-
பழயன மறந்து புதிதாக சிந்திப்போம்
நோயல் நடேசன் அவுஸ்திரேலியாநல்லிணக்க ஆணைக்குழுவுக்கு கடந்த 30-11-2010 திகதி கொழும்பில் கொடுத்த வாக்குமூலம கடந்த காலத்தை புரிந்து கொண்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவினருக்கு எனது வணக்கங்கள். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழும் எனது கதையில் இலங்கை நாட்டில் முப்பது வருடங்கள் நடந்த ஓய்திருக்கும் யுத்தத்தின்; நிழல் பின்னிப் படர்ந்துள்ளது. ஒரு விதத்தில் இந்த நாட்டின் நடந்த முக்கிய சம்பவங்களை உள்ளிருந்தும் வெளியிருந்தும் பார்க கூடிய வாய்பு எனக்கு கிடைத்தது எனது…
-
எழுத்தாளர். அ.முத்துலிங்கம் ஜனவரி 19 பிறந்த தினம் !
தாயகத்தில் விடுபட்ட படைப்பிலக்கியத்தை புலம்பெயர் வாழ்வில் மீண்டும் தொடங்கிய அ. முத்துலிங்கம் ! ஜனவரி 19 பிறந்த தினம் முருகபூபதி “ ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனையானது கதை முடிந்த பின்னும் சிறிது தூரம் ஓடவேண்டும். சிறுகதையின் முழுமை அவன் சிந்தனை ஓட்டத்தில்தான் நிறைவேற வேண்டும். ஒரு உண்மையான சிறுகதை அது முடிந்த பிற்பாடுதான் தொடங்குகிறது. “ இப்படிச்சொல்லியிருப்பவர் தன்னை ஒரு இலக்கிய விமர்சகராகவோ அல்லது இலக்கியப் பேராசிரியராகவோ அறிமுகப்படுத்திக்கொண்டவர் அல்ல! ஒரு…
-
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்க விருதுகள்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஐம்பதினாயிரம் ரூபா பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்குமுகமாக நடத்திவரும் வருடாந்த இலக்கியப்போட்டியில் இம்முறை, 2022 ஆம் ஆண்டில் வெளியான நூல்களிலிருந்து நடுவர்களின் மதிப்பீட்டின் மூலம் சிறந்தனவற்றை பரிசுக்குத் தெரிவு செய்துள்ளது. சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை முதலான நான்கு துறைகளில் 2022 ஆம் ஆண்டு வௌியான இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் இந்தத் தெரிவுக்காக ஊடகங்களின் வாயிலாக கோரப்பட்டிருந்தது.…
-
கானல் தேசம் 20துணுக்காய் வதைமுகாம்
சில வாரங்களாக அந்தத் தடுப்பு முகாமில் இருந்தேன். எனக்கு வேறு விசாரணை எதுவும் நடக்கவில்லை. மேலிடத்தில் இருந்து வரும் பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என்றார்கள்;. இருவருக்கு ஒன்றாகவோ காலுக்கு அல்லது கைக்கு தனியாகவோ விலங்கிடப்பட்டே எல்லோரும் இருந்தார்கள். அவர்கள் மத்தியில் விலங்கற்ற நிலையில் உள்ள அதிர்ஸ்டசாலிகளில் ஒருவனாக இருந்தேன். நானும் தாடி வளர்த்த பெரியவரும் எந்த நேரத்திலும் மலசலம் கழிக்கவும், விரும்பிய நேரத்தில் குளிக்கவும் ஓரளவுக்கு சுதந்திரம் இருந்தது. ஐந்துவேளை தொழுவதற்கும் மத சுதந்திரம் அங்கீகரித்திருந்தார்கள். இரண்டு வாரங்கள்…
-
நண்பர் முருகபூபதி.
மேற்கு நாடொன்றில் ஒரு சித்திரத்தை பார்த்தேன். அதில் தேவதை ஒன்று பரிசுத்த மத்தேயுவின் பின்னே நின்று அவரின் கையை பிடித்து விவிலியத்தை எழுதுவது போல் தீட்டப்பட்டிருந்தது. சாதாரண வரி வசூலிப்பாளரான மத்தேயுவிற்கு எவ்வளவு எழுதத் தெரியும்? அதுவும் கிரேக்க மொழியில் என்பது சந்தேகமே! சாமானியர்களின் வாழ்வை இலக்கியமாக எழுத்தில் கொண்டு வந்தது புதிய வேதாகமே. 88களில் முருகபூபதி கேட்டதற்கிணங்க நான் எழுதிய முதல் ஆங்கில கட்டுரை இந்திய தேசியம் பற்றியது. அன்றய இந்தியாவை இணைத்தது மதமோ கலாச்சாரமோ…
-
விமர்சனக்குறிப்பு : பண்ணையில் ஒரு மிருகம்.
பொ கருணாகரமூர்த்தி: பெர்லின் இந்நாவலில் காஞ்சிபுரம் மாவட்டத்திலமைந்த ஒரு கால்நடைப்பண்ணையில் 30 வருடங்களின் முன்பு நடந்த சம்பவங்களையும், அங்கே பணிபுரிய நேர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை முறைகளையும், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், மரபுகள், ஜாதி அபிமானத்தையும், அங்கு இரகசியமாக நடந்தேறிய கொலைகளையும் அவற்றைத் தற்கொலையெனவே நம்பவைத்த மேலாண்மை ஜாதியினரின் தந்திரங்களையும் கண்முன்னே படைத்திருப்பதன்மூலம் அருமையான வாசிப்பு இன்பத்தையும் அள்ளி வழங்கியிருக்கிறார் இப்புதினத்தின் ஆசிரியரும் அப்பண்ணையில் பணிபுரிய நேர்ந்த கால்நடைமருத்துவருமான இலங்கையைச்சேர்ந்த நோயல் நடேசன். இன்றைக்கிருப்பதைப்போல் 3 தசாப்தங்களுக்கு முன்னான வாழ்க்கைமுறை.…
-
யாழ்ப்பாணத் திமிர்.
கற்சுறா. நன்றி அபத்தம். கடுமையானதும் பல்வேறு மன உளைச்சல்களைக் கொண்டதுமாகக் கடந்து போன காலங்களின் “சில பதிவுகள்” கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டியன. பலர் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசினாலும் அதிகமானவர்களுக்கு அதனை எழுதுவதில் தயக்கம் இருக்கிறது. தமது அனுபவங்களைப் பொது வெளியில் பேசுவதிலும் அவர்களுக்குத் தயக்கம் இருக்கிறது. பேசுவதனால் எங்காவது ஓரிடத்தில் தாங்கள் இந்தப் பொதுச் சமூகத்தினால் புறக்கணிக்கப் பட்டுவிடுவோம் என்ற பயத்தினால் எழுகின்ற தயக்கந்தான் அந்தத் தயக்கம் என்று நினைக்கிறேன். வெறுமனே இவ்வாறான அனுபவப் பகிர்வுகள்…
-
சிறுகதை: உன்னை முகநூலில் தொடர்வேன்
நோயல் நடேசன் நன்றி அபத்தம் அன்று ஞாயிற்றுக்கிழமை. வசந்தனுக்கு விடுமுறை நாள். படுக்கையிலிருந்தபடி தொலைபேசி வழியே முகநூலைப் பார்த்தவனுக்கு, அதிலிருந்த பதிவொன்று நெஞ்சாம் குழியுள் ஒரு பூகம்பமாக அதிர்ந்து சில கணத்தில் ஓய்ந்து, இதயத்தில் சுருக்கென ஏதோ கடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டு, உடலங்கும் பரவிய அந்த உணர்வுடன் மேலும் படுக்க முடியாது எழுந்தவன், கட்டிலில் சாய்ந்து இருந்தபடி நெஞ்சைக் கையால் அழுத்தமாக நீவியபடி பழைய நினைவுகளுடன் போராடினான். சாதாரணமாக உதறித் தள்ளிவிட்டுப் போகமுடியாத பதிவு அது. உறங்கு…