பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • Rumblings in the temple

    By our community reporter Melbourne: In the April 2013 issue of the SAT we did a story ‘Immigration raid at temple in Carrum Downs…’ On Friday 5 April, 2013 immigration officials had visited the Sri Shiva Vishnu temple, Carrum Downs and interviewed a person there. Subsequently, we saw a denial by the Immigration Department published…

    noelnadesan

    11/06/2013
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை 28- இறுதி அத்தியாயம்

    பத்து மில்லியன் டாலர் சொத்துக்கு உரிமையாளராகிய பின், இலண்டனில் ஒரு மிருக வைத்தியசாலையில் நியமனம் பெற்றுக்கொண்டு செல்லும்போது ‘எப்பொழுதாவது இங்கிலாந்துக்கு வந்தால் என்னைப் பார்’ எனச் சொல்லி விட்டுத் ஷரன் தனது இண்டனில் வதியும் சிறிய தாயாரின் விலாசம் கொண்ட காகிதத்தை மெல்பேன் விமான நிலயத்தில் வைத்து சுந்தரம்பிள்ளையிடம் கொடுத்தாள். எங்கோ கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்லாயிரம் கிலோமீட்டரில் உள்ளவர்களைத் தாக்கும் சுனாமி போல் இவள் செய்த காரியம் வேறு எந்த சராசரி பெண்ணாலும் செய்து…

    noelnadesan

    08/06/2013
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை 27

    சுந்தரம்பிள்ளை சிட்னியில் நடக்கவிருக்கும் எலும்பு முறிவு சம்பந்தமான கொன்பரன்ஸ்க்கு செல்வதற்கு விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்தான். பதினைந்து மிருக வைத்தியர்கள் வேலை செய்யும் வைத்தியசாலையில் ஒருவர், இருவருக்கு மட்டுமே ஒரே நேரத்தில் விடுமுறை கிடைக்கலாம். விண்ணப்பித்த போது விடுமுறை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை. கிடைத்தால் நல்லது. கிடைக்காவிட்டால் எதுவித நட்டமும் இல்லை என்ற அலட்சியமான மனநிலை விண்ணப்பிக்கும் போதிருந்தது. வியப்புக்களும் ஆச்சரியங்களும், திருப்பங்களிலும் முடுக்குகளிலும் காத்திருப்பது போல் சுந்தரம்பிள்ளைக்கும் அந்த விடுமுறை கிடைத்தது. கடந்த நான்கு வருடத்தில் இப்பொழுதுதான் முதல்…

    noelnadesan

    07/06/2013
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை 26

    ஜோனின் பிரியாவிடை வைத்தியசாலையில் நடந்த சில மாதங்களின் பின் அவனது வீட்டுக்கு ஒரு காலை நேரத்தில் அவனது உடல் நலத்தை விசாரிப்போம் என நினைத்து சுந்தரம்பிள்ளை சாருலதாவுடன் சென்றான். ஈரலிப்பாக இருந்த காலைப்பொழுது பனிபுகாரின் போர்வையில் இருந்து வெளியேவரத் தாயின் வயிற்றி இருந்து வரத்துடிக்கும் குதிரைக் குட்டிபோல் திமிறியது. கண்ணுக்கெட்டியவரை டன்னினேங் மலையடிவாரத்தில் உள்ள அந்தப் புறநகரின் புறச்சூழலில் எதுவித மாற்றமும் தெரியவில்லை.மலைச்சாரலில் உயர்ந்து வளர்ந்த யூகலிகப்ரஸ் மரங்கள் பச்சைப் பசேலன கண்களையும், அந்த மரங்களில் இருந்து…

    noelnadesan

    05/06/2013
    Uncategorized
  • மக்கள் சேவையை கவனத்தில் கொள்ளாதஆயுததாரிகள்

    பயணியின் பார்வையில் — 19 முருகபூபதி மகாத்மாகாந்தி நாதுரம்கோட்சேயால் சுட்டுக்கொல்லப்பட்டபொழுதுமுன்னாள் பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுநர் மவுண்ட்பேர்ட்டன்,தமதுஅஞ்சலிக்குறிப்பில் இவ்வாறுசொன்னார்: “தொடர்ச்சியாகபிரித்தானியவெள்ளையரசைஎதிர்த்துப்போராடியகாந்தியின் உயிருக்கு பிரித்தானியா பாதுகாப்பாக இருந்தது. ஆனால் அவர் எந்தத்தேசத்தின் விடுதலைக்காககுரல்கொடுத்தாரோஅந்தத்தேசத்தின் குடிமகன் ஒருவர்தான் அவரதுஉயிரைப்பறித்தார்.” வன்னிப்பிரதேசநிகழ்ச்சிகளைமுடித்துக்கொண்டு,கிளிநொச்சியிலிருந்துஒருகாலைவேளையில் யாழ்ப்பாணம் நோக்கிச்சென்றுகொண்டிருந்தபொழுது,எமது இலங்கைமாணவர் கல்விநிதியத்தின் தோற்றம் வளர்ச்சிமற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகயோசித்துக்கொண்டு ஏ9 பாதையில் பயணித்தேன்.எனக்குநினைவுக்குவந்த மூன்றுதமிழ் அன்பர்கள் எமதுநிதியத்திற்குஆதர்சமாகவும் பக்கத்துணையாகவும் விளங்கினார்கள். அவர்களைப்பற்றியும் பதிவுசெய்யவேண்டியதுகாலத்தின் தேவை. மவுண்ட்பேர்டனின் குறிப்பை இங்குஏன் தெரிவித்தேன் என்பதை இந்தப்பத்தியைவாசிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். இலங்கைமாணவர் கல்விநிதியம்…

    noelnadesan

    05/06/2013
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை 25

    வைத்தியசாலையில் சுந்தரம்பிள்ளைக்கு ஓய்வு நாளானதால் மெல்பேனின் வடபகுதியில் வசிக்கும் நண்பனிடம் சென்றுவிட்டு திரும்பி வரும்போது வைத்தியசாலையுள்ளே சென்றான். எப்பொழுதும் வேலை செய்யும் நாளிலும் பார்க்க வேலை செய்யாத நாளில் சென்று , நண்பர்கள் வேலை செய்வதைப் பார்ப்பது திருப்தியைத் தரக்கூடியது. மனிதர்களுக்கு வேலை செய்வது உடலோடு அல்லது மூளையோடு மட்டும் சம்பந்தபட்டது அல்ல. வேலை தொழிலாக மாறி ஆன்மாவோடு சேர்ந்து விடுகிறது. வேதனம் இரண்டாம் பட்சமாகிறது. வேலை இல்லாமல் இருப்பதை நாகரீகமான மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியாது.…

    noelnadesan

    03/06/2013
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை 24

    வாழ்க்கை என்பது ஒரே மாதிரி இருக்க வேண்டியது இல்லைத்தானே. ஏற்ற இறக்கங்கள் நன்மை தீமைகள் சுகங்கள் துக்கங்கள் என மாறிமாறி வருவது இயற்கை. அதற்கேற்க ஷரனது வாழ்க்கையில் விரும்பத்தக்க ஒரு மாற்றம் வந்ததது. அவளது குடும்பம் சார்ந்த சகலருக்கும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாக அது இருந்தது. பல காலமாக தாய் வீட்டில் கணவன் கிறிஸ்ரியனை பிரிந்து இருந்த போதும் அவள் தனது விவாகரத்தை கோட்டுக்குப் எடுத்து போகவில்லை. கோட்டுக்குச் சென்று வழக்குப் பேசி தனக்குச் சொந்தமாக வரக்கூடிய பல…

    noelnadesan

    02/06/2013
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை-23

    சுந்தரம்பிள்ளையால் ரோசியை மறக்க முடியவில்லை. வைத்தியசாலை நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஆர்தரால் நீ செய்த ஆபரேசனில் தவறு எதுவும் இல்லை என சொல்லப்பட்டது மட்டுமல்ல. அங்கு நடந்த விடயங்களுக்காக நிருவாகக்குழு சார்பாக அவர் மன்னிப்பு கேட்டாலும் மனச்சாட்சி அமைதியடைய மறுத்தது. வாயிலாப்பிராணி ஒன்றிற்கு சரியான விடயம் ஒன்றை செய்யவில்லை என்ற எண்ணம் தொடர்ச்சியாக மனத்தை அரித்தது. ஒரு தொழிலை தேர்ந்தெடுத்துச் செய்யும் போது, அந்தத் தொழிலுக்கு வாங்கும் வேதனத்தை விட, வைத்தியத்திற்கும் என வந்த பிராணி மீது ஒரு…

    noelnadesan

    01/06/2013
    Uncategorized
  • எதிர்ப்பு அரசியலும் இணக்க அரசியலும்

    பயணியின் பார்வையில் — 18முருகபூபதி இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எதிர்பாராதவிதமாக இரண்டு தடவைகள் தமிழகம் வரநேரிட்டது. முதலாவது பயணத்தில் நான் சந்தித்த சில இலக்கிய ஆளுமைகள் குறித்து இந்த பயணியின் பார்வையில் தொடரில் முதல் ஏழு அங்கங்களில் பதிவுசெய்துள்ளேன். தமிழகத்திற்கான இரண்டாவது திடீர் பயணம் தனிப்பட்ட குடும்ப நிகழ்வினால் மேற்கொள்ளப்பட்டமையினால் நேரஅவகாசமின்றி இலக்கியம் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களை சந்திக்க முடியாதுபோய்விட்டது. எனினும் தளம் என்னும் காலாண்டிதழ் ஆசிரியரும் பிரபல எழுத்தாளர் அகிலனின் மருமகனுமான பா.ரவி அவர்களை எமது…

    noelnadesan

    29/05/2013
    Uncategorized
  • Expat expressions

    Sirimavo Ediriweera On April 27, the Hume Global Learning Centre in Craigieburn, Victoria became the venue of a book launch. In the midst of a fair gathering of invitees, family and friends, two novels written by Dr Noel Nadesan and a short story collection compiled by Letchumanan Murugapoopathy were launched. The event was organised by…

    noelnadesan

    29/05/2013
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 137 138 139 140 141 … 168
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 102 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar