ஆசிரியர்: noelnadesan
-
கேரளத்தின் ‘பாக் வாட்டர்’
நடேசன் (எனது முதலாவது பயண எழுத்து – பத்துவருடம் முன்பாக) 2004 மார்கழி 23ம் திகதி மாலை சூரியன் பலநாடுகளில் தப்பிமறைய அடைக்கலம் கேட்ட இலங்கை தமிழ் அகதிகள் போல்,தென்னை மரங்களின் ஒலைகளுக்கு இடையிலும், பின் வாழைகளின் மறைவிலும், இறுதியில், நெற்கதிர்களில் கூட அடைக்கலம் கிடையாது போய் வெறுப்பில் மேற்குத் திசையில் சங்கமித்துவிட்டான். பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கத்திலே வேணும் – என்கிறார் பாரதியார். பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களைப் பார்க்கும் போது பரவசமாக இருந்தது. பக்கத்தில் இருந்த…
-
கடல்கடந்தும் பேசப்பட்ட கடவுச்சீட்டு இல்லாதகவிஞர்
முருகபூபதி ஆனந்தவிகடன் இதழை, அதில் வெளியாகும் நகைச்சுவைத்துணுக்குகளுக்காகவே ஆரம்பத்தில் விரும்பிப்படித்தேன். ஆரம்பத்தில் ஆர்வமுடன் ஜோக்குகளை ரசித்தபோதிலும் காலப்போக்கில் தரமான இலக்கியவிடயங்கள் ஆனந்தவிகடனில் வெளியானால் அவற்றை கத்திரித்து சேகரித்தும் வைத்திருப்பேன். சிலவற்றை இன்றளவும் மறக்கமுடியவில்லை.நினைத்து நினைத்து வாய்விட்டுச்சிரித்த துணுக்குகளை நண்பர்கள் வட்டத்திலும் குடும்பத்திலும் உறவினர்கள் மத்தியிலும் பகிர்ந்து அவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவது எனது இயல்பு. 1985 ஆம் ஆண்டு ஏழு கவிஞர்கள், பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, சிலிர்ப்பு, பொறுப்பு, மூப்பு, இறப்பு என்ற தலைப்புகளில் எழுதிய கவிதைகளை தொகுத்து இலவச…
-
போரின் வலிகளை உணர்த்தும் எழுத்துக்கள்
கிருஷ்ணமூர்த்தியின் மறுவளம் ரஸஞானி விவேகானந்தர் துறவி என்றாலும்,அவர் மனிதன் தனதுஅடையாளத்தைவிட்டுச்செல்வதற்கு மூன்றுஆலோசனைகளைசொல்லியிருக்கிறார். மனிதன் பிறக்கிறான்,மறைகிறான். இடையில் அவனிடமிருப்பதுநீண்டஅல்லதுகுறுகியகாலவாழ்க்கை. அந்த இடைவெளியில் அவன் உருப்படியாக மூன்றுவிடயங்களில் ஏதாவதுஒன்றையாவதுசெய்துவிடவேண்டும். இல்லையேல் அவனுக்குப்பிறகுஅவனதுபெயர் சொல்வதற்குஅடையாளமாகஒன்றும் இருக்காது. இல்லறத்தில் ஈடுபட்டுஒருபிள்ளைக்காவதுபெற்றோராகிவிடவேண்டும். அல்லதுதனதுபெயர் சொல்லஒருவீட்டையாவதுவிட்டுச்செல்லவேண்டும். அல்லதுஒருபுத்தகம் எழுதிவிடவேண்டும். நண்பர் கிருஷ்ணமூர்த்தியின் மறுவளம் நூலைகையிலெடுத்தபொழுது விவேகானந்தர் சொன்னதுதான்எனதுநினைவுக்குவந்தது. கிருஷ்ணமூர்த்தி ஒன்றல்ல மூன்றுகடமையையும் செய்துவிட்டார். குழந்தைகளின் தந்தையாககுடும்பத்தலைவன்,புகலிடத்தில்உழைத்துவீடு. தற்பொழுதுஒருநூலையும் வாசகர்களுக்குசமர்ப்பித்துவிட்டார். நீண்டகாலமாகஅவர் எழுதிவந்தாலும் தற்பொழுதுதான் ஒருநூலைவெளியிடவேண்டும் என்றவிருப்பத்திற்குவந்துள்ளார் என்பதனால் விவேகானந்தரின் கூற்றையும் இங்கு குறிப்பிட்டேன். இலங்கையில் தமிழில்…
-
காத்தவராயன் (சிறுகதை)
முருகபூபதி கோடைகாலம் வந்துவிட்டால் வியர்த்துக்கொட்டுகிறது. எப்பொழுதும் வீட்டுக்குள் குளிர்சாதனம் இயங்கிக்கொண்டிருக்கும். காரில் ஏறினால் ஸ்டியரிங்கில் கைவைக்கமுடியாது. அவ்வளவு சூடு. வீட்டின் யன்னல்களை திறந்தால் கோடைவெப்பம் உள்ளே வந்துவிடும். ஒருநாளைக்கு இரண்டு தடவையாதல் உடலை தண்ணீரில் நனையவைத்து குளிர்மைப்படுத்தவேண்டும். குடும்பத்தை கடற்கரை, பூங்கா வெளியூர் அழைத்துப்போனால் செலவும் அதிகம். ஒவ்வொரு கோடைகாலமும் இந்தக் கவலைகளுடன் கழிவதனால் வீட்டை விற்றுவிட்டு நீச்சல்தடாகம் அமைந்த வீடு ஒன்றை பல மாதங்களாகத்தேடிக்கொண்டிருந்தான் ரமேஷ்காந்த். மனைவியும் அவனும் பல மாதங்களாக இணையத்திலும் சல்லடைபோட்டுப்பார்த்து, வீடுகள்…
-
எகிப்தில் சில நாட்கள்-6:மனித உழைப்பு.
எகிப்தில் சில நாட்கள் 6 நடேசன் எகிப்திய காசா பெரிய பிரமிட்டைக் கட்டுவதற்கு 90000 தொழிலாளர்களுக்கு, இருபது வருடங்கள் எடுத்தது. இயந்திரங்களினதோ ,மிருகங்களினதோ உதவியற்ற நிலையில் மனிதர்களினது சக்தியை மட்டுமே பாவித்து உருவாக்கப்பட்ட மகத்தான ஒரு சாதனையை சில மணி நேரத்தில் பார்த்து விட்டு மரியற் ஹொட்டலுக்குச் சென்று இழுத்து போர்த்து தூங்கி விடுவது என்பது என்னைப் போன்ற சுற்றுலா பிரயாணிகளுக்கு இக்காலத்தில் எவ்வளவு எளிதான காரியமாகி விட்டது. குறைந்த பட்சமாக இதைக் கட்டிய காலத்தில் நடந்தவற்றை…
-
A blend of romance and human foibles
Lost in you Author: Dr. Noel Nadesan A Vijitha Yapa publcation Reviewed by N Ganeshalingam Although Dr. Noel Nadesan is a Veterinary Surgeon, he is neither a stranger nor a novice to the Tamil literary scene. In addition to contributing innumerable articles to magazines, newspapers and websites, he has written two novels. The second novel…
-
ஈழத்திலிருந்து ஒலித்த இலக்கியக்குரல் மல்லிகை ஜீவா
முருகபூபதி யாழ்ப்பாணம் அரியாலையில் நாவலர் வீதியில் அமைந்த ஸ்ரான்லி கல்லூரியில் (தற்பொழுது கனகரத்தினம் மத்திய கல்லூரி) 1962 ஆம் ஆண்டளவில் எனக்கும் எனது மச்சான் முருகானந்தனுக்கும் ஆறாம் வகுப்பு புலமைப்பரிசில் அனுமதி கிடைத்தது. அப்பொழுது எனக்கு பதினொரு வயதிருக்கும். நான் முதல் தடவையாக பனைமரங்களைப் பார்த்தது அக்காலத்தில்தான். அதற்கு முன்னர் அந்தக்கற்பகதருவை பாடசாலை பாடப்புத்தகங்களில்தான் பார்த்திருக்கின்றேன். ஈழவிடுதலைப்போராட்டம் ஆரம்பமானதன்பின்பு பல இலக்கிய மற்றும் ஆய்வு நூல்களில் பனைமரங்கள் அட்டைப்படமாகின. ரஜனி திராணகம சம்பந்தப்பட்ட யாழ். பல்கலைக்கழக மனித…
-
எகிப்தில் சில நாட்கள்-5 நெப்போலியன் சொல்ல மறைத்த கதை.
The Narmer Palette நடேசன் கெய்ரோவின் மத்திய பகுதியில் இருந்து கீசா (Giza) என்ற இடத்தில் இறங்கியபோது நடுப்பகல் தாண்டி விட்டது. பாலைவன வெய்யில் கண்ணாடித் துகள்களில் பட்டு சிதறுவதுபோல் நிலத்தில் பட்டுத் தெறித்து கண்களை கூசவைத்தது. இந்தக் கடும் வெய்யிலும் பாலைவனத்தின் கொதிப்பும்தான் 5000 வருடங்களாக எகிப்தின் புராதன சின்னங்களைப் பாதுகாத்திருக்கின்றன. மழையற்ற பாலைப் பிரதேசத்தின் ஈரலிப்பற்ற சீதோஷ்ணம் கட்டிடங்களில் விரிவும் சுருக்கமும் மாறி மாறி ஏற்படாது புராதன சின்னங்களை ஒரு நிலையில் வைத்திருக்கிறது. புராதன…
-
பிரேதத்தை அலங்கரிப்பவள்
நடேசன் உங்களுக்குத் தெரிந்த மனிதர் யாராவது உயிர் வாழ்ந்த போதிலும் பார்க்க இறந்தபின்பு அழகாக தோற்றமளித்தாரா? அப்படி ஒரு ஏதாவது சந்தர்ப்பத்தில் இறந்து போன ஒருவரை பார்த்தவுடன் அவ்வாறு நீங்கள் நினைத்திருக்கிறீர்களா? இது சிக்கலான கேள்வி நான் நினைப்பதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால் அதுபற்றி விரிவாக கூறவேண்டும். எனது வேலைத்தலத்துக்கு அருகே பெரிய மயானம் இருக்கிறது. அது நமது ஊர் மயானம் போல் அல்ல யாழ்ப்பாணத்து கோம்பயன்மணல் மாதிரியாக நாலு ஆலமரங்கள் சில அலரிமரங்கள் இடைக்கிடையே…
-
அலேர்ஜியும் ஆஸ்மாவும்
ஆஸ்மாவும் அலேர்ஜியும் சயாமிய இரட்டையர்கள் போல அவுஸ்த்திரேலியாவில் பொதுவாக ஒன்றாகத்தான் காணமுடியும். பிரிந்திருப்பது குறைவு அவுஸ்திரேலியாவில் மெல்பன், சிட்னி மற்றும் நியூசிலண்டும்தான் உலகத்திலேயே அதிக ஆஸ்மா நோயாளர்களைக்கொண்ட இடங்களாகும். அவுஸ்திரேலிய பத்திரிகைகள் மெல்பேனை ஆஸ்மாவின் தலைநகரம் எனக்கூறுவார்கள். ஸ்பிரிங் காலத்தில் ஈரலிப்பான வெட்பத்தில் தாவரங்களின் மகரந்தமணிகள் வெடித்து பரவமுயலும்போது மனிதர்களின் சிறிய சுவாசத்துவாரங்களில் (Bronchiole) சென்று அலேர்ஜியை உருவாக்கி அந்த துவாரங்களை சுருக்கிவிடும். இதானால் சுவாசிக்க சிரமம் ஏற்படும். இங்குள்ள தாவரங்கள் மட்டும்தானா இப்படி?. எல்லாப்பிரதேசத்திலும் இது…