-
ரங்க மார்த்தாண்டா- தெலுங்கு சினிமா
தொலைவான விமானப் பயணத்தில், விமானத்தில் திரைப்படம் பார்க்கும்போது தூக்கம்- விழிப்பு என இரண்டும் ஒன்றோடு ஒன்று பொருதுவதால் பெரும்பாலும் படத்தின் நினைவுகள் வீடு வந்தவுடன் மழையில் அழிந்த கோலமாக மனத்தில் கலங்கியிருக்கும். ஆனால் இம்முறை கொழும்பிலிருந்து வந்தபோது, சிறி லங்கா ஏர்லைனில் நான் பார்த்த தெலுங்குப்படம் ‘ரங்க மார்த்தாண்டா ‘ என்னை அப்படியே இறுக்கமாக உடும்புப் பிடியாக வைத்திருந்தது. . நான் இயர் போன் கருவியை தவிர்த்துவிட்டேன். வார்த்தைகள் காதில் விழாது, ஊமைப்படமாக ஆங்கிலத்தில் வாசித்தது…
-
விலங்கு மருத்துவர் நடேசன் எழுத்தாளரான கதை !
வாழ்க்கைப்பயணத்தில் கனவுகளை நனவாக்கியவருக்குஇம்மாதம் 69 வயது !!முருகபூபதிஇலங்கை வடபுலத்தில் ஐந்து தீவுகள் சங்கமமாகும் இந்துசமுத்திரக்கரையோரத்தில் ஒரு காலத்தில் விரல்விட்டுஎண்ணக்கூடியளவு வாழ்ந்த மக்களின் பூர்வீகம் எழுவைதீவுகிராமம்.பனையும் தென்னையும் பயன்தரு மரங்களும் மட்டுமல்லஆர்ப்பரிக்கும் கடலின் உணவுகளும்தான் அந்தக்கிராம மக்களுக்குவாழ்வளித்தன.ஒருகாலத்தில் தீப்பெட்டிக்கும் எண்ணெய்க்கும் உப்புக்கும் மாத்திரம்கடைகளை நாடிச்சென்ற அந்தச்சிற்றூர் மக்களுக்கும் கனவுகள்இருந்தன. மின்சார வசதியில்லாத அக்கிராமத்து மக்களுக்கு தமதுபிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கனவுகளும் அக்கறையும்இருந்தன.எழுவைதீவு கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் 1954 ஆம் ஆண்டுடிசம்பர் மாதம் 23 ஆம் திகதி பிறந்து,…
-
ஏற்புரை: கரிகால் சோழன் விருது -தஞ்சாவூர்.
பண்ணையில் ஒரு மிருகம்” “ எனது ஐந்தாவது நாவல். இலங்கையில் ஏற்பட்ட இனமோதலின் காரணமாக மூன்று வருடங்கள் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது ஆரம்பத்தில் ஒரு வருடமும் சில மாதங்களும் தாம்பரத்திற்கு அருகே மாமல்லபுரம் செல்லும் பாதையில் அமைந்த சிறிய பண்ணையில் மிருக வைத்தியராக வேலைசெய்த காலத்தில் எனக்கேற்பட்ட அனுபவங்களையும் அவதானங்களையும் கற்பனையுடன் கலந்து எழுதியதே இந்த நாவல். பேராசிரியர் ராமசாமி தன் விமரசனக்குறிப்பில் எழுதியது “இந்தியச் சாதியத்தை வெளியாரின் பார்வையில் இந்த நாவல் தருகிறது அத்துடன் அக்கால சமூகத்தின் குறுக்கு வெட்டப்…
-
கரையில் மோதும் நினைவலைகள்
முன்னுரை. இதுவரையில் நான் கடந்த பாதையில் நடந்த சம்பவங்களை இரைமீட்டி எழுதும்போது இந்த வரலாற்றையும் ஏன் எழுதவேண்டும் என்ற கேள்வி என் மனதிலே எழுகிறது. அதற்கும் அப்பால் மற்றவர்கள் இதனைப் படிப்பதால் அவர்களுக்கு என்ன பயன் கிட்டும் ? என்ற கேள்வியொன்றும் தொக்கி வருகிறது. இரண்டுக்கும் பதில் கூறாது விடமுடியாது. நான் ஒரு தலைவராகவோ, முக்கிய பிரமுகராகவோ இல்லாதபோது எனது வரலாற்றில் மற்றவர்கள் தெரிந்துகொள்ள என்ன இருக்கப் போகிறது? என்ற வினாவும் மகாபாரதத்தில் வரும் யக்ஷனாக என்னை …
-
நாவல்: ஆண்பால் உலகு
நன்றி: அபத்தம். நாவல் அல்லது சிறுகதைக்கு எது முக்கியமானது ? எனக் கேட்டால், தொடர்ந்து வாசிக்கத் தூண்டும் தன்மையே என நான் சொல்வேன். அதாவது எடுத்த புத்தகத்தை முடிக்க வேண்டும் என்ற அவாவை வாசிப்பவர்களுக்கு அது மனதில் உருவாக்கவேண்டும். அறிவு, பொழுதுபோக்கு , மற்றும் ரசனை என பல காரணங்களோடு ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது, நான் கூறிய இக்கருத்து எக்காலத்திலும் பொருந்தும் . ஆனால், திரைப்படம் தொலைக்காட்சியெனக் கவர்ச்சியான ஊடகங்களை பார்த்து ரசிக்கும் நம் காலத்தில்…
-
தாத்தாவின் வீடு – நாவல்.
ஒரு பயணியின் குறிப்பேட்டிலிருந்து தேர்ந்தெடுத்த சில பக்கங்களின் தொகுப்பு- எஸ். ரஞ்சகுமார். நன்றி : காலச் சுவடு. – நோயல் நடேசன் அவர்கள் எழுதிய தாத்தாவின் வீடு என்ற நூலைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை இந்தச் சபையிலே பகிர்ந்து கொள்ளுமாறு அவுஸ்திரேலிய தமிழிலக்கிய கலைச்சங்கத்தினால் கேட்கப்பட்டிருக்கிறேன். வாசிப்பு அனுபவப்பகிர்வு என்பது பொருள்மயக்கம் தருகின்ற ஒரு பதம். அது நூல் நயமாகவோ, மதிப்பீடாகவோ, திறனாய்வாகவோ, பூரணமானதொரு விமர்சனமாகவோ அல்லது கண்டனமாவோகூட இருக்கலாம். இன்று நடைபெறுவதைப் போன்ற சினேகபூர்வமான இலக்கியச்…
-
கரிகாற்சோழன் விருதுகள்
இலங்கை – அவுஸ்திரேலியா எழுத்தாளர்கள் தமிழ்நாடு தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையில் , சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை நிறுவியுள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கை வாயிலாக வழங்கப்படும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச்சேர்ந்த இலக்கியப்படைப்பாளிகளுக்கான கரிகாற்சோழன் விருதுகள் வழங்கும் விழா கடந்த 05ஆம் திகதி நடைபெற்றது.இம்முறை இந்த விருதுகள் இலங்கையரான , தற்போது அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் – விலங்கு மருத்துவர் நொயல் நடேசன் எழுதிய பண்ணையில் ஒரு மிருகம்நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் இலங்கை எழுத்தாளர்…
-
இக்காலப் போர்.
நன்றி – அபத்தம். கார்த்திகை. மாவிலாற்றின் நீரை 2006ல் ஜூலையில் விடுதலைப்புலிகள் விவசாயிகளுக்கு கிடைக்காது அணையை மறித்தபோது, இலங்கை அரசு இலங்கையின் கிழக்கே போர் தொடங்கியது. அந்தப் போர் தமிழர்களுக்குப் பேரழிவாக மே 2009யில் முள்ளிவாய்க்காலில் முடிந்தது. விடுதலைப்புலிகள் பொல்லைக் கொடுத்து அடி வாங்கிய வரலாறு பலர் மறந்துவிட்டார்கள். தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக முள்ளிவாய்க்காலை பேசியபடி விடுதலைப்புலிகள் மேய்ந்த அதே மேச்சல்த் தரையில் மேய்ந்தபடி ஜெனிவாவுக்கு எண்ணற்ற தரம் துலாக்காவடி எடுத்துள்ளார்கள். ஆனால் இது அதைபற்றிய…
-
கருணையினால்.
பாவண்ணன். மணிப்பால் மருத்துவமனையில் நண்பரொருவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. மூன்று நாட்கள் ஆழ்கவன சிகிச்சைப் பிரிவு அறையிலேயே வைத்திருந்தார்கள். பிறகுதான் வேறொரு சாதாரண தனி அறைக்கு மாற்றினார்கள். அதற்குப் பிறகுதான் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைத்தது. செய்தி கிடைத்ததும் நானும் இன்னொரு நண்பரும் அவரைச் சென்று பார்க்கத் திட்டமிட்டோம். ஆனால் நாங்கள் வசிப்பதோ வேறுவேறு திசையில் என்பதால் ஒன்றாகச் சேர்ந்து புறப்பட வழியில்லை. அதனால் நண்பர் “நான் முதலில் வந்தால் நீங்கள் வரும்வரை வெளியே விடுதிக்கு அருகில் காத்திருக்கிறேன்.…