-
உனையே மயல் கொண்டு
ஜேகே சந்திரன் அவுஸ்திரேலியாவிலே விஞ்ஞான முதுமானி ஆராய்ச்சி மாணவனாக இருக்கிறான். மனைவி ஷோபா, மிக இளம்வயதில் திருமணம் முற்றாக்கப்பட்டுபுகைப்படத்தில் பார்த்த சந்திரனை நம்பி அவுஸ்திரேலியாவுக்கு வந்திறங்கியவள். அவுஸ்திரேலியா வந்து இரண்டாம் வருடமே குழந்தை.குழந்தைப்பேற்றோடு ஷோபாவின் தாயும் தந்தையும் வந்திணைகிறார்கள். குழந்தை பிறந்த சில நாட்களிலேயே ஷோபாவின் நடவடிக்கைகளில் மாற்றம் உருவாகிறது. மனம் ஒரு நிலையில் இல்லாமல் திடீரென்று அதி உச்ச கோபத்தையும் சமயத்தில் அதியுச்ச மகிழ்ச்சியையும் காட்டத்தொடங்குகிறாள். இது உடலுறவு வாழ்க்கையிலும் பிரதிபலிக்க ஆரம்பிக்கிறது. ஷோபாவுக்கே தன்னில்…
-
உள்ளக சுயநிர்ணய உரிமை.
என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா விடுமுறையில் குடும்பத்துடன் கொழும்பு சென்றபோது கொழும்பு மாநகர சபை கட்டிடத்தைக் காட்டி ‘ ‘இதுதான் சந்திரிகாவுக்கு குண்டு வைத்த இடம் என கூறி வாடகை கார் சாரதி நிறுத்தினார். கொழும்பில் தங்கும் சில நாட்களில் நான் பார்க்க வேண்டிய இடம் இது என அவரே தீர்மானித்து விட்டதை எண்ணிக்கொண்டு கையில் இருந்த கமராவால் அந்தக் கட்டிடத்தை படம் பிடித்துக் கொண்டேன். பின்பு மாநகரசபை கட்டிடத்துக்கு எதிரே உள்ள விகார மாதேவி பூங்காவுக்குள்…
-
என் பர்மிய நாட்கள் 3
அடுத்த நாள் யங்கூன் வீதி வழியாக சென்றபோது வழியில் சந்திந்த பெண்கள் யாவரும் வயது வித்தியசமின்றி முகத்தில் சந்தனம்போல் எதனையோ பூசி கன்னத்தை அலங்கரித்திருந்தார்கள். அதைப்பற்றிக் கேட்டபோது அது அலங்காரத்திற்கு மட்டுமல்ல வெய்யிலின் தாக்கத்தை தடுக்கும் சன் கிறீமாகவும் பாவிக்கிறார்கள் என்றார் எமது வழிகாட்டி தனகா எனப்படும் இந்த மரம் சந்தனமரத்திற்கு ஒப்பானது. ஆனால் சிறிது விலை குறைந்தது. சந்தைகளில் மரத்துண்டுகளாகவும் கிறீமாக குப்பிகளிலும் அடைத்து விற்கப்படுகிறது. பெண்களிடம் அதிலும் மத்திய மற்றும் முதிய பெண்களிடம் அதிகமாக…
-
ஈழத் தமிழர் அரசியல் ஒரு யானைக்கால்
நடேசன் அவுஸ்திரேலியாவில் பதின்மூன்று வருடகாலம் நான் முன்னின்று நடத்திய உதயம் இருமொழி (தமிழ் – ஆங்கிலம்) மாதப்பத்திரிகை வியாபார ரீதியில் 25000 டொலர்கள் செலவுடன் வெளியாகியது. ஒவ்வொரு வருடமும் வியாபாரரீதியில் நட்டத்தையே எதிர்நோக்கியது. விளம்பரதாரர்களின் ஆதரவுடன் வெளியானபோதிலும் நட்டம் தவிர்க்கமுடியாதிருந்தமைக்கு அவ்வேளையில் இங்கு புலிகள் இயக்கத்தின் தீவிரமான எதிர்ப்பிரசாரங்களும் முக்கிய காரணம். உதயத்திற்கு விளம்பரம் தருபவர்களை எச்சரித்தல், அதில் எழுதுபவர்களின் குடும்பத்தினருக்கு அழுத்தங்கள் பிரயோகித்தல், கடைகளில் இருந்து உதயம் இதழ்களை ஆட்களை அனுப்பி துக்கிவீசச்செய்தல் முதலான தமக்குத்தெரிந்த…
-
SBS வானொலியில் தமிழினி
அன்புள்ள ரேணுகா துரைசிங்கம் அவர்களுக்கு ( SBS ஊடகவியலாளர் ) வணக்கம். தாங்கள் அண்மையில் தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூல் தொடர்பாக எழுந்துள்ள வாதப் பிரதிவாதங்களை வானொலி நேயர்களும் அறிந்துகொள்வதற்காக ஒலிபரப்பிய நேர்காணல்களின் தொகுப்பினை கேட்டேன். இந்நூல் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் முதல் தடவையாக நடத்திய அனைத்துலகப்பெண்கள் தினவிழாவில் தமிழினி நினைவரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, இதுபற்றி அவுஸ்திரேலியா நேயர்களுக்கும் மின்னியல் ஊடகம் ஊடாக வெளிநாட்டு நேயர்களுக்கும் எடுத்துச்சென்றதையிட்டு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன் விழாவுக்கு முன்னர்…
-
என் பர்மிய நாட்கள் 2
பர்மா பல இனங்கள், பல மொழிகள் மற்றும் ஆதிவாசிகள் என இந்தியாபோன்ற ஜனப்பரம்பலைக் கொண்ட நாடு. இதனால் பர்மாவில் வாழும் சிறுபான்மை சமூகத்தினர் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப்போரை பல வருடங்களாகச் செய்தனர். தற்பொழுது யுத்த நிறுத்தம் அமுலில் உள்ளது. எல்லா சிறுபான்மையினரும் ஒரே அமைப்பின் கீழ் இனிவரும் புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கின்றனர். புதிய அரசாங்கம் எப்படி இதை கையாளும் என்பது காத்திருந்து பார்க்கவேண்டிய விடயம் இராணுவ ஆட்சியினர் பர்மாவின் சுதந்திரத்திற்கு முன்னோடியாகவும் திகழ்ந்து பின்னர்…
-
Bread and butter from a mouse.
Dr Noel Nadesan It was one of those days in June when it was continuously pouring with rain outside. It was a dark and gloomy day with high wind, typical of Melbourne winter, forecasting weather for next few months. I started the veterinary clinic in outer suburb in Melbourne during one winter day when there…
-
என் பர்மிய நாட்கள் 2
(நடேசன்) பர்மா பல இனங்கள், பல மொழிகள் மற்றும் ஆதிவாசிகள் என இந்தியாபோன்ற ஜனப்பரம்பலைக் கொண்ட நாடு. இதனால் பர்மாவில் வாழும் சிறுபான்மை சமூகத்தினர் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப்போரை பல வருடங்களாகச் செய்தனர். தற்பொழுது யுத்த நிறுத்தம் அமுலில் உள்ளது. எல்லா சிறுபான்மையினரும் ஒரே அமைப்பின் கீழ் இனிவரும் புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கின்றனர். புதிய அரசாங்கம் எப்படி இதை கையாளும் என்பது காத்திருந்து பார்க்கவேண்டிய விடயம் இராணுவ ஆட்சியினர் பர்மாவின் சுதந்திரத்திற்கு முன்னோடியாகவும் திகழ்ந்து…
-
புலிப் பெண்கள்
சோமீதரன் விடுதலைப்புலிகளுடைய அரசியல்துறையின் மகளிர் பொறுப்பாளராக இருந்த தமிழினி எழுதிய “ஒரு கூர்வாளின் நிழலில்” என்ற தன்வாழ்க்கைக் குறிப்பு புத்தகத்தை முன்வைத்து, சில நினைவுகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்கிறார் சோமீதரன் 2003 மற்றும் 2004ல் கிளிநொச்சியில் நடைபெற்ற மகளிர் தினங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஒரு ஊடகக்காரனாக எனக்கு அப்போது வாய்த்திருந்தது. ஊர்வலம், பொதுக்கூட்டம், கலைத்துவ வெளிப்பாடுகள் என போராளிப் பெண்களும், பொதுப் பெண்களும் கூடி எழுந்துநிற்கும் நிகழ்வு. இதுபோன்ற மற்றுமொரு எழுச்சி நிகழ்வு, மாலதி படையணி கிளிநொச்சி மைதானத்தில்…
-
தமிழினியின்; சுயசரிதை. “ ஒரு கூர்வாளின் நிழலில்“
நடேசன் இளம் வயதில் வெதரிங் ஹைட் ஒரே நாவலை தந்துவிட்டு இறந்த எமிலி புரண்டே ஆங்கில இலக்கியத்தில் முக்கியமான இடம் வகிக்கிறார் (Wuthering Heights – Emily Brontë’) அதுபோல் தமிழினியின் சுயசரிதையும் ஈழத் தமிழர்களால் பலகாலம் பேசப்படும். அரசியல் போராட்டத்தை இப்படி எடுத்துக் கொண்டு போகக்கூடாது என்பதோடு நமக்கு தவறுகளைப் புரிந்து கொள்ளும் பாலபாடமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன் அரசியல் முப்பது வருடகால தமிழ் விடுதலைப் போராட்டத்தை மகோன்னத போராட்டமாகவும் அதன் தலைவரை கடவுளுக்கு நிகராகவும்…