-
சோமநாத் ஆலயம் – குஜராத்
நடேசன் எனது குஜராத் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது சோமநாத் ஆலயத்திற்குச் செல்வதே. ஆனால் தெய்வ நம்பிக்கையோ அல்லது மத நம்பிக்கையோ இல்லாத நான் ஏன் போகவேண்டும் ? தற்போதைய இந்திய இந்துத்துவா அரசியலின் வரலாறு அங்கே தொடங்குகிறது. இந்தியாவின் முக்கிய தலைவர்களாக மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேல், மோதி என்பவர்கள் ஒரு மாநிலத்திலிருந்து வந்தார்கள். வரலாறு என்பது வலை போன்றது. விரித்தபின் விரும்பியபோது வெளிவரமுடியாது. வரலாற்றால் சிறைபிடிக்கப்பட்ட பல நாடுகள் உலகில் உள்ளன. அதில் ஈராக்,…
-
பாதை தவறிய பைத்தியம்
கதையாசிரியர்:இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (ஒரு கிழக்கிலங்கைக் கிராமம் 1986?) ஊரைத் தழுவி ஓடிக்கொண்டிருந்த ஆற்று நீர், மதிய வெயிலில்,அலுமினியத் தகடாய்ப் பள பளத்துக்கொண்டிருந்தபோது,அவள் தனது சேலையை முழங்காலுக்கு மேல் உயர்த்திப் பிடித்துக்கொண்டு ஆற்றைக் கடந்து வந்தாள். வைகாசி மாதமென்றபடியால்,ஆற்றில் பெரிய வெள்ளமில்லை.ஆறு ஒடுங்கிய கரைகளில்,உயர்ந்து வளர்ந்திருந்த நாணல்களுக்கிடையில் பல்நூறுன கொக்குகள் தங்கள் கழுத்தை வெட்டி வெட்டிக் குனிந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தன. மெல்லிய சிவப்புக் கால்களுடன்,மிக நீண்ட கழுத்துடைய கொக்குகள் இரை பிடிப்பதை,சேற்றுக்குள் புதைந்து கிடக்கும் காட்டெருமைகள் சோம்பேறித்தனமாகப் பார்த்துக்…
-
முருகபூபதி என்ற நதி !
வற்றாத ஜீவநதி அதன் கரைகளை நனைத்து ஈரலிப்பாக்கி பயிர்களை வளர்க்கும் !! சட்டத்தரணி செ. ரவீந்திரன் அரசியல் தலைவர்களைப்பற்றியோ அல்லது சில வரலாறுகளையோ எழுதலாமா? என்று அண்மைக் காலமாக நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, நான் வதியும் அவுஸ்திரேலியாவில் எம்மத்தியில் வாழ்ந்துகொண்டு தமிழ் மக்களின் நன்மைக்கு குறிப்பாகவும் சமுதாயத்திற்கு பொதுவாகவும் தங்கள் வாழ்நாளை செலவிட்டுக்கொண்டிருப்பவர்கள் பற்றியும் முதலில் எழுதினால் பிரயோசனப்படும் என்று யோசித்தேன். அத்தகையவர்களைப்பற்றி சிந்தித்தபோது பலர் மனத்திரையில் வந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும் முந்திக்கொண்டு எழுத்தாளரும் ஊடகவியலாளரும்…
-
வவ்வால்கள்- கருத்து
எழுத்தாளர் சுதாராஜ். முதலில் பிங்கோவுக்கு மேற்கொள்ளும் சத்திர சிகிச்சையை வாசிக்கும்போது மனப்பதட்டமாயிருந்தது. ஏனெனில் உங்களைப்போலவே சக பிராணிகளை நேசிக்கும் மனது கொண்டவன் நான். அடுத்த கட்டத்தில் அடிக்காவின் நடவடிக்கைகள்! அவளுக்கு மனோவியாதியில்லை… மனக்கசிவு என நினைக்கிறேன். பிங்கோவின் சிகிச்சையின்போது தவறான நூலைக் கொடுத்துவிட்டேனோ என மனம் கலங்குகிறாள். அந்த சீவனுக்கு தன் காரணமாக ஏதும் மோசம் நடந்துவிடக்கூடாதே என்றும், தனது மனதை ஆற்றுவதற்காகவேனும் அதை உறுதி செய்துகொள்ள முயல்கிறாள். பின்னர் கதை இன்னொரு பக்கம் திரும்புகிறது! கணவர்…
-
15.கரையில் மோதும் நினைவலைகள்: மெல்பன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
நடேசன் யாழ்ப்பாணம் ஐந்து வருடங்கள் படித்த மிருக வைத்தியக் கல்வி , நாற்பது வருடங்கள் செய்த தொழில், அதனாலடைந்த வாழ்வு, அம்மா ஆனந்தராணியின் கழுத்தில் தாலியாகத் தொங்கியது என்ற உண்மையை நான் இங்கு சொல்ல வேண்டும். 1975 ஆண்டு சித்திரை மாதத்தில் இலங்கையில் பல்கலைக்கழகத்தில் அனுமதியிருந்த காலமது. இலங்கையில் பேராதனை மட்டுமே மிருக வைத்திய பீடம் உள்ள ஒரே பல்கலைக்கழகம் என்பதால், நான் செல்லாத இலங்கையின் மத்திய மலைப்பகுதிக்குச் செல்கிறேன் எனச் சந்தோசத்தில் மிதந்த நாட்கள்…
-
அ.ஆ.இ
— சிறுகதை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (கிளிநொச்சி பிராந்திய கிராமம்-இலங்கை) அது ஒரு சாதாரண மாலைப் பொழுது. கணேஸ் மாஸ்டர் தனது சின்ன மகள் மாலதிக்கு அ,ஆ.இ சொல்லிக் கொண்டிருந்தார்.மனைவி குசினியில் சமைத்துக்கொண்டிருந்தாள்.அவர்களின் கேற்றைத் திறந்துகொண்டு யாரோ வருவது போலிருந்தது.மாஸ்டர் தனது படிப்பித்தலை நிறுத்திக்கொண்டு வந்தவர்களை நிமிர்ந்து பார்த்தார். நான்கு பேர் வந்து நின்றார்கள் அவர்களில் மூவர் துப்பாக்கி வைத்திருந்தார்கள் நாலாவது பேர்வழி அவர்களுக்குத் தலைவர்கள்போல் எடுப்பாக நின்றான்.அவன் துப்பாக்கி கையிலில்லாமல் இடுப்பிற் சொருகப் பட்டிருந்தது. அவன் மாஸ்டரைப்…
-
14 கரையில் மோதும் நினைவலைகள். புலம் பெயர்ந்தோர் உதவிகள்?
74 ஆம் ஆண்டு இறுதிக் காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியிலிருந்து அதிபர் சபாலிங்கத்தால் கல்லூரிக்கு என்னை வரக்கூடாது என விரட்டப்பட்டது பற்றி ஆரம்பத்தில் எழுதியிருந்தேன். பரீட்சையில் முதல் தடவையில் சித்தியடையாது போனால் இந்துக்கல்லூரிக்குப் போகமுடியாது . இலங்கை அரசு இரு வருடங்கள் உயர்தர வகுப்பில் படிக்கலாம் என்று மாணவர்களுக்கு அளித்த அடிப்படைக் கல்வி உரிமை எனக்கு அதிபர் சபாலிங்கத்தால் மறுக்கப்பட்டது. அதற்கும் மேல் காதலித்தபடியால் இவனை மேலும் பல்கலைக்கழகத்தில் காசு செலவழித்துப் படிப்பித்தால் என்ன பிரயோசனம்? இதுவரை செலவு…
-
வவ்வால்கள்
நோயல் நடேசன் நம் மனம் புனிதமற்றது என்பது மட்டும் உண்மை; குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கலாம். கொலை, பாலியல் வன்முறைகள், வஞ்சனைகள், திருட்டுகள் எனப் பல குற்றச்செயல்கள் கணத்துக்குக் கணம் முளைவிடும் அநியாய பூமி எமது மனவெளியே. அங்குதான் புவியில் நடக்கும் அநியாயங்களின் விதைகள் முளைப்பதற்கான தருணம் பார்த்துக் காத்திருக்கின்றன. மனத்தில் குமிழ்விட்டு உடையும் அழுக்கான எண்ணங்களுக்கு மதம், நாகரிகம், கலாச்சாரம், சட்டமெல்லாம் உறை போடமுடியாது. மனத்தில் ஏற்படும் எண்ணங்களை மறைக்க நாம் நினைத்தாலும் முடியாது. நாம் எல்லாருமே…
-
ஒளிப்படங்களும் நாமும்
நடேசன் ஒளிப்படங்களுக்கான வருடம்தான் 2021. இந்த வருடத்தில் எவ்வளவு ஒளிப்படங்கள் எடுக்கப்படும் என்று கணினியை தட்டிப் பார்த்தபோது 1.4 ரில்லியனுக்கு மேல் ஒளிப்படங்கள் எடுப்பார்கள் என்றிருந்தது. உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? 1.4 ரில்லியன் ஒளிப்படங்களில் பெரும் பகுதி சேமிக்கப்படும் . பயணம் போகும்போது கமராவும் கையுமாக அலையும் பலரில் நானும் ஒருவன். ஆரம்ப காலத்தில் எடுத்த ஒளிப்படங்களில் குறை கண்டதால் தற்பொழுது கமராவைக் கையாளுதல் மற்றும் அதை எடிட் பண்ணும் திறமையையும் சிறிது பெற்றுள்ளேன் . இதைவிட…