Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சுந்தரமூர்த்தியின்  நினைவுகள்    – Dare to Differ-A memoir.

    ஒரு தாய் தனது குழந்தையின் அந்தகக் கண்ணில் விழுந்த தூசியை  சேலைத் தலைப்பின் நுனியால்  எடுத்தபின்னர்,  தனது வாயால் கண்ணில் ஊதி பின்பு கன்னத்தில் முத்தமிடுவதுபோல் விடுதலைப்புலிகளை விமர்சிக்காது,   அதே நேரத்தில் மெல்பன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரது   பல அட்டகாசமான நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்திருக்கிறது                                                  Dare to Differ -A memoir என்ற புத்தகம் . சமீபத்தில் வெளிவந்துள்ள  Dare to Differ  என்ற நூல் மெல்பனில் வாழும் சபாரத்தினம் சுந்தரமூர்த்தியின்  கடந்த கால  நினைவுகளைப் பேசுகிறது.  பொதுவான…

    noelnadesan

    27/03/2022
    Uncategorized
  • 25  .  கரையில் மோதும் நினைவலைகள்.

    விலகுதல்.                                            நடேசன் இலங்கை,  1977 ஆண்டு பல தரப்பட்ட  வன்செயல்களை சந்தித்தது. அதைப்பற்றிய விபரங்களையும்,  அவை எவ்வாறு  நாட்டினது வரலாற்றையும்  மக்களின்  வாழ்க்கை முறையையும் மாற்றிப்போட்டன என்பதை   பின்னர் பார்ப்போம். அந்த ஆண்டுதான்  எனது காதலியும் வருங்கால மனைவியாக அமைந்தவருமான சியாமளா பேராதனை பலகலைக்கழகத்தில் பிரவேசித்தார்.   நான் பல்கலைக்கழகம் செல்வதைவிட, சியாமளா அங்கு பிரவேசித்து படித்து முடித்துவிடவேண்டும் என்பதுதான் எனது பேரவா. என்னைப்பொறுத்தவரை, பல்கலைக்கழகம் செல்வது தடைப்பட்டிருந்தாலும்,  ஏதாவது ஒரு வியாபாரத்துறையில் ஈடுபட்டு செல்வந்தனாகியிருப்பேன். சியாமளா…

    noelnadesan

    21/03/2022
    Uncategorized
  • கொரோனோ தொற்றிய நாய்.

    நடேசன் ஹாங்காங்கில், இரண்டு பொமரேனியன் நாய்களில் கோவிட் வைரஸ் காணப்பட்டது என்ற  செய்தியை இரு வருடங்களுக்கு  முன்பாக பார்த்தேன். அக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் அதிக நோய் தாக்கமில்லை . ஹாங்கொங்போல் இங்கு அடுக்கு மாடி கட்டிடங்கள் இல்லை.  பெரும்பாலானவை தனியான வீடுகளென்பதால் இங்கு நாய்களில் தொற்று ஏற்பட  சாத்தியமில்லை என்பது எனது எண்ணமாக இருந்தது. மெல்பனில்,  கிழமையில் ஒரு நாள் வேலை செய்தபோதிலும் இரு வருடங்களாகத்  தொடர்ந்து வேலை செய்து வந்தேன். எல்லோரும் மாஸ்க்குடன் வருவார்கள் .  நானும்…

    noelnadesan

    14/03/2022
    Uncategorized
  • விரைவில் 4 வது பதிப்பு: கானல்தேசம்

    கானல் தேசம் நாவல் இதுவரை மூன்று பதிப்புகள் வெளிவந்து முடிந்து விட்டதாகக் காலச்சுவடு பதிப்பகம்   அறிவித்திருந்தார்கள் . 4வது பதிப்பு விரைவில் வெளிவரும்.  ருவிட்டர்ஸ் பேசிலும் கிளப் கவுசிலும் எனது புத்தகத்தை பிரபலமாக்கிய சகோதரிகள்,  ராஜேஸ்வரி  பாலசுப்பிரமணியம்  தாமரைச்செல்வி மற்றும் பிரிஸ்பேன் பார்த்திபன், நந்தா,  கவிஞர் கருணாகரன் , தோழர் சுகுவுக்கு   நன்றி. நம் தமிழில் பேசிய நண்பர் சத்தார், முருகபூபதி மற்றும் Haseen Atham நண்பருக்கு நன்றிகள். அடுத்த மாதத்தில் எழுத்தாளர் சிவகாமி(IAS) முன்னுரையுடன்  “பண்ணையில் ஒரு மிருகம்” என்ற நாவல் தமிழகத்தைக் களமாக- சாதி ,…

    noelnadesan

    13/03/2022
    Uncategorized
  • மாகாண சபைகளைப் பாதுகாப்பதற்கான புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள்.

    13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மேலும் பாதுகாக்க  இணையுங்கள்..! – இலங்கையில்  மாகாணசபை முறைமையின் அவசியப்பாடு குறித்த விடயமானது  தற்போது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு பேசுபொருளாக ஆக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் இம் மாகாணசபை எதற்கும் பயனற்றது, இதனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மறுபக்கம், இம் மாகாண சபைக்குள் எதுவும் இல்லை என்று கூறிக்கொண்டே  இதனை அமுலாக்க இந்தியா அழுத்தம் செலுத்த வேண்டும் என்னும் கருத்தை மறு தரப்பினர் முன்வைக்கிறார்கள். இதற்குள் எதுவுமே இல்லை என்ற கண்மூடித்தனமான நிராகரிப்பு வாதத்தைப் புறந்தள்ளி, கிடைத்துள்ள சட்டபூர்வமான தீர்வைக் கையேற்று, இலங்கையின் அரசியல் யாப்பினுள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மாகாண சபையைப் பயன்படுத்தி, ஆக்கபூர்வமான அரசியல் செயற்பாடுகளினூடாக முன்நோக்கி நகர்த்துகின்ற சாதகமான கண்ணோட்டத்துடன் நோக்கும்படி இலங்கை அரசாங்கத்தையும் எதிர்க் கட்சிகளையும் கோருகின்ற நேர்மையான குரல்களும் அழுத்தங்களுமே  இன்றைய தேவையாக உள்ளது. குழப்புவது மக்களை மேலும் அநாதரவாக்குகின்றது…. இலங்கையின் இனக்களுக்கிடையே  ஏற்படுத்தப்பட்ட  முரண்பாடுகளுக்கான அரசியல் தீர்வு முயற்சிகளில் அதிகாரப் பகிர்வுக்கான தீர்வாக இலங்கை அரசியல் யாப்பினுள் உறுதிப்படுத்தப்பட்ட ஒரே வழிமுறையாக தற்போது இம் மாகாணசபைத் தீர்வே எம் கைகளில் உள்ளது.  அத்துடன், கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் சட்ட வலுவுள்ள ஆட்சியமைப்புக்கள் ஸ்தாபிக்கப்பட்டு, நிலைநாட்டப்பட்ட அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான சட்பூர்வ கட்டமைப்பாக அமைந்த  ஒரேயொரு நடைமுறையிலுள்ள அரசியல் தீர்வும் இம் மாகாண சபைத் தீர்வு மட்டுமேயாகும்.  இதைவிட வேறு அரசியல் தீர்வுகளைத் தற்போது பேசுவதும், அத்தகைய ஒன்றுக்காக இப்போது கையில் இருக்கின்ற மாகாணசபைத் தீர்வினையும் கைவிடச் சொல்லிக் குரல் எழுப்புவதும், அதற்குள் ஒன்றுமே  இல்லை என்று நம்பிக்கையீனத்தை  மட்டுமே ஊட்டுவதும், அவ்வதிகாரத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு வகைசெய்வதும், அதனை இல்லாமல் செய்ய…

    noelnadesan

    12/03/2022
    Uncategorized
  • வாசகர் கருத்து பிரேமலதா (சிறுகதை)

    முதலில் உங்களுக்கு ஒரு பலத்த கைத்தட்டல்   சார் அருமையான கதை அதுவும் இறுதி வரிகள் அதிர வைக்கிறது. சு. வெங்கடேசன் அவர்கள் எழுதிய ‘காவல் கோட்டம்’ புத்தகத்திலும் ஏறத்தாழ இதே மாதிரி ஒரு அழகான மங்கை தன்னை வற்புறுத்தி திருமணம் செய்துகொண்ட மன்னனை பழி வாங்க நினைத்து வேறொருவனுடன் கூடி அது அந்ந மன்னனுக்கு தெரிந்து அவளையும் அவனையும் கொன்று பழியை வேறொருவர் மீது போட்டு… அது ‘அரவான்’ என்ற படமாக வந்தது.  அது ஒரு பக்கம்…

    noelnadesan

    09/03/2022
    Uncategorized
  • நடேசனின், உனையே மயல் கொண்டு.

    உடலை அறிந்து கொள்வது காமத்திலிருந்தே துவங்குகிறது. உடல் ஒரு வெளி. அதன் அகப்பரப்பு நாம் அறியாதது. எல்லா உணர்ச்சிகளையும் போலவே காமமும் இயல்பாக வெளிப்படவும் கடந்து செல்லவும் வேண்டியது. ஆனால் ஒழுக்கக் கோட்பாடுகளும், கலாச்சாரத் தடைகளும், காமம் குறித்த சொல்லாடல்களையும், பகிர்தலையும் ரகசியமான செயல்பாடாக மாற்றியிருக்கின்றது. அதிலும் பெண்கள் தங்களுடைய பாலுணர்வுகள் குறித்த விருப்பு வெறுப்புகளை காலம் காலமாக தங்களுக்குள்ளாகவே ஒடுக்கி வந்திருக்கிறார்கள். அடக்கபட்ட பாலுணர்ச்சிகளின் கொந்தளிப்பு மற்றும் உடல் ரீதியான பகிர்தலில் ஏற்படும் நெருக்கம் மற்றும்…

    noelnadesan

    06/03/2022
    Uncategorized
  • இம்மாதம் சுந்தரின் Dare to Differ நூல் வெளியீடு

    மெல்பன் ‘சுந்தர்’ சுந்தரமூர்த்தியின் வாழ்வும் பணிகளும்                                                                                       முருகபூபதி சமூகப்பணிகளில் ஈடுபடுவதற்கு மூலதனமாக இருப்பது: பொறுமை, சகிப்புத்தன்மை, தியாக மனப்பான்மை, நெகிழ்ச்சியான இயல்புகள், அர்ப்பணிப்பு, இரக்க சிந்தனை. அவ்வாறு சமூகப்பணிகளில் ஈடுபடும் ஒருவர் தனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் என்று சொல்லி ஒதுங்கிச் செல்லவும் முடியாது.  அவ்வாறு எதிலிருந்தும் ஒதுங்காமல் தனக்குச்சரியெனப்பட்டதை,  அந்தந்த காலங்களுக்கு ஏற்ப துணிந்து சொல்லிச்செயல்பட்டவர்தான் ஆஸ்திரேலியா மெல்பனில்  நான்கு தசாப்த காலமாக    ( 48 வருடங்கள் ) வதியும்  சபாரத்தினம் சுந்தரமூர்த்தி. இவரை…

    noelnadesan

    25/02/2022
    Uncategorized
  • கர்ப்பம் : கடிதம்

    அகழ் தளத்தில் உங்கள் சிறுகதை படித்தேன். “நான் ஒரு மிருக வைத்தியர் ”  என அடக்கமாக தொடங்கும் கதை நேர்கோட்டில் செல்லாமல் பல பரிமாணங்களை தொட்டுச் செல்கிறது.  சோபியா கற்பனைப் பாத்திரமா அல்லது கடந்து சென்ற கனவுக்கன்னியா என ஒரு குறும்பு மின்னல் என் மனதிலும் தோன்றி மறைந்தது என்பது உண்மையே. மனைவியையும் கதைக்குள் உட்காரவைத்து தப்பித்துக் கொண்டீர்கள்! சோபியாவின் சீண்டல்கள் கதைக்கு ஒரு கிளுகிளுப்பைத் தந்தாலும் அவற்றிற்கு பின்னால் ஒரு சோகக்கதை உண்டு என்பதை கதை…

    noelnadesan

    23/02/2022
    Uncategorized
  • சாஸ்ஸ் டிக்கின்ஸ்- கிறேட் எக்பெக்ட்ரேசஸன்ஸ் (Great Expectations)

    சில வருடங்களுக்கு  முன்னர்  நான் இங்கிலாந்திற்குச் சென்றபோது,   கென்ட் ( Kent) பகுதியில் வாழும்   என் நண்பன் ஒருவனிடம்  சென்றேன்.  அவன் என்னை,  அங்கு இடங்கள் காண்பிக்க  வெளியே அழைத்துச் சென்றான்.  முதலில் ஒரு   கோட்டையைப் பார்த்தபோது  பின்னர் மாலையாகிவிட்டது.  இறுதியில் ஆங்கில எழுத்தாளர்  சார்ள்ஸ் டிக்கின்ஸ் வாழ்ந்த வீட்டிற்கு   அவன் அழைத்துச் சென்றபோது,  இரவாகிவிட்டது.  பொம்மையாகச் செய்யப்பட்டு,  அவரது நாற்காலியில் மேசையின் முன்பாக அமர்ந்திருந்த சார்ள்ஸ் டிக்கின்ஸ்ஸின் முழு உருவத்தையும் யன்னலுடாக பார்க்க முடிந்தது. அதன்பின்னர்,…

    noelnadesan

    22/02/2022
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 39 40 41 42 43 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 104 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar