-
தாத்தாவின்வீடு: புதிய நாவல்.
என்னுரை நாடுகள், இனக்குழுக்கள் மத்தியில் நடக்கும் மோதல்கள் ஒரு கட்டத்தில் முடிவிற்கு வரும். அந்த மோதல்கள் உச்சமடைந்து பிரபலமாகி மூன்றாம் நபர்களின் தலையீட்டுக்கு உட்படும்போது சமாதான ஒப்பந்தங்கள் மூலம் அமைதியும் ஏற்படும். போரின் விளைவுகள், அழிவுகள் கண்களுக்குத் தெரியும் என்பதால் அவைகளை நிவர்த்திக்க பலரும் பாடுபடுவார்கள். முப்பது வருடங்கள் போர் நடந்த இலங்கையில் பிறந்து வளர்ந்து, பின்பு புலம் பெயர்ந்த வாழ்க்கையிலிருந்து போர் கடந்த எனது தாயக பூமியை புறக்கண்ணால் பார்த்தேன். அதனையடுத்து அங்கு நடந்த நிவாரணம்…
-
ராஜ தந்திரமும் ராஜ விசுவாசமும்
லெ. முருகபூபதி மகா பாரதத்தில் வரும் கிருஷ்ண பரமாத்மா, முக்கிய பாத்திரம். தருமம் குன்றி அதர்மம் மேலோங்கும்போது காட்சி தருபவர்தான் இந்த பரமாத்மா எனவும் சொல்வார்கள். கௌரவர்கள், அஸ்தினாபுரத்தை ஆண்டபோது, அதில் தமக்கும் பங்கு கேட்டு பேராடியவர்கள்தான் பஞ்சபாண்டவர்கள். அந்த பங்காளிச் சண்டையில் இறுதியில் துரியோதனன் தோற்றான். செஞ்சோற்றுக் கடனுக்காக இறுதிவரையில் அவனுடன் நின்ற கர்ணனும் கிருஷ்ண பரமாத்மாவின் சூழ்ச்சியினால் கொல்லப்பட்டான். கர்ணன் இருக்கும் வரையில் துரியோதனனை பாண்டவர்கள் வெல்லமாட்டார்கள் என்பது கிருஷ்ணருக்கு நன்கு தெரியும். அதனால்தான்…
-
நாவல் வாசிப்பனுபவம்:பண்ணையில் ஒரு மிருகம்
By: சிங்கை நிலா ஆசிரியர்: Dr. நோயல் நடேசன் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக மே 2022 வெளிவந்த நாவல். யதார்த்தத்தையும் மாயவாதத்தையும் இணைத்து தன்மையில் சொல்லப்பட்ட கதை என்பதால் சாதாரண கதைகளில் இருந்து வித்தியாசப்படுகிறது. ஆனால் தமிழ்ச் சமூக கட்டமைப்பு சிடுக்குகளில் இருந்து வித்தியாசப்படவில்லை. உலகின் எந்த மூலையில் தமிழர்கள் வாழ்ந்தாலும் பிறப்பால் வரும் சமூக ஏற்றத்தாழ்வு எப்போதும் வித்தியாசம் இல்லாமல் புரையோடி சீழ் பிடித்திருப்பதை காட்டும் புதினம். அதனால் கதையின் அடிப்படையில் வித்தியாசம் இல்லை. நிகழ்காலத்தின்…
-
FRIENDS OF SRI LANKA – AUSTRALIA- Appeal.
P O Box 5292 Brandon Park Victoria 3150 AUSTRALIA Email: uthayam12@gmail.com 29th November 2022 His Excellency President Democratic Socialist Republic of Sri Lanka President’s House Colombo Call for the release of all political prisoners in Sri Lanka Your Excellency, We congratulate you on becoming the President of our country in a crucial situation. All peace-loving…
-
பவளவிழா: மாவை நித்தியானந்தன்.
கலை இலக்கியத்தில் மாவை நித்தியானந்தனின் வகிபாகம் முருகபூபதி ( கலைஞரும் மெல்பன் பாரதி பள்ளியின் நிறுவனரும், சமூகச்செயற்பாட்டாளரும் தன்னார்வத் தொண்டருமான மாவை நித்தியானந்தனின் பவளவிழா 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பன் ஸ்பிரிங்வேல் மாநகர மண்டபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை மெல்பன் பாரதி பள்ளி பெற்றோர் – ஆசிரியர்கள் இணைந்து கொண்டாடினர். மாவை நித்தியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ஆவணப்படத் தொகுப்பு காட்சியும் காண்பிக்கப்பட்டது. அத்துடன் மாவை நித்தியின் சிறப்பியல்புகளை கூறும் நித்தியம்…
-
நாவல் அறிமுகம்: முத்துப்பாடி சனங்களின் கதை.
நோயல் நடேசன் போல்வார் மஹமது குன்ஹி கன்னடத்தில் எழுதி, இறையடியான் தமிழில், மொழி பெயர்க்கப்பட்டது. சாகித்திய அகாதெமி விருது பெற்றது நாவல், இந்தியா- பாக்கிஸ்தான் பிரிவினை காலத்தில் நடந்த இந்து – முஸ்லீம் கலவரத்திலிருந்து தொடங்கி, ஐம்பது வருடங்கள் வடக்குத் தெற்காகப் பயணிக்கிறது. பிரிவினை நடந்தபோது லாகூரில் இருபது வயதான முஸ்லீம் இளைஞன் சாந்த் அலி வேலை செய்யும் இடத்தில், இரண்டு பஞ்சாபி இளம் பெண்களைப் பாதுகாத்து, அவர்களை டில்லிக்கு அழைத்துவந்து விட்டு விட்டு, மீண்டும் லாகூர்…
-
அனாதை மரங்கள்
கல்கி 07.10.2022 இதழில் வெளியான இக்கதை ‘குவிகம்’ மின்னிதழ் நடாத்திய ஆய்வில் அக்டோபர் மாதத்தில் தமிழ் சஞ்சிகைகளில் வெளிவந்த 69 சிறுகதைகளுள் சிறந்த கதை என மூத்த எழுத்தாளர் திருமதி சிவசங்கரியினால் தெரிவுசெய்து பாராட்டப்பட்டது. கிறிஸ்டி நல்லரெத்தினம் அம்மாவை என்றும் நான் புரிந்து கொண்டதில்லை. எங்களுக்குள் ஏதும் பிணக்கோ பிளவோ என தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள். எங்கள் வீட்டில் அவள்தான் எல்லாம். இதைக் கேளுங்கள்…… அக்காவை பெண் பார்க்க எங்கள் வீட்டிற்கு அத்தானின் குடும்பம் வந்திருந்த சமயம்…
-
விடைகொடுப்போம்.காண்டீபன் அமிர்தலிங்கம்
திரு காண்டீபன் அவர்கள் தொடர்பில் வரதராஜ பெருமாள் அவர்களின் சிறியதோர் மீள்பார்வை.. காண்டீபனின் இறப்பு இதயத்தைக் கனமாக்குகிறது. 1973ன் ஆரம்ப மாதங்களில் அடிக்கடி சந்தித்தோம். அப்போதுதான் தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டு ஊர்களெங்கும் நாங்கள் ஓடி அரசியல் வேலைகள் செய்த காலம். யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெருவில் இருந்த தமிழரசுக் கட்சியின் தலைமைக் காரியாலமே எங்களின் பிரதான சந்திப்பிடம். யாழ்ப்பாணக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காண்டீபன் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தநதையாருடன் யாழ்ப்பாணம் வந்து விடுவார்.…
-
அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் விழா 2022
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மெய்நிகர் அரங்கு கருத்துரைகள்: திருமதி திலகவதி (ஐ.பி.எஸ். ஓய்வு நிலை ) “ தமிழ்ச் சிறுகதைகள்- இன்று “ திரு. பவா செல்லத்துரை “ வாசிப்பு – ஒரு மானுடத்திறப்பு “ ———————————————————————————- வாசிப்பு அனுபவப்பகிர்வு எஸ். கிருஷ்ணமூர்த்தியின் நோபோல் ( சிறுகதைகள் ) இலங்கையிலிருந்து கலாநிதி சு . குணேஸ்வரன் நாட்டியக்கலாநிதி கார்த்திகா கணேசரின் இந்து…
-
மணிவிழாக் காணும் சிவராசா கருணாகரன்.
முதல் சந்திப்பு. முருகபூபதி யாழ். தீம்புனல் வார இதழில் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக நான் எழுதிவருகின்றேனென்றால், அதற்கு வித்திட்டவர் யார்..? என்பது பற்றி சொல்லியவாறே இந்த முதல் சந்திப்பு தொடருக்குள் இம்முறை வருகின்றேன். அவரை நான் முதல் முதலில் அவரது எழுத்தின் ஊடாகவே தெரிந்துகொண்டேன். நான் வாசிக்கும் எவரதும் இலக்கியப் படைப்பு என்னை கவர்ந்துவிட்டால், அதனை எழுதியவரைப்பற்றி மேலதிக தகவல் அறிவதும், தேடிச்செல்வதும் எனது இயல்பு. அவ்வாறுதான் கிளிநொச்சியில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான…