பகுப்பு: Uncategorized
-
எகிப்தில் சிலநாட்கள் 16: யாவோவின் பத்துக்கட்டளைகள்.
நடேசன் நாங்கள் நைல் நதியின் பயணத்தில் கடைசியாக சென்ற இடம் அபு சிம்பல்(Abu Simbel). இது அஸ்வான் அணையில் இருந்து இருநூற்று ஐம்பது கிலோமீட்டர் தெற்கே நூபியாவின் பிரதேசத்தில் உள்ளது. இங்கு இரண்டு கோயில்கள் மலைப்பாறையில் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது அஸ்வான் அணை கட்டும்போது உருவாகிய லேக்நாசர் என்ற நீரத்தேக்கத்தால் மூழ்கிவிடவிருந்த இந்தக் கோயில் யுனெஸ்கோ மற்றும் அமெரிக்க உதவியுடன் துண்டு துண்டாக வெட்டி உயரமான இடத்தில் மீண்டும் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு தற்பொழுது பாதுகாப்பாக செயற்கையான…
-
இலக்கியத்தினூடே பயணித்த பாலுமகேந்திரா
முருகபூபதி ‘பாலு… உன்னுடைய நுண்ணுணர்வுகளுக்கும் இந்த மீடியத்தின் மீது நீ கொண்டிருக்கும் காதலுக்கும் உன்னுள் இருக்கும் படைப்புத்தாகத்திற்கும் நீ ஒரு இயக்குநராக மாறுவதுதான் இயல்பானது — விரைவில் நீ ஒரு படத்தை இயக்குவாய்— Mark My Words – என்று பல வருடங்களுக்கு முன்னர் கல்கத்தா மருத்துவமனையிலிருந்தவாறு – தன்னைப்பார்க்கவந்த பாலுமகேந்திராவை வாழ்த்தியவர் சர்வதேச புகழ் பெற்ற இயக்குநர் சத்தியஜித்ரே. புனா திரைப்படக்கல்லூரியில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவுக்கலையை பயின்ற காலத்தில் வருகைதரு விருந்தினராக விரிவுரையாற்ற வந்த சத்தியஜித்ரேயை ,…
-
ஒரு கூடைக்கொழுந்தின் இலக்கிய வாசம்
திரும்பிப்பார்க்கின்றேன் சாயி இல்லத்தில் பக்தர்களின் பாதணிகளை ஏந்திய எளிமையான மலையகப்படைப்பாளி என்.எஸ்.எம். ராமையா முருகபூபதி இயற்கைச் சூழலின் மத்தியில் ஏகாந்தமாயிருந்து கலையம்சம் மிக்க – கலை – இலக்கியங்களைப் படைக்க வேண்டிய மணிக்கரங்கள் இரும்புக்கடையின் மத்தியில் கணக்கு ஏட்டுடன் சதா கருமமாற்றம் நிலை என்றுதான் மாறுமோ ? என்று நண்பர் மேகமூர்த்தி பல வருடங்களுக்கு முன்னர் என்.எஸ்.எம். ராமையாவைப் பற்றி மல்லிகையில் எழுதியது நினைவுக்கு வருகிறது. மேகமூர்த்தி இன்று கனடாவில். முன்பு வீரகேசரியில் துணை ஆசிரியராக பணியிலிருந்தவர்.…
-
சிரித்திரன் சிவஞானசுந்தரம்
திரும்பிப் பார்க்கின்றேன் தமிழர்களைத் தட்டி எழுப்பிய பெரியோர் யார் ? கேள்வியால் வாழும் கார்டுன் கலைஞர் முருகபூபதி ஒருவர் தாம் பிறந்த நாளிலே பிறந்தநாள்தான் கொண்டாடுவார். ஆனால் யார்தான் இந்த உலகில் தாம் பிறந்த தினத்திலேயே தமது இறந்த நாளையும் பதிந்துவிட்டுச்செல்வார்? யோசித்துப்பாருங்கள். இவ்வாறு அபூர்வமான நிகழ்வுகள் சிலருக்குத்தான் சம்பவிக்கும். மறைந்தவரின் பிறந்தநாளை கொண்டாடுவதா அல்லது இறந்த நாளை நினைத்து அழுவதா? தாம் பிறந்த தினத்தையே இறந்த தினமாக்கிவிட்டுச் சென்ற ஒருவர் எம்மத்தியில் வாழ்ந்தார். அவர்தான் எங்களையெல்லாம்…
-
பிரேம்ஜி காலமானார்..
முருகபூபதி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் நீண்டகாலமாக அந்த அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பிரேம்ஜி ஞானசுந்தரன் நேற்று மாலை கனடாவில் காலமானார். அச்சுவேலியில் 17-11-1930 ஆம் திகதி பிறந்த பிறந்த ஞானசுந்தரன் தமது ஆரம்பக்கல்வியை அச்சுவேலி கிறீஸ்தவ கல்லூரியிலும் பின்னர் யாழ். பரமேஸ்வராக்கல்லூரியிலும் கற்றார். 1947 இல் தமது 17 வயதிலேயே சுதந்திர இளைஞர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். அன்றிலிருந்து ஞானசுந்தரன் தீவிரமான வாசிப்பிலும் எழுத்துத்துறையிலும் ஈடுபடத்தொடங்கினார். தமிழகம்சென்று மூத்த…
-
மக்களே எனது எஜமானர்கள்
திரும்பிப்பார்க்கின்றேன் மக்களே எனது எஜமானர்கள் – அவர்களிடம்தான் நான் படித்தேன் – எனச்சொன்ன டானியல் ‘ இனவாதிகளினால் யாழ். பொது நூலகம் எரிந்ததற்கும் – மேல்சாதியினரால் தென்மராட்சியில் தாழ்த்தப்பட்ட மாணவரின் நூல்கள் எரிக்கப்பட்டதற்கும் இடையே வேறுபாடுகள் இல்லை ‘ முருகபூபதி ஒரு பத்திரிகையில் இவ்வாறு ஒரு நகைச்சுவைத்துணுக்கு. – ஒரு எழுத்தாளர் பத்திரிகை ஆசிரியரைச் சந்திக்கின்றார். பத்திரிகை ஆசிரியர் – வாரும் – வணக்கம். நீர் எழுத்தாளரா? எழுத்தாளர்: ஆம் நான் ஒரு எழுத்தாளன். பத்திரிகை ஆசிரியர்…
-
சிக்னல் பற்பசை தலையிடி மருந்தாகியது.
எக்ஸோடஸ் 84 நடேசன் அமிஞ்சிக்கரையில் அடுக்கு மாடியில் ஒரு வீட்டில் காசி விஸ்வநாதன் மாஸ்டர் மனைவியுடன் இருந்தார். மாஸ்டரும் மனைவியும் ஏற்கனவே என்னுடன் படித்த செல்வகுமாரின் பெற்றோர்கள் என்பதால் ஏற்கனவே அறிமுகமானவர்கள். அவர்கள் வீட்டில் பரந்தாமன் என்ற சிறுவயது நண்பன் எனக்கு ஞானம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ஈழமக்கள் புரடசிகரமுன்னணியின் முக்கியஸ்தராகவும் காசி விஸ்வநாதன் மாஸ்டரால் அறிமுகப்படுத்தப்பட்டார். என்னுடன் படித்தவர்கள் இப்படி அரசியல் முக்கியஸ்தர்களாக இருப்பது ஒருவிதத்தில் ஆச்சரியமளித்ததுடன், அந்த அறிமுகம் எனக்கு அதிர்ச்சியையும் தந்தது. அதுவரையும்…
-
எகிப்தில் சிலநாட்கள்- 15: பாலஸ்தீன- இஸ்ரேலிய முரண்பாடு சகோதர முரண்பாடா?
temple-of-philae நடேசன் இரவு உல்லாசப்படகில் பயணம் செய்யும் எங்களுக்கு இசை மற்றும் நடனவிருந்து என்பன எமது பயணமுகவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி வந்ததும் – இரவு உணவிற்குப்பின் அதற்காக ஆவலுடன் காத்திருந்தோம். என் மனத்துள் எகிப்தியப் பெண் ஒருத்தியின் பெலிடான்ஸ் நடந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் பாதம்வரை மறைத்த எகிப்திய பெண் தொப்புளை எப்படி காட்டப்போகிறாள் என்ற நினைவுடன் எகிப்திய வெண்ணிறப் பெண்ணா இல்லை, நூபிய பிரதேசத்து சொக்கிளேட் வர்ணப்பெண்ணா என்ற கேள்வியும் நித்தம் படகில்…
-
ஜனவரி 31 – நடிகர் நாகேஷ் நினைவு தினம்
இயக்குநர்களின் ஆளுகைக்கு உட்படாமல் தனது சுயஆற்றலை வெளிப்படுத்திய கலைஞர் நாகேஷ் முருகபூபதி ‘தன் வாழ்க்கையில் என்ன அவலங்கள் இருந்தாலும் தன் மனத்தில் எத்தனை சோகச்சுமையிருந்தாலும் அதையெல்லாம் மறைத்து தன் நகைச்சுவையால் மக்களை விலாநோகச்சிரித்து மகிழச்செய்பவர்தானே மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்’ -என்று நடிகர் சிவகுமாரால் 1986 இல் விதந்து எழுதப்பட்டவர்தான் நடிகர் நாகேஷ். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இலட்சக்கணக்கான ரஸிகர்களை தனது அபாரமான நடிப்பினால் கவர்ந்தவர் நாகேஷ். ஆங்கில திரைப்பட உலகில் புகழ்பெற்ற ஜெர்லூயிஸைப்போன்று தமிழ்த்திரையுலகில்…
-
நம்பிக்கை
வாழ்வை எழுதுதல் முருகபூபதி சக மனிதர்களிடத்தில் ஒருவருக்கு நம்பிக்கை குறையும்பொழுது அவர் புதிய நம்பிக்கையைத்தேடிச்செல்வது இயல்பு. நானறிந்தமட்டில் இவ்வாறு நம்பிக்கை இழந்த பல பெண்கள் பெண்ணிலைவாதிகளாகவும் – விரக்தியின் விளிம்புக்குச்சென்று மன அழுத்த நோயாளிகளாகவும் – மதம் மாறியவர்களாகவும் பொதுநலப்பணிகளில் ஈடுபடுபவர்களாகவும் தங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதுவிடயத்தில் ஆண்கள் சற்றுவித்தியாசமானவர்கள். ஒரு பஸ் இல்லையென்றால் மற்றுமொரு பஸ்ஸில் தொற்றி ஏறி பயணத்தை தொடருவார்கள். ஒரு நட்பை இழந்தால் – புதிய சிநேகிதம் தேடிக்கொள்வார்கள். வாழ்வை எழுதுதல் தொடரின் இந்த…