-
மகாபலிபுரத்தில் என்னைக் கவர்ந்த சில சிற்பங்கள்
அருச்சுனன் தபசு அருச்சுனன் தபசு எனக் கூறப்படும் கல்லோவியம் இரண்டு பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் கூட்டாகும் . அவை ஒவ்வொன்றையும் அவற்றின் அழகியலையும் பலவாறு வர்ணிக்கமுடியும். எனது நோக்கம் அதுவல்ல. நம் எல்லோருக்கும் தெரிந்த மகாபாரதத்தில் வரும் அருச்சுனன் பாத்திரம் ஹோமரின் கிரேக்க காவியத்தில் வரும் ஆக்கிலிஸ் என்ற வீர னின் பாத்திரத்தைப் போன்றது. காலத்தைக் கடந்து இந்தப் பாத்திரம் மக்கள் மனதில் நிற்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று வில்லாற்றல் கொண்ட அவனது வீரம். மற்றது…
-
நிழலின் நாயகன் : சத்யஜித் ரே
கிறிஸ்டி நல்லரெத்தினம் ****************************** “ஆக் ஷன்” இந்த கம்பீரக் குரலுடன் 1951ல் ஆரம்பமானது ‘இந்திய திரையுலக மேதை’ என அழைக்கப்படும் சத்யஜித் ரேயின் திரையுலக பயணம். அவரது கன்னிப் படைப்பு பூபதி பூஷன் பாந்தோ பாத்யாவின் வங்க குழந்தை இலக்கிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட “பதேர் பாஞ்சாலி ” திரைப்படம். கிராமத்தில் பிறந்து வளர்ந்து முதிரும் அப்பு என்ற சிறுவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் உள்ள உறவை சித்தரிக்கும் கதையின் முதல் பாகம் இது. ஐயாயிரம் அடியுடன் படம் …
-
பரிசுபெற்ற நூல்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வு
25-06-2022 -சனிக்கிழமைஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்காக நடத்திய போட்டியில் பரிசுபெற்ற நூல்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வு. காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் – மைவண்ணன் இராம காவியம் உரை : திருமதி விஜி இராமச்சந்திரன் கே. ஆர் .டேவிட் – கே. ஆர். டேவிட் சிறுகதைகள் உரை: திருமதி தாமரைச்செல்வி. சீமான் பத்திநாதன் பர்ணாந்து – குஞ்சரம் ஊர்ந்தோர் உரை: திரு. கருணாகரன். எம். வாமதேவன் – குன்றிலிருந்து கோட்டைக்கு…. உரை: திரு. மல்லியப்பு திலகர்…
-
“வரும், ஆனா வராது”: இலங்கை அரசின் – இன்றைய துயர நிலவரம்
“வரும், ஆனா வராது” என்று நடிகர் வடிவேலுவின் மிகப்பிரபலமான பகடி ஒன்றுண்டு. அதை இன்னும் பிரபலமாக்கிக் கொண்டிருக்கிறது இலங்கையின் – இலங்கை அரசின் – இன்றைய துயர நிலவரம். கடைகளில் “சமையல் எரிவாயு இருக்கா?” என்று கேட்டால், தலையை உயர்த்திப் பார்க்காமலே “இல்லை” எனப் பதில் சொல்கிறார் கடைக்காரர். “எப்ப வரும்?” என்று கேட்டால், “வரும், ஆனால் வராது” என்கிறார். இதைக் கடந்து சிலவேளை “பின்னேரம் வந்து பாருங்கோ” அல்லது “நாளைக்கு வரும்” என்று அவர் சொன்னாலும்…
-
மாமல்லன்:மகாபலி புரம்.
இந்தியாவின் பல இடங்களில் குகைகளில் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.பெரும்பாலானவை புத்த, சமண மதத்தவர்களது. குகைக் கோவில்களின் அடுத்த பரிணாமம் ஒரே கல்லில் (Single rock cut temple ) செதுக்குவதேயாகும். இப்படியான குகை கோவில்கள் மகாபலிபுரத்தில் உள்ளன. .குகைக்கோயில்கள், தனிக் கல்லான கோவில்கள், அத்துடன் பல கற்களில் கட்டப்பட்ட கடற்கரை கோவில் என மூன்று வகையானதும் ஒரே இடத்தில் இருக்கிறது. ஒரே கல்லில் அமைந்த கற்கோவில்கள் ( Single rock cut temple) குகைக்கோயில்களின் (Cave Temple) இரண்டாவது…
-
பயணம்: மகாபலி புரம்.
நடேசன் வாழ்வில் பயணங்கள் என்பது நூறு புத்தகங்களைப் படிப்பதற்குச் சமனானது என்று எங்கோ படித்த நினைவு. அதே நேரத்தில் புத்தகங்களை வாசிப்பதும், இருந்த இடத்திலிருந்தே யாத்திரை செய்வது போன்றது என்பார்கள். எனது பயணம் எப்பொழுதும் புத்தகங்களுடனேயே இருக்கும் என்பதால் இரட்டை சந்தோசம் என நினைப்பேன். ஆனால், இம்முறை எனது வெளிநாட்டுப் பயணம் எதிர்பார்த்ததை விடப் பல விடயங்களை எனக்குப் போதித்தது. பலவற்றை நினைக்க வைத்தது. வாழ்வின் மகத்துவத்தைப் புரியவைத்தது. வழமையாக என்னுடன் வரும் மனைவி சியாமளா இம்முறை…
-
பண்ணையில் ஒரு மிருகம்
நடேசன் வேலை 1985, மாசி மாதம் 18 ஆம் திகதி, திங்கட்கிழமை காலை பத்துமணி “டாக்டர், உங்களுக்கு எல்லாம் சொல்லியிருப்பார்கள். ஆனால் நான் சொல்லப் போவது அவர்கள் சொல்லாத விடயம். இதற்கு முன்னர் இங்கிருந்த டாக்டர், வேலை செய்யும் பெண்ணோடு தகாத முறையில் நடந்து கொண்டதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு வேலை போனது பெரிய விடயமல்ல. ஆனால், அந்தப் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதுதான் மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இதன் பின்னர் ஆறு மாதங்களாக…
-
கட்டுரை-“தெணியான்
”- லெ முருகபூபதி வடபுலத்தின் ஆத்மாவை இலக்கியத்தில் பிரதிபலித்த படைப்பாளி தெணியானின் வாழ்வும் பணிகளும் கதைக்கும் கதைசொல்லிகளுக்கும் பாத்திரங்கள் தேவை. பாத்திரங்கள் (Characters ) இல்லாமல் ஒரு கதையை சொல்லமுடியாது. காவியமும் படைக்கமுடியாது. கதைகளுக்கும் காவியங்களுக்கும் மனிதர்கள், தெய்வங்கள், உயிரினங்கள், தாவரங்கள், பருவகாலங்களும் பாத்திரமாகலாம். வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பாத்திரங்களே, கதைக்கு பாத்திரமாக முடியுமா? முடியும் என்கிறார் எங்கள் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான். வீட்டில் பயன்படுத்தப்படும் பாத்திரத்திற்கு ஏதனம் என்றும் பெயர், ஏனம் என்றும் அழைப்பர். “இந்த சமூகத்தில் வாழ்ந்த – வாழ்ந்துகொண்டிருக்கும்…
-
தெணியான் மறைந்தார்
ஈழத்து இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரன் தெணியான் விடைபெற்றார் முருகபூபதி கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமை நேற்று 22 ஆம் திகதி தமது 80 வயதில் வடமராட்சி கரவெட்டி கரணவாய் இல்லத்தில் மறைந்தார். 06-01-1942 ஆம் திகதி வடமராட்சி பொலிகண்டியில் கந்தையா – சின்னம்மா தம்பதியருக்கு பிறந்த நடேசன் , இலக்கியஉலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கி, அதுவே நிலைத்துவிட்டது.…
-
கானல்தேசம்
16 காட்டிக்கொடுப்பு சுனில் எக்கநாயக்க சுனாமி நிவாரணத்திற்கு ஒருங்கிணைப்பு அதிகாரியாக இராணுவத்தில் நியமிக்கப்பட்டான். ஆரம்பத்தில் கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல் இருந்தது. எந்தப்பக்கம் திரும்பினாலும் கண்டி பெரஹராவில் தனியாக விடப்பட்ட சிறுவன் போல் அரசியல்வாதிகளுடன் முட்டி மோதவேண்டியிருந்தது. இராணுவ கட்டளைகளை நிறைவேற்றுவது இலகுவானது. ஆனால், அவனைத் திணற வைத்தது அரசியல்வாதிகளின் தேவைகள், விருப்பங்கள், வேண்டுகோள்கள்! அதற்கப்பால் புனர்வாழ்வுக்கான உதவிகளுடன் வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் வந்திருந்தன. அவைகளது உள்நோக்கமென்ன? அநுராதபுரத்தின் புறநகரில் பிறந்து, அநுராதபுர மகா வித்தியாலயத்தில் படித்திருந்தாலும், ஆரம்பத்தில்…