-
வரலாற்றை எழுதியவரது , வரலாற்றுக்குச் சாட்சியானேன்.
நடேசன் 1980களில் நான் சென்னையிலிருந்த காலத்தில், என் மாணவப் பருவத்து நண்பனான இரகுபதியை சந்தித்ததேன். அக்காலத்தில்தான் இரகுபதியின் ஆய்வு நூல் சென்னையில் பதிக்கப்பட்டது. இராமாயணத்தில் அணிலாக Early Settlements in Jaffna என்ற ஆய்வு நூலின் பதிப்பில் எனது பங்கும் இருப்பதால் சில உண்மைகளை விளம்ப விரும்புகிறேன். வரலாற்றை, வரலாற்றியல் மரபோடு பதிவிட விரும்புவர்கள், அதைத் தாங்களே தேடி அறிந்து பதிவிடுவது நல்லது. மரபைக் கவனிக்காத கூற்றுகளுக்காக ஒதுங்கி இருக்கும் நண்பரை இழுத்து வருவதற்கு எனக்குப் பிரியமில்லை.…
-
அவன் ஒரு அகதி
வழமையான இடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவியுடன் கடையை நோக்கிச் சென்றேன். சிகை அலங்கார நிலையத்திற்கும், மில்க்பார் என அழைக்கப்படும் கடைக்கும் இடையில் அமர்ந்திருக்கிறது இந்த ஸ்பைஸ் சொப். எமது நாட்டு பலசரக்கு சாமான்களை விற்கும் இடம் வாரம் ஒருமுறை சென்று இலங்கையில் இருந்து வரவழைக்கப்பட்ட மளிகைச் சாமான்களையும், தமிழ் நாட்டின் புதிய கலாச்சார வடிவங்களாக இறக்குமதியாகும் தமிழ் வீடியோக்களையும் வாடகைக்கு எடுத்து வருவது எமது வாராந்த கடமையில் ஒன்று. கடையை அண்மித்தபோது, முன் கண்ணாடி ஊடாக கவுண்டரில்…
-
குஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்.
நடேசன் குஜராத் மாநிலத்தில் எங்கள் பயணத்தின் இறுதிக்கட்டமாகக், கீர் விலங்குகள் சரணாலயத்திற்குப் போவதாக இருந்தது. அதற்கு முன்பாக ஜுனகாத் ( Junagadh) நகரில் இரவு தங்கினோம். நகரத்தின் மத்தியில் அழகான சமாதி (Mausoleum) இறந்த நவாப் ஒருவருக்காகக் கட்டப்பட்டிருந்தது. கோபுரங்கள் இஸ்லாமிய வடிவமும், வளைவுகள் ஐரோப்பிய முறையும் கலந்த கலவையாக அந்தக் கட்டிட வடிவம் இருந்தது. அந்த நகரத்தில் அதைப் பார்க்கப் பலர் வந்தார்கள். இந்தியாவின் பிரதான கவர்ச்சியாக இருக்கும் தாஜ்மகாலும் ஒரு சமாதி என்பதை நாம்…
-
இது ஒரு ஆப்கானிய கதை.
ஒரு மனிதன் தேவதையிடம் தனக்கு முத்து குவியல் வேண்டும் என வரம் கேட்டான். தேவதை ‘நீ அழுதால் வரும் கண்ணீர் ஒவ்வொன்றும் முத்தாகும்’ என வரம் கொடுத்தது. அந்த மனிதன் அழத்தொடங்கினான். ஆனால் அழுகை வரவில்லை. இறந்து போன தாய் – தந்தையை நினைத்தான். சிறிதளவு வந்த கண்ணீர் துளிகள் முத்துகளாகின. பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து தனது குடும்பத்தை குத்தத் தொடங்கினான். கண்ணீர் ஆறாகப் பெருகி வீட்டில் முத்துகளாகின. கண்ணைத் துடைத்துக் கொண்டு சுற்றிப் பார்த்தபோது…
-
பதின்மூன்றாவது திருத்தச் சட்டம்
நடேசன் 2008 பெப்ரவரி மாதத்தில் உதயத்தில் எழுதியது. இலங்கையின் வட-கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு செல்வநாயகம் – அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினர் தமிழ் ஈழம் என்ற பட்டு வேட்டிக்கு ஆசைப்படவைத்தனர்.பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இப்பொழுது கோவணத்துணியும் இல்லாமல் அம்மணமாக விட்டு விட்டார்கள். தற்பொழுது மகிந்த இராஜபக்ச தலைமையில் உள்ள இலங்கை அரசாங்கம் உலக நாடுகளினதும் இந்தியாவினதும் வற்புறுத்தலின் பேரில் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல் நடத்துவதாக வாக்களித்தது மூலம் தனது தோளில் தொங்கும் கரும் சிவப்பு துண்டை வட-கிழக்கு வாழும் தமிழ் மக்களுக்குக் கொடுத்து கோவணமாக அணியும்படி கொடுத்திருக்கிறார். இந்த திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்ற கேள்வி வெளி நாட்டுத் தமிழர்கள்பலரிடம்…
-
Wanted: A New Tamil Leader For Peace In Sri Lanka.
SUNDAY, NOVEMBER 30, 2008 LEAVE A COMMENT by Dr. Noel Nadesan. Editorial in chief of the Uthayam, community paper based in Melbourne (November 30, Melbourne, Sri Lanka Guardian) What no Tamil thought would happen in Jaffna is now shocking the world: the Tamils are carrying the Sri Lankan flag and hailing the victory of the…
-
மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும்
படித்தோம் சொல்கின்றோம் : சௌந்தர்ய உபாசகரின் எளிமையான வாழ்வை பேசும் சிறப்பு மலர் முருகபூபதி பல வருடங்களுக்கு முன்னர் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கனின் மண்ணும் மக்களும் என்ற நாவல் வெளிவந்தது. அந்த நாவலை, அது அதிதீவிரவாதம் பேசுகிறது என்ற காரணத்தினால் தடைசெய்தார்கள். சில வருடங்களுக்கு முன்னர் ஈழத்தின் மற்றும் ஒரு இலக்கிய ஆளுமை எஸ். எல். எம். ஹனீபா எழுதிய மக்கத்துச்சால்வை என்ற கதைத்தொகுப்பு வெளியானது. ஹனீபாவின் எழுத்துக்களை பிடிக்காத சில அதிமேதைகள் அவரை…
-
16 . கரையில் மோதும் நினைவலைகள்;முதல் ரயில் பயணம்.
நடேசன் பேராதனைப் பல்கலைக்கழகம் செல்லும் பயணமே எனது முதல் ரயில் பயணம் என்பதால், அந்தப் பயணம் புதிய அனுபவமாக இருந்தது. ஏற்கனவே பிரச்சினைப்பட்டதால், எனது அப்புவுடனான பேச்சு வார்த்தைகள் கஞ்சத்தனமாக இருந்தது. கனைப்புகளும் தலையாட்டலும், தந்தையினதும் மகனதும் தொடர்பாக இருந்தது. அதைப்பற்றி இருவரும் கவலைப்படவில்லை. கொடிகாமத்தை ரயில் தாண்டியதும் கைப்பையில் வைத்திருந்த உணவின் வாசம், நாசியால் சென்று , இரைப்பைக்கும் சிறுகுடலுக்கும் மத்தியில் போரை உருவாக்கியது . வீரகேசரிப் பத்திரிகையால் மடித்துக் கட்டித் தந்த பார்சலை திறந்தேன். உள்ளே…
-
கொலையாளிகளின் இரண்டாவது முயற்சி!
1984-85ம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்தபொழுது எனது உடல்நிறை 56மப. அக்காலத்தில் எனக்கு அறிமுகமானவர்களில் ஒல்லியானவர்களை நான் காணவில்லை. சென்னையில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தோழர் என கேதீசை எனக்கு அறிமுகப்படுத்தினார் இரஞ்சன் எனும் பத்மநாபா. தடிப்பான மூக்குக்கண்ணாடி (இந்திய தமிழில் சோடாபுட்டி), மிகவும் தீர்க்கமான பார்வை, ஒல்லியாக உயரமான அவரது தோளில் சிவப்பு கோடிட்ட சேட் ஒரு ஹங்கரில் தொங்குவதுபோல் தொங்கியது. ஒரு 48 கிலோ இருப்பார். ‘தோழர்’ என என்னை விளித்தார். இவரை பார்த்தது…