
  •  நோயல் நடேசனின் “அந்தரங்கம்” கதைகள்

    நம் அந்தரங்கத்தினுள் மறைந்திருக்கும் ஆன்மாக்கள் -ஜிஃப்ரி ஹாசன் நோயல் நடேசனின் படைப்புலகு சமூக அறத்தின் பக்கம் சாய்வு கொண்டது. அவரது அந்தரங்கம் தொகுப்புக் கதைகளோ அல்லது ஏனைய கதைகளோ மையமாகப் பேசுவது அரசியல், மதம் போன்ற பேரதிகாரங்களால் புறமொதுக்கப்பட்ட சாமான்ய மனிதர்களின் புற வாழ்க்கையையும், அகவுணர்ச்சிகளையுமே என்று சொல்லிவிட முடியும். அவரது கதைகளினதோ, நாவல்களினதோ மிக முக்கிய தரப்பு இத்தகைய மனிதர்கள்தான். நோயல் நடேசன் ஒரு படைப்பாளியாக தான் புழங்கும் சூழலில் பலராலும் மிகையாக ஏற்கப்படுவதும், புனிதமாகப்…

    noelnadesan

    08/05/2022
    Uncategorized
  • எம்.ஜீ.ஆர் இலங்கை வருகை.

    அங்கம்  –  14 “ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்” என்று எமது முன்னோர்கள் ஒரு முதுமொழி சொல்வார்கள். அவ்வாறு ஒரேசமயத்தில் தனக்கும் வருமானம் தேடிக்கொண்டு அதன்மூலம் மற்றும் ஒருவரின் புகழை மேலும் மேன்மைப்படுத்திய ஒருவர் பற்றிய கதையை இங்கு சொல்ல விரும்புகின்றேன். அவர் கொழும்பில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற சிறந்த ஒளிப்படக்கலைஞர். சொந்தமாக ஒரு ஸ்ரூடியோவும் நடத்தியவர். கேரளாவிலிருந்து இளம் வயதிலேயே இலங்கைத் தலைநகரம் வந்து, ஒளிப்படக்கலைஞராக வளர்ந்து, பின்னாளில் சொந்தமாகவே ராஜா ஸ்ரூடியோ என்ற நிறுவனத்தையும்…

    noelnadesan

    21/04/2022
    Uncategorized
  • சினிமாஸ் குணரத்தினம்.

    அங்கம் –  13 எமது   ஈழத்து  இலக்கிய   நண்பர்   பல்கலைவேந்தன்                      சில்லையூர்செல்வராசன்  சிறந்த   குரல்வளம்    மிக்கவர்.    அவர்   இலங்கை வானொலியில்    வர்த்தக   விளம்பரங்களை   அறிவிக்கும் பணியிலுமிருந்தவர். போல்பொய்ன்ட்   பேனைக்கு   அவர்   வழங்கிய   தமிழ்   வடிவம்   குமிழ் முனைப்பேனா.   ஒரு   காலத்தில்   எமது   தமிழ்   மொழி மாத்திரமல்ல   ஏனைய   பல   மொழிகளும்  வழக்கொழிந்துபோன பல   மொழிகளும்   கல்லிலே   பொழியப்பட்டன. கல்வெட்டுகள்  அவற்றின்    சரித்திரத்தைச்சொல்கின்றன. காளிதாசர்   –   வள்ளுவர்   –   கம்பர்   –    இளங்கோ   –  கபிலர்   –      அவ்வையார்   –   தொல்காப்பியர்  …

    noelnadesan

    17/04/2022
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 48 49 50 51 52 … 173
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    Noelnadesan's Blog
    Join 97 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • Noelnadesan's Blog
    View site in Reader
    Manage subscriptionsபதிவு செய்கஉள்நுளை
    Report this content
    Collapse this bar