ஆசிரியர்: noelnadesan
-
மேடையில் உயிர் நீத்த தோழர் வி.பொன்னம்பலம்
திரும்பிப்பார்க்கின்றேன் 16 பனைமரத்துப்பாளையெல்லாம் நில மட்டத்தில் வெளிவந்தால்….. முருகபூபதி பனைமரத்துப்பாளை எல்லாம் நில மட்டத்தில் வெளியாகியிருந்தால் சாதி பேசும் உயர்குடிமக்களும் கள்ளுச்சீவியிருப்பார்கள் – இவ்வாறு சுவாரஸ்யமாகவும் கருத்தாழத்துடனும் பேசவல்ல ஒருவர் எம்மத்தியிலிருந்தார். சிறந்த பேச்சாளர் மொழிபெயர்ப்பாளர் கல்வித்துறையில் பலருக்கும் கலங்கரைவிளக்கமாக ஒளிதந்த ஆசான் கொள்கைப்பற்றாளர் பதவிகளுக்காக சோரம்போகாதவர் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவே மரணிக்கும்வரையில் குரல் கொடுத்தவர் மாற்றுக்கருத்துள்ளவர்களையும் அரவணைத்தவர்…. இவ்வாறு பல சிறப்பியல்புகளையும் கொண்டிருந்த ஆளுமையுள்ள தலைவர் தோழர் வி. பொன்னம்பலம் பற்றி தெரிந்திருப்பவர்கள் இன்றும் எம்மிடையே…
-
எனது நெஞ்சறையில் மு.கனகராசன் நினைவுகள்
திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி “உங்களுடைய கையெழுத்து அழகாக இருக்கிறது” என்றேன். “தலை எழுத்து அப்படி அல்ல” – என்றார் கனகராசன். சொல்லும் போது மந்தகாசமான புன்னகை. பல எழுத்தாளர்களின் தலை எழுத்து அவர் சொன்னது போன்று அழகாக அமையவில்லை என்பது என்னவோ உண்மைதான். வேறு எந்தத் தொழிலும் தெரியாமல் எழுத்தை மட்டுமே நம்பிவாழ்வைத் தொடங்கியவர்களின் வரிசையில் இடம் பெற்றவர் மு.கனகராசன். இவர் பணியாற்றிய பத்திரிகைகள் பல. இலக்கியச் சிற்றேடுகள் சிலவற்றுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். நான் அறிந்த வரையில்…
-
எகிப்தில் சில நாட்கள் – 11: வரலாற்றுத் தடயங்கள் நீக்கப்பட்ட காலம்
நடேசன் மனித இனம் வேட்டையாடுதலில் இருந்து விவசாய சமூகமாக மாறிய காலத்தில் மதுவின் பங்கு தற்காலத்தைவிட மிக முக்கியமானது. இக்காலத்தில் போதைப்பொருளாக மட்டுமே மது அருந்தப்பட்டது. வரலாற்றின் ஆரம்ப காலத்தில் வலிநிவாரணியாகவும் தூக்கமாத்திரை என்ற மருத்துவப் பதார்த்தமாகவும் அருந்தப்பட்டது. அக்கால மனிதர்கள் சராசரியாக முப்பது அல்லது முப்பத்தைந்து வருடங்கள் மட்டுமே வாழ்வதால் மதுவின் பக்கவிளைவுகள் முக்கியமற்று போனது. கல்லீரல் பாதிப்பதற்கு முன்பாக வேறு காரணங்களால் மனிதன் இறந்து விடும் நிலைமை இருந்தது. துபாயில் இருந்து எகிப்து செல்லும்போது…
-
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் செயற்குழு
அவுஸ்திரேலியாவில் வருடந்தோறும் தமிழ் எழுத்தாளர் விழா மற்றும் கலை, இலக்கிய நிகழ்வுகளை நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் அண்மையில் மெல்பனில் எப்பிங் மெமோரியல் மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா தலைமையில் நடைபெற்றது. உலகெங்கும் போரில் உயிர்நீத்த மக்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி இடம்பெற்றதையடுத்து, 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்டுப்பொதுக்கூட்ட குறிப்புகளை செயலாளர் திரு. கே.எஸ். சுதாகரன் சமர்ப்பித்தார். குறிப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து 2012- 2013 ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கையும் நிதியறிக்கையும்…
-
இலங்கை – இந்தியத் தமிழரை இணைக்கும் சங்கிலி
எக்சோடஸ் 3 நடேசன் இராமேஸ்வரத்தில் தொடங்கிய எனது இரயில் வண்டிப் பயணம் எக்மோர் இரயில் நிலையத்தில் முடிந்தது. எனக்குத் தெரிந்த கொழும்பு கோட்டை இரயில் நிலையத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் பத்து மடங்கு இருக்கும். எங்கும் வாரி இறைத்த மணல்போல் மக்கள் கூட்டம். சிறியநாடான இலங்கையில் இருந்து வந்த எனக்கு, இவ்வளவு கூட்டம் என்பது மிகவும் பிரமிப்பைக் கொடுத்தது. இந்தக் கூட்டத்தில் தனிமனிதன் வாழ்வதற்கு எவ்வளவு பாடுபடவேண்டும்? இயற்கை மற்றும் உற்பத்தி வளங்களை எவ்வாறு ஒவ்வொருவரும் பிரிப்பது? அபரிமிதமான…
-
பன்மொழி அறிஞர் தமிழ் தூதுவர் தனிநாயகம் அடிகளார்
திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி இந்தியாவை தாய்நாடென்றும் இலங்கையை சேய்நாடென்றும் காலம் காலமாக கூறிவருகிறார்கள். இந்த சேய் நாடு பலவிடயங்களில் இந்தியாவுக்கு முன்மாதிரியான நாடென்று மட்டும் எவரும் சொல்ல முன்வருவதில்லை. இலங்கையில் இனப்பிரச்சினை கூர்மையடைந்து இனவிடுதலைப் போராட்டமாக வெடித்து இனச்சங்காரம் தொடங்கியதும் 1983 இல் இந்திராகாந்தியினால் முதலில் அனுப்பப்பட்ட தூதுவர் நரசிம்மராவ். பிறகு ஜி. பார்த்தசாரதி. அதன்பிறகு பலர் பேச்சுவார்த்தை நடத்தும் தூதுவர்களாக வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். இலங்கை – இந்தியாவில் அரசுகள் மாறினாலும் தூதுவர்கள் வந்துதிரும்பும் காட்சிகள் தொடரும்.…
-
மறுவளம் அறிமுகம்
( மேல்பேன்) நடேசன்) மேல்பேன் நகரத்தின் மத்திய பகுதியான கிங்ஸ் வீதியில் நடு இரவு கடந்து நைட்கிளப்புகளில் சந்தடி குறைந்து விட்டது. அதிக சன நடமாட்டமில்லை. கிட்டத்தட்ட மூன்று மணியாக இருக்கும். அந்த நேரத்தில் பாதையில் மிகவும் வெளிச்சமான பகுதியில் ஒரு முதியவர் குனிந்து எதையோ கவனமாக தேடிக்கொண்டிருந்தார். அந்த வழியால் பொலிஸ் கார் வந்தது.இந்த முதியவரைக் கண்டதும் காரை நிறுத்தி விட்டு இறங்கிய இரண்டு பொலிஸ்காரர் ‘எதைத் தேடுகிறீர்கள்’ என மிகவும் அக்கறையாக விசாரித்தார்கள். முதியவர்…
-
அ. மார்க்ஸ் தொகுத்த கே. டானியல் கடிதங்கள்.
படித்தோம் சொல்கிறோம் ஒரு தீர்க்கதரிசியின் சிந்தனைகளை பதிவு செய்த கடிதங்கள் முருகபூபதி ‘வேற்றுமைகளுக்கு நிறைய காரணங்களை கற்பிக்கலாம். ஆனால் ஒற்றுமைப்படுவதற்கு காரணங்களைத்தேட வேண்டிய சமுதாயத்தில் வாழும் துர்ப்பாக்கியசாலிகள்தான் எழுத்தாளர்கள்.’- என்ற சிந்தனைதான், டானியலின் கடிதங்களைப்படித்தபொழுது எனக்குள் தோன்றியது. தமிழில் தலித் இலக்கிய முன்னோடி என்று விதந்து போற்றப்படும் கே.டானியல், இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 1927 ஆம் ஆண்டு பிறந்து தமிழ்நாட்டில் தஞ்சையில் 1986 ஆம் ஆண்டு மறைந்து அங்கேயே கல்லறையில் நிரந்தரமாக அடக்கமானவர். 1982-85 காலப்பகுதியில் தமிழக மார்க்ஸீய…
-
உனையே மயல் கொண்டு
எஸ். கிருஸ்ணமூர்த்தி ஊரிலே சிறுவர்கள் நாய், பூனைகளை கல்லால் அடிப்பதை வேடிக்கை பார்த்திருக்கிறேன். அதைத் தடுப்பதற்கு முயற்ச்சியோ அல்லது அவை மீது அனுதாபமோ ஏற்படவில்லை. ஏதோ பிராணிகள் உணர்வற்ற வெறும் ஜடங்கள் என்ற எணணமே மேலோங்கி இருந்தது. டொக்டர் நடேசன் விலங்குகளைப் பற்றி அனுபவக் கட்டுரைகள் பல இங்குள்ள தமிழ் பத்திரிகையில் அடிக்கடி இடம் பெற்றது. அதை வாசித்த போது உணர்வுகள், உணர்ச்சிகள் மட்டுமல்ல அதற்கு ஆசாபாசங்களும் உள்ளன என்பனவற்றை அறிந்து கொண்டேன். அவரது படைப்புக்களை வாசிக்க…