-
பண்ணையில் ஒரு மிருகம்.
செந்தூரன் தமிழகச் சூழலில் சாதியத்தின் சமூக இயக்கத்தையும் அது கொண்டாடும் சடங்குகள், பழக்கவழக்கங்கள், தீண்டாமை ஆகியவற்றையும் வட்டமிடுகிறது இந்நாவல். எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர நேர்ந்த பின்னணியில் சாதிய அடுக்கில் நிகழும் ஆணவக் கொலைகளின் ஒரு கீற்றை மட்டும் எடுத்துக்கொண்டு அதைத் தன் போக்கில் உரசிப் பார்க்கிறார் கதைசொல்லி. புதிர்கள் மெல்ல மெல்ல அவிழும் புலனாய்வொன்றைப் போல இந்நாவல் விரிகிறது. தமிழகப் பண்பாட்டுச் சூழல் பற்றித் தமிழ்நாட்டைச் சாராதாரின் நினைவுகளும் கண்ணோட்டங்களும் நவீன இலக்கியங்களில் அவ்வப்போது பதிவு…
-
நோயல் நடேசனின் “அந்தரங்கம்” கதைகள்
நம் அந்தரங்கத்தினுள் மறைந்திருக்கும் ஆன்மாக்கள் -ஜிஃப்ரி ஹாசன் நோயல் நடேசனின் படைப்புலகு சமூக அறத்தின் பக்கம் சாய்வு கொண்டது. அவரது அந்தரங்கம் தொகுப்புக் கதைகளோ அல்லது ஏனைய கதைகளோ மையமாகப் பேசுவது அரசியல், மதம் போன்ற பேரதிகாரங்களால் புறமொதுக்கப்பட்ட சாமான்ய மனிதர்களின் புற வாழ்க்கையையும், அகவுணர்ச்சிகளையுமே என்று சொல்லிவிட முடியும். அவரது கதைகளினதோ, நாவல்களினதோ மிக முக்கிய தரப்பு இத்தகைய மனிதர்கள்தான். நோயல் நடேசன் ஒரு படைப்பாளியாக தான் புழங்கும் சூழலில் பலராலும் மிகையாக ஏற்கப்படுவதும், புனிதமாகப்…
-
எம்.ஜீ.ஆர் இலங்கை வருகை.
அங்கம் – 14 “ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்” என்று எமது முன்னோர்கள் ஒரு முதுமொழி சொல்வார்கள். அவ்வாறு ஒரேசமயத்தில் தனக்கும் வருமானம் தேடிக்கொண்டு அதன்மூலம் மற்றும் ஒருவரின் புகழை மேலும் மேன்மைப்படுத்திய ஒருவர் பற்றிய கதையை இங்கு சொல்ல விரும்புகின்றேன். அவர் கொழும்பில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற சிறந்த ஒளிப்படக்கலைஞர். சொந்தமாக ஒரு ஸ்ரூடியோவும் நடத்தியவர். கேரளாவிலிருந்து இளம் வயதிலேயே இலங்கைத் தலைநகரம் வந்து, ஒளிப்படக்கலைஞராக வளர்ந்து, பின்னாளில் சொந்தமாகவே ராஜா ஸ்ரூடியோ என்ற நிறுவனத்தையும்…
-
சினிமாஸ் குணரத்தினம்.
அங்கம் – 13 எமது ஈழத்து இலக்கிய நண்பர் பல்கலைவேந்தன் சில்லையூர்செல்வராசன் சிறந்த குரல்வளம் மிக்கவர். அவர் இலங்கை வானொலியில் வர்த்தக விளம்பரங்களை அறிவிக்கும் பணியிலுமிருந்தவர். போல்பொய்ன்ட் பேனைக்கு அவர் வழங்கிய தமிழ் வடிவம் குமிழ் முனைப்பேனா. ஒரு காலத்தில் எமது தமிழ் மொழி மாத்திரமல்ல ஏனைய பல மொழிகளும் வழக்கொழிந்துபோன பல மொழிகளும் கல்லிலே பொழியப்பட்டன. கல்வெட்டுகள் அவற்றின் சரித்திரத்தைச்சொல்கின்றன. காளிதாசர் – வள்ளுவர் – கம்பர் – இளங்கோ – கபிலர் – அவ்வையார் – தொல்காப்பியர் …
-
இந்த மண்ணும் அந்த மண்ணும்
நடேசன் ”டொக்டர்… எனது நாயை எனது காரினால் அடித்துவிட்டேன். மிகவும் கவலையாக இருக்கிறது. அதற்கு உட்காயம் ஏற்பட்டிருக்குமோ எனவும் யோசிக்கின்றேன். உதவமுடியுமா?” – என்று ஒரு ஆங்கில மாது என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டார். எனது நர்ஸ்ஸை அனுப்பி அவளுக்கு உதவி நாயை ‘கிளினிக்கிற்கு’க் கொண்டுவரச் செய்தேன். நாய்க்கு சுமார் பதினைந்து வயதிருக்கும். அதனைப் பரிசோதித்துவிட்டு, ‘பின்கால்களில் உணர்வு இல்லை. முதுகெலும்பு தாக்கப்பட்டிருக்கலாம். நாளை X ray எடுத்துப்பார்ப்போம்’ என்றேன். நாயை அடித்துவிட்ட குற்ற உணர்வினால், எவ்வளவு…
-
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா கொலை
அங்கம் – 12 கிராண்ட்பாஸ் வீதி நெருங்கும் ஆமர்வீதிச் சந்தி இலங்கை அரசியல் வரலாற்றிலும் உலக அரசியல் வரலாற்றிலும் தவிர்க்கமுடியாத ஒரு அத்தியாயத்தை எழுதிவைத்துள்ளது. 1993 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி உலகத்தொழிலாளர்களுக்கான மேதினம். அன்றைய தினம் ஊர்வலத்திற்கு தலைமைதாங்கி வந்துகொண்டிருந்த அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா ஒரு தற்கொலை குண்டுதாரியின் தாக்குதலில் கொல்லப்பட்டார். இச்சம்பவம் குறிப்பிட்ட கிராண்ட் பாஸ் வீதியும் ஆமர் வீதியும் சந்திக்கும் நாற்சந்தியில் நடந்தது. “விதி வலியது “…
-
எஸ். பொன்னுத்துரையின் எழுத்துகள்
நடேசன் ————————————————- எஸ் . பொ. என்ற எழுத்தாளரை நாம் நினைவு கூருகின்றோமோ இல்லையோ, அவரது எழுத்துகளை இலங்கைத் தமிழர்கள் நினைவு கூரவேண்டும் – முக்கியமாக இலக்கியத்தை நேசிப்பவர்கள் . இதைச் சொல்லும்போது அதற்கான விளக்கம் தேவை இல்லையா? அவர் எனது நான்கு நூல்களைப் பதிப்பித்தவர். என் கையைப் பிடித்துக் கதை எழுதுபவனாக அழைத்துச் சென்றவர். அவர் இல்லையென்றால் ஆஸ்திரேலியாவில் ஒரு மிருக வைத்தியனாகவும் ஓய்வு வேளைகளில் கையில் விஸ்கி கிளாசுடனும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பொரித்த…
-
கலைஞர்கள்- கலைத்துறை
அங்கம் – 11 களனி கங்கை தீரத்தில் கொகிலவத்தை , மட்டக்குளி, கிராண்ட்பாஸ், பிறின்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதி, ஆமர்வீதி, புளுமெண்டால் வீதி என்பன எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், பத்திரிகையாளர்கள், ஓவியர்கள், ஒளிப்படக்கலைஞர்கள் வாழ்ந்த, பணியாற்றிய, நடமாடித்திரிந்த பிரதேசங்களாகும். இந்த இடங்களில்தான் தினக்குரல், வீரகேசரி, திவயின, The Island, சித்திர மித்ர, முதலான பத்திரிகைகள் வெளியாகின்றன. கொகிலவத்தையில் 1983 இற்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் நியமுவா, ரத்து பலய, செஞ்சக்தி, Red Power முதலான பத்திரிகைகள்…
-
இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.
அங்கம் – 10 நடந்தாய் வாழி களனிகங்கை முருகபூபதி களனி கங்கைக்கு சமீபமாக இருக்கும் கிராண்ட்பாஸ் பிரதேசம் மூவின மக்களும் செறிந்துவாழும் இடம் என்று முன்னைய அங்கத்தில் தெரிவித்திருந்தோம். அயல்நாடான இந்தியாவிலிருந்து விஸா கெடுபிடிகள் இன்றி எவரும் வந்துசெல்லக்கூடிய ஒரு பொற்காலம் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இருந்தது. பிரிட்டிஷாரால் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட தமிழ் மக்கள், மலையகத்தை செப்பனிட்டு தேயிலை, இரப்பர், கொக்கோ பயிரிடுவதற்கு பயன்படுத்தப்பட்டனர். இந்தியாவின் தென்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள், தெலுங்கர்கள்,…
-
பழையன கழிதலும்
அங்கம் – 09 நடந்தாய் வாழி களனிகங்கை முருகபூபதி தமிழ்மொழி தொன்மையானது. அதற்கு இலக்கிய இலக்கண பாரம்பரியமும் இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் நன்னூலில் ஒரு வசனம் வருகிறது. ” பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற அந்த வரிகள் தமிழ்மொழியின் பரிணாம வளர்ச்சியை இனம் காண்பிக்கின்றது. தொல்காப்பியர் காலம், சங்க காலம், சங்கமருவிய காலம், நவீன இலக்கிய காலம் என்று காலகட்டங்ளை பிரதிபலித்தவாறு தமிழ்மொழி வளர்ந்து இன்று புதியவடிவம் பெற்றுள்ளது. இந்த…