-
ஜனவரி 31 – நடிகர் நாகேஷ் நினைவு தினம்
இயக்குநர்களின் ஆளுகைக்கு உட்படாமல் தனது சுயஆற்றலை வெளிப்படுத்திய கலைஞர் நாகேஷ் முருகபூபதி ‘தன் வாழ்க்கையில் என்ன அவலங்கள் இருந்தாலும் தன் மனத்தில் எத்தனை சோகச்சுமையிருந்தாலும் அதையெல்லாம் மறைத்து தன் நகைச்சுவையால் மக்களை விலாநோகச்சிரித்து மகிழச்செய்பவர்தானே மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்’ -என்று நடிகர் சிவகுமாரால் 1986 இல் விதந்து எழுதப்பட்டவர்தான் நடிகர் நாகேஷ். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இலட்சக்கணக்கான ரஸிகர்களை தனது அபாரமான நடிப்பினால் கவர்ந்தவர் நாகேஷ். ஆங்கில திரைப்பட உலகில் புகழ்பெற்ற ஜெர்லூயிஸைப்போன்று தமிழ்த்திரையுலகில்…
-
நம்பிக்கை
வாழ்வை எழுதுதல் முருகபூபதி சக மனிதர்களிடத்தில் ஒருவருக்கு நம்பிக்கை குறையும்பொழுது அவர் புதிய நம்பிக்கையைத்தேடிச்செல்வது இயல்பு. நானறிந்தமட்டில் இவ்வாறு நம்பிக்கை இழந்த பல பெண்கள் பெண்ணிலைவாதிகளாகவும் – விரக்தியின் விளிம்புக்குச்சென்று மன அழுத்த நோயாளிகளாகவும் – மதம் மாறியவர்களாகவும் பொதுநலப்பணிகளில் ஈடுபடுபவர்களாகவும் தங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதுவிடயத்தில் ஆண்கள் சற்றுவித்தியாசமானவர்கள். ஒரு பஸ் இல்லையென்றால் மற்றுமொரு பஸ்ஸில் தொற்றி ஏறி பயணத்தை தொடருவார்கள். ஒரு நட்பை இழந்தால் – புதிய சிநேகிதம் தேடிக்கொள்வார்கள். வாழ்வை எழுதுதல் தொடரின் இந்த…
-
எகிப்தில் சில நாட்கள் 14: நைல்நதியில் சீசருடன் இணைந்த கிளியோபாட்ரா.
நடேசன் நைல் மீதான மத்திய அரசர்கள் காலத்துக்கவிதை புவியில் இருந்து வந்து எகிப்தை எங்களுக்களித்தாயே. உன்னை வணங்குகிறேன். இரண்டு நாட்டையும் ஒன்றிணைத்து தானியக் களஞ்சியங்களை நிறைத்தாயே வறியவர்கள் வயிற்றை நிரப்பிய நீ வாழ்க. நைல் நதியில் அதிகாலையில் சூரிய உதயம் பார்ப்பதற்காக யன்னலைத் திறந்தபோது உச்சி வானம் வெளிர்நீல நிறமாக மேகக் கூட்டங்கள் அற்று நிர்மலமாக காட்சியளித்தது. அடிவானத்தில் ஈச்ச மரங்கள் மற்றும் அக்காசியா மரங்களுக்கு இடையில் ஆர்ப்பாட்டமில்லாத சூரியஉதயம் மெதுவாக தோன்றியது. நாரைகள், கொக்குகள் முதலான…
-
நாவல்: வெள்ளையானை.
வெள்ளையானை நொயல் நடேசன் தமிழ்நாட்டு நாவல்களின் கருப்பொருள்கள் எழுத்தாளனால் தன்னை சுற்றிய நிகழ்கால புறச்சூழலில் இருந்து எடுத்தாளப்படுகிறது. அது குறைபாடானது அல்ல. ஆனாலும் ஒரு எழுத்தாளன் தான் சார்ந்த சாதி, பின்பற்றும் கருத்தியற்கோட்பாடு, தனது பிரதேசம் எனத் தன்னைச் சுற்றி இலச்சுமணனின் கோடு போல் போட்டு விட்டு, சீதையைப்போல் அல்லாது, மீறாது நல்ல பிள்ளைகளாக உள்ளிருந்து இலக்கியம் படைக்கும் பொழுது அந்த இலக்கியத்தின் ஆயுட்காலம் குறைந்து விடுகிறது. அதேபோல் நமது ஈழத்தவர்கள் இலக்கியமும் போருக்கு முன்பு, மார்க்சிய…
-
அசோகனின் வைத்தியசாலை
நடேசன் இலக்கியம் என்பது அனுமானம் ,அனுபவம் மற்றும் அவதானிப்பில் பிறக்கிறது என சொல்வார்கள். இலங்கையில் மதவாச்சி என்னும் பிரதேசத்தில் தொழில் நிமித்தம் வாழ்ந்த காலப்பகுதியில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் அவதானிப்பையும் பின்னணியாக வைத்து உருவாகியது எனது முதல் நாவல் வண்ணாத்திக்குளம். இலங்கை அரசியலில் சாதாரண சிங்கள மக்களின் மனங்களில் இனவாதத்தை தூவிய சிங்கள அரசியல்வாதிகளினாலும் – அதேபோல் தமிழ் இளைஞர்களுக்கு உணர்ச்சியூட்டி கொம்பு சீவிய தமிழ் அரசியல்வாதிகளாலும் ஏற்பட்ட இனநெருக்கடிகளை கோடிகாட்டி எழுதப்பட்ட இந்த நாவல்; ஆங்கிலத்திலும்…
-
மெல்லுணர்வு (சிறுகதை)
நடேசன். குவான்ரஸ் விமானத்தின் எக்கணமி வகுப்பு இருக்கைகள் நெருக்கமாக இருந்தன. யன்னலருகே அவனது இருக்கையின் கைப்பிடியை உயர்த்திவிட்டு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருந்த சேராவோடு மேலும் நெருக்கமாக சாய்ந்தான் ஆனந்தன். அவளது உடலின் நெருக்கம் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்தி உடலின் உள்ளே இரசாயன மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்தக் கிளர்ச்சி மதுவின் போதைபோல் மேலும் மேலும் அவனுக்கு தேவையாக இருந்தது. அவனது போதை கொண்ட மனம் விமானத்தின் வேகத்துக்கு மேலாக ஆகாயவெளியில் இறக்கைகட்டிப் பறந்தது. இரத்த நாடிகளில் வேகமாக…
-
எகிப்தில் சில நாட்கள்13: பெண்ணரசி.
நடேசன் ஜோவான் என்ற பெண் ஆணாக வேடமிட்டு மத்தியகாலத்தில் (1100AD) கத்தோலிக்க பாப்பரசராக இரண்டு வருடங்கள் பதவி வகித்தார். அவர் குதிரையில் செல்லும் போது பிரசவம் நடந்து பெண்ணென்ற விடயம் பகிரங்கமானது. ஜோவான் கல்லால் எறிந்து கொலை செய்யப்பட்டார்;. பெண்களைப் பொறுத்தவரை தற்காலத்தில் நிலைமை எவ்வளவு மாற்றம் நடந்துள்ளது என்பது நாடுகளுக்கு நாடுகள் வேறுபடுகிறது. பல நாடுகளில் பெண்கள் நிலைமை மத்திய காலத்திலே உள்ளது. பண்டைக்கால சீனாவின் வரலாற்றில் டாங் அரசவம்சத்தில் (Tang Dynasty) சக்கரவர்த்தினியாகி அரசாண்ட…
-
எகிப்தில் சில நாட்கள்12:மலைப்பாறைகளைக் குடைந்து உருவான சமாதிகள்
நடேசன் அந்த நாள் காலை பிரகாசமாக விடிந்தது என்பதை எனது அறையில் நிறைந்திருந்த வெளிச்சம் எனக்குத் தெரிவித்தது.மெதுவாக கண்களை கைகளால் அழுத்தியபடி விழித்தபோது எனதருகே படுத்திருந்த சியாமளாவைக் காணவில்லை. நைல் நதியில் நின்ற எமது கப்பலின் மேல்தளத்தில் சென்று சூரிய உதயம் பார்ப்பதற்காக எனது நண்பர் ரவீந்திரராஜின் குடும்பத்தினரும் எனது மனைவியும் சென்று விட்டார்கள் என்பது சிறிது நேரத்தில் எனது அறிவுக்கு எட்டியது. முதல் நாள் லக்ஸர் மற்றும் கார்னக் கோவிலையும் சுற்றி நடந்ததனால் உடல் களைப்பும்…
-
மகனின் பிறந்தநாள் :மனைவியின் துணிச்சல்.
எக்சோடஸ் 4 நடேசன் இரண்டு நாட்கள் ஹோட்டலில் இருந்துவிட்டு கோடம்பாக்கத்தில் ஆர்காடு ரோட்டில் அமைந்த பழைய கட்டிடத்தில் மேலே உள்ள சிறிய அறையை மாத வாடகைக்கு பெற்றுக்கொண்டேன். அந்த அறையில் யன்னலையும் கதவையும் விட பெரிய இரும்புக்கட்டில்; – சந்தமிட்டபடி சுழலும் ஒரு பழைய கறள் பிடித்த காற்றாடி மற்றும் அதோடு ஓட்டிய ஒரு லைட் மட்டுமே எனக்குத் துணையாக இருந்தன. தனிமை அந்த அறையில் கோடை வெப்பத்தை விட மோசமாக வாட்டியது. அந்தப் பெரிய சென்னைப்பட்டணத்தில்…
-
பிரேதத்தின் கதை: வாசிப்பு அனுபவம்
முருகபூபதி நாங்கள் பிறக்கிறோம். இறக்கிறோம். இரண்டும் எப்பொழுது நிகழும் என்பதோ பிறந்த வேளையே அல்லது இறந்தபின்போ எதுவும் தெரியாது. மற்றவர்களின் குழந்தை பிறந்ததை பார்த்ததும் அட நாங்களும் பிறந்தபொழுது இப்படித்தானே இருந்திருப்போம் என நினைப்போம். அத்துடன் குழந்தைப் பருவமும் நினைவுக்கு வந்துவிடும். ஒருவர் இறந்தால் அவரை ஃபியூனரல் பாலரில் அல்லது மயானத்தில் பிரேதப்பெட்டியினுள் பார்த்தால் நாம் என்ன யோசிக்கின்றோம். நாங்கள் இறந்தாலும் இப்படித்தானே அலங்கரித்து வைத்திருந்து புதைப்பார்கள் அல்லது தகனம் செய்வார்கள். பலருக்கு சுடலைஞானம் பிறக்கும். இறந்தவர்…